6th Tamil Unit 1 Questions
51. திணை எத்தனை வகைப்படும்?
A) 1
B) 2
C) 3
D) 4
(குறிப்பு – உயர்திணை, அஃறிணை என இருவகைத் திணைகளை அறிவோம். உயர்திணையின் எதிர்ச்சொல் தாழ்திணை என அமையவேண்டும். ஆனால் தாழ்திணை என்று கூறாமல் அஃறிணை (அல் + திணை = உயர்வு அல்லாத திணை) என்று பெயர் இட்டனர் நம் முன்னோர். பாகற்காய் கசப்புச்சுவை உடையது. அதனைக் கசப்புக்காய் என்று கூறாமல், இனிப்பு அல்லாத காய் பாகற்காய் (பாகு + அல் + காய்) என வழங்கினர். இவ்வாறு பெயரிடுவதிலும் சீர்மை மிக்கது தமிழ் மொழி.)
52. பூ வின் ____________ நிலைகளுக்கும் தோன்றுவது முதல் உதிர்வது வரை தனித்தனிப் பெயர்கள் தமிழில் உண்டு.
A) நான்கு
B) ஐந்து
C) ஆறு
D) ஏழு
53. ‘________’ – என்னும் ஒரு சொல் மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு போன்ற பல பொருள்களைத் தருகிறது.
A) கா
B) மா
C) வீ
D) ஆ
54. தமிழுக்கு _______________ என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. இயல்தமிழ் எண்ணத்தை வெளிப்படுத்தும்; இசைத்தமிழ் உள்ளத்தை மகிழ்விக்கும்; நாடகத்தமிழ் உணர்வில் கலந்து வாழ்வின் நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டும்.
A) முத்தமிழ்
B) வித்தமிழ்
C) கனித்தமிழ்
D) இவற்றில் ஏதுமில்லை
55. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?
I. தமிழில் காலந்தோறும் பல வகையான இலக்கியவடிவங்கள் புதிது புதிதாக உருவாகி வருகின்றன. துளிப்பா, புதுக்கவிதை, கவிதை, செய்யுள், போன்றன தமிழ்க் கவிதை வடிவங்கள். கட்டுரை, புதினம், சிறுகதை போன்றன உரைநடை வடிவங்கள்.
II. தற்போது அறிவியல் தமிழ், கணினித்தமிழ் என்று மேலும் மேலும் வளர்ந்து கொண்டே வருகிறது.
A) I மட்டும் தவறு
B) II மட்டும் தவறு
C) I மட்டும் சரி
D) I, II அனைத்தும் சரி
56. தாவர இலைப் பெயர்கள் – சரியானது எது?
I. ஆல், அரசு, மா, பலா, வாழை – இலை
II. அகத்தி, பசலை, முருங்கை – கீரை
III. அருகு, கோரை – புல்
IV. நெல், வரகு – தாள்
A) I மட்டும் சரி
B) II மட்டும் சரி
C) III மட்டும் சரி
D) I, II, III, IV அனைத்தும் சரி
57. தாவர இலைப் பெயர்கள் – சரியானது எது?
I. மல்லி – தழை
II. சப்பாத்திக் கள்ளி, தாழை – மடல்
III. கரும்பு, நாணல் – தோகை
IV. பனை, தென்னை – ஓலை
A) I மட்டும் சரி
B) II மட்டும் சரி
C) III மட்டும் சரி
D) I, II, III, IV அனைத்தும் சரி
58. தாவர இலைப் பெயர்கள் – கமுகு (பாக்கு) எந்த வகையைச் சார்ந்தது?
A) ஓலை
B) கூந்தல்
C) தோகை
D) மடல்
59. தமிழ் எண்களை அறிவோம் – சரியானது எது?
I. 1 – ௧
II. 2 – ௨
III. 3 – ௩
IV. 4 – ௪
A) I மட்டும் சரி
B) I, II மட்டும் சரி
C) I, II, III, IV அனைத்தும் சரி
D) III, IV மட்டும் சரி
60. தமிழ் எண்களை அறிவோம் – சரியானது எது?
I. 5 – ௫
II. 6 – ௬
III. 7 – ௭
IV. 8 – ௮
A) I மட்டும் சரி
B) I, II மட்டும் சரி
C) III, IV மட்டும் சரி
D) I, II, III, IV அனைத்தும் சரி