TnpscTnpsc Current Affairs

7th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

7th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 7th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

February Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. 2022 ஆசிய கோப்பையில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி பிடித்த இடம் எது?

அ) முதலாவது

ஆ) இரண்டாவது

இ) மூன்றாவது 

ஈ) நான்காவது

  • இந்திய மகளிர் ஹாக்கி அணி, முன்னாள் சாம்பியனான சீனாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது. சவிதா புனியா தலைமையிலான அணி ஆசிய கோப்பையை தக்கவைக்க தவறினாலும், வெண்கலப் பதக்கத்துடன் திரும்பியது. மலேசியாவை 9-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி, ஆசிய விளையாட்டு சாம்பியனான ஜப்பானுக்கு எதிராக 0-2 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியைத் தழுவியது.
  • சிங்கப்பூர் அணியை 9-1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதிபெற்றது. அரையிறுதிப்போட்டியில் கொரியாவிடம் தோல்வியடைந்தது. தென்கொரியாவை வீழ்த்தி ஜப்பான் ஆசிய கோப்பையை வென்றது.

2. Hwasong-12 என்ற நடுத்தரமான எறிகணையை ஏவிய நாடு எது?

அ) சீனா

ஆ) ஜப்பான்

இ) வட கொரியா 

ஈ) தென் கொரியா

  • ‘Hwasong-12’ என்ற நடுத்தரமான எறிகணையை தாம் ஏவியதை வடகொரியா உறுதிப்படுத்தியுள்ளது. 2017ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்த அளவிலான ஆயுதத்தை வட கொரியா சோதனை செய்வது இதுவே முதல்முறை.
  • ஜப்பானும் தென்கொரியாவும் இந்த நடுத்தர தொலைவு பாயக்கூடிய எறிகணை ஏவப்பட்டதைக் கண்டறிந்துள்ளன. இது வடகொரியாவால் இம்மாதம் மேற்கொள்ளப்பட்ட ஏழாவது ஆயுதப்பரிசோதனையாகும்.

3. எந்த மாநிலத்தில், இந்தியாவின் முதல் புவி பூங்காவை அமைப்பதற்கு இந்திய புவியியல் ஆய்வு மையம் ஒப்புதல் அளித்துள்ளது?

அ) மகாராஷ்டிரா

ஆ) கோவா

இ) மத்திய பிரதேசம் 

ஈ) தெலுங்கானா

  • இந்தியாவின் முதல் புவிசார் பூங்காவை மத்திய பிரதேச மாநிலத்தில் நர்மதா நதிக்கரையில் உள்ள லாம்ஹெட்டா கிராமத்தில் அமைக்க இந்திய புவியியல் ஆய்வு மையம் ஒப்புதல் அளித்துள்ளது. புவிசார் பூங்கா என்பது ஓர் ஒருங்கிணைந்த பகுதியாகும்; இது, புவியியல் பாரம்பரியத்தை நிலையான வழியில் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் தளம் ஏற்கனவே யுனெஸ்கோ புவி பாரம்பரிய தளங்களுக்கான தற்காலிக பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஜபல்பூரின் பெடகாட்-லமேட்டா காட் பகுதியில் உள்ள நர்மதா பள்ளத்தாக்கில் பல தொன்மாக்களின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

4. ‘இந்தியாவில் மரணதண்டனை’ குறித்த அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ) தேசிய குற்ற ஆவணக்காப்பகம்

ஆ) தேசிய சட்டப் பல்கலைக்கழகம் 

இ) NITI ஆயோக்

ஈ) உச்சநீதிமன்றம்

  • தில்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் உள்ள குற்றவியல் சட்டச் சீர்திருத்தங்களுக்கான வழக்கறிஞர் குழுவால் (திட்டம் 39A) “இந்தியாவில் மரணதண்டனை” குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது.
  • இவ்வறிக்கையின்படி, 2021ஆம் ஆண்டின் இறுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக் -கை 488 ஆக இருந்தது. இது 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இது கடந்த 2020’இலிருந்து ஏறக்குறைய 21% அதிகரிப்பு ஆகும்.

5. இந்திய ரிசர்வ் வங்கியால் நடத்தப்படும் ‘VRR ஏலத்தில்’ VRR என்பதன் விரிவாக்கம் என்ன?

அ) Variable Rate Repo ஏலம் 

ஆ) Virtual Reality Repo ஏலம்

இ) Viable Rate Repo ஏலம்

ஈ) Vernacular Region Repo ஏலம்

  • ‘VRR ஏலம்’ என்பது “Variable Rate Repo” ஏலத்தைக் குறிக்கிறது. ரெப்போ என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களின் விகிதமாகும். அதன் ஒருபகுதி நிலையான விகிதத்திலும் சிலபகுதிகள் மாறி விகிதத்திலும் உள்ளன.
  • இந்திய ரிசர்வ் வங்கி `75,000 கோடிக்கு பணப்புழக்கம் சரிசெய்தல் வசதியின்கீழ் ஒரே இரவில் மாறி விகித ரெப்போ ஏலத்தை நடத்துவதாகக் கூறியது. ஜன.20ஆம் தேதி, RBI `50,000 கோடிக்கு ஒரே இரவில் மாறி விகித ரெப்போ (VRR) ஏலத்தை நடத்தியது.

6. ‘நஜாப்கர் ஜீல்’ என்பது எந்த இருமாநிலங்களுக்கு இடையே உள்ள எல்லைதாண்டிய ஈரநிலமாகும்?

அ) தில்லி-உத்தரபிரதேசம்

ஆ) தில்லி-ஹரியானா 

இ) உத்தரபிரதேசம்-உத்தரகாண்ட்

ஈ) உத்தரபிரதேசம்-பீகார்

  • ‘நஜாப்கர் ஜீல்’ என்பது தில்லிக்கும் ஹரியானாவுக்கும் இடையே உள்ள ஓர் எல்லைதாண்டிய ஈரநிலம் ஆகும்.
  • தேசிய பசுமை தீர்ப்பாயம் முன்னதாக ஹரியானா மற்றும் தில்லிக்கு சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டத்தை தயாரிக்க உத்தரவிட்டிருந்தது. நஜாப்கர் ஜீலின் புத்துயிர் மற்றும் பாதுகாப்பிற்காக இரு அரசாங்கங்களும் தயாரித்து உள்ள சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டங்களை அமல்படுத்துமாறு தில்லி மற்றும் ஹரியானாவுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

7. “டேவிட் நட்சத்திரம் & அசோக சக்கரம்” ஆகியவை கீழ்காணும் எவ்விரு நாடுகளின் நினைவுச்சின்னத்தில் காணப்படுகின்றன?

அ) இந்தியா-அமெரிக்கா

ஆ) இந்தியா-UK

இ) இந்தியா-இஸ்ரேல் 

ஈ) இந்தியா-ஆஸ்திரேலியா

  • இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய இருநாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகளை ஏற்படுத்தி 30 ஆண்டுகள் நிறைவைதைக் குறிக்கும் வகையில் ஒரு நினைவுச் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நினைவுச் சின்ன -த்தில் ‘டேவிட் நட்சத்திரமும் அசோக சக்கரமும்’ உள்ளன. இவை இருநாடுகளின் தேசியக்கொடிகளில் இடம்பெறும் இரண்டு சின்னங்களாகும்.
  • இருதரப்பு உறவுகளின் 30ஆவது ஆண்டு நிறைவைச் சித்தரிக்கும் எண் 30’ஐ உருவாக்கும் வகையில் இது உள்ளது. 1992ஆம் ஆண்டு ஜன.29 அன்று இஸ்ரேலும் இந்தியாவும் தூதரக உறவுகளை ஏற்படுத்திக்கொண்டன.

8. 2022 – தேசிய சுற்றுலா நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ) Sustainable Tourism

ஆ) Rural and Community Centric Tourism 

இ) Gender – Neutral Tourism

ஈ) Child Friendly Tourism

  • சுற்றுலாவின் முக்கியத்துவம் மற்றும் பொருளாதாரத்தில் அதன் தாக்கம்குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி.25 அன்று நாடு முழுவதும் ‘தேசிய சுற்றுலா நாள்’ கொண்டாடப்படுகிறது.
  • இந்த ஆண்டு, சுற்றுலா அமைச்சகம் ‘அமுதப் பெருவிழா’ என்ற பெயரில் தேசிய சுற்றுலா நாளை அனுசரிக்கிறது. “Rural and Community Centric Tourism” என்பது நடப்பு 2022ஆம் ஆண்டில் வரும் தேசிய சுற்றுலா நாளுக்கானக் கருப்பொருளாகும்.

9. ‘CHIRU-2Q22’ என்பது கீழ்காணும் எந்தெந்த நாடுகள் மேற்கொள்ளும் கூட்டுக்கடற்படைப்பயிற்சியாகும்?

அ) சீனா-ரஷ்யா

ஆ) சீனா-ரஷ்யா-ஈரான் 

இ) சீனா-ரஷ்யா-இஸ்ரேல்

ஈ) சீனா-ரஷ்யா-இந்தியா

  • ‘CHIRU-2Q22’ என்ற கூட்டுப் பயிற்சியில் சீனா-ரஷ்யா-ஈரான் நாட்டுக் கடற்படைகள் பங்கேற்கின்றன. இந்த ஒத்திகையில் பங்கேற்பதற்காக ஓமன் வளைகுடாவுக்கு தனது ‘உரும்கி’ என்ற கடற்படை ஏவுகணை அழிக்கும் கப்பலை அனுப்பியுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
  • சீன அரசு உலங்கூர்திகளையும் கடற்படை வீரர்களையும் பயிற்சிக்கு அனுப்பியுள்ளது. ரஷ்யா தனது பசிபிக் கடற் படையின் பணிக்குழுவை அனுப்பியது. அதில் ‘நகிமோவ்’ ஏவுகணை கப்பல் வர்யாக் மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலான அட்மிரல் ட்ரிபட்ஸ் ஆகியவை அடங்கும். இந்தப் பயிற்சிகள் மத்தியதரைக்கடல் மற்றும் ஓகோட்ஸ்க் கடல்களில் நடத்தப்படுகின்றன.

10. ICC’இன் ‘சிறந்த கிரிக்கெட் வீராங்கனை’ விருதை வென்ற இரண்டாவது வீராங்கனை யார்?

அ) மிதாலி ராஜ்

ஆ) ஸ்மிருதி மந்தனா 

இ) ஹர்மன்ப்ரீத் கவுர்

ஈ) ஷபாலி வர்மா

  • இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 2021ஆம் ஆண்டிற்கான ICCஇன் ‘சிறந்த கிரிக்கெட் வீராங்கனை’யாக தேர்வு செய்யப்பட்டார். அவர் ‘ரேச்சல் ஹெய்ஹோ பிளின்ட் கோப்பைக்கான’ இறுதிப்பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார்.
  • 2007ஆம் ஆண்டு ICC’இன் சிறந்த வீராங்கனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமியைத் தொடர்ந்து ஐசிசி விருதைப்பெறும் 2ஆவது இந்திய வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா உள்ளார். இங்கிலாந்து கேப்டன் ரூட், கடந்த 2021ஆம் ஆண்டிற்கான ICCஇன் சிறந்த டெஸ்ட்கிரிக்கெட் வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 2021ஆம் ஆண்டிற்கான ICC ‘ODI கிரிக்கெட்டராக’ தேர்வு செய்யப்பட்டார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஒரே தவனையாக செலுத்தக்கூடியா ‘ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசிக்கு மத்திய அரசு அவசரகால அனுமதி

கரோனா வைரஸுக்கு எதிரான ஒரே டோஸில் செலுத்திக் கொள்ளும் வகையிலான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு மத்திய அரசு அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை வழங்கியுள்ளது. இது நாட்டில் பயன்பாட்டுக்கு வரும் 9ஆவது தடுப்பூசியாகும்.

ரஷ்ய நாட்டுத் தயாரிப்பான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை இந்தியாவில் பெற்று விநியோகிக்கிறது ஹைதராபாத்தின் Dr ரெட்டிஸ் லேப் ரஷ்ய நிறுவனம் ஸ்புட்னிக் V என்ற தடுப்பூசியையும் இந்தியாவுக்கு விநியோகித்துள்ளது. அதுவும் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் அது இரண்டு டோஸ்கள் கொண்டது. ஸ்புட்னிக் லைட் சிங்கிள் டோஸ் தடுப்பூசி. இந்தத் தடுப்பூசியை மற்ற தடுப்பூசிகளை செலுத்தியவர்களுக்கு இரண்டாவது டோஸாகப் பயன்படுத்துவது பற்றியும் ரெட்டிஸ் லேப் கிளினிக்கல் பரிசோதனைகளை முடித்து டிசிஜிஐயில் அறிக்கையை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் ஊசியில்லா தடுப்பூசியான ஜைக்கோவ் டி தடுப்பூசியும் பயன்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. சைகோவ்-டி தடுப்பூசி அவசரகால பயன்பாட்டிற்கு உபயோகிக்க கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது.

இந்த தடுப்பூசி உலகின் முதல் பிளாஸ்மிட் டி என் ஏ வகை தடுப்பூசி ஆகும். இந்தத் தடுப்பூசியை முத்தவணைகளாக செலுத்தவேண்டும். ஊசிக்கு அச்சம் கொண்டவர்களுக்கு இந்த வகை தடுப்பூசி ஒரு நல்லதீர்வு எனக் கூறப்படுகிறது. ஸ்ப்ரிங் உதவியுடன் தோலில் இவ்வூசி செலுத்தப்படுகிறது.

2. டாடா ஓபன்: போபண்ணா-ராம்குமார் சாம்பியன்

TATA ஓபன் ATP டென்னிஸ் போட்டி இரட்டையர்பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ராம்குமார் இராமநாதன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.

மகாராட்டிர மாநிலம் புனேயில் TATA ஓபன் ATP போட்டிக -ள் நடந்து வருகின்றன. இதன் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. முதல்நிலை இணையான ஆஸ்திரேலியாவின் லூக் சவிலே-ஜான் பேட்ரிக்கை எதிா்கொண்டது இந்திய இணை.

முதல் செட்டை கடும் போராட்டத்துக்கு இடையே 6-7 என இழந்தனர் போபண்ணா-ராம்குமார். 2ஆவது செட்டை 6-3 என எளிதாக கைப்பற்றிய நிலையில், மூன்றாவது செட்டில் இரு இணைகளும் கடுமையாக மோதின. இறுதியில் அந்த செட்டை 10-6 என கைப்பற்றி சாம்பியன் பட்டத்தையும் வென்றது இந்திய இணை.

இது போபண்ணாவுக்கு 21ஆவது ஏடிபி இரட்டையர் பட்டமாகும். ஏற்கெனவே 2019’இல் திவிஜ் சரணுடன்- போபண்ணா இப்பட்டத்தை கைப்பற்றினார்.

3. விவேகானந்தர் நாடு திரும்பிய 125ஆவது ஆண்டு தினம்:

அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய சுவாமி விவேகானந்தர், பின்னர் இந்தியா திரும்பிய 125ஆவது ஆண்டு விழா நேற்று (06-02-2022) கொண்டாடப்பட்டது.

4. ஆசியாவின் மிகப்பெரிய அனிமேஷன் சிறப்பு மையம் பெங்களூருவில் திறப்பு

ஆசியாவின் மிகப்பெரிய அனிமேஷன், விஷூவல் எபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் (AVGC) ஆகியவற்றுக்கான சிறப்பு மையம் பெங்களூருவில் திறக்கப்பட்டது.

கர்நாடக அரசு சார்பில் பெங்களூருவில் உள்ள ஒயிட் பீல்டில் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (AVGC) ஆகியவற்றுக்கான மிகப்பெரிய சிறப்பு மையத்தை தகவல் தொழில்நுட்ப, உயிரி தொழில் நுட்ப அமைச்சர் அஸ்வத் நாராயண் திறந்துவைத்தார்.

தற்போது திறக்கப்பட்டுள்ள இந்தச் சிறப்பு மையமானது டிஜிட்டலில் ஆக்கப்பூர்வமான தொழில்கள் தொடங்க வாய்ப்பை ஏற்படுத்தி தரும். இந்த மையத்தில் விர்ச்சுவல் (மெய்நிகர்) ரியாலிட்டி, டிஜிட்டல் கம்ப்ரஷன், போட்டோகிராமெட்ரி, கல்வியின் கேமிஃபிகேஷன், நிகழ் நேர மெய்நிகர் உற்பத்தி, பிற வளர்ந்துவரும் தொழில் நுட்பங்கள் குறித்து தனித்துவமான படிப்புகளை வழங்கும் பள்ளியும் இடம்பெற்றுள்ளது.

1. Indian Women’s Hockey Team won which position in the Asia Cup 2022?

A) First

B) Second

C) Third 

D) Fourth

  • India women’s hockey team have won bronze medal after beating former champions China. Though Savita Punia–led missed to defend their Asia Cup title, they returned with bronze. After defeating Malaysia 9–0, India suffered a 0–2 defeat against Asian Games champions Japan.
  • It thrashed Singapore 9–1 to qualify for the semi–finals and was beaten by Korea. Japan won the Asia Cup Title after defeating South Korea.

2. Which country launched the Hwasong–12 mid–range ballistic missile?

A) China

B) Japan

C) North Korea 

D) South Korea

  • North Korea has confirmed that it fired a Hwasong–12 mid–range ballistic missile. This is the first time it has tested a weapon of that size since 2017. Japan and South Korea detected the launch of the intermediate–range ballistic missile (IRBM), which is the seventh weapons test done by North Korea this month.

3. Geological Survey of India (GSI) has approved to set up India’s first Geo–Park in which state?

A) Maharashtra

B) Goa

C) Madhya Pradesh 

D) Telangana

  • The Geological Survey of India (GSI) has approved to set up India’s first Geo–Park at Lamheta village on the banks of the Narmada River in Madhya Pradesh. A Geo–Park is a unified area which aims to protect the geological heritage in a sustainable way.
  • The site is already in the UNESCO Geo–heritage tentative list. Several dinosaur fossils had been found in the Narmada valley, in the Bhedaghat–Lameta Ghat area of Jabalpur.

4. Which institution released the ‘Death Penalty in India’ Report?

A) National Crime Records Bureau

B) National Law University 

C) NITI Aayog

D) Supreme Court

  • Death Penalty in India Report was released by the criminal law reforms advocacy group at the National Law University, Delhi– named Project 39A. As per the report, the number of prisoners on death row at the end of 2021 stood at 488, the highest in 17 years. This is an increase of nearly 21% from 2020.

5. What is the expansion of ‘VRR Auction’, conducted by the Reserve Bank of India?

A) Variable Rate Repo auction 

B) Virtual Reality Repo auction

C) Viable Rate Repo auction

D) Vernacular Region Repo auction

  • ‘VRR Auction’ stands for Variable rate repo auction. Repo is the rate at which RBI lends short term loans to Banks. A part of it is done at a fixed rate and some of it is a variable rate.
  • The Reserve Bank of India said it will conduct an overnight variable rate repo auction under liquidity adjustment facility (LAF) for an amount of Rs 75,000 crore. On January 20, the RBI conducted an overnight variable rate repo (VRR) auction of Rs 50,000 crore.

6. ‘Najafgarh jheel’ is a trans–boundary wetland between which two states?

A) Delhi–Uttar Pradesh

B) Delhi–Haryana 

C) Uttar Pradesh–Uttarakhand

D) Uttar Pradesh–Bihar

  • ‘Najafgarh jheel’ is a trans–boundary wetland between Delhi and Haryana. The National Green Tribunal (NGT) had earlier directed Haryana and Delhi to prepare an Environment Management Plan for the jheel. The NGT has directed Delhi and Haryana to enforce the Environment Management Plans that the two governments have prepared for the rejuvenation and protection of the Najafgarh jheel.

7. “Star of David and the Ashoka Chakra” are found in the commemorative logo of which two countries?

A) India–USA

B) India–UK

C) India–Israel 

D) India–Australia

  • India and Israel launched a commemorative logo to mark the 30th anniversary of the establishment of diplomatic ties between the two countries. The logo has the Star of David and the Ashoka Chakra– the two symbols that feature in the national flags of both countries and forms the numeral 30 depicting the 30th anniversary of bilateral relations. Israel and India established diplomatic relations on 29th of January 1992.

8. What is the theme of the ‘National Tourism Day’ 2022?

A) Sustainable Tourism

B) Rural and Community Centric Tourism 

C) Gender – Neutral Tourism

D) Child Friendly Tourism

  • National Tourism Day is celebrated across the country on January 25 every year to spread awareness about the importance of tourism and its impact on the economy.
  • This year, the Ministry of Tourism is observing National Tourism Day under the aegis of ‘Azadi Ka Amrit Mahotsav’. This year’s theme for National Tourism Day is ‘Rural and Community Centric Tourism’.

9. ‘CHIRU–2Q22’ is a Joint Naval Drill, participated by which set of countries?

A) China–Russia

B) China–Russia–Iran 

C) China–Russia–Israel

D) China–Russia–India

  • China–Russia–Iran Navies participate in the ‘CHIRU–2Q22’ is a Joint Drill. China announced that it has sent its naval missile destroyer Urumqi to the Gulf of Oman to participate in the drill. The Chinese regime also sent helicopters and marines for the exercise.
  • Russia sent its Pacific Fleet’s task force which included Nakhimov missile cruiser Varyag and anti–submarine warfare ship Admiral Tributs. The exercises are held in the waters of the Mediterranean and Okhotsk seas.

10. Who is the only second player to win ‘ICC Women’s Cricketer of the Year’ award?

A) Mithali Raj

B) Smriti Mandhana 

C) Harmanpreet Gaur

D) Shafali Verma

  • India’s Smriti Mandhana was named the ICC Women’s Cricketer of the Year for her contribution across all formats in 2021. She was short–listed for ‘the Rachael Heyhoe Flint Trophy’.
  • The Indian T20 Vice–Captain is only the second India woman player to bag an ICC award after veteran pacer Jhulan Goswami, who was named the ICC Player of the Year in 2007. England captain Root was named ICC Men’s Test Cricketer of the Year for 2021 and Pakistan skipper Babar Azam named ICC ODI Cricketer of the Year for 2021.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!