Science Questions

6th Std Science Lesson Wise Questions in Tamil – Part 1

6th Science Lesson 8 Questions in Tamil

8] மின்னியல்

1) கூற்றுகளை ஆராய்க.

1. ஒரு சுற்றில் பாயும் மின்னூட்டமே மின்னோட்டம் அல்லது மின்சாரம் எனப்படும்.

2. ஒரு சாவி, மின்கலன், இணைப்புக் கம்பி, மின்விளக்கு கொண்டு உருவாக்கப்படுவது – எளிய மின்சுற்று

3. ஒன்றுக்கு மேற்பட்ட மின் விளக்குகள் தொடராக இருக்குமாறு இணைக்கப்படுவது – பக்க இணைப்பு மின்சுற்று

4. ஒன்றுக்கு மேற்பட்ட விளக்குகள் இணையாக இருக்குமாறு இணைக்கப்படுவது – தொடர் இணைப்புச் சுற்று

A) 1, 2 சரி

B) 2, 3 சரி

C) 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. ஒரு சுற்றில் பாயும் மின்னூட்டமே மின்னோட்டம் அல்லது மின்சாரம் எனப்படும்.

2. ஒரு சாவி, மின்கலன், இணைப்புக் கம்பி, மின்விளக்கு கொண்டு உருவாக்கப்படுவது – எளிய மின்சுற்று

3. ஒன்றுக்கு மேற்பட்ட மின் விளக்குகள் தொடராக இருக்குமாறு இணைக்கப்படுவது – தொடர் இணைப்பு மின்சுற்று

4. ஒன்றுக்கு மேற்பட்ட விளக்குகள் இணையாக இருக்குமாறு இணைக்கப்படுவது – பக்க இணைப்புச் சுற்று.

2) கயத்தாறு-ல் காற்றலை அமைந்துள்து. இது எந்த மாவட்டத்தில் உள்ளது?

A) தூத்துக்குடி

B) கன்னியாகுமரி

C) திருநெல்வேலி

D) விருதுநகர்

விளக்கம்: கயத்தாற்றில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. இது தவிர ஆரால்வாய் மொழி (கன்னியாகுமரி) யிலும் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

3) மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடி வகையில் தயாரிக்கப்படும் மின்கலன் எது?

A) முதன்மை மின்கலம்

B) துணை மின்கலம்

C) மேற்கண்ட இரண்டும்

D) மேற்கண்ட இரண்டுமில்லை

விளக்கம்: துணை மின்கலன் என்பது பலமுறை மின்னேற்றம் செய்து தொடர்ந்து பயன்படுத்தக்கூடியது. ஒருமுறை பயன்படுத்திய பின்பு, மீண்டும் மீண்டும் மின்னேற்றம் செய்யப்பட்டு தொடர்ந்து மின்னோட்டம் உருவாக்கப்படுகிறது. துணைமின்கலன்களின் உருவளவு அதன் பயன்பாட்டைப் பொருத்து சிறியதாக அல்லது பெரியதாக உருவாக்கப்படுகிறது.

4) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) அனல் மின் நிலையம் – கடலூர்

B) அணுமின் நிலையம் – திருவள்ளுர்

C) நீர் மின்நிலையம் – திருநெல்வேலி

D) காற்றாலை – கன்னியாகுமரி

விளக்கம்: அனல் மின் நிலையம் – நெய்வேலி (கடலூரர்), எண்ணூர் (திருவள்ளுர்)

நீர்மின் நிலையம் – மேட்டூர்(சேலம்), பாபநாசம் (திருநெல்வேலி)

அணுமின் நிலையம் – கல்பாக்கம் (காஞ்சிபுரம்), கூடங்குளம் (திருநெல்வேலி)

காற்றாலை – ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி), கயத்தாறு (திருநெல்வேலி).

5) தொழில்நுட்பவியலின் மிக முக்கியமான இரண்டு; மைல்கல்கள் என்று போற்றப்படுபவை எவை?

1. டைனமோ கண்டுபிடிப்பு

2. மின்சார பல்பு கண்டுபிடிப்பு

3. மின்மோட்டாரின் முன் மாதிரி கண்டுபிடிப்பு

4. மின்கலன் கண்டுபிடிப்பு

A) 1, 2

B) 1, 3

C) 1, 2, 4

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: பாரடே டைனமோவைக் கண்டறிந்தார். மின்மோட்டாரின் முன்மாதிரியை வடிவைமத்தார். இவை தொழில்நுட்பவியலின் மிக முக்கியமான இரண்டு மைல்கல்கள் ஆகும்.

6) கூற்று: நெய்வேலியில் அனல்மின் நிலையம் அமைந்துள்ளது.

காரணம்: அதிகமான பணியாளர் நெய்வேலியில் பணிக்கு கிடைக்கின்றனர்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. அங்கு அதிளவு பழுப்பு நிலக்கரி கிடைப்பதால் அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

7) எண்ணூரில் அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. இது எந்த மாவட்டத்தில் உள்ளது?

A) திருவள்ளுர்

B) சென்னை

C) காஞ்சிபுரம்

D) திருவண்ணாமலை

விளக்கம்: எண்ணூர் அனல் மின் நிலையம் திருவள்ளுரில் அமைந்துள்ளது. இது தவிர குறிபிடத்தக்க மற்றொரு அனல்மின் நிலையம் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ளது.

8) கூற்றுகளை ஆராய்க.

1. அனல்மின் நிலையத்தில் வெப்ப ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றப்படுவதால் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

2. நீர் மின்நிலையங்களில் இயக்க ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுவதால் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதில்லை

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. அனல்மின் நிலையத்தில் வெப்ப ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றப்படுவதால் மின்சாரம் உள்பத்தி செய்யப்படுகிறது.

2. நீர் மின்நிலையங்களில் இயக்க ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுவதால் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

9) மின்சுற்று என்பது மின்கலத்தின்________முனையிலிருந்து________முனைக்கு மின்னூட்டம் செல்லும் தொடர்ச்சியான மூடிய பாதையாகும்.

A) நேர், எதிர்

B) எதிர், நேர்

C) A மற்றும் B

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: மின்சுற்று என்பது மின்கலத்தின் நேர்முனையிலிருந்து எதிர் முனைக்கு மின்னூட்டம் செல்லும் தொடர்ச்சியான மூடிய பாதையாகும்.

10) மின்னூட்டம் செல்லும் தொடர்ச்சியான மூடிய பாதை மின்சுற்று எனப்படும். இது எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: மின்சுற்று மூன்று வகைப்படும். அவை,

1. எளிய மின்சுற்று – ஒரு மின்விளக்கு கொண்டு உருவாக்கப்படும்.

2. தொடரிணைப்பு – ஒன்றுக்கு மேற்பட்ட மின்விளக்குகள் தொடராக இருக்கும்படி உருவாக்கப்படும்.

3. பக்க இணைப்பு – ஒன்றுக்கு மேற்பட்ட மின்விளக்குள் இணையாக இருக்குமாறு உருவாக்கப்படும்.

11) ஒரு மின்விளக்கு பழுதடைந்தாலும் தொடரில் உள்ள அனைத்து மின் விளக்குகளும் அணைந்துவிடும். இதனுடன் தொடர்புடைய மின் சுற்று எது?

A) தொடரிணைப்பு

B) பக்கஇணைப்பு

C) மேற்கண்ட இரண்டும்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: ஒன்றுக்கு மேற்பட்ட மின் விளக்குகள் தொடராக இருக்குமாறு, சாவி, மின்கலன் மற்றும் இணைப்புக் கம்பிகள் மூலம் இணைப்படும் மின்சுற்று தொடர் இணைப்பு மின்சுற்று எனப்படும். இந்த மின்சுற்றில் ஏதேனும் ஒரு மின்விளக்கு பழுதடைந்தாலும் மின்சுற்று தொடரில் உள்ள அனைத்து விளக்குகளும் அணைந்துவிடும்.

12) கூற்று: வீடுகளில் பக்க இணைப்பு மின்சுற்று அமைக்கப்படுகிறது

காரணம்: அதிக மின்கட்டணத்தை தவிர்க்க.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: ஒன்றுக்கு மேற்பட்ட மின் விளக்குகள் இணையாக இருக்குமாறு சாவிகள், மின்கலன் மற்றும் இணைப்பு கம்பிகள் கொண்டு உருவாக்கப்படுவது பக்க இணைப்பு மின்சுற்று எனப்படும். இந்த மின்கலத்தில் ஏதேனும் ஒரு மின்விளக்கு பழுதடைந்தாலும், அந்த இணைப்பில் மற்ற மின் விளக்குகள் எரியும். எனவே, வீடுகளில் பக்க இணைப்பு முறையே பின்பற்றப்படுகிறது.

13) மின்சாரத்தை உருவாக்கும் மீன் எது?

A) ஈல் மீன்

B) கட்லா மீன்

C) கெழுத்தி மீன்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: ஈல் என்னும் ஒரு வகை மீன் மின்சாரத்தை உருவாக்கும் திறன் கொண்டது. இவை மின்னதிர்வை வெளியிட்டு எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும், தங்களது உணவைப் பிடிக்கவும் செய்கின்றன.

14) மின்சாரத்தை அளவிட உதவும் கருவி எது?

A) ஓம் மீட்டர்

B) அம்மீட்டர்

C) வேல்ட்மீட்டர்

D) கால்வனோ மீட்டர்

விளக்கம்: அம்மீட்டர் என்பது ஒரு மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை அளவிடும் கருவியாகும். இக்கருவியானது சுற்றில் தொடரிணைப்பில் இணைப்பட வேண்டும்.

15) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) அனல் மின் நிலையம் – எண்ணூர்

B) அணுமின் நிலையம் – கல்பாக்கம்

C) நீர் மின்நிலையம் – மேட்டூர்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: அனல் மின் நிலையம் – நெய்வேலி, எண்ணூர்

நீர்மின் நிலையம் – மேட்டூர், பாபநாசம்

அணுமின் நிலையம் – கல்பாக்கம், கூடங்குளம்

காற்றாலை – ஆரல்வாய்மொழி, கயத்தாறு.

16) கீழ்க்கண்ட எதன் வழியே மின்சாரம் பாயாது?

A) புவி

B) தூய நீர்

C) இரும்பு

D) அலுமினியம்

விளக்கம்: கடத்தியில் மின்னூட்டங்கள் பாயும் வீதமே மின்னோட்டம் எனப்படும். அவ்வாறு எந்தெந்த பொருள்கள் தன் வழியே மின்னூட்டங்களைச் செல்ல அனுமதிக்கின்றனவோ அவற்றை நாம் மின் கடத்திகள் என்கிறோம். எ.கா. உலோகங்களான தாமிரம், இரும்பு, அலுமினியம், மாசுபட்ட நீர், புவி.

17) தாமஸ் ஆல்வா எடிசன் எந்த நாட்டைச் சார்ந்தவர்?

A) அமெரிக்கா

B) இங்கிலாந்து

C) ரஷ்யா

D) பிரான்ஸ்

விளக்கம்: தாமஸ் ஆல்வா எடிசன் என்பவர் (பிப்ரவரி 11, 1847 முதல் அக்டோபர் 18, 1931) ஓர் அமெரிக்க கண்டுபிடிப்பாளர். இவர் 1000க்கும் மேற்பட்ட உபயோகமான பொருட்களை உருவாக்கியுள்ளார். அவற்றில் பல, வீடுகளில் பயன்படுத்தக் கூடியவை. மின் விளக்கைக் கண்டுபிடித்ததற்காக நாம் என்றும் அவரைப் போற்றுவோம்.

18) கீழ்க்கண்ட எதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் அமைப்பை திருநெல்வேலி மாவட்டம் பெற்றிருக்கவில்லை?

A) அனல் மின்நிலையம்

B) அணுமின்நிலையம்

C) காற்றாலை

D) நீர்மின்நிலைம்

விளக்கம்: அனல் மின் நிலையம் – நெய்வேலி (கடலூரர்), எண்ணூர் (திருவள்ளுர்)

நீர்மின் நிலையம் – பாபநாசம் (திருநெல்வேலி)

அணுமின் நிலையம் – கூடங்குளம் (திருநெல்வேலி)

காற்றாலை – கயத்தாறு (திருநெல்வேலி).

19) மின்கல அடுக்கின் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்.

A)

B)

C)

D)

விளக்கம்:

– மின்கல அடுக்கு

– மின் கலன்

– திறந்த நிலையில் உள்ள சாவி

– மூடிய நிலையில் உள்ள சாவி.

20) மக்களின் விஞ்ஞானி என்று போற்றப்படுபவர் யார்?

A) அலெக்சாண்டர் கிரகம்பெல்

B) மைக்கேல் பாரடே

C) தாமஸ் ஆல்வா எடிசன்

D) சர் ஐசக் நியூட்டன்

விளக்கம்: மக்களின் விஞ்ஞானி என்று போற்றப்படுபவர் மைக்கேல் பாரடே ஆவார். இவர் டைனமோவைக் கண்டறிந்தார். மின்மோட்டாரின் முன்மாதிரியை வடிவமைத்தார். இவை தொழில்நுட்பவியலின் மிக முக்கியமான இரண்டு மைல்கல்கள் ஆகும்.

21) மின்கலன்கள் எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: தொடர்ந்து மின்னோட்டத்தை வழங்குவதைப் பொறுத்து மின்கலன்கள் இரண்டு வகைப்படும். அவை,

1. முதன்மை மின்கலன்கள்

2. துணை மின்கலன்கள்

22) சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) அனல் மின் நிலையம் – திருவள்ளுர்

B) அணுமின் நிலையம் – தூத்துக்குடி

C) நீர் மின்நிலையம் – கன்னியாகுரி

D) காற்றாலை – விருதுநகர்

விளக்கம்: அனல் மின் நிலையம் – நெய்வேலி (கடலூரர்), எண்ணூர் (திருவள்ளுர்)

நீர்மின் நிலையம் – மேட்டூர் (சேலம்), பாபநாசம் (திருநெல்வேலி)

அணுமின் நிலையம் – கல்பாக்கம் (காஞ்சிபுரம்), கூடங்குளம் (திருநெல்வேலி)

காற்றாலை – ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி), கயத்தாறு (திருநெல்வேலி).

23) யாருடைய உரையை கேட்டு அவருடைய உதவியாளராக மைக்கேல் பாரடே சேர்ந்துகொண்டார்?

A) ஜேன் மார்க்கெட்டின்

B) அம்ப்ரி டேவி

C) தாமஸ் ஆல்வா எடிசன்

D) சர் ஐசக் நியூட்டன்

விளக்கம்: ராயல் சொசைட்டியில் அம்ப்ரி டேவின் உரைகளைத் தொடர்ந்து கேட்டு குறிப்பெடுத்துக்கொண்ட மைக்கேல் பாரடே, அவரின் உதவியாளராக சேர்ந்தார்.

24) மின்கலத்தில் ஏதேனும் ஒரு மின்விளக்கு பழுதடைந்தாலும், அந்த இணைப்பில் மற்ற மின் விளக்குகள் எரியும் தன்மை பெற்ற மின்சுற்று எது?

A) தொடரிணைப்பு

B) பக்கஇணைப்பு

C) மேற்கண்ட இரண்டும்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: ஒன்றுக்கு மேற்பட்ட மின் விளக்குகள் இணையாக இருக்குமாறு சாவிகள், மின்கலன் மற்றும் இணைப்பு கம்பிகள் கொண்டு உருவாக்கப்படுவது பக்க இணைப்பு மின்சுற்று எனப்படும். இந்த மின்கலத்தில் ஏதேனும் ஒரு மின்விளக்கு பழுதடைந்தாலும், அந்த இணைப்பில் மற்ற மின் விளக்குகள் எரியும். எனவே, வீடுகளில் பக்க இணைப்ப முறையே பின்பற்றப்படுகிறது.

25) மைக்கேல் பாரடே என்பவர் யாருடைய புத்தகங்களை படித்து அதன் மூலம் பல சோதனைகளை செய்து பார்த்தார்?

A) ஜேன் மார்க்கெட்டின்

B) அம்ப்ரி டேவி

C) தாமஸ் ஆல்வா எடிசன்

D) மேற்கண்ட யாருமில்லை

விளக்கம்: ஜேன் மார்க்கெட்டின் “கான்வசேஷன்ஸ் ஆன் கெமிஸ்ட்ரி” புத்தகத்தை படித்து, அதிலுள்ள பல சோதனைகளை செய்து பார்த்தார் மைக்கேல் பாரடே.

26) முதன்மை மின்கலன்கள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இவ்வகை மின்கலன்களை மீண்டும் மின்னேற்றம் செய்ய இயலாது.

2. சிறிய உருவ அளவுகளில் தயாரிக்கப்படுகின்றன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: தொடர்ந்து மின்னோட்டத்தை வழங்குவதைப் பொறுத்து மின்கலன்கள் இரண்டு வகைப்படும். அவை,

1. முதன்மை மின்கலன்கள்

2. துணை மின்கலன்கள்

முதன்மை மின்கலன்கள்: இவ்வகை மின்கலன்கள் மீண்டும் மின்னேற்றம் செய்ய இயலாது. எனவே, இவற்றை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த இயலும். பொதுவாக முதன்மை மின்கலன்கள் சிறிய உருவ அளவுகளில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. எ.கா. சுவர்க் கடிகாரம், கைக் கடிகாரம் மற்றும் ரோபோ பொம்மைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் மின்கலன்கள்.

27) வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம் எது?

A) மின் விசிறி

B) சூரிய மின்கலன்

C) மின்கலன்

D) தொலைக்காட்சி

விளக்கம்: வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம் மின்கலன் ஆகும். தொடர்ந்து மின்னோட்டத்தை அளிப்பதன் அடிப்படையில் மின்கலன் இரண்டு வகைப்படும். அவை,

1. முதன்மை மின்கலன்

2. துணை மின்கலன்

28) மின்சாரம் தயாரிக்கப்படும் இடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) மின் உற்பத்தி நிலையம்

B) மின் மாற்றி

C) மின்சாரக் கம்பி

D) தொலைக்காட்சி

விளக்கம்: மின்சாரம் தயாரிக்கப்படும் இடம் மின்உற்பத்தி நிலையம் எனப்படும். அனல்மின் நிலையங்கள், நீர்மின் நிலையங்கள், காற்று ஆலைகள், அணுமின் நிலையங்கள், சூரிய ஒளி மின்நிலையகள் என பல மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன.

29) பாபநாசம் கீழ்க்கண்ட எந்த மின் உற்பத்தியுடன் தொடர்புடையது?

A) அனல்மின் நிலையம்

B) அணுமின் நிலையம்

C) காற்றாலைகள்

D) நீர் மின்நிலையம்

விளக்கம்: பாபநாசம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள பாபநாசம் அணை மூலம் நீர் மின் உற்பத்தி செய்யப்படுகிறது

30) கீழ்க்கண்ட மின்சுற்றுகளில் எதில் மின்விளக்கு ஒளிரும்?

A)

B)

C)

D)

விளக்கம்: மேற்கண்டவற்றில் மின்கலத்திலிருந்து மின்விளக்கிற்கு மின் இணைப்பு வழங்கப்படுள்ளது. சிவப்பு நிற மின் இணைப்பு நேர் மின் பாதையையும், கருப்பு நிற மின் இணைப்பு எதிர் மின் பாதையையும் குறிக்கிறது. இவை இரண்டும் மின் விளக்கில் இணைக்கப்பட்டால் மட்டுமே மின் விளக்கு ஒளிரும். எனவே சரியானது –

31) கீழ்க்கண்டவற்றுள் எது நற்கடத்தி?

A) வெள்ளி

B) மரம்

C) அழிப்பான்

D) நெகிழி

விளக்கம்: மேற்சொன்னவற்றுள் நற்கடத்தி – வெள்ளி. மரம், அழிப்பான், நெகிழி போன்றவை மின் கடத்தாப் பொருட்கள் ஆகும்.

32) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) அனல் மின் நிலையம் – நெய்வேலி

B) அணுமின் நிலையம் – கூடங்குளம்

C) நீர் மின்நிலையம் – பாபநாசம்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: அனல் மின் நிலையம் – நெய்வேலி, எண்ணூர்

நீர்மின் நிலையம் – மேட்டூர், பாபநாசம்

அணுமின் நிலையம் – கல்பாக்கம், கூடங்குளம்

காற்றாலை – ஆரல்வாய்மொழி, கயத்தாறு

33) கூற்று: ஈல் என்னும் ஒரு வகை மீன் மின்சாரத்தை உருவாக்கும் திறன் கொண்டது.

காரணம்: தன் இரையை கண்டறிய மின்சாரத்தை உருவாக்குகிறது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

விளக்கம்: ஈல் என்னும் ஒரு வகை மீன் மின்சாரத்தை உருவாக்கும் திறன் கொண்டது. இவை மின்னதிர்வை வெளியிட்டு எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும், தங்களது உணவைப் பிடிக்கவும் செய்கின்றன.

Previous page 1 2 3 4 5 6 7 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!