General Tamil

6th Tamil Unit 3 Questions

21. நீலம் + வான் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________.

A) நீலம்வான்

B) நீளம்வான்

C) நீலவான்

D) நீலவ்வான்

22. இல்லாது + இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________.

A) இல்லாதுஇயங்கும்

B) இல்லாஇயங்கும்

C) இல்லாதியங்கும்

D) இல்லதியங்கும்

23. எந்திரமனிதன் ’ரோபோ’ பற்றிய சரியான கூற்று எது?

I. காரல் கபெக் (Karel capek) என்பவர் ‘செக்’ நாட்டைச் சேர்ந்த நாடக ஆசிரியர். இவர் 1920ஆம் ஆண்டு நாடகம் ஒன்றை எழுதினார்.

II. அதில் “ரோபோ” (Robot) என்னும் சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தினார். ரோபோ என்ற சொல்லுக்கு ’அடிமை’ என்பது பொருள்.

III. ஒரு தொழிற்சாலையில் ரோபோக்கள் வேலை செய்வதாக அந்த நாடகத்தில் காட்சிகளை அமைத்திருந்தார். இவ்வாறு ரோபோ என்னும் சொல் வழக்கத்திற்கு வந்தது.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) I, II, III அனைத்தும் தவறு

24. தானியங்கிகள் பற்றிய சரியான கூற்று எது?

I. மனிதர்கள் தம் வேலைகளை எளிதாகச் செய்ய முதலில் எந்திரங்களைக் கண்டுபிடித்தனர். அவற்றை இயக்குவதற்கு மனித ஆற்றல் தேவைப்பட்டது. இக்குறையைப் போக்க மனிதன் கண்டுபிடித்தவையே தானியங்கிகள்.

II. நுட்பமான, கடினமான, ஒரே மாதிரியான வேலைகளை மனிதரைவிட விரைவாகத் தானே செய்துமுடிக்கும் எந்திரமே தானியங்கி ஆகும். ஒவ்வொரு தானியங்கியிலும் ஒரு கணினி இணைந்து இருக்கும். தானியங்கியின் செயல்களை அந்தக் கணினி கட்டுப்படுத்தும்.

III. இவ்வகைத் தானியங்கிகள் இன்று பல தொழில் நிறுவனங்களில் பயன்பட்டு வருகின்றன. இவை பயன்படும் இடத்திற்கு ஏற்ற வகையில் எந்திரக் கைகள், நகரும் கால்கள், சூழ்நிலைகளை உணர்வதற்கான நுண்ணுணர்வுக் கருவிகள் (Sensors) ஆகியவற்றுடன் உருவாக்கப்படுகின்றன.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் தவறு

D) I, II, III அனைத்தும் சரி

25. மனித முயற்சிகளுக்கு மாற்றாகத் தானே இயங்கும் எந்திரம் தானியங்கி ஆகும்.“இவை தோற்றத்தில் மனிதர் போல இல்லாமலும் இருக்கலாம். ஆனால் மனிதர்களைப் போலச் செயல்களை நிறைவேற்றும்” என்று _________________ கலைக்களஞ்சியம் தானியங்கிகளுக்கு விளக்கம் தருகிறது.

A) மால்வேசி

B) சுகாவே

C) பிரிட்டானிக்கா

D) இவற்றில் ஏதுமில்லை

26. _____________ -ஆம் ஆண்டு மே மாதம் சதுரங்கப் போட்டி ஒன்று நடைபெற்றது. அதில் உலகச் சதுரங்க வெற்றியாளர் கேரி கேஸ்புரோவ் என்பவர் கலந்து கொண்டார். ஐ.பி.எம். என்னும் நிறுவனம் உருவாக்கிய டீப் புளூ (Deep blue) என்னும் மீத்திறன் கணினி (Super Computer) அவருடன் போட்டியிட்டு, வெற்றி பெற்றது.

A) 1994

B) 1965

C) 1967

D) 1997

27. “உலகிலேயே முதன்முதலாக _________ நாடு ஒரு ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கியுள்ளது. அந்த ரோபோவின் பெயர் ‘சோபியா’. மேலும் ஐக்கிய நாடுகள் சபை ‘புதுமைகளின் வெற்றியாளர்’ என்னும் பட்டத்தைச் சோபியாவுக்கு வழங்கியுள்ளது. உயிரில்லாத ஒரு பொருளுக்கு ஐ.நா.சபை பட்டம் வழங்குவதும் இதுதான் முதல் முறை.

A) மலேசியா

B) அமெரிக்கா

C) ரஷ்யா

D) சவுதி அரேபியா

28. நுட்பமாகச் சிந்தித்து அறிவது ____________.

A) நூலறிவு

B) நுண்ணறிவு

C) சிற்றறிவு

D) பட்டறிவு

29. தானே இயங்கும் எந்திரம் ___________.

A) கணினி

B) தானியங்கி

C) அலைபேசி

D) தொலைக்காட்சி

30. ‘நின்றிருந்த’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________.

A) நின் + றிருந்த

B) நின்று + இருந்த 

C) நின்றி + இருந்த

D) நின்றி + ருந்த

Previous page 1 2 3 4 5 6Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin