6th Tamil Unit 3 Questions
31. ’அவ்வுருவம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________.
A) அவ்வு + ருவம்
B) அ + உருவம்
C) அவ் + வுருவம்
D) அ + வுருவம்
32. மருத்துவம் + துறை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________.
A) மருத்துவம்துறை
B) மருத்துவதுறை
C) மருந்துதுறை
D) மருத்துவத்துறை
33. செயல் + இழக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________.
A) செயலிழக்க
B) செயல்இழக்க
C) செயஇழக்க
D) செயலிலக்க
34. நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல் ______________.
A) போக்குதல்
B) தள்ளுதல்
C) அழித்தல்
D) சேர்த்தல்
35. எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல் _______________.
A) அரிது
B) சிறிது
C) பெரிது
D) வறிது
36. அப்துல் கலாம் அவர்களுக்கு தமிழில் மிகவும் பிடித்த புத்தகம் எது?
A) சிந்து சமவெளி நாகரீகம்
B) திருக்குறள்
C) கலிங்கத்துப்பரணி
D) இவற்றில் ஏதுமில்லை
37. கீழ்க்கண்டவற்றுள் எந்த குறள் அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கைக்கு வலுசேர்த்தது?
A) அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்கல் ஆகா அரண்
B) அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு
C) பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற
D) இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
38. ‘லிலியன் வாட்சன்’ எழுதிய, விளக்குகள் பல தந்த ஒளி (Lights from many lamps) என்னும் நூலையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதைப் படித்தபோது அறிவு, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி ஆகிய மூன்றையும் பெற்றேன் – என்று கூறியவர் யார்?
A) பெரியார்
B) அண்ணா
C) காந்தி
D) அப்துல் கலாம்
39. போலியோவினால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று கிலோ எடையுள்ள செயற்கைக் கால்களைப் பொருத்திக் கொண்டு சிரமப்பட்டு நடப்பதைக் கண்டேன். பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுத்தப்படும் கார்பன் இழையைக் கொண்டு முந்நூறு கிராம் எடையில் செயற்கைக் கால்கள் உருவாக்கப்பட்டன. அதனை அவர்கள் அணிந்து மகிழ்ந்த நிகழ்ச்சி தான் எனக்குப் பெருமகிழ்வை அளித்தது – என்று கூறியவர் யார்?
A) பெரியார்
B) நேரு
C) காந்தி
D) அப்துல் கலாம்
40. சுதந்திர இந்தியாவின் வெற்றிகளாக – கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
I. உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளோம். தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகுதியான வளர்ச்சி பெற்றுள்ளோம். எவ்வகையான செயற்கைக் கோளையும் ஏவும் திறன் நம்மிடம் உள்ளது.
II. அணு உலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பதில் முன்னணியில் உள்ளோம். நவீன மருந்துகளும் பாரம்பரிய மருத்துவ முறைகளும் வளர்ச்சி பெற்றுள்ளன.
III. பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை அக்னி மற்றும் பிரித்வி ஏவுகணைகளைச் செலுத்துவதில் வெற்றி பெற்றுள்ளோம்.
A) I, II மட்டும் சரி
B) II, III மட்டும் சரி
C) I, II, III அனைத்தும் சரி
D) I, III மட்டும் சரி