6th Tamil Unit 1 Questions
71. ‘சீரிளமை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______________.
A) சீர் + இளமை
B) சீர்மை + இளமை
C) சீரி + இளமை
D) சீற் + இள
72. சிலம்பு + அதிகாரம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________________.
A) சிலம்பதிகாரம்
B) சிலப்பதிகாரம்
C) சிலம்புதிகாரம்
D) சில பதிகாரம்
73. கணினி + தமிழ் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______________.
A) கணினிதமிழ்
B) கணினித்தமிழ்
C) கணிணிதமிழ்
D) கனினிதமிழ்
74. “தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் _____________.
A) கண்ணதாசன்
B) பாரதியார்
C) பாரதிதாசன்
D) வாணிதாசன்
75. ‘மா’ என்னும் சொல்லின் பொருள் _____________.
A) மாடம்
B) வானம்
C) விலங்கு
D) அம்மா
76. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?
I. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும் கலந்தது இவ்வுலகம் என்பது அறிவியல் உண்மை. தொல்காப்பியர் தமது தொல்காப்பியம் என்னும் நூலில் இக்கருத்தைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியும் உள்ளார்.
II. கடல் நீர் ஆவியாகி மேகமாகும். பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும். பழந்தமிழ் இலக்கியங்களான முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார்நாற்பது, திருப்பாவை முதலிய நூல்களில் இந்த அறிவியல் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
A) I தவறு
B) II தவறு
C) I, II இரண்டுமே தவறு
D) I, II இரண்டுமே சரி
77. திரவப் பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவைச் சுருக்க முடியாது – என்ற அறிவியல் கருத்து “ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நால் நாழி” ஆகும். – இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A) தொல்காப்பியர்
B) மாணிக்கவாசகர்
C) ஒளவையார்
D) இளங்கோவடிகள்
78. போர்க்களத்தில் மார்பில் புண்படுவது இயல்பு. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி _______________ என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.
A) நற்றிணை
B) கார்நாற்பது
C) தொல்காப்பியம்
D) பதிற்றுப்பத்து
79. நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) நற்றிணை
B) பதிற்றுப்பத்து
C) தொல்காப்பியம்
D) கார்நாற்பது
80. சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை, நரம்பினால் தைத்த செய்தி ____________ என்னும் நூலில் காணப்படுகிறது. முற்கால இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள அறுவை மருத்துவத்துக்கான இன்றைய கூறுகள் வியப்பளிக்கின்றன அல்லவா?
A) நற்றிணை
B) பதிற்றுப்பத்து
C) தொல்காப்பியம்
D) கார்நாற்பது