6th Std Science Lesson Wise Questions in Tamil – Part 2
6th Science Lesson 14 Questions in Tamil
14] நீர்
1. பின்வரும் முறைகளுள் நீராவியினை வளிமண்டலத்தினுள் சேர்ப்பது எது?
1. நீராவிப்போக்கு
2. மழைபொழிதல்
3. ஆவி சுருங்குதல்
4. ஆவியாதல்
A) 2 மற்றும் 3
B) 2 மற்றும் 4
C) 1 மற்றும் 4
D) 1 மற்றும் 2
விளக்கம்: ஆவியாதல், ஆவி சுருங்குதல் மற்றும் மழை பொழிதல் ஆகிய மூன்றும் நீர் சுழற்சியுடன் தொடர்புடையது ஆகும். இதில் நீராவியினை வளிமண்டலத்தினுள் சேர்ப்பது, நீராவிப்போக்கு மற்றும் ஆவியாதல் ஆகும்.
2) காற்றில் ஆக்ஸிஜனின் அளவு 20 சதவீதமாக இருக்க வேண்டும் என கூறியவர் யார்?
A) பாய்லே
B) லவாய்சியர்
C) மேரி அன்னே
D) மேற்காணும் யாருமில்லை
விளக்கம்: ஒரு குடுவையில் சிறிய தகடோ அல்லது பெரிய தகடோ எதைச் சூடாக்கினாலும், நிறை இரண்டு கிராம் வரை மட்டுமே அதிகரிக்கிறது. இதன் மூலம் காற்றில் ஆக்ஸிஜனின் அளவு 20 சதவீதமாக இருக்க வேண்டும் என முடிவு செய்தார் லவாய்சியர்.
3) கீழ்க்காணும் கூற்றுகளில் நீரின் பண்புகளில் பொருந்தாதது எது?
A) ஒளிபுகும் தன்மை கொண்டது
B) சுவையுடையது
C) மணமற்றது
D) நிறமற்றது
விளக்கம்: நீர் என்பது ஒளிபுகும் தன்மை கொண்ட சுவையற்ற, மணமற்ற மற்றும் நிறமற்ற ஒரு வேதிப்பொருளாகும்.
4) Elements of Chemistry எனும் புத்தகம் கீழ்க்காணும் யாருடன் தொடர்புடையது?
A) பாய்லே
B) லவாய்சியர்
C) நியூட்டன்
D) மேரி அன்னே
விளக்கம்: 1789ஆம் ஆண்டு லாவாய்சியர் வெளியிட்ட Elements of Chemistry எனும் புத்தகம் தற்கால வேதியியலுக்கு அடிப்படையாக அமைந்தது. இவர் நவீன வேதியியல் புரட்சியை ஏற்படுத்தியவர் என போற்றப்படுகிறார்.
5) கூற்றுகளை ஆராய்க.
1. புவியில் காணப்படும் நீரில் 95 சதவீத நீரானது உப்புநீராகும்.
2. நன்னீரின் அளவு வெறும் 5 சதவீதம் ஆகும்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: புவியில் காணப்படும் நீரில் 97 சதவீத நீரானது உப்புநீராகும். நன்னீரின் அளவு வெறும் 3 சதவீதம் ஆகும். அவற்றிலும் ஒரு பகுதி துருவங்களில் பனிப்படிவுகள் மற்றும் பனியாறுகளாக உள்ளதனால் அந்நீரினை நம்மால் பயன்படுத்த இயலாது.
6) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க (நன்னீரின் பரவல் பற்றி).
A) துருவ பனிப்படிவுகள், பனியாறுகள் – 68.7 சதவீதம்
B) நிலத்தடி நீர் – 20.1 சதவீதம்
C) மற்ற நீர் ஆதாரங்கள் – 0.9 சதவீதம்
D) மேற்பரப்பு நீர் – 0.3 சதவீதம்
விளக்கம்: மொத்தம் 3 சதவீதம் உள்ள நன்னீரானது பின்வருமாறு பரவி உள்ளது.
துருவ பனிப்படிவுகள், பனியாறுகள் – 68.7 சதவீதம்
நிலத்தடி நீர் – 30.1 சதவீதம்
மற்ற நீர் ஆதாரங்கள் – 0.9 சதவீதம்
மேற்பரப்பு நீர் – 0.3 சதவீதம்
7) நீரானது ஹைட்ரஜனும், ஆக்ஸிஜனும் இணைந்து உருவானது என்று நிரூபித்தவர் யார்?
A) லவாய்சியர்
B) இராபர்ட் பாயில்
C) ஜே.ஜே. தாம்சன்
D) மேற்கண்ட யாருமில்லை
விளக்கம்: லவாய்சியர் நீரானது ஹைட்ரஜனும், ஆக்ஸிஜனும் இணைந்து உருவானது என நிரூபித்தார். இவர் காற்று ஓர் அடிப்படை பொருள் இல்லை. அது ஒரு கலவை என்று நிரூபித்தார்.
8) உலக நீர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
A) மார்ச் 22
B) மார்ச் 21
C) மார்ச் 23
D) மார்ச் 24
விளக்கம்: பொதுவாக வளிமண்டல அழுத்தத்தில் நீரானது 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பனிக்ட்டியாக உறைகிறது. ஒவ்வொரு வருடமும் மார்ச் 22ஆம் தேதி உலக நீர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
9) நன்னீரில் குறைந்தபட்சம்_______தொடங்கி அதிகபட்சமாக_______அளவுள்ள உப்புகள் கரைந்திருக்கும்.
A) 0.05-1
B) 0.5-1
C) 0.03-1
D) 0.5-1.5
விளக்கம்: நன்னீரில் குறைந்தபட்சம் 0.05 சதவீதம் தொடங்கி அதிகபட்சம் 1 அளவுள்ள உப்புகள் கரைந்திருக்கும்.
10) மனிதனின் மூளை எத்தனை சதவீதம் நீரினைக் கொண்டுள்ளது?
A) 75
B) 79
C) 94
D) 22
விளக்கம்: மனிதனின் மூளை 75 சதவீதம் நீரினைக் கொண்டுள்ளது. மூளையின் செல்கள் தான் உடலில் அதிக நீரினைக் கொண்ட பகுதியாகும்.
11) உவர்ப்பு நீரில் அதிகபட்சமாக________சதவீதம் வரையில் உப்புகள் கரைந்த நிலையில் இருக்கும்.
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: நன்னீரில் குறைந்தபட்சம் 0.05 சதவீதம் தொடங்கி அதிகபட்சமாக 1 சதவீத அளவுள்ள உப்புகள் கரைந்திருக்கும். உவர்ப்பு நீரில் அதிகபட்சமாக 3 சதவீதம் வரையில் உப்புகள் கரைந்த நிலையில் இருக்கும்.
12) காற்று ஒரு கலவை என்று நிரூபித்தவர் யார்?
A) இராபர்ட் பாயில்
B) சர் ஐசக் நியூட்டன்
C) நியூலாண்ட்
D) லவாய்சியர்
விளக்கம்: காற்று என்பது ஓர் அடிப்படை பொருள் அல்ல. அது நைட்ரஜன், ஆக்ஸிஜன், மந்த வாயுக்கள் உள்ளிட்ட வாயுக்களின் கலவை என்று நிரூபித்தவர் லவாய்சியர் ஆவார்.
13) நவீன வேதியியலில் புரட்சியை ஏற்படுத்தியவர் யார்?
A) இராபர்ட் பாயில்
B) சர் ஐசக் நியூட்டன்
C) நியூலாண்ட்
D) லவாய்சியர்
விளக்கம்: நவீன வேதியியல் புரட்சியை ஏற்படுத்தியவர் என்று அறியப்படுபவர் லவாய்சியர் ஆவார். இவர் காற்று ஒரு கலவை என்று நிரூபித்தார்.
14) கூற்றுகளை ஆராய்க.
1. பெரும்பாலான நீரானது, அதாவது 97 சதவீத நீரானது பெருங்கடல்களிலும், கடல்களிலும் காணப்படுகிறது.
2. புவியின் மொத்த பரப்பளவில் நான்கில் மூன்று பங்கு நீர் சூழ்ந்துள்ளது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: புவியின் மொத்த பரப்பளவில் நான்கில் மூன்று பங்கு நீர் சூழ்ந்துள்ளது. பெரும்பாலான நீரானது, அதாவது 97 சதவீத நீரானது பெருங்கடல்களிலும், கடல்களிலும் காணப்படுகிறது.
15) நீரின் கனஅளவை காலன் என்னும் அலகிலும் அளக்கலாம். ஒரு காலன் என்பது_________?
A) 3.795 லிட்டர்
B) 3.785 லிட்டர்
C) 4.785 லிட்டர்
D) 4.795 லிட்டர்
விளக்கம்: நீரின் கனஅளவை லிட்டர் மற்றும் மில்லி லிட்டர் போன்ற அலகுகளால் அளக்கலாம். காலன் என்பதும் நீரின் கன அளவினை அளக்கக் கூடிய அலகாகும். ஒரு காலன் என்பது 3.785 லிட்டர் ஆகும்.
16) நமது இதயம் எத்தனை சதவீதம் நீரினைக் கொண்டுள்ளது?
A) 79
B) 75
C) 68
D) 64
விளக்கம்: மனித இதயம் நான்கு அறைகளைக் கொண்டுள்ளது. இது 79 சதவீதம் நீரினைக் கொண்டுள்ளது.
17) அணைக்கட்டுகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு_______என்ற அலகால் அளக்கப்படுகிறது?
A) லிட்டர்
B) மில்லி லிட்டர்
C) டி.எம்.சி
D) கியூசக்
விளக்கம்: நீரின் கனஅளவை லிட்டர் மற்றும் மில்லி லிட்டர் போன்ற அலகுகளால் அளக்கலாம். காலன் என்பதும் நீரின் கன அளவினை அளக்கக் கூடிய அலகாகும். ஒரு காலன் என்பது 3.785 லிட்டர் ஆகும். நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அளவினை TMC/Foot என்ற அலகால் அளக்கப்படுகின்றது.
18) கல்லீரல் எத்தனை சதவீதம் நீரினைக் கொண்டுள்ளது?
A) 75
B) 79
C) 68
D) 64
விளக்கம்: மனிதனின் கல்லீரல் 68 சதவீதம் நீரினைக் கொண்டுள்ளது.
இதயம் – 79 சதவீதம் நீரினைக் கொண்டுள்ளது.
மூளை – 75 சதவீதம் நீரினைக் கொண்டுள்ளது.
மனித தோல் – 64 சதவீதம் நீரினைக் கொண்டுள்ளது.
19) ஹைட்ராலாஜிக்கல் சுழற்சியில் மூன்று நிலைகள் உள்ளன. இதில் பொருந்தாதது எது?
A) பனிபொழிதல்
B) மழைபொழிதல்
C) ஆவியாதல்
D) ஆவி சுருங்குதல்
விளக்கம்: நீரானது தூய்மைப்படுத்தப்படும் நிகழ்வு நீர் சுழற்சி என்கிறோம். இது ஒரு தொடர் நிகழ்வாகும். நீர் சுழற்சியானது மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது அவை ஆவியாதல், ஆவி சுருங்குதல் மற்றும் மழை பொழிதல் ஆகும். இந்த நீர் சுழற்சியினை நாம் ஹைட்ராலாஜிக்கல் சுழற்சி என்றும் அழைக்கிறோம்.
20) நீரிலுள்ள தொற்றுகளை நீக்கப் பயன்படுவது எது?
A) குளோரின்
B) அம்மோனியா
C) A மற்றும் B
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: குளோரின் மற்றும் அம்மோனியாவைப் பயன்படுத்தி நீரிலுள்ள தொற்றுகளை நீக்கலாம். நிலக்கரி, மணல், சரளை ஆகியவற்றைப் பயன்படுத்தி நீரினை வடிகட்டலாம்.
21) நீர் நிலைகள், கடலைச் சந்திக்கும் ஈர நிலங்களுக்கு_________என்று பெயர்
A) டெல்டா
B) ஈரநிலம்
C) கடற்கரை
D) சதுப்பு நிலம்
விளக்கம்: நீர் நிலைகள், கடலைச் சந்திக்கும் ஈர நிலங்களுக்கு முகத்துவாரம் என்று பெயர். இது நிலத்திலிருந்து நன்னீரும் கடலிலிருந்து உப்பு நீரும் சந்திக்கும் இடமாகும். சில தனித்தன்மையான தாவர மற்றும் விலங்கு வகைகளுக்கு உறைவிடமாக முகத்துவாரம் அமைகிறது.
22) தமிழ்நாட்டிலுள்ள சதுப்பு நிலங்கள் பற்றிய கீழ்க்காண்பவனவற்றில் தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
A) சிதம்பரம் – பிச்சாவரம்
B) பள்ளிக்கரணை – சென்னை
C) செம்பரபாக்கம் – காஞ்சிபுரம்
D) முத்துப்பேட்டை – விருதுநகர்
விளக்கம்: சதுப்பு நிலங்கள் என்பவை ஈரப்பதம் நிறைந்த காடுகள் ஆகும். தமிழ்நாட்டிலுள்ள சில சதுப்பு நிலக் காடுகள்:
சிதம்பரம் – பிச்சாவரம்
பள்ளிக்கரணை – சென்னை
செம்பரபாக்கம் – காஞ்சிபுரம்
முத்துப்பேட்டை – திருவாரூர்
23) சதுப்பு நிலங்கள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க.
1. சதுப்பு நில நீர் நன்னீராகவோ, உவர்ப்பு நீராகவோ அல்லது கடல் நீராகவோ இருக்கலாம்
2. உயிரினங்களுக்கு நன்னீரையும், ஆக்ஸிஜனையும் அளிப்பதில் சதுப்பு நிலங்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: ஈரப்பதம் நிறைந்த காடுகள் சதுப்பு நிலக் காடுகள் எனப்படும். அவை பெரிய ஆறுகளைச் சார்ந்தோ அல்லது பெரிய ஏரிகளின் கரைகளிலோ காணப்படும். சதுப்பு நில நீர் நன்னீராகவோ, உவர்ப்பு நீராகவோ அல்லது கடல் நீராகவோ இருக்கலாம். உயிரினங்களுக்கு நன்னீரையும், ஆக்ஸிஜனையும் அளிப்பதில் சதுப்பு நிலங்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன.
24) கூற்றுகளை ஆராய்க.
1. பொதுவான வளிமண்டல அழுத்தத்தில் நீரானது 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பனிக்கட்டியாக உறைகிறது.
2. ஒவ்வொரு வருடமும் மார்ச் 21-ம் தேதி உலக நீர் தினமாகக் கொண்டாடப்படுகிறது
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: பொதுவான வளிமண்டல அழுத்தத்தில நீரானது 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பனிக்கட்டியாக உறைகிறது. ஒவ்வொரு வருடமும் மார்ச் 22ஆம் தேதி உலக நீர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
25) இரும்புத்தகடை எரித்தபின் அதன் எடை முந்தைய எடையை விட அதிகமாக இருக்கிறது என்று கூறியவர் யார்?
A) பாய்லே
B) லவாய்சியர்
C) நியூட்டன்
D) மேரி அன்னே
விளக்கம்: இரும்புத்தகடை எரித்தபின் அதன் எடை முந்தைய எடையை விட அதிகமாக இருக்கிறது என்று முதலில் கண்டறிந்தவர் பாய்லே ஆவார். லவாய்சியர் பாய்லேவின் ஆய்வைத் துல்லியமாகச் செய்ய விரும்பினார்.
26) யார் வடிவமைத்த துல்லியமான அளவீட்டுக் கருவிகள் இல்லாமல் லவாய்சியர் ஆய்வுகளை மேற்கொண்ட இருக்க முடியாது?
A) பாய்லே
B) கோல்ஸ்டீன்
C) நியூட்டன்
D) மேரி அன்னே
விளக்கம்: லவாய்சியர் என்பது 1771ல் மேரி அன்னே என்பவரை மணந்து கொண்டார். மேரி அன்னே வடிவமைத்த துல்லியமான அளவீட்டுக் கருவிகள் இல்லாமல் லவாய்சியர் ஆய்வுகளை மேற்கொண்ட இருக்க முடியாது.
27) பாய்லேவின் ஆய்வைத் துல்லியமாக செய்து பொருளை ஆக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது என நிரூபித்தவர் யார்?
A) மேனி அன்னே
B) நியூட்டன்
C) பாஸ்டியர்
D) லவாய்சியர்
விளக்கம்: இரும்புத் தகடை எரித்தபின் அதன் எடை அதிகமாக இருக்கிறது என்று பாய்லே கூறினார். ஆனால், அதனைத் துல்லியமாக ஆராய்ந்த லவாய்சியர், ஒரு வேதிவினையில் ஆரம்பத்தில் பொருள்களின் நிறையும், இறுதியில் பொருள்களின் நிறையும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறினார்.. எனவே பொருள்களை ஆக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது. வேதிவினை கொண்டு பொருள்களின் வேதியமைப்பை நாம் மாற்றலாம்.
28) நீரின் கனஅளவை கீழ்க்காணும் எந்த அலகால் அளக்க முடியாது?
A) லிட்டர்
B) மில்லி லிட்டர்
C) காலன்
D) டி.எப்.சி
விளக்கம்: நீரின் கனஅளவை லிட்டர் மற்றும் மில்லி லிட்டர் போன்ற அலகுகளால் அளக்கலாம். காலன் என்பதும் நீரின் கன அளவினை அளக்கக் கூடிய அலகாகும். ஒரு காலன் என்பது 3.785 லிட்டர் ஆகும். நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அளவினை TMC/Feet என்ற அலகால் அளக்கப்படுகின்றது. அணைக்கட்டுகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு கியூசக் (கன அடி/விநாடி) என்ற அலகால் அளக்கப்படுகிறது
29) நாம் சுவாசித்தலானது மெதுவாக எரியும் நிகழ்விற்குச் சமமானது என்று கூறியவர் யார்?
A) பாய்லே
B) லவாய்சியர்
C) வில்லியம் ஹார்வி
D) மேரி அன்னே
விளக்கம்: சுவாசிக்கும் போது ஆக்ஸிஜனை உள்ளிழுத்து கார்பன்டை ஆக்சைடை வெளிவிடுகிறோம். துருப்பிடிக்கும்போதும், பொருள்கள் எரியும்போதும் இதேபோன்ற ஆக்சிஜனேற்றம்தான் நிகழ்கிறது எனவே நமது சுவாசித்தலானது மெதுவாக எரியும் நிகழ்விற்குச் சமமானது என லவாய்சியர் கூறினார்.
30) பூமியில் உள்ள மொத்த நன்னீரில் பெருமளவு நீர் கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?
A) உறைந்த நீர்
B) மேற்பரப்பு நீர்
C) கடல் நீர்
D) நிலத்தடி நீர்
விளக்கம்: துருவங்களில் உள்ள பனிப்படிவுகள் மற்றும் பனியாறுகளில் நீர் உறைந்த நிலையில் காணப்படும். பூமியில் உள்ள மொத்த நன்னீரில் பெருமளவு, அதாவது 68.7 சதவீதம் உறைந்த நிலையில் காணப்படுகிறது
31) கடல் நீரில் கீழ்க்காணும் எந்த உப்புகள் கரைந்திருக்கவில்லை?
A) சோடியம் குளோரைடு
B) மெக்னீசியம் குளோரைடு
C) கால்சியம் குளோரைடு
D) பொட்டாசியம் குளோரைடு
விளக்கம்: கடல் நீரில் 3 சதவீதத்திற்கு மேற்பட்ட அளவில் உப்புகள் கரைந்துள்ளன. கடல்நீரானது அதிகளவு கரைபொருள்களைக் கொண்டுள்ளது. சோடியம் குளோரைடு, மெக்னீசியம் குளோரைடு மற்றும் கால்சியம் குளோரைடு போன்ற உப்புகள் கடல்நீரில் கரைந்துள்ளன.
32) நீரில் கலந்துள்ள உப்பின் அளவினைப் பொறுத்து, நீரானது எத்தனை வகையாகப் பிரிக்கப்படுகிறது?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: நீரில் கரைந்துள்ள உப்பின் அளவினைப் பொறுத்து, நீரானது மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை, 1. நன்னீர், 2. உவர்ப்பு நீர், 3. கடல் நீர்.