General Tamil

6th Tamil Unit 2 Questions

11. ______________ மன்னனுடைய வெண்கொற்றக் குடை குளிர்ச்சி பொருந்தியது. அதைப் போலவே வெண்ணிலவும் தன் ஒளியால் உலகுக்கு இன்பம் அளிக்கிறது. அதனால் வெண்ணிலவைப் போற்றுவோம் என்று இளங்கோவடிகள் கூறுகிறார்.

A) பல்லவ

B) பாண்டிய

C) சேர

D) சோழ

12. காவிரி ஆறு பாய்ந்து வளம் செய்யும் நாட்டை ஆட்சி செய்பவன் __________ மன்னன். அவனது ஆணைச் சக்கரம் போல, கதிரவனும் பொன்போன்ற சிகரங்களையுடைய இமயமலையை வலப்புறமாகச் சுற்றிவருகிறது. அதனால் கதிரவனைப் போற்றுவோம்.

A) பல்லவ

B) பாண்டிய

C) சேர

D) சோழ

13. சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் _______________.

A) இளங்கோவடிகள்

B) சீத்தலைச் சாத்தனார்

C) செயங்கொண்டார்

D) கம்பர்

14. இளங்கோவடிகள் ___________ மன்னர் மரபைச் சேர்ந்தவர் என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுகிறது.

A) பல்லவ

B) பாண்டிய

C) சேர

D) சோழ

15. இளங்கோவடிகள் அவர்களின் காலம்?

A) கி.பி. இரண்டாம் நூற்றாண்டு

B) கி.பி. மூன்றாம் நூற்றாண்டு

C) கி.பி. நான்காம் நூற்றாண்டு

D) கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு

16. கீழ்க்கண்டவற்றுள் ஐம்பெருங்காப்பியங்கள் ஒன்று உள்ளது. அது எது?

A) குறுந்தொகை

B) நற்றிணை

C) சிலப்பதிகாரம்

D) கலிங்கத்துப்பரணி

17. தமிழின் முதல் காப்பியம் எது?

A) குறுந்தொகை

B) நற்றிணை

C) சிலப்பதிகாரம்

D) கலிங்கத்துப்பரணி

18. முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றெல்லாம் போற்றப்படுகிற நூல் எது?

A) சிலப்பதிகாரம்

B) கம்பராமாயணம்

C) வளையாபதி

D) குண்டலகேசி

19. இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுபவை எவை?

A) வளையாபதி மற்றும் குண்டலகேசி

B) கம்பராமாயணம் மற்றும் பாஞ்சாலி சபதம்

C) சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை

D) இவற்றில் ஏதுமில்லை

20. திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாக ____________ நூல் தொடங்குகிறது.

A) சிலப்பதிகாரம்

B) கம்பராமாயணம்

C) வளையாபதி

D) குண்டலகேசி

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!