General Tamil

6th Tamil Unit 3 Questions

41. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நமது இந்தியா மூன்று சிறப்புகளைப் பெற்றிருக்கும் என்று அப்துல் கலாம் அவர்கள் கூறியனவற்றுள் சரியானது எது?

I. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நாளந்தா பல்கலைக்கழகத்தில் இருந்ததைப் போல வலுவான கல்வி முறை இருக்கும்.

II. அனைத்து இயற்கை வளங்களும் தீர்ந்து போயிருக்கும். ஆயினும், நாம் தயாரித்து அனுப்பிய செயற்கைக்கோள்கள் சூரிய சக்தியைப் பெற்று நமக்கு அளிக்கும்.

III. செவ்வாய்க்கோளில் மனித இனம் குடியேறி இருக்கும்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) I, III மட்டும் சரி

41. அறிவியலின் அடிப்படை, கேள்வி கேட்கின்ற மனப்பான்மைதான். அறிவியல் பிறந்தது, வளர்ந்தது, வாழ்வது எல்லாம் இந்தக் கேள்வி கேட்கும் திறனால்தான். குழந்தைகளின் கேள்விகளுக்குத்தான் முடிவே இல்லை. கேள்வி கேட்கும் ஒவ்வொரு குழந்தையும் விஞ்ஞானிதான். எனவே குழந்தைகள் தான் இவ்வுலகின் முதல் விஞ்ஞானிகள் – என்று கூறியவர் யார்?

A) சர்.சி.வி.ராமன்

B) விவேகானந்தர்

C) திரு.வி.க

D) அப்துல் கலாம்

42. வெற்றியை அடைய இரண்டு வழிகள் உள்ளன. அவை, அறிவை வளர்க்கும் அனைவரின் பேச்சையும் கவனியுங்கள், வியர்வை! வியர்வை! வியர்வை! – என்று கூறியவர் யார்?

A) சர்.சி.வி.ராமன்

B) விவேகானந்தர்

C) திரு.வி.க

D) அப்துல் கலாம்

43. மொழி முதல் எழுத்துகள் – சரியான கூற்று எது?

I. மொழி என்பதற்குச் சொல் என்னும் பொருளும் உண்டு. சொல்லின் முதலில் வரும் எழுத்துகளை மொழிமுதல் எழுத்துகள் என்பர்.

II. உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும்.

III. க, ச, த, ந, ப, ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.

IV. ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் சில எழுத்துகள் மட்டுமே சொல்லின் முதலில் வரும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

44. மொழி முதல் எழுத்துகள் – சரியான கூற்று எது?

I. ங – வரிசையில் ‘ங’ என்னும் ஓர் எழுத்து மட்டுமே சொல்லில் முதல் எழுத்தாக வருகிறது. எ.கா- ஙனம். (இக்காலத்தில் ஙனம் என்னும் சொல் தனித்து இயங்காமல் அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம் என்னும் சொற்களில் மட்டுமே வழங்கி வருகிறது.)

II. ஞ – வரிசையில் ஞ, ஞா, ஞெ, ஞொ ஆகிய நான்கு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.

III. ய – வரிசையில் ய, யா, யு, யூ, யோ, யௌ ஆகிய ஆறு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.

IV. வ – வரிசையில் வ, வா, வி, வீ, வெ, வே, வை, வெள ஆகிய எட்டு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

45. மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் – சரியான கூற்று எது?

I. மெய்யெழுத்துகள் பதினெட்டும் சொல்லின் முதலில் வாரா.

II. ட, ண, ர, ல, ழ, ள, ற, ன ஆகிய எட்டு உயிர்மெய் எழுத்துகளின் வரிசையில் ஓர் எழுத்து கூடச் சொல்லின் முதலில் வராது.

III. ஆய்த எழுத்து சொல்லின் முதலில் வராது.

IV. ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் மொழி முதலில் வருவதாகக் குறிப்பிடப்பட்ட எழுத்துகள் தவிர பிற எழுத்துகள் சொல்லின் முதலில் வாரா.

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I மட்டும் சரி

C) II மட்டும் சரி

D) III மட்டும் சரி

46. மொழி இறுதி எழுத்துகள் – சரியான கூற்று எது?

I. சொல்லின் இறுதியில் வரும் எழுத்துகளை மொழி இறுதி எழுத்துகள் என்பர்.

II. உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மெய்யுடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே மொழி இறுதியில் வரும்.

III. ஞ், ண், ந், ம், ய் ,ர், ல், வ், ழ், ள், ன் ஆகிய மெய்யெழுத்துகள் பதினொன்றும் மொழியின் இறுதியில் வரும். (உரிஞ், வெரிந், அவ்)

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) III மட்டும் சரி

47. மொழி இறுதியாகா எழுத்துகள் – சரியான கூற்று எது?

I. சொல்லின் இறுதியில் உயிரெழுத்துகள் தனித்து வருவதில்லை.

II. உயிர் எழுத்துகள் மெய்யெழுத்துடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே சொல்லின் இறுதியில் வரும்.

III. அளபெடை எழுத்துகளில் இடம் பெறும் போது உயிர் எழுத்துகள் சொல்லின் இறுதியில் வரும்.

IV. ஆய்த எழுத்து சொல்லின் இறுதியில் வராது. க், ங், ச், ட், த், ப், ற் ஆகிய ஏழு மெய் எழுத்துகளும் சொல்லின் இறுதியில் வருவதில்லை.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) III, IV மட்டும் சரி

48. மொழி இறுதியாகா எழுத்துகள் – சரியான கூற்று எது?

I. உயிர்மெய் எழுத்துகளுள் ‘ங’ எழுத்து வரிசை சொல்லின் இறுதியில் வராது. கார்த்திக், ஹாங்காங், சுஜித், ஜாங்கிரி, திலீப், மியூனிச் போன்ற பிறமொழிப் பெயர்ச்சொற்களில் இவ்வெழுத்துகள் இறுதி எழுத்துகளாக இடம்பெறுவதுண்டு.

II. எகர வரிசையில் ‘கெ’ முதல் ‘னெ’ முடிய எந்த உயிர்மெய் எழுத்தும் மொழி இறுதியில் வருவதில்லை.

III. ஒகர வரிசையில் ‘நொ’ தவிர பிற உயிர்மெய் எழுத்துகள் மொழி இறுதியில் வருவதில்லை. ‘நொ’ என்னும் எழுத்து ஓரெழுத்து ஒரு மொழியாகத் துன்பம் என்னும் பொருளில் வரும்.

A) I, II, III அனைத்தும் சரி

B) I மட்டும் சரி

C) II மட்டும் சரி

D) III மட்டும் சரி

49. சொல்லின் இடையில் வரும் எழுத்துகள் – சரியான கூற்று எது?

I. மெய் எழுத்துகள் பதினெட்டும் சொல்லின் இடையில் வரும்.

II. உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்.

III. ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்.

IV. அளபெடையில் மட்டுமே உயிர் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

50. சர். சி. வி. இராமன் – பற்றிய சரியான கூற்று எது?

I. 1921 ஆம் ஆண்டு மத்திய தரைக் கடலில், ஒரு கப்பல் இங்கிலாந்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

II. தமிழர் ஒருவர் கப்பலின் மேல்தளத்தில் நின்று கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென அவரது உள்ளத்தில் கடல்நீர் ஏன் நீலநிறமாகக் காட்சியளிக்கிறது என்ற வினா எழுந்தது.

III. அவ்வினா அவரை உறங்க விடவில்லை. இங்கிலாந்து பயணம் முடிந்து இந்தியா திரும்பினார்.

IV. பிறகு பாதரச ஆவி விளக்கு, பென்சீன் மற்றும் நிறமாலைக் காட்டி ஆகியவற்றின் உதவியுடன் தமது ஆய்வைத் தொடங்கினார்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

Previous page 1 2 3 4 5 6Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin