6th Tamil Unit 1 Questions
11. தமிழ் எங்கள் அறிவுக்குத் துணை கொடுக்கும் தோள் போன்றது. தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதி மிக்க ____________ ஆகும்.
A) சக்தி
B) அணிகலன்
C) வாள்
D) இவற்றில் ஏதுமில்லை
12. பாரதிதாசனின் இயற்பெயர் ___________________ ஆகும்.
A) செந்தமிழ்தாசன்
B) வணங்கா முடி
C) ராமலிங்கம்
D) கனக சுப்புரத்தினம்
13. பாரதிதாசன் அவர்கள் _________________ என்பவரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.
A) பெருஞ்சித்திரனார்
B) நாமக்கல் கவிஞர்
C) பாரதியார்
D) மீனாட்சி சுந்தரனார்
14. தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளைப் பாடுபொருளாகப் பாடியுள்ளவர் யார்?
A) பாரதியார்
B) வாணிதாசன்
C) தாராபாரதி
D) பாரதிதாசன்
15. புரட்சிக்கவி, பாவேந்தர் என்று போற்றப்படுகிறவர் யார்?
A) பாரதியார்
B) பாரதிதாசன்
C) தாராபாரதி
D) வாணிதாசன்
16. தமிழுக்கு நிலவு என்று பெயர். இன்பத்தமிழ் எங்கள் சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான _____________ போன்றது.
A) நீர்
B) நெருப்பு
C) உணவு
D) காற்று
17. தமிழே உயிரே வணக்கம் தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும் அமிழ்தே நீ இல்லை என்றால் – என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
B) நெல்லை சு.முத்து
C) காசி ஆனந்தன்
D) அறிவுமதி
18. அத்தனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும் தமிழே உன்னை நினைக்கும் தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும் – என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
B) நெல்லை சு.முத்து
C) காசி ஆனந்தன்
D) அறிவுமதி
19. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________
A) நிலயென்று
B) நிலவென்று
C) நிலவன்று
D) நிலவுஎன்ற
20. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________
A) தமிழங்கள்
B) தமிழெங்கள்
C) தமிழுங்கள்
D) தமிழ்எங்கள்