6th Tamil Unit 1 Questions
21. ’அமுதென்று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________
A) அமுது + தென்று
B) அமுது + என்று
C) அமுது + ஒன்று
D) அமு + தென்ற
22. ‘செம்பயிர்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________
A) செம்மை + பயிர்
B) செம் + பயிர்
C) செமை + பயிர்
D) செம்பு + பயிர்
23. இன்பத்தமிழ் – பாடலின் கருத்தின்படி சரியானது எது?
I. விளைவுக்கு – நீர்
II. அறிவுக்கு – தோள்
III. இளமைக்கு – பால்
IV. புலவர்க்கு – வேல்
A) I, II மட்டும் சரி
B) III மட்டும் சரி
C) I, II, III, IV அனைத்தும் சரி
D) IV மட்டும் சரி
24. கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங் கோதையரே கும்மி கொட்டுங்கடி – நிலம் எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ் எட்டிடவே கும்மி கொட்டுங்கடி! – என்ற பாடல்வரியின் ஆசிரியர் யார்?
A) பெருஞ்சித்திரனார்
B) நாமக்கல் கவிஞர்
C) பாரதியார்
D) மீனாட்சி சுந்தரனார்
25. ஊழி பலநூறு கண்டதுவாம் அறிவு ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் – பெரும் ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும் அழியாமலே நிலை நின்றதுவாம்! – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) குயில்
B) கனிச்சாறு
C) கண்ணன் பாட்டு
D) தென்மொழி
26. பொய் அகற்றும் உள்ளப் பூட்டறுக்கும் – அன்பு பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் – உயிர் மெய்புகட்டும் அறமேன்மை கிட்டும் இந்த மேதினி வாழ்வழி காட்டிருக்கும்! – என்ற பாடல்வரியின் ஆசிரியரின் இயற்பெயர் என்ன?
A) பெருஞ்சித்திரனார் (மாணிக்கம்)
B) பெருஞ்சித்திரனார் (ராஜதுரை)
C) பெருஞ்சித்திரனார் (பிச்சை முத்து)
D) பெருஞ்சித்திரனார் (ராஜ வர்மன்)
27. சொல்லும் பொருளும் – சரியானவற்றை தேர்ந்தெடு.
I. ஆழிப் பெருக்கு – கடல் கோள்
II. உள்ளப்பூட்டு – உள்ளத்தின் அறியாமை
III. மேதினி – உலகம்
IV. ஊழி – நீண்டதொரு காலப்பகுதி
A) I, II மட்டும் சரி
B) III மட்டும் சரி
C) I, II, III, IV அனைத்தும் சரி
D) IV மட்டும் சரி
28. பல நூறு ஆண்டுகளைக் கண்டது தமிழ்மொழி. அறிவு ஊற்றாகிய நூல்கள் பலவற்றைக் கொண்ட மொழி. பெரும் கடல் சீற்றங்கள், கால மாற்றங்கள் ஆகிய எவற்றாலும் அழியாமல் நிலைத்திருக்கும் மொழி – என்று கூறியவர் யார்?
A) திரு.வி.க
B) அயோத்திதாச பண்டிதர்
C) பெருஞ்சித்திரனார்
D) கவிமணி
29. தமிழ், பொய்யை அகற்றும் மொழி; அது மனத்தின் அறியாமையை நீக்கும் மொழி; அன்புடைய பலரின் இன்பம் தரும் பாடல்கள் நிறைந்த மொழி; உயிர் போன்ற உண்மையை ஊட்டும் மொழி ; உயர்ந்த அறத்தைத் தரும் மொழி. இந்த உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளையும் காட்டும் மொழி தமிழ்மொழி – என்று கூறியவர் யார்?
A) திரு.வி.க
B) அயோத்திதாச பண்டிதர்
C) கவிமணி
D) பெருஞ்சித்திரனார்
30. பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் யார்?
A) கோமல் சுவாமிநாதன்
B) திரு.வி.க
C) பெருஞ்சித்திரனார்
D) மீனாட்சி சுந்தரனார்