6th Tamil Unit 6 Questions
61. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
I. வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று பெயர். சில வினா எழுத்துகள் சொல்லின் முதலில் இடம்பெறும். சில வினா எழுத்துகள் சொல்லின் இறுதியில் இடம்பெறும். எ, யா, ஆ, ஓ, ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும்.
II. மொழியின் முதலில் வருபவை – எ, யா (எங்கு, யாருக்கு)
III. மொழியின் இறுதியில் வருபவை – ஆ, ஓ (பேசலாமா, தெரியுமோ)
IV. மொழி முதலிலும் இறுதியிலும் வருபவை – ஏ (ஏன், நீதானே)
A) I, II, III மட்டும் சரி
B) I, II, III, IV அனைத்தும் சரி
C) II, III மட்டும் சரி
D) III, IV மட்டும் சரி
62. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
I. எது, யார், ஏன் இச்சொற்களில் உள்ள வினா எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகளுக்குப் பொருள் இல்லை.
II. இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே இருந்து வினாப் பொருளைத் தருவது அகவினா எனப்படும்.
III. அவனா? வருவானோ? இச்சொற்களில் உள்ள ஆ, ஓ ஆகிய வினா எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும்.
IV. இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளைத் தருவது புறவினா எனப்படும்.
A) I, II, III மட்டும் சரி
B) II, III மட்டும் சரி
C) I, II, III, IV அனைத்தும் சரி
D) III, IV மட்டும் சரி
63. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
I. மனிதர்களுக்குத் தேவையான பொருள்களைக் கிடைக்கச் செய்வதே வணிகத்தின் நோக்கங்களுள் ஒன்று. ஓர் இடத்தில் உற்பத்தியாகும் பொருள்களைப் பல இடங்களுக்கு அனுப்புவதும் பல இடங்களில் கிடைக்கும் பொருள்களை ஓர் இடத்தில் கிடைக்கச் செய்வதும் வணிகம் ஆகும்.
II. கிடைக்கும் பொருள்களின் மதிப்பைக் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகமாகும். சான்றாகக் கல் என்பது விற்பனைப் பொருளன்று. ஆனால் அதனைச் செதுக்கிச் சிலையாக மாற்றலாம். உதிரும் கல்தூளைக் கோலமாவாக மாற்றலாம். இதனை மதிப்புக் கூட்டுதல் என்பர்.
A) I மட்டும் சரி
B) II மட்டும் சரி
C) I, II இரண்டுமே சரி
D) I, II இரண்டுமே தவறு
64. கிடைக்கும் பொருள்களின் _______________ கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகம்.
A) அளவை
B) மதிப்பை
C) எண்ணிக்கையை
D) எடையை
65. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?
I. பண்டம் – Commodity
II. கடற்பயணம் – Voyage
III. பயணப்படகுகள் – Ferries
IV. தொழில் முனைவோர் – Entrepreneur
A) I, II மட்டும் சரி
B) II, III, IV மட்டும் சரி
C) I, II, III, IV அனைத்தும் சரி
D) III, IV மட்டும் சரி
66. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?
I. பாரம்பரியம் – Heritage
II. கலப்படம் – Adulteration
III. நுகர்வோர் – Consumer
IV. வணிகர் – Merchant
A) I, II மட்டும் சரி
B) II, III, IV மட்டும் சரி
C) III, IV மட்டும் சரி
D) I, II, III, IV அனைத்தும் சரி