General Tamil

6th Tamil Unit 2 Questions

51. பறவையினங்களைக் காப்பாற்ற நாம் செய்ய வேண்டியவை – தவறான கூற்று எது?

I. ஆல், அரசு போன்ற மரங்களையும் அவரை, புடலை போன்ற கொடிகளையும் வளர்க்க வேண்டும்.

II. நமது மண்ணுக்கேற்ற பிறவகை உள்ளூர்த் தாவரங்களையும் வளர்க்க வேண்டும்.

III. தோட்டங்களிலும் வயல்வெளிகளிலும் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைத் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

IV. தாவர வேலிகளுக்கு மாற்றாகச் செயற்கை வேலிகள் அமைக்கப்பட வேண்டும்.

A) I மட்டும் தவறு

B) II மட்டும் தவறு

C) III மட்டும் தவறு

D) IV மட்டும் தவறு

52. காக்கைகுருவி எங்கள் சாதி – என்று ___________________ பாடினார். சமைப்பதற்குத் தன் மனைவி வைத்திருந்த சிறிதளவு அரிசியையும் முற்றத்தில் இருந்த சிட்டுக் குருவிகளுக்கு மகிழ்வுடன் போட்டுவிட்டுப் பட்டினியாக இருந்தாராம் இவர்.

A) பாரதிதாசன்

B) பாரதியார்

C) திரு.வி.க

D) திருவள்ளுவர்

53. இந்தியாவின் பறவை மனிதர் – பற்றிய சரியான கூற்று எது?

I. இன்றைய பறவையியல் ஆய்வாளர்களுக்கு முன்னோடி டாக்டர் சலீம் அலி. தம் வாழ்நாள் முழுவதும் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் அவற்றைப் படம் பிடிப்பதிலும் ஈடுபட்டார்.

II. அதனால், அவர் ‘இந்தியாவின் பறவை மனிதர்’ என்று அழைக்கப்படுகிறார்.

III. பறவைகள் குறித்துப் பல நூல்களை எழுதியுள்ளார்.

IV. தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்குச் ‘சிட்டுக் குருவியின் வீழ்ச்சி’ ( The fall of sparrow ) என்று பெயரிட்டுள்ளார்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

54. மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழமுடியும்!, பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழமுடியாது! – என்று கூறியவர் யார்?

A) முகமது ஜாபர்

B) மீ.ராசேந்திரன்

C) சலீம் அலி

D) கோமல் சுவாமிநாதன்

55. உலகிலேயே நெடுந்தொலைவு 22,000 கி.மீ. பயணம் செய்யும் பறவையினம் – பெயர் என்ன?

A) ஆர்டிக் ஆலா

B) கசுவாரீபார்மஸ்

C) அசிபித்ரிபார்மசு

D) இவற்றில் ஏதுமில்லை

56. பறவை பற்றிய படிப்பு _______________ எனப்படும்.

A) ஜெரன்டாலஜி

B) ஆர்க்கியாலஜி

C) ஆர்னித்தாலஜி

D) ஆந்த்ரோபாலஜி

57. உலகச் சிட்டுக்குருவிகள் நாள் எப்போது?

A) ஜனவரி – 20

B) மே – 20

C) ஜூன் – 20

D) மார்ச் – 20

58. ’தட்பவெப்பம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________.

A) தட்பம் + வெப்பம்

B) தட்ப + வெப்பம்

C) தட் + வெப்பம்

D) தட்பு + வெப்பம்

59. ’வேதியுரங்கள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________________.

A) வேதி + யுரங்கள்

B) வேதி + உரங்கள்

C) வேத் + உரங்கள்

D) வேதியு + ரங்கள்

60. தரை + இறங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________________.

A) தரையிறங்கும்

B) தரைஇறங்கும்

C) தரையுறங்கும்

D) தரைய்றங்கும்

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin