6th Std Science Lesson Wise Questions in Tamil – Part 2
6th Science Lesson 15 Questions in Tamil
15] அன்றாட வாழ்வில் வேதியியல்
1) மனிதத் தசை மற்றும் நரம்பு மண்டலத்தை சீராக்குவது எது?
A) ஜிப்சம்
B) எப்சம்
C) பாரிஸ்சாந்து
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: எப்சம் என்பது மெக்னீசியம் சல்பேட் ஹைட்ரேட் எனும் உப்பாகும். மனிதத் தசை மற்றும் நரம்பு மண்டலத்தை சீராக்குவது எப்சம் ஆகும்.
2) கூற்று: மஞ்சள் தூளை வேதியாளர்கள் இயற்கை நிறங்காட்டி என்று அழைக்கின்றனர்.
காரணம்: ஒரு கரைசல் அமிலத்தன்மை வாய்ந்ததா, காரத்தன்மை வாய்ந்ததா என நம்மால் அடையாளம் காண மஞ்சள் உதவுகிறது.
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று, காரணம் இரண்டும் தவறு, காரணம் கூற்றை விளக்கவில்லை
விளக்கம்: வேதியியலாளர்கள் மஞ்சளை இயற்கை நிறங்காட்டி என்று அழைக்கின்றனர். இதன் மூலம் ஒரு கரைசல் அமிலத்தன்மை வாய்ந்ததா, காரத்தன்மை வாய்ந்ததா என நம்மால் அடையாளம் காண முடியும்.
3) கீழ்க்கண்டவற்றில் பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.
A) சூப்பர் பாஸ்பேட்
B) அம்மோனியம் சல்பேட்
C) பொட்டாசியம் நைட்ரேட்
D) தொழு உரம்
விளக்கம்: மேற்கண்டவற்றில் பொருந்தாதது தொழு உரம். இது இயற்கை உரம். மற்றவை செயற்கை உரங்கள்.
நுண்ணுயிரிகளால் தொகுக்கப்பட்ட தாவர மற்றும் விலங்கு கழிவுகள் அனைத்தும் இயற்கை அல்லது கரிம உரங்கள் எனப்படும். இந்த வகை உரங்கள் சிக்கனமானவை. எ.கா. மண்புழு உரம், தொழு உரம்.
மண்ணில் இயற்கையாகக் கிடைக்கும் கனிமப் பொருள்களைக் கொண்டு, தொழிற்சாலைகளில் வேதிமாற்றத்திற்குட்படுத்தி தயாரிக்கப்படும் உரங்கள் கனிம உரங்கள் எனப்படும். எ.கா. யூரியா, சூப்பர் பாஸ்பேட், அம்மோனியம் சல்பேட், பொட்டாசியம் நைட்ரேட்.
4) விவசாயிகளின் நண்பன் என்று அழைக்கப்படுவது எது?
A) எலி
B) வெட்டுக்கிளி
C) உரங்கள்
D) மண்புழு
விளக்கம்: மண்புழுக்கள் உயிரி கழிவுகள் அனைத்தையும் உணவாக உண்டு செரித்து வெளியேற்றுகின்றன. இத்தகைய மண், செழிப்பான தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது. இவ்வாறு மண்புழு விவசாயத்திற்கு பல்வேறு வகைகளில் உதவுவதால் இது உழவனின் நண்பன் எனவும் அழைக்கப்படுகிறது.
5) சிமெண்ட் தயாரிக்க கீழ்க்கண்ட எதைப் பயன்படுத்துவதில்லை?
A) சுண்ணாம்புக்கல்
B) களிமண்
C) ஜிப்சம்
D) எப்சம்
விளக்கம்: இயற்கையில் கிடைக்கக்கூடிய சுண்ணாம்புக்கல், களிமண் மற்றும் ஜிப்சம் ஆகிய தாது உப்புக்களைக் கலந்து அரைப்பதன் மூலம் சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது.
6) நாம் 50 கிலோகிராம் யூரியாவினைப் பயன்படுத்தும் போது, எத்தனை கிலோகிராம் நைட்ரஜன் மண்ணில் சேர்க்கப்படுகிறது?
A) 23
B) 27
C) 25
D) 20
விளக்கம்: நாம் 50 கிலோகிராம் யூரியாவினைப் பயன்படுத்தும் போது, 23 கிலோகிராம் (46 சதவீதம்) நைட்ரஜன் மண்ணில் சேர்க்கப்படுகிறது.
7) தாவரங்களின் முதன்மை ஊட்டச்சத்துகளில் பொருந்தாது எது?
A) நைட்ரஜன்
B) பாஸ்பரஸ்
C) பொட்டாசியம்
D) அம்மோனியா
விளக்கம்: தாவரங்களின் வளர்ச்சிக்கு பலவகையான ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன. அவற்றுள் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவை தாவரங்களுக்குத் தேவையான மூன்று முக்கிய ஊட்டச்சத்துக்கள் ஆகும். இவை முதன்மை ஊட்டசத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றன.
8) இயற்கை ஒட்டும்பொருள்——————இருந்து தயாரிக்கப்படுகின்றது?
A) புரதங்களில்
B) கொழுப்புகளில்
C) ஸ்டார்ச்சில்
D) வைட்டமின்களில்
விளக்கம்: ஒட்டும் பொருள்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவை இயற்கை மற்றும் செயற்கை ஒட்டும் பொருள்களாகும். நீரில் கரைக்கப்பட்ட ஸ்டார்ச் இயற்கை ஒட்டுப்பொருளுக்கு எடுத்துக்கட்டாகும்.
9) மெக்னீசியம் சல்பேட் ஹைட்ரேட் என்னும் உப்பு கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?
A) பாரிஸ்சாந்து
B) எப்சம்
C) ஜிப்சம்
D) சிமெண்ட்
விளக்கம்: எப்சம் என்பது மெக்னீசியம் சல்பேட் ஹைட்ரேட் எனும் உப்பாகும். இதன் மூலக்கூறு வாய்ப்பாடு MgSO4 7H2O.
10) வெங்காயம் நறுக்கும் போது நம்மில் பலருக்கும் கண்ளில் எரிச்சலுடன் கண்ணீர் வருவதற்கான காரணம், அதன் செல்களில் பொதிந்துள்ள—————–என்னும் வேதிப்பொருள் ஆகும்?
A) புரோப்பேன் தயால் S-ஆக்ஸைடு
B) பியூட்டேன் தயால் S-ஆக்ஸைடு
C) புரேப்பேன் தயால் P-ஆக்ஸைடு
D) பியூட்டேன் தயால் P-ஆக்ஸைடு
விளக்கம்: வெங்காயம் நறுக்கும் போது நம்மில் பலருக்கும் கண்களில் எரிச்சலுடன் கண்ணீர் வருவதற்கான காரணம், அதன் செல்களில் பொதிந்துள்ள புரோப்பேன் தயால் ளு-ஆக்ஸைடு என்னும் வேதிப்பொருள் ஆகும். இது எளிதில் ஆவியாகக் கூடியது. வெங்காயத்தை வெட்டும்போது, சில செல்கள் சிதைந்து இந்த வேதிப்பெர்ருள் வெளிப்படும். எளிதில் ஆவியாகி உடனே கண்களைச் சென்றடைந்து, எரிச்சலை ஏற்படுத்தி கண்ணீரைத் தூண்டும்.
11) சோப்பு மூலக்கூறுகளுக்கு எத்தனை முனைகள் உண்டு?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: சோப்பு மூலக்கூறுகளுக்கு இரண்டு மூலக்கூறுகள் உண்டு. அவை,
1. நீரை விரும்பும் பகுதி
2. நீரை வெறுக்கும் பகுதி
நீரை விரும்பும் பகுதி: நீர் மூலக்கூறுகளை நோக்கி செல்கிறது.
நீரை வெறுக்கும் பகுதி: அழுக்கு மற்றும் எண்ணெய்ப் பொருளை நோக்கிச் செல்கிறது.
12) தோல் நோய்களைத் தீர்க்கும் களிம்புகளில் பயன்படுவது எது?
A) ஜிப்சம்
B) எப்சம்
C) பாரிஸ்சாந்து
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: எப்சம் என்பது மெக்னீசியம் சல்பேட் ஹைட்ரேட் எனும் உப்பாகும். இது மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது தோல் நோய்களைத் தீர்க்கும் களிம்புகளில் பயன்படுகின்றது.
13) ஜிப்சத்தின் பயன்களில் பொருந்தாதது எது?
A) உரமாகப் பயன்படுகிறது
B) சிமெண்ட் தயாரிக்கப் பயன்படுகிறது
C) பாரீஸ் சாந்து தயாரிப்பில் பயன்படுகிறது
D) விவசாயத்தில் தாவரங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கப் பயன்படுகிறது.
விளக்கம்: ஜிப்சத்தின் பயன்கள்:
1. உரமாகப் பயன்படுகிறது
2. சிமெண்ட் தயாரிக்கப் பயன்படுகிறது
3. பாரீஸ் சாந்து தயாரிப்பில் பயன்படுகிறது
விவசாயத்தில் தாவரங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கப் பயன்படுவது – எப்சம்.
14) கூற்று: சிமெண்ட் பொதுவாக போர்ட்லேண்ட் என்று அழைக்கப்படுகிறது.
காரணம்: இதனைக் கண்டுபிடித்தவர் போர்ட்லேண்ட் ஆவார்
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று, காரணம் இரண்டும் தவறு, காரணம் கூற்றை விளக்கவில்லை
விளக்கம்: சிமெண்ட் பொதுவாக போர்ட்லேண்ட் சிமெண்ட் என்று அழைக்கப்படுகிறது. இது இங்கிலாந்து நாட்டிலுள்ள போர்ட்லேண்ட் என்னும் இடத்தில் கிடைக்கும் சுண்ணாம்புக் கல்லின் தன்மையை ஒத்திருந்ததால போர்ட்லேண்ட் சிமெண்ட் என்று அழைக்கப்படுகிறது.
15) சிமெண்டைக் கண்டுபிடித்தவர் யார்?
A) வில்லியம் போர்ட்லேண்ட்
B) வில்லியம் ஆஸ்பிடின்
C) வில்லியம் ஹார்வி
D) மேற்காணும் யாருமில்லை
விளக்கம்: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வில்லியம் ஆஸ்பிடின் என்பவர் 1824ஆம் ஆண்டு முதன்முதலில் சிமெண்டைக் கண்டுபிடித்தார்.
16) கீழ்க்கண்டவற்றில் எது ஜிப்சத்துடன் தொடர்புடையது?
A) கால்சியம் சல்பேட் ஹைட்ரேட்
B) மெக்னீசியம் சல்பேட் ஹைட்ரேட்
C) பொட்டாசியம் சல்பேட் ஹைட்ரேட்
D) அம்மோனியம் சல்பேட் ஹைட்ரேட்
விளக்கம்: கால்சியம் சல்பேட் ஹைட்ரேட் என்பது ஜிப்சத்துடன் தொடர்புடையது. ஜிப்சம் என்பது இயற்கையில் கிடைக்கக்கூடிய ஒரு மிருதுவான, நிறமற்ற கனிமப்பொருளாகும்.
17) பீனால் என்பது கீழக்காணும் எதனுடன் தொடர்புடையது?
A) கார்பாலிக் அமிலம்
B) ஆக்ஸாலிக் அமிலம்
C) போனிக் அமிலம்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: பீனால் என்பது கார்பாலிக் அமிலம் எனப்படும் கரிம அமிலமாகும். பீனாலின் மூலக்கூறு வாய்ப்பாடு, இது வீரியம் குறைந்த அமிலமாகும். இது ஆவியாகும் தன்மையுள்ள, வெண்மை நிறப் படிக திண்மமாகும்.
18) இயற்கை நிறங்காட்டி என்று அழைக்கப்படுவது எது?
A) லிட்மஸ் தாள்
B) மஞ்சள்
C) சோப்புத்தூள்
D) மேற்கண்ட எதுவுமில்லை
விளக்கம்: வேதியியலாளர்கள் மஞ்சளை இயற்கை நிறங்காட்டி என்று அழைக்கின்றனர். இதன் மூலம் ஒரு கரைசல் அமிலத்தன்மை வாய்ந்ததா, காரத்தன்மை வாய்ந்ததா என நம்மால் அடையாளம் காண முடியும்.
19) கூற்றுகளை ஆராய்க.
1. ஒரு புதிய பொருளை உருவாக்கும் நிகழ்வு – வேதியியல் மாற்றம்
2. பொருளின் வடிவம் மாறாமல் இருக்கும் நிகழ்வு – இயற்பியல் மாற்றம்
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: வேதியியல் மாற்றம் என்பது ஒரு பொருள் புதிய பொருளை உருவாக்கும் நிகழ்வு ஆகும். இயற்பியல் மாற்றம் என்பது பொருள்களின் வடிவம், அளவு மற்றும் பருமனில் மட்டும் ஏற்படும் மாற்றமாகும்.
20) மருத்துவத் துறையில் மனிதனின் மன அழுத்தத்தைக் குறைக்கும் அமைதிப்படுத்திகளாக பயன்படுவது எது?
A) ஜிப்சம்
B) எப்சம்
C) பாரிஸ்சாந்து
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: எப்சம் என்பது மெக்னீசியம் சல்பேட் ஹைட்ரேட் எனும் உப்பாகும். இது மருத்துவத் துறையில் மனிதனில் மன அழுத்தத்தைக் குறைக்கும் அமைதிப்படுத்திகளாக பயன்படுகிறது.
21) எலும்பு முறிவுச் சிகிச்சையில் பயன்படுவது எது?
A) ஜிப்சம்
B) எப்சம்
C) பாரிஸ் சாந்து
D) மேற்கண்ட அனைத்தும்
விளக்கம்: பாரிஸ் சாந்து: எலும்பு முறிவுச் சிகிச்கையிலும், சிலைகள் மற்றும் பொம்மைகள் தயாரிப்பிலும் பயன்படுகின்றன.
ஜிப்சம் மற்றும் எப்சம்: மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
22) எப்சத்தின் பயன்களில் பொருந்தாதது எது?
A) மருத்துவத்துறையில், மனிதனின் மன அழுத்தத்தைக் குறைக்கும் அமைதிப்படுத்திகளாக பயன்படுகிறது.
B) மனிதத் தசை மற்றும் நரம்பு மண்டலத்தை சீராக்குகின்றது.
C) தோல் நோய்களைத் தீர்க்கும் களிம்புகளில் பயன்படுகின்றது.
D) சிமெண்ட் தயாரிக்கப் பயன்படுகிறது
விளக்கம்: எப்சத்தின் பயன்கள்:
மருத்துவத்துறையில், மனிதனின் மன அழுத்தத்தைக் குறைக்கும் அமைதிப்படுத்திகளாக பயன்படுகிறது.
மனிதத் தசை மற்றும் நரம்பு மண்டலத்தை சீராக்குகின்றது.
தோல் நோய்களைத் தீர்க்கும் களிம்புகளில் பயன்படுகின்றது.
விவசாயத்தில் தாவரங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கப் பயன்படுகிறது.
ஜிப்சம்:
1. உரமாகப் பயன்படுகிறது.
2. சிமெண்ட் தயாரிக்கப் பயன்படுகிறது.
3. பாரீஸ் சாந்து தயாரிப்பில் பயன்படுகிறது.
23) பாரிஸ் சாந்துவின் வேதியில் பெயர் என்ன?
A) கால்சியம் சல்பேட் ஹைட்ரேட்
B) கால்சியம் சல்பேட் ஹெமி ஹைட்ரேட்
C) மெக்னீசியம் சல்பேட் ஹைட்ரேட்
D) பாஸ்பரஸ் சல்பேட் ஹைட்ரேட்
விளக்கம்: பாரிஸ் சாந்து ஒரு மிக நுண்ணிய வெள்ளைப் பொடியாகும். இதன் வேதியியல் பெயர் கால்சியம் சல்பேட் ஹெமி ஹைட்ரேட் ஆகும்.
24) பாரிஸ் சாந்து தயாரிக்கப் பயன்படும் ஜிப்சம் எந்த நாட்டின் தலைநகரான பாரிஸில் அதிகம் கிடைப்பதால் அப்பெயர் பெற்றது?
A) பிரிட்டன்
B) பிரான்ஸ்
C) நெதர்லாந்து
D) அமெரிக்கா
விளக்கம்: பாரிஸ் சாந்து தயாரிக்கப் பயன்படும் ஜிப்சம், பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் அதிகம் கிடைப்பதால், இது பாரிஸ் சாந்து என அழைக்கப்படுகிறது. ஜிப்சத்தினை வெப்பப்படுத்தும் பொழுது, பகுதியளவு நீர்ச்சத்து வெளியேறி பாரிஸ் சாந்து தயாரிக்கப்படுகிறது.
25) பீனால் கரைசலின் நிறம் என்ன?
A) சிவப்பு
B) இளஞ்சிவப்பு
C) வெள்ளை
D) நிறமற்றது
விளக்கம்: பீனால் என்பது கார்பாலிக் அமிலம் எனப்படும் கரிம அமிலமாகும். பீனாலின் கரைசல் நிறமற்றதாக இருப்பினும், மாசு காரணமாக இளம் சிவப்பு நிறக் கரைசலாக மாற்றமடைகிறது.
26) சோப்புகளின் முதன்மை மூலம்________ஆகும்?
A) புரதங்கள்
B) விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்
C) மண்
D) நுரை உருவாக்கி
விளக்கம்: தாவர எண்ணெய் அல்லது விலங்குக் கொழுப்பினை அடர் சோடியம் ஹைடிராக்சைடு கரைசலுடன் சேர்த்து குளிர வைக்கும்போது சோப்பு கிடைக்கிறது.
27) சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம்________ஆகும்.
A) விரைவாக கெட்டித்தன்மையடைய
B) கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த
C) கடினமாக்க
D) கலவையை உருவாக்க
விளக்கம்: சிமெண்டுடன் நீர் சேர்க்கும்பொழுது சில நிமிடங்களில் அது கெட்டியாகிறது. சிமெண்ட் தயாரிக்கும்போது இறுதியாக அத்துடன் சிறிதளவு ஜிப்சம் சேர்க்கப்படுகின்றது. ஜிப்சமானது சிமெண்டின் கெட்டிப்படும் நேரத்தை தாமதமாக்குகின்றது.