6th Std Science Lesson Wise Questions in Tamil – Part 1
6th Science Lesson 5 Questions in Tamil
5] விலங்குகள் வாழும் உலகம்
1) உயிரினங்களின் பல்வகைத் தன்மையில் பொருந்தாதது எது?
A) காடுகள்
B) ஏரிகள்
C) மலைகள்
D) ஏதுமில்லை
விளக்கம்: உயிரினங்களில் பல்வகைத்தன்மையானது பாலைவனங்கள், காடுகள், மலைகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் வயல்வெளிகள் ஆகிய பல்வேறுபட்ட சூழ்நிலைகளை உள்ளடக்கியது இது மனிதன் உட்பட வாழும் உயிரினங்கள் அனைத்தும் ஒரு சமூகத்தை அழைத்துக்கொண்டு தங்களை சுற்றி ஒரு குடும்பமாக வாழுகின்றன.
2) உயிரினத்தின் மிகச்சிறிய செயல்படும் அலகு எது?
A) செல்
B) உறுப்பு
C) கண்
D) திசு
விளக்கம்: உயிரினத்தின் மிகச்சிறிய அலகாக கருதப்படுவது செல் ஆகும், இது உயிரினத்தின் அடிப்படை அமைப்பினை கட்டமைக்கின்றன.
3) 1. அமிபா – குறுயிலைகள்
2. பாரமீசியம் – கசையிலை
3. யூக்ளினா – போலிக்கால்கள்
A) 2 3 1
B) 3 1 2
C) 1 3 2
D) 2 3 1
விளக்கம்: அமிபா – போலிக்கால்கள்
பாரமீசியம் – குறுயிலைகள்
யூக்ளினா – கசையிலை
4) தாவரங்கள் மற்றும் விலங்குகளோ ஒரு குறிப்பிட்ட வாழிடத்தில் வாழ்வதற்கு தங்கள் உடலில் பெற்றுள்ள சிறப்பு அமைப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
A) சூழியல்
B) தகவமைப்புகள்
C) சுற்றுச்சூழல்
D) சிறப்பு அமைப்புகள்
விளக்கம்: தாவரங்கள் மற்றும் விலங்குகளோ ஒரு குறிப்பிட்ட வாழிடத்தில் வாழ்வதற்கு தங்கள் உடலில் பெற்றுள்ள சிறப்பு அமைப்புகள் தகவமைப்புகள் என அழைக்கப்படுகிறது.
5) கீழ்கண்டவற்றுள் எவை ஒருசெல் உயிரினம் அல்ல?
A) அமீபா
B) பாரமீசியம்
C) யூக்ளீனா
D) ஏதுமில்லை
விளக்கம்: மேற்கண்ட அனைத்தும் ஒரு செல் உயிரினம் ஆகும் இவை தங்களுக்கான உணவு முதல் இனப்பெருக்கம் வரை அனைத்தும் இந்த ஒரே செல்லால் செய்கிறது.
6) மீனின் சுவாச உறுப்பு எது?
A) செவுள்கள்
B) செதில்கள்
C) துடுப்புகள்
D) தலைப்பகுதி
விளக்கம்: மீனின் சுவாச உறுப்பு செவுள்கள் ஆகும் இது நீரில் கரைந்துள்ள ஆக்ஸிஜனை செவுள்கள் மூலம் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனை பெறுகின்றது.
7) 1. பெறும்பாலான பல்லிகள் வெப்பமண்டலப் பகுதிகளில் வாழ்கின்றன.
2. பல்லிகள் நுரையீரல் மூலம் சுவாசிக்கின்றன்
3.பொரும்பாலான பல்லிகள் நான்கு கால்களால் நடக்கக்கூடியவை.
4. பல்லிகளுக்கு வாய்க்குழிக்கு பதிலாக அலகுகள் காணப்படுகிறது.
A) 1 2 3 சரி
B) 1 4 சரி
C) 1 3 4 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: பெறும்பாலான பல்லிகள் வெப்பமண்டலப் பகுதிகளில் வாழ்கின்றன. பல்லிகள் நுரையீரல் மூலம் சுவாசிக்கின்றன. பொரும்பாலான பல்லிகள் நான்கு கால்களால் நடக்கக்கூடியவை. பல்லிகளுக்கு வாய்க்குழி மட்மே காணப்படுகிறது.
8) பறவைகளுக்கு ஒரே சமயத்தில் இரு பகுதிகளுக்கும் பார்க்க முடியும் இவ்வகை பார்வையை நாம் எவ்வாறு அழைக்கிறோம்?
A) ஒருங்கமைவு
B) இருமைப்பார்வை
C) ஒருமுறைப்பார்வை
D) சுழற்றுப்பார்வை
விளக்கம்: பறவைகள் ஒரே சமயத்தில் ஒரு பகுதியல்லாமல் இரு பகுதிகளையும் காண முடியும் இவ்வகை பார்வைக்கு இருமைப்பார்வை என அழைக்கப்படுகிறது.
9) 1. ஒரு செல் உயிரியில் உள்ள ஒரு செல்களே வாழ்க்கை செயல்கள் அனைத்தையும் மேற்கொள்கிறது.
2. இவை அளவில் சிறியவை வெறும் கண்ணால் பார்க்ககூடியவை
3. இவற்றில் திசுக்கள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் காணப்படுகிறது.
4. செல்களின் வளர்ச்சி அதிகரிப்பதன் மூலம் வளர்ச்சி அடைகிறது.
A) 1 3 சரி
B) 1 4 சரி
C) 1 3 4 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: ஒரு செல் உயிரியில் உள்ள ஒரு செல்களே வாழ்க்கை செயல்கள் அனைத்தையும் மேற்கொள்கிறது. இவை அளவில் சிறியவை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. இவற்றில் திசுக்கள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் காணப்படுவதில்லை; செல்களின் வளர்ச்சி அதிகரிப்பதன் மூலம் வளர்ச்சி அடைகிறது.
10) குளிர்கால உறக்கத்தை மேற்கொள்ளும் விலங்கு எது?
A) கழுகு
B) பல்லி
C) ஆமை
D) பறவை
விளக்கம்: சில விலங்குள் அதிகப்படியான குளிரை தவிற்பதற்காக அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திவிட்டு உறக்கத்தை மேற்கொள்கின்றன இதற்கு குளிர்கால உறக்கம் என்று அழைக்கப்படுகின்றன. குளிர்கால உறக்கத்தை மேற்கொள்ளும் விலங்கு ஆமை ஆகும்.
11) ஒரு விலங்கு பருவநிலை மாறுபாட்டின் காரணமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது எவ்வாறு அழைக்கிறோம்?
A) வலசைபோதல்
B) பருவ மாற்றம்
C) காலநிலை
D) மேற்கே பறத்தல்
விளக்கம்: ஒரு விலங்கு பருவநிலை மாறுபாட்டின் காரணமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது வலசை போதல் என்று அழைக்கிறோம். இது பறவைகளின் வருடாந்திர ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது கால நிலை மாற்றத்தின் காரணமாக பறவைகள் வலசைபோகின்றது.
12) தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகள் சரணாலயம் எது?
A) வேடந்தாங்கள்
B) கோடியன்கரை
C) கூத்தன் குளம்
D) அனைத்தும்
விளக்கம்: மேற்கண்ட அனைத்து இடங்களும் தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகள் சரணாலயம் ஆகும். இங்கு வெளிநாட்டிலிருந்து பறவைகள் இங்கு வலசை வருகின்றன.
13) பாலைவன கப்பல் என அழைக்கப்படுவது ?
A) நரி
B) ஒட்டகம்
C) பாம்பு
D) சிறுத்தை
விளக்கம்: பாலைவன கப்பல் என அழைக்கப்படும் விலங்கு ஒட்டகம் ஆகும். இவை பெரிய கால்களை கொண்டுள்ளதால் மிருதுவான மணலில் கூட வேகமாக நடக்கும் தன்மையை பெற்றுள்ளது எனவே இதனை பாலைவன கப்பல் என அழைக்கிறோம்.
14) உண்ணும் உணவிலிருந்து தேவையான நீரை எடுத்துக்கொள்ளும் விலங்கு?
A) எலி
B) அணில்
C) கங்காரு
D) A&C
விளக்கம்: கங்காரு மற்றும் எலியானது நாம் உண்ணும் உணவிலிருந்து நீரினை எடுத்துக்கொள்வதால் அவை நேரடியாக தண்ணீரை எடுத்துக்கொள்வதில்லை.
15) 1. ஒட்டகத்தின் நீண்ட கால்கள் பாலைவன மணலின் சூட்டிலிருந்து அதனை தற்காத்துக்கொள்கிறது.
2. ஒட்டகத்தின் உடலில் இருந்து வியர்வை வெளியேற்றப்படுவதில்லை.
3. ஒட்டகத்தின் நாசித் துவாரங்கள் திறந்த நிலையில் காணப்பட்டாலும் மணல் அதனுள் செல்வதில்லை.
4. ஒட்டகத்தை பாலைவன கப்பல் எனவும் அழைக்கலாம்.
A) 1 3 சரி
B) 1 2 4 சரி
C) 1 3 4 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: ஒட்டகத்தின் நீண்ட கால்கள் பாலைவன மணலின் சூட்டிலிருந்து அதனை தற்காத்துக்கொள்கிறது. ஒட்டகத்தின் உடலில் இருந்து வியர்வை வெளியேற்றப்படுவதில்லை. ஒட்டகத்தின் நாசித் துவாரங்கள் திறந்த மூடிய நிலையில் காணப்படுவதால் மணல் அதனுள் செல்வதில்லை. ஒட்டகத்தை பாலைவன கப்பல் எனவும் அழைக்கலாம்.
16) கோடைகால உறக்கத்தை மேற்கொள்ளும் விலங்கு எவை?
A) நண்டு
B) நத்தை
C) ஆமை
D) பறவைகள்
விளக்கம்: சில விலங்குள் அதிகப்படியான வெப்பத்தை தவிற்பதற்காக அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திவிட்டு உறக்கத்தை மேற்கொள்கிறது இவ்வகை உறக்கத்திற்கு கோடைகால உறக்கம் என அழைக்கப்படுகிறது. கோடைகால உறக்கத்தை மேற்கொள்ளும் உயிரினம் நத்தை ஆகும்.
17) செல்களின் அடிப்படையில் விலங்குகளை எத்தனை வகையாக பிரிக்கலாம்?
A) 2
B) 3
C) 4
D) 1
விளக்கம்: செல்களின் அடிப்படையில் விலங்குகளை 2 வகையாக பிரிக்கலாம் அவையாவன
- ஒரு செல் உயிரிகள்
- பல செல் உயிரிகள்
18) 1. துருவக்கரடி – மலைப்பகுதி
2. வரையாடு – துருவப்பகுதி
3. புலி – காட்டுப்பகுதி
4. பென்குயின் – துருவப்பகுதி
A) 2 1 3 4
B) 2 1 4 3
C) 1 3 4 2
D) 2 4 3 1
விளக்கம்: துருவக்கரடி – துருவப்பகுதி
2. வரையாடு – மலைப்பகுதி
3. புலி – காட்டுப்பகுதி
4. பென்குயின் – துருவப்பகுதி
19) பறவைகள் பறக்கும் போது அதன் வால் பகுதி திசை திருப்புவதற்கும் மற்றும் எதனை சரி செய்யவும் பயன்படுகிறது?
A) நீந்தவும்
B) நடக்கவும்
C) உடல் எடையை சமநிலைபடுத்த
D) அழகாக பறக்க
விளக்கம்: பறவைகள் பறக்கும் போது அதன் வால்பகுதியாகது திசை திருப்புவதற்கும் மற்றும் அதன் உடல்எடையை சமநிலைபடுத்தவும் பயன்படுகிறது.
20) தமிழகத்தின் மாநில விலங்கு எது?
A) மயில்
B) சிங்கம்
C) வரையாடு
D) புலி
விளக்கம்: தமிழகத்தின் மாநில விலங்காக வரையாடு உள்ளது. இது மலைகளின் மீது உள்ள பாறைகளின் குறுகிய இடுக்குகளில் தன் உடலினை சமநிலைப்படுத்தி ஏறி தாவரங்களை உண்கிறது.
21) 1. ஓர் உயிரி வாழக்கூடிய அல்லது இருக்கக்கூடிய இடம் வாழிடம் எனப்படும்.
2. புவியியல் அமைப்பு மற்றும் சுற்றுப்புறம் சூழ்நிலைகளும் புவியில் அனைத்து இடங்களிலும் சமமாக இருக்கும்.
3. ஒரு செல் உயிரியான அமீபா போலிக்கால்கள் முலம் இடம்பெயர்வு செய்கிறது.
4. பறவைகளால் ஒரு நேரத்தில் ஒரு பொருளை மட்டும் பார்க்க முடியும்.
5. பாரமீசியம் ஒரு பல செல் உயிரி.
A) 1 3 சரி
B) 1 2 4 5 சரி
C) 1 3 4 5 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: ஓர் உயிரி வாழக்கூடிய அல்லது இருக்கக்கூடிய இடம் வாழிடம் எனப்படும். புவியியல் அமைப்பு மற்றும் சுற்றுப்புறம் சூழ்நிலைகளும் புவியில் அனைத்து இடங்களிலும் சமமாக இருக்காது.
ஒரு செல் உயிரியான அமீபா போலிக்கால்கள் முலம் இடம்பெயர்வு செய்கிறது. பறவைகளால் ஒரு நேரத்தில் இரு பொருளை பார்க்க முடியும். பாரமீசியம் ஒரு செல் உயிரி.
22) ஒட்டகம் தன் திமிழ்களில் எதனை சேமித்து வைக்கின்றன?
A) புரதம்
B) கொழுப்பு
C) நீர்
D) அமினோ அமிலங்கள்
விளக்கம்: ஒட்டகமானது தன் திமிழில் கொழுப்பை சேமித்து வைக்கிறது இதனால் பாலைவனப் பகுதிகளில் ஏற்படும் உணவுப்பற்றாக்குறையை சரிசெய்ய கொழுப்பு கரைத்து உணவூட்டத்தை பெறுகிறது.
23) 1. பலசெல் உயிரிகளில் அதன் வாழ்க்கை செயல்முறை பிரிக்கப்பட்டு வெவ்வேறு செயல்களை செய்வதற்கேற்ப சிறப்பு அம்சங்களை பெற்றுள்ளது.
2. பொதுவாக இவை அளவில் பெரியவை கண்களால் காண இயலும்.
3. இவற்றில் திசுக்கள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் காணப்படுகிறது.
4. பல செல் உயிரிக்கு எடுத்துக்காட்டு பல்லி மற்றும் மீன்.
A) 1 3 சரி
B) 1 2 4 சரி
C) 1 3 4 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: பலசெல் உயிரிகளில் அதன் வாழ்க்கை செயல்முறை பிரிக்கப்பட்டு வெவ்வேறு செயல்களை செய்வதற்கேற்ப சிறப்பு அம்சங்களை பெற்றுள்ளது.
பொதுவாக இவை அளவில் பெரியவை கண்களால் காண இயலும்.
இவற்றில் திசுக்கள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் காணப்படுகிறது.
பல செல் உயிரிக்கு எடுத்துக்காட்டு பல்லி மற்றும் மீன்.