General Tamil

6th Tamil Unit 2 Questions

61. வழி + தடம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________.

A) வழிதடம்

B) வழித்தடம்

C) வழிதிடம்

D) வழித்திடம்

62. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி __________________.

A) துருவப்பகுதி

B) இமயமலை

C) இந்தியா

D) தமிழ்நாடு

63. கிழவனும் கடலும் ( The Oldman and the Sea ) என்னும் ஆங்கிலப் புதினம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு படக்கதையாக இங்குச் சுருக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நூல் ___________ ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றது. இந்நூலின் ஆசிரியர் ______________________ ஆவார்.

A) 1934, ஜான் வெல்

B) 1944, மிட்செல்

C) 1954, எர்னெஸ்ட் ஹெமிங்வே

D) 1964, டார்வின்

63. கிழவனும் கடலும் ( The Oldman and the Sea ) என்னும் புதினம் பற்றிய சரியான கூற்று எது?

I. இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே நடக்கும் போராட்டமே இந்தக் கதை. இக்கதையின் நாயகன் சாண்டியாகோ. வயது முதிர்ந்த மீனவர் அவர். முன்பெல்லாம் கடலுக்குச் சென்றால் மீன் இல்லாமல் திரும்பமாட்டார்.

II. ஆனால், கடந்த எண்பத்து நான்கு நாள்களாக ஏனோ அவருக்கு ஒரு மீனும் கிடைக்கவில்லை.

III. மனோலின் என்னும் சிறுவன் மீன்பிடிக்கக் கற்றுக்கொள்வதற்காக முதல் நாற்பது நாள்களும் அவருடன் கடலுக்கு வந்தான். அவன், அவருக்கு வேண்டிய உதவிகள் செய்ததோடு பேச்சுத்துணையாகவும் இருந்தான்.

IV. அவரோடு கடலுக்குப் போனால் ஒரு மீனும் கிடைப்பதில்லை என்று அவனை வேறு படகிற்கு அனுப்பிவிட்டனர் அவனது பெற்றோர்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

64. கிழவனும் கடலும் ( The Oldman and the Sea ) என்னும் புதினத்தில், சாண்டியாகோ – விற்கு எப்போது மீன் கிடைத்தது?

A) அறுபத்து ஐந்தாவது நாள்

B) எழுபத்து ஐந்தாவது நாள்

C) எண்பத்து ஐந்தாவது நாள்

D) தொண்ணூற்றி ஐந்தாவது நாள்

65. எழுத்துகள் ______________ வகைப்படும்.

A) ஐந்து

B) நான்கு

C) இரண்டு

D) மூன்று

(குறிப்பு – எழுத்துகள் இரண்டு வகைப்படும். 1. முதல் எழுத்துகள் 2. சார்பு எழுத்துகள்)

66. முதல் எழுத்துகள் எத்தனை வகைப்படும்?

A) 10

B) 12

C) 18

D) 30

(குறிப்பு – முதல் எழுத்துகள் : உயிர் எழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும். பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே இவற்றை முதல் எழுத்துகள் என்பர்.)

67. சார்பு எழுத்துகள் _____________ வகைப்படும்.

A) 2

B) 5

C) 8

D) 10

(குறிப்பு – சார்பு எழுத்துகள் : முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் சார்பெழுத்துகள். இவை பத்து வகைப்படும். 1. உயிர்மெய்; 2. ஆய்தம்; 3. உயிரளபெடை; 4. ஒற்றளபெடை; 5. குற்றியலிகரம்; 6. குற்றியலுகரம்; 7. ஐகாரக்குறுக்கம்; 8. ஒளகாரக்குறுக்கம்; 9. மகரக்குறுக்கம்; 10. ஆய்தக்குறுக்கம்)

68. உயிர்மெய் – பற்றிய சரியான கூற்று எது?

I. மெய் எழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன.

II. உயிர்மெய் எழுத்தின் ஒலிவடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும்.

III. வரிவடிவம் மெய்யெழுத்தை ஒத்திருக்கும். ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்திருக்கும்.

IV. முதல் எழுத்துகளைச் சார்ந்து வருவதால் இவை சார்பெழுத்து வகையுள் அடங்கும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

69. ஆய்தம் எழுத்து பற்றிய சரியான கூற்று எது?

I. மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்றது. முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை, அஃகேனம் என்ற வேறு பெயர்களும் இதற்கு உண்டு.

II. நுட்பமான ஒலிப்புமுறையை உடையது.

III. தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும்.

IV. தனித்து இயங்காது. முதல் எழுத்துகளாகிய உயிரையும், மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆகும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

70. கீழ்க்கண்ட கூற்றில் சரியானது எது?

I. முதல் எழுத்துகள் மட்டும் இடம்பெறும் சொல் – ஆம்.

II. முதல் எழுத்துகள் இடம்பெறாத சொல் – குருவி.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin