Science Questions

6th Std Science Lesson Wise Questions in Tamil – Part 1

6th Science Lesson 4 Questions in Tamil

4] தாவரங்கள் வாழும் உலகம்

1) வளரும் பருவ நிலையில் அதிவேகமாக வளரும் தாவரம் எது?

A) சப்பாத்திகள்ளி

B) மூங்கில்

C) வாண்டா

D) தொற்றுத் தாவரம்

விளக்கம்: தாவரங்களுக்கு ஏற்ற நன்கு வளரும் நிலையில் மூங்கில்கள் மட்டும் அதிவேகமாக வளர்ச்சியடைகின்றன. இது நேராக வளரும் தாவரம் ஆகும்.

2) பூமியில் சுமார் எத்தனை சதவிகிதம் பாலைவனம் உள்ளது?

A) 10 சதவிகிதம்

B) 20 சதவிகிதம்

C) 25 சதவிகிதம்

D) 40 சதவிகிதம்

விளக்கம்: நீரின் அளவு மிகக்குறைவாக உள்ள இடத்தை பாலைவனம் என்கிறோம். இவைகள் பூமியின் மிக வறண்ட பகுதியாக கருதப்படுகிறது இவை பூமியில் சுமார் 20 சதவிகிதம் காணப்படுகிறது.

3) காடுகள் எத்தனை வகையாக வகைப்படுத்தப்படுகின்றன?

A) 2

B) 3

C) 5

D) 6

விளக்கம்: மிகப் பரந்த நிலப்பறப்பில் அதிக மரங்களை கொண்டுள்ள பகுதிகளை காடுகள் என்று அழைக்கிறோம் இவ்வகை காடுகளை 3 வகையாக வகைப்படுத்தலாம் அவையாவன

  1. வெப்பமண்டல காடுகள்
  2. குளிர்பிரதேச காடுகள்
  3. மலைக்காடுகள்

4) இந்திய துணைக்கண்டத்தில் காணப்படும் பாலைவனத்தினை இவ்வாறு அழைக்கலாம்?

A) கோபி பாலைவனம்

B) சகாரா பாலைவனம்

C) தார் பாலைவனம்

D) அங்கேர் பாலைவனம்

விளக்கம்: இந்திய துணைக்கண்டத்தில் காணப்படும் பாலைவனம் தார் பாலைவனம் ஆகும். இதன் பகுதிகள் ராஜஸ்தான் மாநிலத்திலும் வடமேற்கு இந்தியாவின் பஞ்சாபிலும் சிந்து மாகாணத்திலும் மற்றும் கிழக்கு பாகிஸ்தானிலும் காணப்படுகிறது.

5) 1. இனிப்பு பட்டாணி – கோணமொட்டு பற்று கம்பிகளாக மாற்றமடைந்திருக்கிறது

2. பாகற்காய் – சிற்றிலை பற்றுக்கம்பிகளாக மாற்றமடைந்து காணப்படுகிறது

3. மூங்கில் – மல்லிகை

4. பின்னுகொடி தாவரம் – அதிவேகமாக வளரும் தாவரம்

A) 1 2 4 3

B) 2 1 4 3

C) 3 4 1 2

D) 2 3 1 4

விளக்கம்:

1. இனிப்பு பட்டாணி – சிற்றிலை பற்றுக்கம்பிகளாக மாற்றமடைந்து காணப்படுகிறது

2. பாகற்காய் – கோணமொட்டு பற்று கம்பிகளாக மாற்றமடைந்திருக்கிறது

3. மூங்கில் – அதிவேகமாக வளரும் தாவரம்

4. பின்னுகொடி தாவரம் – மல்லிகை

6) பாலைவனப்பகுதியில் மழை பொழிவு எவ்வளவு செ.மீ இருக்கும்?

A) 140 செ.மீ

B) 25 செ.மீ

C) 25 – 200 செ.மீ

D) 100 – 175 செ.மீ

விளக்கம்: பாலைவனப்பகுதியில் மழைப்பொழிவு மிகவும் குறைவாக இருக்கும் இங்கு 25 செ.மீ க்கு குறைவாக மழையை பெற்றிருக்கும் இது பூமியில் சுமார் 20 சதவீதம் பாலைவனமாக காணப்படுகிறது.

7) பூமியின் மேற்பரப்பு எத்தனை சதவிதம் கடல்நீர் சூழ்ந்துள்ளது?

A) 60 சதவீதம்

B) 70 சதவீதம்

C) 65 சதவீதம்

D) 78 சதவீதம்

விளக்கம்: பூமியின் மேற்பரப்பானது கடல்நீரினால் சூழப்பட்டுள்ளது பூமியின் பரப்பில் சுமார் 70 சதவீதம் கடல்நீர் சூழ்ந்து காணப்படுகிறது.

8) உலக ஆக்ஸிஜன் தேவையில் பாதியளவு பூர்த்தி செய்வது எது?

A) மழைக்காடுகள்

B) அமெசான் காடுகள்

C) கடல்வாழ் தாவரங்கள்

D) இமயமலைத்தொடர் காடுகள்

விளக்கம்: உலக ஆக்ஸிஜன் தேவையில் பாதியளவு ஆக்ஸிஜனை தருவது அமெசான் காடுகளாகும், இவை மழைக்காடுகள் எனவும் அழைக்கப்படுகிறது,

9) நிலவாழிடங்களில் மனிதனால் உருவாக்கப்பட்ட நகர கட்டமைப்பில் தவறானவை எது?

A) பண்ணைகள்

B) நகரங்கள்

C) மாநகரங்கள்

D) ஏதுமில்லை

விளக்கம்: நில வாழிடங்களில் மனிதனால் உருவாக்கப்பட்ட நகர கட்டமைப்பில் மேற்கூறிய அனைத்தும் அடங்கும் எனவே மனித கட்டமைப்பில் பண்ணைகள், நகரங்கள், மாநகரங்கள் என அனைத்தும் அடங்கும்.

10) பாலைவனங்களை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: பாலைவனங்களை 4 வகையாக பிரிக்கலாம் அவை

  1. வெப்ப வறட்சி பாலைவனங்கள்,
  2. மிதவெப்ப பாலைவனங்கள்,
  3. கடல்சார்ந்த பாலைவனங்கள்,
  4. குளிர் பாலைவனங்கள்

11) உலகில் எத்தனை சதவிகிதம் நில வாழிடங்கள் உள்ளன?

A) 70 சதவீதம்

B) 32 சதவீதம்

C) 28 சதவீதம்

D) 35 சதவீதம்

விளக்கம்: உலகின் மொத்த நிலப்பரப்பில் 28 சதவீதம் காணபடுகிறது மீதமுள்ள பகுதிகள் கடல்நீரால் சூழப்பட்டுள்ளது.

12) நீர்வாழிடம் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?

A) 2

B) 4

C) 5

D) 8

விளக்கம்: நீர் வாழிடம் மொத்தமாக 2 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை, நன்னீர் வாழிடம், கடல்நீர் வாழிடம்

13) பூமியில் உள்ள தாவரங்களின் மொத்த ஒளிச்சேர்க்கையில் கடல் வாழ் தாவரத்தில் மட்டும் எத்தனை சதவிகிதம் ஒளிச்சேர்க்கை நடைபெறுகிறது?

A) 30 சதவீதம்

B) 35 சதவீதம்

C) 40 சதவீதம்

D) 45 சதவீதம்

விளக்கம்: பூமியில் உள்ள தாவரங்களில் 40 சதவீதம் ஒளிச்சேர்க்கையானது தாவரங்களில் இருந்து பெறப்படுகிறது அதுவும் குறிப்பாக கடல்வாழ் தாவரங்களில் இருந்து பெறப்படுகிறது.

14) கூற்று: இலையானது ஒளிச்சேர்க்கையின் மூலம் உணவை தயாரிக்கிறது.

காரணம்: சூரிய ஒளியின் முன்னிலையில் இலையானது ஒளிச்சேர்க்கையில் ஈடுபட்டு உணவினை சேமிக்கிறது.

A) கூற்று காரணம் இரண்டும் சரி

B) கூற்று சரி

C) காரணம் சரி

D) கூற்று காரணம் இரண்டும் தவறு

விளக்கம்: இலையானது ஒளிச்சேர்க்கையின் மூலம் உணவை தயாரிக்கிறது. சூரிய ஒளியின் முன்னிலையில் இலையானது ஒளிச்சேர்க்கையில் ஈடுபட்டு உணவினை சேமிக்கிறது.

15) பூக்கும் தாவரங்கள் கொண்டுள்ள முக்கிய தொகுப்புகள் எத்தனை வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?

A) 2

B) 3

C) 4

D) 6

விளக்கம்: பூக்கும் தாவரங்கள் 2 முக்கிய தொகுப்புகளை உள்ளடக்கியது, அவையாவன

தண்டுத் தொகுப்பு, வேர்த் தொகுப்பு

16) உலகின் மிக நீளமான நதி எது அதன் நீளம் எவ்வளவு?

A) அமெசான் நதி, 6566 கிமி

B) கங்கை, 2525 கிமி

C) பிரம்மபுத்திரா, 2658 கிமி

D) நைல் நதி, 6650 கிமி

விளக்கம்: உலகின் மிக நீளமான நதி நைல் நதியாகும் இது 6650 கிமி நீளமுடையது இதுவே உலகின் மிக நீளமாக நன்னீர் வழித்தடம் ஆகும்.

17) 1. வேர்களில் கணுக்களும் கணுவிடைப்பகுதியும் காணப்படுகிறது.

2. வேர் முடி அதன் நுனிப்பகுதியில் உள்ளது.

3. வேர்கள் நேர் புவிநாட்டம் கொண்டது.

4. வேர்தொகுப்புகள் 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

A) 1 3 4 சரி

B) 2 4 சரி

C) 1 2 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்:

  1. வேர்களில் கணுக்களும் கணுவிடைப்பகுதியும் காணப்படுவதில்லை.
  2. வேர் முடி அதன் நுனிப்பகுதியில் உள்ளது.
  3. வேர்கள் நேர் புவிநாட்டம் கொண்டது.
  4. வேர்தொகுப்புகள் 2 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

18) தண்டில் இலைகள் தோன்றும் பகுதிக்கு — என்று பெயர்?

A) கணு

B) கணுவிடைப்பகுதி

C) நுனிமொட்டு

D) கோணமொட்டு

விளக்கம்: தண்டில் இலைகள் தோன்றும் பகுதிக்கு கணு என்று அழைக்கப்படுகிறது இது தாவரத்தில் அடுத்தகட்ட வளர்ச்சியான இலையினை தோற்றுவிக்கிறது.

19) 1. தண்டானது கிளைகள், இலைகள், மலர்கள், கனிகளை தாங்குகிறது.

2. வேரில் உறிஞ்சப்பட்ட நீர் மற்றும் கனிம உப்புக்களை தாவரங்களின் மற்ற பாகங்களுக்கு கடத்துகிறது.

3. இலையில் தயாரிக்கப்பட்ட உணவானது தாவரத்தின் மற்ற பாகங்களுக்கு கடத்தப்படுவதற்கு தண்டானது உதவுகிறது.

4. கரும்பு தண்டில் உணவை சேமித்து வைக்கிறது.

A) 1 3 4 சரி

B) 2 4 சரி

C) 1 2 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: தண்டானது கிளைகள், இலைகள், மலர்கள், கனிகளை தாங்குகிறது. வேரில் உறிஞ்சப்பட்ட நீர் மற்றும் கனிம உப்புக்களை தாவரங்களின் மற்ற பாகங்களுக்கு கடத்துகிறது. இலையில் தயாரிக்கப்பட்ட உணவானது தாவரத்தின் மற்ற பாகங்களுக்கு கடத்தப்படுவதற்கு தண்டானது உதவுகிறது. கரும்பு தண்டில் உணவை சேமித்து வைக்கிறது.

20) நீரில் வாழும் எந்த தாவரத்தின் இலைகள் 3 மீ விட்டம் கொண்டது?

A) விக்டோரியா அமெசோனிகா

B) பிரையோ பில்லம்

C) உல்ப்

D) கனியா

விளக்கம்: நீரில் வாழும் விக்டோரியா அமெசோனிகா என்ற தாவரம் ஆனர் 3 மீ விட்டம் கொண்டது இது நன்கு வளர்ந்த நிலையில் 45 கிலோ எடையையும் தாங்கும் தன்மையுடையது.

21) 1. முளைவேர் தடித்த முதல்நிலை வேராக மாறுகிறது.

2. ஆணிவேரிலிருந்து மற்ற வேர்களான முதல்நிலை வேர்கள் மற்றும் இரண்டாம் நிலை வேர்கள் தோன்றுகிறது.

3. பொதுவாக இருவித்திலை தாவரங்களில் காணப்படுகிறது.

4. புற்களில் ஆணிவேர் தொகுப்பு காணப்படுகிறது.

A) 1 3 4 சரி

B) 2 4 சரி

C) 1 2 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: முளைவேர் தடித்த முதல்நிலை வேராக மாறுகிறது.

ஆணிவேரிலிருந்து மற்ற வேர்களான முதல்நிலை வேர்கள் மற்றும் இரண்டாம் நிலை வேர்கள் தோன்றுகிறது.

பொதுவாக இருவித்திலை தாவரங்களில் காணப்படுகிறது.

புற்களில் ஆணிவேர் தொகுப்பு காணப்படுவதில்லை சல்லிவேர்கள் தான் காணப்படுகிறது.

22) நிலத்தின் மேற்பகுதியில் வளரும் பகுதிக்கு — என்று பெயர்?

A) தண்டு

B) தண்டுதொகுப்பு

C) மைய அச்சு

D) ஆரப்போக்கு

விளக்கம்: நிலத்தின் மேற்பகுதியில் வளரும் பகுதிக்கு தண்டு தொகுப்பு என்று அழைக்கப்படுகிறது, இதன் அச்சுப்பகுதியே தண்டு என அழைக்கிறோம், மேலும் தாவரத்தின் மொத்த உறுப்பையும் தாங்கும் அமைப்பாக தண்டுத் தொகுப்பு காணப்படுகிறது.

23) இலைகள் பச்சை நிறத்தில் காணப்படுவதற்கு காரணம்?

A) பச்சையம்

B) குளோரோபிளாஸ்ட்

C) நிறமிகள்

D) கனிம உப்புக்கள்

விளக்கம்: இலைகள் பச்சை நிறத்தில் காண்பதற்கு பச்சையம் என்னும் நிறமியே காரணமாகும். இது ஒளிச்சேர்க்கைக்கு மிக இன்றியமையாத பொருளாகும்.

24) இலையின் பணிகளில் தவறானது எது?

A) ஒளிச்சேர்க்கைக்கு துணைபுரிகிறது.

B) சுவாசித்தலுக்கு உதவுகிறது.

C) இலைத்துளையின் வழியே நீராவிப்போக்கை அனுமதிக்கிறது.

D) ஏதுமில்லை.

விளக்கம்: இலையின் பணியானது மேற்கண்ட அனைத்தும் சரியானவையே இவை அனைத்தும் இலையின் இன்றியமையாத மிக முக்கிய பணியாக கருதப்படுகிறது.

25) தண்டின் கணுவின் மேல் விரிந்த தட்டையான பசுமை நிறத்தில் தோன்றும் புற அமைப்பு — என்று பெயர்?

A) கனி

B) இலை

C) கிளைகள்

D) கணுவிடைப்பகுதி

விளக்கம்: தண்டின் கணுவின் மேல் விரிந்த தட்டையான பசுமை நிறத்தில் தோன்றும் புற அமைப்பிற்கு இலை என்று பெயர் இலையானது தாவரத்தின் புற அமைப்பிற்கு மட்டும் அல்லாமல் உணவினை உற்பத்தி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

26) 1. கணு – தண்டின் நுனியில் தோன்றும் மொட்டு

2. கணுவிடைப்பகுதி – இலைகள் தோன்றும் பகுதி

3. கோண மொட்டு – தண்டின் இலையின் கோணத்தில்

4. நுனிமொட்டு – இரண்டு கணுக்களுக்கும் இடையே உள்ள கோணம்

A) 4 2 1 3

B) 2 4 3 1

C) 3 1 2 4

D) 2 1 4 3

விளக்கம்: கணு – இலைகள் தோன்றும் பகுதி.

கணுவிடைப்பகுதி – இரண்டு கணுக்களுக்கும் இடையே உள்ள

கோணம்.

கோண மொட்டு – தண்டின் இலையின் கோணத்தில்.

நுனிமொட்டு – தண்டின் நுனியில் தோன்றும் மொட்டு.

27) இலையின் அடிப்பகுதியில் காணப்படும் நுண்ணிய துளைப்போன்ற அமைப்பினை எவ்வாறு அழைக்கலாம்?

A) கணுவிடைப்பகுதி

B) இலையடி செதில்கள்

C) இலைத்துளை

D) இலையின் புறப்பறப்பு

விளக்கம்: இலையின் அடிப்பகுதியில் காணப்படும் நுண்ணிய துளை போன்ற அமைப்பிற்கு இலைத்துளை என்று அழைக்கப்படுகிறோம். இது ஒளிச்சேர்க்கையின் போது தாவரத்திலிருந்து நீர் ஆவியாவதற்கு பெரிதும் உதவுகிறது.

28) பூவின் அடிப்படையில் தாவரங்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்?

A) 2

B) 3

C) 5

D) 6

விளக்கம்: தாவரங்களில் பூவின் அடிப்படையில் தாவரங்கள் இரண்டு வகையாக பிரிக்கலாம், இவையே தாவரத்தின் மிக முக்கிய பிரிவாக கருதப்படுகிறது அவையாவன

  1. பூக்கும் தாவரங்கள்,
  2. பூவா தாவரங்கள்

29) 470 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தாவரங்கள் எவை எவை?

A) மாஸ்

B) பாக்டிரியா

C) லிவர்வோர்ட்ஸ்

D) A&C

விளக்கம்: 470 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய தாவரங்களாக நாம் கருதப்படுவது மாஸ் மற்றும் லிவர்வோர்ட்ஸ் ஆகிய இரண்டு மட்டுமே பாக்டீரியா ஒரு நுண்ணுயிரி ஆகும்.

30) 1. பாலைவன தாவரங்கள் நீரையும் கனிம உப்புக்களையும் இலையில் சேமித்துவைக்கிறது.

2. கள்ளித்தாவரங்கள் நீரை தண்டில் சேமித்து வைக்கின்றன.

3. பாலைவனத் தாவரத்தின் வேர்கள் மண்ணின் மிக ஆழமாக சென்று நீரையும் கனிம உப்புக்களையும் உறிஞ்சுகின்றன.

4. பாலைவன தாவரத்திற்கு எடுத்துக்காட்டு சப்பாத்திகள்ளி, சோற்றுக் கற்றாழை.

A) 1 3 4 சரி

B) 2 4 சரி

C) 1 2 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: பாலைவன தாவரங்கள் நீரையும் கனிம உப்புக்களையும் இலையில் சேமித்துவைக்கிறது.

கள்ளித்தாவரங்கள் நீரை தண்டில் சேமித்து வைக்கின்றன.

பாலைவனத் தாவரத்தின் வேர்கள் மண்ணின் மிக ஆழமாக சென்று நீரையும் கனிம உப்புக்களையும் உறிஞ்சுகின்றன.

பாலைவன தாவரத்திற்கு எடுத்துக்காட்டு சப்பாத்திகள்ளி, சோற்றுக் கற்றாழை.

31) உலக வாழிட நாளாக அனுசரிக்கப்படுவது எந்த மாதத்தின் முதல் திங்கள்?

A) ஆகஸ்ட்

B) செப்டம்பர்

C) அக்டோபர்

D) நவம்பர்

விளக்கம்: அக்டோபர் மாதத்தின் முதல் திங்கள் உலக வாழிட நாளாக அனுசரிக்கப்படுகிறது.

32) கீழ்கண்டவற்றுள் தண்டின் மாற்றுருக்களில் சரியானது எது?

A) பற்றுக்கம்பி

B) பின்னுகொடி

C) முட்கள்

D) A&B

விளக்கம்: பற்றுக்கம்பி மற்றும் பின்னுகொடி ஆகிய இரண்டும் தாவரத்தின் தண்டின் மாற்றுருக்கள் ஆகும். முட்கள் இலையின் மாற்றுருக்கள் ஆகும்.

33) ஒரு குறிப்பிட்ட வாழிடத்தில் உயிரினம் உயிர்;வாழ்வதற்கு அதன் அமைப்பிலும் பண்பிலும் பெற்றிருக்கும் மாற்றங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) நீர் வாழிடம்

B) நில வாழிடம்

C) தகவமைப்புகள்

D) சூழலியல்

விளக்கம்: ஒரு குறிப்பிட்ட வாழிடத்தில் உயிரினம் உயிர்;வாழ்வதற்கு அதன் அமைப்பிலும் பண்பிலும் பெற்றிருக்கும் மாற்றங்கள் தகவமைப்புகள் என அழைக்கப்படுகிறது.

34) குளம்_________ வாழிடத்திற்கு ஒரு நல்ல உதாரணமாகும்?

A) கடல்

B) நன்னீர் வாழிடம்

C) பாலைவனம்

D) மலைகள்

விளக்கம்: குளமானது ஒரு நன்னீர் வாழிடத்திற்கு சிறந்த உதாரணமாக கருதப்படுகிறது. இவை நீரில் வாழும் தாவரங்களுக்கும் நன்னீர் உயிரிகளுக்கும் அடிப்படையாக திகழ்கிறது.

35) தாவரத்தின் நீரை உறிஞ்சும் பகுதி எது?

A) வேர்

B) தண்டு

C) இலை

D) பூ

விளக்கம்: தாவரத்தின் நீரை உறிஞ்சும் பகுதியாக இருப்பது வேர் மட்டுமே ஆகும். இது மண்ணிலிருந்து நீரையும் கனிம உப்புக்களையும் உறிஞ்சப்பயன்படுகிறது.

36) 1. தாவரங்கள் நீர் இன்றி வாழமுடியும்.

2. தாவரத்தின் அனைத்திலும் பச்சையம் காணப்படுகிறது

3. மலைகள் நன்னீர் வாழிடத்தில் ஓர் உதாரணம்.

4. பசுந்தாவரங்களுக்கு சூரிய ஒளி தேவை.

A) 1 3 4 சரி

B) 2 4 சரி

C) 1 2 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: தாவரத்தின் அனைத்திலும் பச்சையம் காணப்படுகிறது. பசுந்தாவரங்களுக்கு சூரிய ஒளி தேவை.

37) பூமியின் மிகவும் வறண்ட பகுதி எது?

A) கடல்

B) நன்னீர் வாழிடம்

C) பாலைவனம்

D) மலைகள்

விளக்கம்: பூமியின் மிகவும் வறண்ட பகுதியாக அறியப்படுவது பாலைவனம் ஆகும் இது பூமியின் நிலப்பறப்பில் 20 சதவிகிதம் காணப்படுகிறது.

38) ஊன்றுதல் மற்றும் உறிஞ்சுதல் இரண்டும் தாவரத்தின் எதன் வேலை?

A) வேர்கள்

B) தண்டுகள்

C) இலை

D) பற்றுக்கம்பி

விளக்கம்: வேர்களே தாவரத்தில் ஊன்றுதல் மற்றும் உறிஞ்சுதல் ஆகிய இரண்டும் முக்கிய பணியாக செய்கின்றன.

39) 1. மலைகள் – ஒரு வித்திலை தாவரங்கள்

2. பாலைவனம் – கிளைகள்

3. தண்டு – வறண்ட இடங்கள்

4. ஒளிச்சேர்க்கை – இமயமலை

5. சல்லிவேர் தொகுப்பு – இலைகள்

A) 4 3 2 5 1

B) 2 3 5 1 4

C) 5 2 1 3 4

D) 3 2 5 1 4

விளக்கம்: மலைகள் – இமயமலை

பாலைவனம் – வறண்ட இடங்கள்

தண்டு – கிளைகள்

ஒளிச்சேர்க்கை – இலைகள்

சல்லிவேர் தொகுப்பு – ஒரு வித்திலை தாவரங்கள்

40) ஆணிவேர் தொகுப்பு எத்தாவரத்தில் காணப்படுகிறது?

A) நன்னீர் தாவரங்கள்

B) கடல்வாழ் தாவரங்கள்

C) ஒரு வித்திலை தாவரங்கள்

D) இரு வித்திலை தாவரங்கள்

விளக்கம்: ஆணிவேர் தொகுப்பு இரு வித்திலை தாவரங்களில் காணப்படுகிறது, இரு வித்திலை தாவரங்கள் நன்கு மேம்பாடடைந்த தாவரங்களாக கருதப்படுகிறது.

41) ஒளிச்சேர்க்கை நடைபெறும் முதன்மை பகுதி எது?

A) வேர்

B) தண்டு

C) இலை

D) மைய அச்சு

விளக்கம்: தாவரத்தின் ஒளிச்சேர்க்கை நடைபெறும் பகுதியாக விளங்குவது இலைகள் ஆகும். இலையில் காணப்படும் பச்சயம் நிறமியானது ஒளிச்சேர்க்கைக்கு துணைபுரிகிறது.

Previous page 1 2 3 4 5 6 7 8Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!