6th Tamil Unit 2 Questions
31. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர், அவரது இயற்பெயர் சுப்பிரமணியன். இளமையிலேயே சிறப்பாகக் கவிபாடும் திறன் பெற்றவர் – இந்த கூற்றோடு தொடர்புடையவர் யார்?
A) மீ.ராசேந்திரன்
B) பாரதியார்
C) மனோன்மணியம்
D) நாமக்கல் கவிஞர்
32. எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர். தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர். மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர். நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர் – இந்த கூற்றோடு தொடர்புடையவர் யார்?
A) சுத்தானந்த பாரதியார்
B) பாரதிதாசன்
C) பாரதியார்
D) நாமக்கல் கவிஞர்
33. பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு போன்ற நூல்களின் ஆசிரியர் யார்?
A) மீ.ராசேந்திரன்
B) பாரதியார்
C) மனோன்மணியம்
D) நாமக்கல் கவிஞர்
34. ’கிணறு’ என்பதைக் குறிக்கும் சொல் __________.
A) ஏரி
B) கேணி
C) குளம்
D) ஆறு
35. ’சித்தம்’ என்பதன் பொருள் ___________.
A) உள்ளம்
B) மணம்
C) குணம்
D) வனம்
36. மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் __________.
A) அடுக்குகள்
B) கூரை
C) சாளரம்
D) வாயில்
37. நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________.
A) நன் + மாடங்கள்
B) நற் + மாடங்கள்
C) நன்மை + மாடங்கள்
D) நல் + மாடங்கள்
38. நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________________.
A) நிலம் + இடையே
B) நிலத்தின் + இடையே
C) நிலத்து + இடையே
D) நிலத் + திடையே
39. முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________________.
A) முத்துசுடர்
B) முச்சுடர்
C) முத்துடர்
D) முத்துச்சுடர்
40. நிலா + ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________________.
A) நிலாஒளி
B) நிலஒளி
C) நிலவொளி
D) நிலவுஒளி