6th Tamil Unit 1 Questions
81. தொலைவில் உ ள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும். அறிவியல் அறிஞர் கலீலியோ நிறுவிய கருத்து இது. இக்கருத்து திருவள்ளுவமாலை என்னும் நூலில் _________ எழுதிய பாடலில் இடம்பெற்றுள்ளது.
A) நல்லாதனார்
B) கபிலர்
C) தொல்காப்பியர்
D) மாணிக்க வாசகர்
82. நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) நற்றிணை
B) பதிற்றுப்பத்து
C) தொல்காப்பியம்
D) கார்நாற்பது
83. கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) நற்றிணை
B) பதிற்றுப்பத்து
C) தொல்காப்பியம்
D) கார்நாற்பது
84. கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர் – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) நற்றிணை
B) பதிற்றுப்பத்து
C) தொல்காப்பியம்
D) கார்நாற்பது
85. தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும் – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) நற்றிணை
B) பதிற்றுப்பத்து
C) திருவள்ளுவமாலை
D) கார்நாற்பது
86. தமிழ் மொழியின் இலக்கண வகைகள் ___________.
A) 4
B) 5
C) 6
D) 7
(குறிப்பு – தமிழ் மொழியின் இலக்கண வகைகள் ஐந்து. எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம், பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம், அணி இலக்கணம் )
87. _______________ என்பது இங்குக் கால அளவைக் குறிக்கிறது.
A) ஒலிப்பு
B) மாத்திரை
C) வடிவம்
D) நேரம்
(குறிப்பு – மாத்திரை என்பது இங்குக் கால அளவைக் குறிக்கிறது. ஒரு மாத்திரை என்பது ஒருமுறை கண் இமைக்கவோ ஒருமுறை கைநொடிக்கவோ ஆகும் கால அளவாகும். குறில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு – 1 மாத்திரை. நெடில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு – 2 மாத்திரை)
88. மெய் எழுத்துகள் ஒலிக்கும் கால அளவு?
A) கால் மாத்திரை
B) அரை மாத்திரை
C) ஒரு மாத்திரை
D) இரண்டு மாத்திரை
89. ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் கால அளவு?
A) கால் மாத்திரை
B) அரை மாத்திரை
C) ஒரு மாத்திரை
D) இரண்டு மாத்திரை
90. கபிலர் – என்னும் பெயரில் உள்ள மாத்திரை அளவைக் கண்டுபிடி?
A) 2
B) 2.5
C) 3
D) 3.5