General Tamil

6th Tamil Unit 2 Questions

81. திருவள்ளுவர் பற்றிய சரியான கூற்று எது?

I. திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.

II. எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியுள்ளார்.

III. வான்புகழ் வள்ளுவர், தெய்வப்புலவர், பொய்யில் புலவர் முதலிய பல சிறப்புப் பெயர்கள் இவருக்கு உண்டு.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) I, II, III அனைத்தும் தவறு

82. திருக்குறள் பற்றிய சரியான கூற்று எது?

I. திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

II. திருக்குறள் 133 அதிகாரங்களில் 1330 குறள்பாக்களைக் கொண்டுள்ளது.

III. “திருக்குறளில் இல்லாததும் இல்லை, சொல்லாததும் இல்லை” என்னும் வகையில் சிறந்து விளங்குகிறது.

IV. திருக்குறளுக்கு உலகப் பொதுமறை, வாயுறை வாழ்த்து முதலிய பல சிறப்புப் பெயர்கள் வழங்குகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

83. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது _____________________.

A) ஊக்கமின்மை

B) அறிவுடைய மக்கள்

C) வன்சொல்

D) சிறிய செயல்

84. ஒருவர்க்குச் சிறந்த அணி __________________.

A) மாலை

B) காதணி

C) இன்சொல்

D) வன்சொல்

85. ____________ ஆம் ஆண்டு ரியோ நகரில் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் கலந்துகொண்டார். உயரம் தாண்டுதல் போட்டியில் அவர் தங்கப் பதக்கம் பெற்றார்.

A) 2014

B) 2015

C) 2016

D) 2017

86. விடுபட்டதை நிரப்புக.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி _______________ _______________ _______________?

A) பகவன் முதற்றே உலகு

B) உள்நின்று உடற்றும் பசி

C) எடுப்பதூஉம் எல்லாம் மழை

D) செயற்கரிய செய்கலா தார்

87. விடுபட்டதை நிரப்புக.

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து _______________ _______________ _______________?

A) பகவன் முதற்றே உலகு

B) உள்நின்று உடற்றும் பசி

C) எடுப்பதூஉம் எல்லாம் மழை

D) செயற்கரிய செய்கலா தார்

88. விடுபட்டதை நிரப்புக.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே _______________ _______________ _______________?

A) பகவன் முதற்றே உலகு

B) உள்நின்று உடற்றும் பசி

C) எடுப்பதூஉம் எல்லாம் மழை

D) செயற்கரிய செய்கலா தார்

89. விடுபட்டதை நிரப்புக.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் _______________ _______________ _______________?

A) பகவன் முதற்றே உலகு

B) உள்நின்று உடற்றும் பசி

C) எடுப்பதூஉம் எல்லாம் மழை

D) செயற்கரிய செய்கலா தார்

90. விடுபட்டதை நிரப்புக.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து _______________ _______________ _______________?

A) மன்னுயிர்க்கு எல்லாம் இனிது

B) உள்நின்று உடற்றும் பசி

C) எடுப்பதூஉம் எல்லாம் மழை

D) செயற்கரிய செய்கலா தார்

87. விடுபட்டதை நிரப்புக.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் _______________ _______________ _______________?

A) பகவன் முதற்றே உலகு

B) சான்றோன் எனக்கேட்ட தாய்

C) எடுப்பதூஉம் எல்லாம் மழை

D) செயற்கரிய செய்கலா தார்

88. விடுபட்டதை நிரப்புக.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் _______________ _______________ _______________?

A) பகவன் முதற்றே உலகு

B) உள்நின்று உடற்றும் பசி

C) என்பும் உரியர் பிறர்க்கு

D) செயற்கரிய செய்கலா தார்

89. விடுபட்டதை நிரப்புக.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு _______________ _______________ _______________?

A) பகவன் முதற்றே உலகு

B) உள்நின்று உடற்றும் பசி

C) எடுப்பதூஉம் எல்லாம் மழை

D) என்புதோல் போர்த்த உடம்பு

90. விடுபட்டதை நிரப்புக.

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு _______________ _______________ _______________?

A) அணியல்ல மற்றுப் பிற

B) உள்நின்று உடற்றும் பசி

C) எடுப்பதூஉம் எல்லாம் மழை

D) செயற்கரிய செய்கலா தார்

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin