6th Tamil Unit 3 Questions
51. சர். சி. வி. இராமன் – பற்றிய சரியான கூற்று எது?
I. 1928 பிப்ரவரி 28 ஆம் நாள் “இராமன் விளைவு” என்னும் தமது கண்டுபிடிப்பை வெளியிட்டார்.
II. இக்கண்டுபிடிப்பு இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது.
III. அவர் தமது கண்டுபிடிப்பை வெளியிட்ட பிப்ரவரி 28 ஆம் நாளை நாம் ஆண்டு தோறும் “ தேசிய அறிவியல் நாள்” எனக் கொண்டாடி மகிழ்கிறோம்.
A) I மட்டும் சரி
B) II மட்டும் சரி
C) III மட்டும் சரி
D) I, II, III அனைத்தும் சரி
52. இராமன் அவர்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்த கேள்வி எது?
A) கடல் நீர் ஏன் கறுப்பாகக் காட்சியளிக்கிறது?
B) கடல் நீர் ஏன் நீல நிறமாக இல்லை?
C) கடல் நீர் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது?
D) கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது?
53. தேசிய அறிவியல் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது ?
A) பிப்ரவரி 28 ஆம் நாள்
B) மார்ச்சு 28 ஆம் நாள்
C) மே 28 ஆம் நாள்
D) ஜூன் 28 ஆம் நாள்
54. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?
I. செயற்கை நுண்ணறிவு – Artificial Intelligence
II. மீத்திறன் கணினி – Super Computer
III. செயற்கைக் கோள் – Satellite
IV. நுண்ணறிவு – Intelligence
A) I மட்டும் சரி
B) II மட்டும் சரி
C) III மட்டும் சரி
D) I, II, III, IV அனைத்தும் சரி