Science Questions

6th Std Science Lesson Wise Questions in Tamil – Part 2

6th Science Lesson 9 Questions in Tamil

9] நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

1) நீரை வெப்பப்படுத்தி நீராவியாக மாற்றும் நிகழ்வு________எனப்படும்?

A) உருகுதல்

B) உறைதல்

C) ஆவியாதல்

D) ஆவி சுருங்குதல்

விளக்கம்: நீரை வெப்பப்படுத்தி நீராவியாக மாற்றும் நிகழ்வு ஆவியாதல் எனப்படும்.

2) கூற்றுகளை ஆராய்க.

1. பொருளின் ஆரம்ப நிலைக்கும் இறுதி நிலைக்கும் உள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடு – மாற்றம் எனப்படும்

2. விதை முளைத்தல் என்பது ஒரு மெதுவான மாற்றம் ஆகும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பொருளின் ஆரம்ப நிலைக்கும் இறுதி நிலைக்கும் உள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடு – மாற்றம் எனப்படும்.

2. விதை முளைத்தல் என்பது ஒரு மெதுவான மாற்றம் ஆகும்.

3) ஒரு திடப்பொருளை வெப்பப்படுத்தும் பொழுது திராவமாகாமல் நேரடியாக வாயு நிலைக்கு மாறுவது______எனப்படும்?

A) ஆவியாதல்

B) ஆவிசுருங்குதல்

C) பதங்கமாதல்

D) உறைதல்

விளக்கம்: ஒரு திடப்பொருளை வெப்பப்படுத்தும் பொழுது திராவமாகாமல் நேரடியாக வாயு நிலைக்கு மாறுவது பதங்கமாதல் எனப்படும். எ.கா கற்பூரம்.

4) கூற்று: நீர் ஒரு பொது கரைப்பான் ஆகும்.

காரணம்: அது பெரும்பாலான பொருட்களை கரைப்பதில்லை

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: நீர் ஒரு பொதுக் கரைப்பான் ஆகும். அது பெரும்பாலான பொருள்களை கரைக்கிறது.

5) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) பருவநிலை மாற்றம் – வேகமான மாற்றம்

B) பலூன் வெடித்தல் – மீள் மாற்றம்

C) பால் தயிராக மாறுதல் – மீளா மாற்றம்

D) இரும்பு துருப்பிடித்தல் – விரும்பத் தகாத மாற்றம்

விளக்கம்: பருவநிலை மாற்றம் – மெதுவான மாற்றம்

பலூன் வெடித்தல் – மீள் மாற்றம்

பால் தயிராக மாறுதல் – மீளா மாற்றம்

இரும்பு துருப்பிடித்தல் – விரும்பத் தகாத மாற்றம்.

6) பனிக்கட்டியை வெப்பப்படுத்தி நீராக மாற்றும் நிகழ்வு________என்று அழைக்கப்படுகிறது?

A) ஆவியாதல்

B) ஆவி சுருங்குதல்

C) உருகுதல்

D) உறைதல்

விளக்கம்: பனிக்கட்டியை வெப்பப்படுத்தி நீராக மாற்றுதல் என்பது உருகுதல் ஆகும். இது ஒரு மீள் மாற்றமாகும். நீரை மீண்டும் பனிக்கட்டியாக மாற்றலாம்.

7) சரியான சமன்பாட்டைத் தேர்வு செய்க.

A) கரைபொருள்+கரைசல்🡪கரைப்பான்

B) கரைபொருள்+கரைப்பான்🡪கரைசல்

C) கரைப்பான்+கரைசல்🡪கரைபொருள்

D) மேற்கண்ட எதுவுமில்லை.

விளக்கம்: திண்மத் துகள்கள் தனித்தனி மூலக்கூறுகளாகப் பிரிக்கப்பட்டு, நீர்ம மூலக்கூறுகளுக்கு இடையே விரிவுதலை நாம் கரைதல் என்கிறோம். கரைபொருள்+கரைப்பான்🡪கரைசல் என்ற சமன்பாடே சரியாகும்.

8) கூற்றுகளை ஆராய்க.

1. கரைப்பான் என்பது கரைபொருளைக் கரைக்கக் கூடியது.

2. கரைபொருள் என்பது கரைப்பானில் கரையக் கூடியது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: திண்மத் துகள்கள் தனித்தனி மூலக்கூறுகளாகப் பிரிக்கப்பட்டு, நீர்ம மூலக்கூறுகளுக்கு இடையே விரவுதலை நாம் கரைதல் என்கிறோம்.

1. கரைப்பான் என்பது கரைபொருளைக் கரைக்கக் கூடியது.

2. கரைபொருள் என்பது கரைப்பானில் கரையக் கூடியது.

கரைபொருள்+கரைப்பான்🡪கரைசல்

9) வெட்டிவைக்கப்பட்ட ஆப்பிளில் நிகழும் மாற்றம் எது?

A) இயற்பியல் மாற்றம்

B) வேதியியல் மாற்றம்

C) இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றம்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: ஆப்பிள் வெட்டியதால் அதன் உருவளவு மாறும். இது இயற்பயில் மாற்றம் ஆகும்.

வெட்டப்பட்ட ஆப்பிளை சிறிது நேரம் வைத்திருந்தால் அதன் மேல் பழுப்பு நிறத் திட்டுகள் தோன்றும். இது ஆப்பிள் பழத்திலுள்ள சில பொருள்கள் காற்றுடன் வினைபுரிவதால் ஏற்பட்ட மாற்றமே ஆகும். இது வேதியியல் மாற்றம் ஆகும்.

10) இயற்பியல் மாற்றம் பற்றிய கூற்றுகளை ஆராய்க

1. ஒரு தற்காலிக மாற்றம்

2. புதிய பொருட்கள் எதுவும் உருவாவதில்லை

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ஒரு தற்காலிக மாற்றம்

2. புதிய பொருட்கள் எதுவும் உருவாவதில்லை

இயற்பியல் பண்புகளில் மட்டுமே மாற்றம் ஏற்படும்.

11) இயற்பியல் மாற்றங்கள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க

1. நீரை வெப்பப்படுத்தும் போது ஆற்றல் அளிக்கப்படுகிறது.

2. நீரை குளிர்விக்கும் போது ஆற்றல் வெளியேற்றப்படுகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: நீரானது திட, திரவ மற்றும் வாயு நிலைகளில் உள்ளது. வெப்பப்படுத்துதல் மூலமோ அல்லது குளிவித்தல் மூலமோ இந்நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

1. நீரை வெப்பப்படுத்தும் போது ஆற்றல் அளிக்கப்படுகிறது

2. நீரை குளிர்விக்கும் போது ஆற்றல் வெளியேற்றப்படுகிறது.

12) கீழ்க்கண்டவற்றில் எது இயற்பியல் மாற்றம் அல்ல?

A) பனிக்கட்டி உருகுதல்

B) உப்பு அல்லது சர்க்கரையினை கரைசலாக்குவது

C) இரப்பர் வளையத்தினை இழுத்தல்

D) இரும்பு துருப்பிடித்தல்

விளக்கம்: இயற்பியல் மாற்றம் என்பது ஒரு தற்காலிக மாற்றம் ஆகும். ஒரு பொருளின் வேதியியல் இயைபு மாறாமல் அதன் இயற்பியல் பண்புகளில் மட்டுமே மாற்றங்கள் நிகழ்வது இயற்பியல் மாற்றங்கள் ஆகும். இங்கு புதிய பொருள் எதுவும் உருவாவது இல்லை.

மேற்கண்டவற்றுள் இரும்பு துருப்பிடித்தல் என்பது இயற்பியல் மாற்றம் அல்ல.

13) உறைதல் என்பது கீழ்க்கண்ட எதைக் குறிக்கிறது?

A) நீரை குளிர்வித்து பனிக்கட்டியாக மாற்றுதல்

B) நீராவியை குளிர்வித்து நீராக மாற்றுதல்

C) நீரை வெப்பப்படுத்தி நீராவியாக மாற்றுதல்

D) பனிக்கட்டியை வெப்பப்படுத்தி நீராக மாற்றுதல்

விளக்கம்: நீரை குளிர்வித்து பனிக்கட்டியாக மாற்றுதல் – உறைதல்

நீராவியை குளிர்வித்து நீராக மாற்றுதல் – ஆவி சுருங்குதல்

நீரை வெப்பப்படுத்தி நீராவியாக மாற்றுதல் – ஆவியாதல்

பனிக்கட்டியை வெப்பப்படுத்தி நீராக மாற்றுதல் – உருகுதல்

14) பனிக்கட்டி நீராக உருகும்போது ஏற்படும் மாற்றம்_______ஆகும்.

A) இட மாற்றம்

B) நிற மாற்றம்

C) நிலை மாற்றம்

D) இயைபு மாற்றம்

விளக்கம்: பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்வு உருகுதல் எனப்படும். பனிக்கட்டியை வெப்பப்படுத்தும் போது நீராக மாற்றலாம். இது ஒரு நிலை மாற்றம் ஆகும்.

15) பால் தயிராக மாறுவது ஒரு________ஆகும்.

A) மீள் மாற்றம்

B) வேகமான மாற்றம்

C) மீளா மாற்றம்

D) விரும்பத்தகாத மாற்றம்

விளக்கம்: சில மாற்றங்கள் நிகழும்போது, மாற்றமடைந்த பொருள்கள் மீண்டும் தங்களின் பழைய நிலைக்குத் திரும்பமுடியாது. அதாவது மீண்டும் ஆரம்பநிலைப் பொருள்களை பெற முடியாது. அவ்வகை மாற்றம் மீளா மாற்றம் என்றழைக்கப்படும்.

பால் தயிராக மாறுவது ஒரு மீளா மாற்றம் ஆகும்.

16) கீழுள்ளவற்றில் விரும்பத்தக்க மாற்றம் எது?

A) துருப்பிடித்தல்

B) பருவநிலை மாற்றம்

C) நில அதிர்வு

D) வெள்ளப்பெருக்கு

விளக்கம்: மேற்கூறியவற்றுள் பருவநிலை மாற்றம் மட்டுமே விரும்பத்தக்க மாற்றமாகும். மற்றவை விரும்பத்தகாத மாற்றம் ஆகும்.

17) காற்று மாசுபாடு, அமில மழைக்கு வழிவகுக்கும், இது ஒரு____________ஆகும்?

A) மீள் மாற்றம்

B) வேகமான மாற்றம்

C) இயற்கையான மாற்றம்

D) மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்

விளக்கம்: மனிதன் தன் விருப்பத்திற்காக ஏற்படுத்தும் மாற்றங்கள் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் அல்லது செயற்கையான மாற்றங்கள் எனப்படும். இத்தகைய மாற்றங்கள் தன்னிச்சையாக நிகழாது.

காற்று மாசுபடுதல் என்பது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் ஆகும்.

18) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) பால் தயிராதல் – மீளா மாற்றம்

B) ஒளிச்சேர்க்கை – விரும்பத்தகாத மாற்றம்

C) குளுக்கோஸ் கரைதல் – மீள் மாற்றம்

D) உணவு சமைத்தல் – விரும்பத்தக்க மாற்றம்

விளக்கம்: பால் தயிராதல் – மீளா மாற்றம்

ஒளிச்சேர்க்கை – விரும்பத்தக்க மாற்றம்

குளுக்கோஸ் கரைதல் – மீள் மாற்றம்

உணவு சமைத்தல் – விரும்பத்தக்க மாற்றம்.

1 2 3 4 5 6 7 8 9Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!