General Tamil

6th Tamil Unit 2 Questions

41. சரியாக பொருந்தியவை எவை?

I. முத்துச்சுடர்போல – நிலாஒளி

II. தூய நிறத்தில் – மாடங்கள்

III. சித்தம் மகிழ்ந்திட – தென்றல்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III, அனைத்தும் சரி

42. ‘வலசை போதல்’ – உடன் தொடர்புடைய சரியான வாக்கியங்களை தேர்ந்தெடுக்கவும்.

I. பறவைகள் கண்டம்விட்டுக் கண்டம் பறக்கின்றன. அவை பெருங்கடல்களையும் மலை களையும் கடந்து போகின்றன; குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்கின்றன.

II. இவ்வாறு பறவைகள் இடம் பெயர்தலை வலசை போதல் என்பர்.

III. நீர்வாழ் பறவைகளே பெரும்பாலும் வலசை போகின்றன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) I, II மட்டும் சரி

43. பறவைகள் பற்றி சரியான கூற்று எது?

I. உணவு, இருப்பிடம், தட்பவெப்பநிலை மாற்றம், இனப்பெருக்கம் இவற்றிற்காகவே பறவைகள் இடம் பெயர்கின்றன.

II. நிலவு, விண்மீன், புவிஈர்ப்புப் புலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பறவைகள் இடம் பெயர்கின்றன.

III. பொதுவாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் பறவைகள் வலசை போகின்றன. பறவைகள் தங்களுக்கென ஒரு வழித்தடத்தைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பாதையிலேயே பறக்கின்றன.

IV. சில பறவை இனங்கள் அதே பாதையில் தாய்நிலங்களுக்குத் திரும்புகின்றன. சில பறவை இனங்கள் போவதற்கும் வருவதற்கும் இருவேறு பாதைகளைப் பயன்படுத்துகின்றன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) I, II, III மட்டும் சரி

44. வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தவறானவை எவை?

I. தலையில் சிறகு வளர்தல், ஒரு வகைப் பறவை வேறு வகைப் பறவையாக உருமாறத் தோன்றும் அளவிற்குக் கூடச்சில நேரங்களில் மாற்றங்கள் ஏற்படும்.

II. குரல் மாறுதல்

III. உடலில் கற்றையாக முடி வளர்

IV. இறகுகளின் நிறம் மாறுதல்

A) I மட்டும் தவறு

B) II மட்டும் தவறு

C) III மட்டும் தவறு

D) IV மட்டும் தவறு

45. கப்பல் பறவை – பற்றிய சரியான கூற்று எது?

I. சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை கப்பல் பறவை (Frigate bird).

II. இது தரையிறங்காமல் 400 கிலோ மீட்டர் வரை பறக்கும்.

III. இது கப்பல் கூழைக்கடா, கடற்கொள்ளைப் பறவை என்றும் அழைக்கப்படுகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) I, II மட்டும் சரி

46. கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது?

I. தமிழகத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் வலசை வருவது பற்றி இலக்கியங்களிலும் செய்திகள் உள்ளன. ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சத்திமுத்தப்புலவர் “நாராய், நாராய், செங்கால் நாராய்” என்னும் பாடலை எழுதியுள்ளார்.

II. அப்பாடலில் உள்ள “தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்” என்னும் அடிகள் பறவைகள் வலசை வந்த செய்தியைக் குறிப்பிடுகின்றன.

III. ஐரோப்பாவில் இருந்து தமிழகத்திற்குச் செங்கால் நாரைகள் வருவது தற்போதைய ஆய்விலும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

IV. வெளிநாட்டுப் பறவைகளுக்கும் புகலிடமாகத் திகழ்கிறது ஒடிசா.

A) I மட்டும் தவறு

B) II மட்டும் தவறு

C) III மட்டும் தவறு

D) IV மட்டும் தவறு

47. தற்போது வெகுவாக அழிந்து வரும் பறவையினம் எது?

A) தூக்கணாங்குருவி

B) புறா

C) சிட்டுக் குருவி

D) கிளி

48. சிட்டுக் குருவி – பற்றிய சரியான கூற்று எது?

I. உருவத்தில் சிறிய இந்தப் பழுப்புநிறப் பறவையைப் பார்த்தவுடனே ஆண், பெண் வேறுபாட்டை உணர முடியும்.

II. ஆண்குருவியின் தொண்டைப்பகுதி கறுப்பு நிறத்தில் இருக்கும். உடல்பகுதி அடர்பழுப்பாக இருக்கும். பெண் குருவியின் உடல் முழுவதும் மங்கிய பழுப்பு நிறத்தில் இருக்கும்.

III. சிட்டுக்குருவி கூடுகட்டி வாழும் பறவையினத்தைச் சார்ந்தது. கூடுகட்டும் காலங்களில் சத்தமிட்டுக் கொண்டே இருக்கும். கூடுகட்டிய பின் மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். பதினான்கு நாள்கள் அடைகாக்கும். பதினைந்தாம் நாளில் குஞ்சுகள் வெளிவரும்.

IV. துருவப் பகுதிகள் தவிர மனிதன் வாழும் இடங்களில் எல்லாம் சிட்டுக்குருவிகளும் வாழ்கின்றன. இந்தியா முழுவதும் சிட்டுக்குருவிகளைக் காணலாம். இமயமலைத் தொடரில் 4000 மீட்டர் உயரத்தில் கூட இவை வாழ்கின்றன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) I, II, III மட்டும் சரி

49. சிட்டுக் குருவி – பற்றிய சரியான கூற்று எது?

I. தானியங்கள், புழுபூச்சிகள், மலர் அரும்புகள், இளந்தளிர்கள், தேன் போன்றவை சிட்டுக் குருவிகளின் உணவாகும்.

II. சிட்டுக்குருவியின் குஞ்சுகள் பெரும்பாலும் புழு, பூச்சிகளையே உட்கொள்ளும். அதனால், தாய்க்குருவி புழு பூச்சிகளைப் பிடித்துத் தம் குஞ்சுகளுக்கு ஊட்டிவிடும்.

III. சிட்டுக்குருவியின் வாழ்நாள் பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகள் ஆகும்.

IV. சிட்டுக்குருவி உருவத்தில் சிறியது. ஆனாலும் வேகமாகப் பறக்கும். அதனால் தான் விரைவாகச் செல்பவனைச் சிட்டாய்ப் பறந்து விட்டான் என்று கூறுகிறோம்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

50. சிட்டுக்குருவிகளின் அழிவுக்குக் காரணங்கள் – பற்றிய சரியான கூற்று எது?

I. மனிதர்கள் விவசாயத்திற்குப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் குருவிக் குஞ்சுகளுக்கு உணவான புழுபூச்சிகள் கிடைப்பதில்லை.

II. நவீன கட்டடங்கள் குருவிகள் கூடு கட்ட ஏற்றவையாக இல்லை. தற்காலத்தில் தாவர வேலிகளுக்கு மாற்றாகச் செயற்கை வேலிகள் அமைக்கப்படுகின்றன. எனவே சிட்டுக்குருவிகள் வாழ உகந்த வேலித் தாவரங்கள் குறைந்துவிட்டன.

III. சிட்டுக்குருவிகள் ஓய்வெடுக்கும் புதர்ச்செடிகளும் இல்லை. உணவுக்கும், இருப்பிடத்திற்கும் சிட்டுக்குருவிகளுடன் மற்ற பறவைகள் போட்டியிடுகின்றன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) I, II மட்டும் சரி

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin