6th Tamil Unit 7 Questions
21. காந்தியடிகளிடம் “இவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவிஞர்” என்று பாரதியாரை கூறியவர் யார்?
A) வ. உ. சிதம்பரம்பிள்ளை
B) இராஜாஜி
C) சத்யமூர்த்தி
D) திரு.வி.க
22. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
I. 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்தார். அப்போது புகைவண்டியில் மதுரைக்குச் சென்றார்.
II. செல்லும் வழியில் பெரும்பாலான மக்கள் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்து இருப்பதைக் கண்டார். அப்போது காந்தியடிகள் நீளமான வேட்டி, மேல்சட்டை, பெரிய தலைப்பாகை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
III. பெரும்பாலான இந்தியர்கள் போதிய உடைகள் இல்லாமல் இருக்கிறார்கள். தான் மட்டும் இவ்வளவு துணிகளை அணிவதா? என்று சிந்தித்தார். அன்றுமுதல் வேட்டியும் துண்டும் மட்டுமே அணியத் தொடங்கினார்.
IV. அவரது தோற்றத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு. அந்தக் கோலத்திலேயே தம் வாழ்நாள் முழுவதும் இருந்தார். உலகம் போற்றிய எளிமைத் திருக்கோலம் இதுவாகும்.
A) I, II மட்டும் சரி
B) II, III மட்டும் சரி
C) III, IV மட்டும் சரி
D) I, II, III, IV அனைத்துமே சரி
23. காந்தியடிகள் ஒருமுறை _____________ ஊரைச் சுற்றியுள்ள ஊர்களில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது கானாடுகாத்தான் என்னும் ஊரில் அன்பர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்தார்.
A) காரைக்குடி
B) மானாமதுரை
C) தேவகோட்டை
D) இளையான்குடி
24. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
I. காந்தியடிகள் ஒருமுறை மதுரையில் தங்கி இருந்தார். மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று வரலாம் என்று தலைவர்கள் அவரை அழைத்தனர். “அந்தக் கோவிலுக்குள் செல்ல எல்லா மக்களுக்கும் அனுமதி உண்டா?” என்று காந்தியடிகள் கேட்டார். அங்கு இருந்தவர்கள் “இல்லை” என்றனர். “அப்படியானால் அங்கே வரமாட்டேன்” என்று கூறிவிட்டார்.
II. பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கோவிலுக்குள் செல்ல அனைவருக்கும் உரிமை உண்டு என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு மதுரைக்கு வந்த போதுதான் காந்தியடிகள் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்றார்.
A) I மட்டும் சரி
B) II மட்டும் சரி
C) I, II இரண்டுமே சரி
D) I, II இரண்டுமே தவறு
25. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
I. குற்றால அருவியில் நீராட அனைவருக்கும் உரிமை அளிக்கப்பட்டு இருந்தது.
II. ஆனால், அருவிக்குச் செல்லும் வழியில் ஒரு கோவில் இருந்தது. அதன் வழியாகச் செல்ல ஒரு சாராருக்குத் தடை இருந்தது.
III. எனவே அனைவரும் அருவியில் நீராட முடியாத நிலை இருந்தது. அதனை அறிந்த காந்தியடிகள் குற்றால அருவியில் நீராட மறுத்துவிட்டார்.
IV. மனிதர்களிடம் உயர்வு தாழ்வு பாராட்டக் கூடாது என்பதில் காந்தியடிகள் உறுதியாக இருந்ததை இதன்மூலம் அறிய முடிகிறது.
A) I, II மட்டும் சரி
B) II, III மட்டும் சரி
C) III, IV மட்டும் சரி
D) I, II, III, IV அனைத்துமே சரி
26. காந்தியடிகள் தமக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் பலமுறை கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கியதாகக் கூறியுள்ளார். ___________ எழுதிய தமிழ்க் கையேடு தம்மைக் கவர்ந்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார். ____________ அவரைப் பெரிதும் கவர்ந்த நூலாகும்.
A) ஜி.யு.போப், திருக்குறள்
B) கால்டுவெல், கலிங்கத்துப்பரணி
C) வீரமாமுனிவர், புறநானூறு
D) இவற்றில் ஏதுமில்லை
27. ______________ ஆம் ஆண்டு சென்னையில் இலக்கிய மாநாடு ஒன்று நடைபெற்றது. அம்மாநாட்டுக்குக் காந்தியடிகள் தலைமை வகித்தார். ______________ என்பவர் வரவேற்புக்குழுத் தலைவராக இருந்தார்.
A) 1923, திரு.வி.க
B) 1937, உ.வே.சாமிநாதர்
C) 1940, பாரதியார்
D) 1943, நாமக்கல் கவிஞர்
28. “இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று காந்தியடிகள் யாரைப் பற்றிக் கூறுகிறார்?
A) நாமக்கல் கவிஞர்
B) திரு.வி.க
C) உ.வே.சாமிநாதர்
D) பாரதியார்
29. காந்தியடிகளிடம் உடைஅணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் _____________?
A) கோவை
B) மதுரை
C) தஞ்சாவூர்
D) சிதம்பரம்
30. காந்தியடிகள் ___________ அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்.
A) நாமக்கல் கவிஞர்
B) பாரதிதாசன்
C) உ.வே.சாமிநாதர்
D) பாரதியார்