Tnpsc

5th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

5th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 5th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

5th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. வானூர்தி நிலைய சேவை தரத்திற்காக பன்னாட்டு வானூர்தி நிலைய குழும விருதை வென்ற இந்திய வானூர்தி நிலையம் எது?

அ) மும்பை பன்னாட்டு வானூர்தி நிலையம்

ஆ) தில்லி பன்னாட்டு வானூர்தி நிலையம்

இ) கொச்சின் பன்னாட்டு வானூர்தி நிலையம்

ஈ) சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்

  • கொச்சின் பன்னாட்டு விமான நிலையமானது விமான நிலைய சேவை தரத்திற்காக பன்னாட்டு விமான நிலைய குழுமத்தின் தலைமை இயக்குநரிடமிருந்து சிறப்பு விருதை வென்றது. விமான நிலைய சேவை தர ஆய்வில், தொடர்ச்சியாக சிறந்த சேவைகளை வழங்கிய வானூர்தி நிலையங்கள், பயணிகளின் கருத்தின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட் -டு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றன.

2. உலகின் முதல் பிரத்தியேக ‘விரைவு இரயிலுக்கான பசுமை மதிப்பீட்டு முறை’யை அறிமுகப்படுத்தியுள்ள நாடு எது?

அ) அமெரிக்கா

ஆ) இந்தியா

இ) இஸ்ரேல்

ஈ) ஜப்பான்

  • விரைவு இரயிலுக்கான உலகின் முதல் பிரத்தியேக பசுமை மதிப்பீட்டு முறையை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. CII-இந்திய பசுமை கட்டட கவுன்சிலானது IGBC பசுமை விரைவு இரயில் மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. IGBC ஆனது தேசிய விரைவு இரயில் கழகத்துடன் ஒத்துழைத்துள்ளது. இந்த மதிப்பீட்டு முறை, புதிய விரைவு இரயில் நிலையங்களை அவற்றின் செயல்பாடுகளின்போது ஆற்றல் திறமையான கருத்தாக்கங்களைப் பயன்படுத்துவதற்கு உதவும்.

3. NFSA பயனாளிகளுக்கு கூடுதல் உணவு-தானியங்களை வழங் -கும் பின்வரும் எந்தத் திட்டம், நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது?

அ) பிரதமர் கிஸான்

ஆ) பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா

இ) பிரதமர் ஆத்ம நிர்பார் யோஜனா

ஈ) PM உணவு தானிய யோஜனா

  • பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தை 2021 ஜூலையிலிருந்து 2021 நவம்பர் மாதம் வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டம் (கட்டம் – 4) கீழ், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் அதிகபட்சம் 81.35 கோடி பயனாளிகளுக்கு ஜூலை முதல் நவம்பர் வரை ஒரு மாதத்திற்கு ஐந்து கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும்.

4. ஓர் அண்மைய ஆய்வின்படி, உலகில் பல்வேறு வகையிலான பட்டாம்பூச்சிகள் காணப்படும் நாடு எது?

அ) கொலம்பியா

ஆ) பிஜி

இ) பப்புவா நியூ கினியா

ஈ) நியூசிலாந்து

  • இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் வெளியிட்டுள்ள ஓர் அண்மைய ஆய்வின்படி, பல்வேறு வகையிலான பட்டாம்பூச்சிகளின் தாயகமாக கொலம்பியா உள்ளது. தென்னமெரிக்க நாட்டில் அறியப்பட்ட அனைத்து உயிரினங்களிலும் சுமார் 20% பட்டாம்பூச்சிகளாக உள்ளன. சர்வதேச அறிவியலாளர்கள் குழு, “கொலம்பிய பட்டாம்பூச்சிகளின் சரிபார்ப்பு பட்டி -யல்” என்ற தலைப்பில் ஆவணமொன்றைத் தயாரித்தது.
  • கொலம்பியாவில் மட்டும் இருநூற்றுக்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி இனங்கள் காணப்படுகின்றன.

5. NASA’இன் ரோபோட்டிக் உலங்கு வானூர்தியான இஞ்செனுயிட்டி, எந்த வான் பொருளில் இயங்கி வருகிறது?

அ) நிலா

ஆ) செவ்வாய்

இ) வெள்ளி

ஈ) வியாழன்

  • அமெரிக்க விண்வெளி ஆய்வு முகமையின் ‘மார்ஸ் 2020’ திட்டத்தின் ஒருபகுதியாக செவ்வாய்க்கோளில் இயங்கும் NASA’இன் சிறு ரோபோ உலங்கு வானூர்திதான் ‘இஞ்செனுயிட்டி’.
  • இந்த உலங்கு வானூர்தி, எட்டாவது முறையாக, செவ்வாய்க்கோளில் ஒரு புதிய இடத்தில் தரையிறங்கியது. அதன்சமயம், 160 மீட்டர் தெற்கே ஒரு புதிய இடத்திற்கு அந்த உலங்கு வானூர்தி பறந்துசென்றது.

6. பசுமை ஹைட்ரஜன் முன்னெடுப்புகள்குறித்த BRICS உச்சிமாநா -ட்டை நடத்தவுள்ள நாடு எது?

அ) இந்தியா

ஆ) ரஷ்யா

இ) பிரேஸில்

ஈ) சீனா

  • இந்திய அரசுக்கு சொந்தமான NTPC லிட், பசுமை ஹைட்ரஜன் முன்னெ -டுப்புகள் குறித்த இரண்டு நாள் உச்சிமாநாட்டைத் தொகுத்து வருகிறது. இந்த நிகழ்வில், BRICS நாடுகளின் பங்கேற்பு அடங்கும்.
  • இவ்வுச்சிமாநாடு, உலகநாடுகளின் பசுமை ஹைட்ரஜன் முன்னெடுப்பு -களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு தளத்தை உருவாக்குகிறது. மேலும், பசுமை ஆற்றலை அடுத்த கட்டங்களுக்கு கொண்டுசெல்ல ஒரு விரிவான செயல்திட்டங்களை முன்வைக்கிறது.

7. ‘குழந்தைகள் மற்றும் ஆயுத மோதல்கள்’ குறித்த வருடாந்திர அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ) ஐநா

ஆ) யுனெஸ்கோ

இ) யுனிசெஃப்

ஈ) ஐ.யூ.சி.என்

  • சிறார்கள் & ஆயுத மோதல்கள் குறித்து ஐநா தலைவர் அன்டோனியோ குடரெஸ், பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்பிய ஆண்டு அறிக்கையின்படி, கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பல்வேறு மோதல்களில் 8,500’க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
  • சோமாலியா, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில், கடந்த 2020’ஆம் ஆண்டில் அதிக விதி மீறல்கள் நடந்துள்ளன.

8. உலக இசை நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ) ஜூன்.20

ஆ) ஜூன்.21

இ) ஜூன்.22

ஈ) ஜூன்.23

  • ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.21 அன்று உலக இசை நாள் கொண்டாடப்ப -டுகிறது. இந்த நாள், முதன்முதலில், 1982ஆம் ஆண்டில் பிரான்ஸில் கொண்டாடப்பட்டது. கோடை கதிர்த்திருப்ப நிலையுடன் இந்த நாள் ஒத்துப்போகிறது. மேலும், மக்களை, இசைகேட்டு மகிழ்வடையச் செய்வ -தையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

9. செய்திகளில் நம்பகத்தன்மையின் அடிப்படையில், ‘டிஜிட்டல் செய்தி அறிக்கை – 2021’இல் இந்தியாவின் தரநிலை என்ன?

அ) 11

ஆ) 21

இ) 31

ஈ) 41

  • டிஜிட்டல் செய்தி அறிக்கையின் 10ஆம் பதிப்பை, ராய்ட்டர்ஸ் நிறுவனம், பத்திரிகை ஆய்வுக்காக வெளியிட்டுள்ளது. செய்தி நுகர்வில் COVID-19 தொற்றின் தாக்கத்தை இது விவரிக்கிறது. இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, நைஜீரியா, கொலம்பியா மற்றும் பெரு உட்பட 6 கண்டங்கள் மற்றும் 46 சந்தைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையி -ல் இந்த அறிக்கை தொகுக்கப்பட்டுள்ளது. செய்தி மீதான நம்பிக்கையின் அடிப்படையில், 46 நாடுகளுள் இந்தியா 31ஆவது இடத்தில் உள்ளது.

10. ‘துளிர் நிறுவனங்கள் மற்றும் இடர் நிதியளிப்புபற்றிய ஆராய்ச்சி மையத்’தை (CREST) அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம் எது?

அ) IIT சென்னை

ஆ) IIT மும்பை

இ) IIT ஆமதாபாத்

ஈ) IIT பெங்களூரு

  • இந்திய தொழில்நுட்ப நிறுவனம் – சென்னை, ‘துளிர் நிறுவனங்கள் & இடர் நிதியளிப்புபற்றிய ஆராய்ச்சி மையத்’தை அறிமுகப்படுத்தியுள்ளது. உயர்தர ஆராய்ச்சியில் ஈடுபடுவதில் உள்ள பெரும் இடையூறுகளை எதிர்கொள்வதற்காக இது இந்திய துளிர்நிறுவன நிலைகளில் ஒரு தரவு களஞ்சியத்தை உருவாக்கும்.
  • ஆராய்ச்சியாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும் அணுகக்கூடியதாக இருக்கும் இந்தத் தகவல்கள் சர்வதேச வெளியீடுகளுக்கு வழிவகுக்கும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1.அனைவருக்கும் எழுத்தறிவு அளிக்கும் ‘நிபுண் பாரத் திட்டம்’ தொடக்கம்

2020ஆம் ஆண்டின் தேசியக் கல்வி கொள்கையின் ஓர் அங்கமாக, நாட்டில் அனைத்துக் குழந்தைகளுக்கும் எழுத்தறிவு வழங்கும் ‘நிபுண் பாரத்’ திட்டம் ஜூலை.5 அன்று தொடங்கி வைக்கப்படுகிறது.

மத்திய கல்வித்துறையின்கீழ் உள்ள பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் புரிதலுடன் வாசிப்பதிலும், எண்ணறிவில் போதிய தகுதியைப் பெறுவதற்கு ஏதுவாக ‘நிபுண் பாரத்’ என்கிற திட்டத்தை இயக்கமாக அறிமுகப்படுத்தவிருக்கிறது.

நாட்டில் 3 வயது முதல் 11 வயது வரையில் சுமார் 5 கோடி குழந்தைகள் உள்ளன. இதை முன்னிட்டு 2026-27ஆம் ஆண்டிற்குள் மூன்றாம் வகுப்பை நிறைவுசெய்வதற்குள் ஒவ்வொரு குழந்தையும் புரிதலுடனான எழுத்து வாசிப்பிலும், எண்ணறிவில் போதிய தகுதியைப் பெறுவதற்கும் ஏதுவாக, அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெறுவதற்கான சூழலியலை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த இயக்கம் தொடங்கப்படுகிறது.

இத்திட்டம், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தேசிய- மாநில-மாவட்ட-வட்டார-பள்ளிகள் ஆகிய ஐந்து நிலைகளில் மத்திய அரசின் ‘சமக்ரா ஷிக்ஷா’ திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படுகிறது.

2. வெப்ப அலை தாக்குதல்: ஐம்பது ஆண்டுகளில் 17,000 பேர் பலி; ஆய்வறிக்கையில் தகவல்

இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட வெப்ப அலை தாக்குதல் சம்பவங்களில் 17,000’க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக, ஓர் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலர் M இராஜீவன் தலைமையிலான அறிவியலாளர்கள் குழு இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்தியாவில் கடந்த 1971 முதல் 2019 வரையிலான 50 ஆண்டுகளில் மோசமான வானிலை காரணமாக நிகழ்ந்த விபத்துகளால் 1,41,308 பேர் உயிழந்திருக்கிறார்கள். அவர்களில், வெப்ப அலைதாக்குதல் காரணமாக மட்டும் 17,362 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இது மொத்த உயிரிழப்பில் 12 சதவீதமாகும். 2019 வரையிலான 50 ஆண்டுகளில் மொத்தம் 706 வெப்ப அலை தாக்குதல் சம்பவங்கள் இந்தியாவில் நடந்துள்ளன.

வெப்ப அலை தாக்குதலால், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, ஒடிஸா ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. பஞ்சாப், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், தில்லி, ஹரியானா, இராஜஸ்தான், உத்தரபிரதேசம், குஜராத், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிஸா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா மாநிலங்களில் மே மாதங்களில் அடிக்கடி வெப்ப அலை தாக்குதல் நிகழ்கின்றன.

வட இந்திய சமவெளிப் பகுதியிலும், மலைப் பகுதியிலும் வெப்ப அலை தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுகின்றன. கடந்த வாரம் சமவெளிப் பகுதியில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக இருந்தது. மோசமான வானிலையால் ஏற்படும் விபத்துகளில் வெப்ப அலை தாக்குதல், மின்னல் தாக்குதல் ஆகியவற்றால்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. Which Indian airport has won the Airport Council International’s (ACI) honour for Airport Service Quality?

A) Mumbai International Airport

B) Delhi International Airport

C) Cochin International Airport

D) Chennai International Airport

  • The Cochin International Airport Ltd (CIAL) won the Airport Council International’s (ACI) Director General’s Roll of Excellence honour for Airport Service Quality.
  • Those airports which have consistently delivered excellent services in the Airport Service Quality Survey, in the opinion of the passengers, are provided with the Roll of Excellence recognition by ACI.

2. Which country has launched the world’s first exclusive ‘Green rating system for High–Speed Rail’?

A) USA

B) India

C) Israel

D) Japan

  • India has launched the world’s first exclusive green rating system for High–Speed Rail. CII–Indian Green Building Council has launched the IGBC Green High–Speed Rail Rating System. IGBC has collaborated with the National High Speed Rail Corporation Ltd (NHSRCL).
  • This rating system will enable new High–Speed Rail (HSR) stations to apply energy efficient concepts during operations.

3. Which scheme of providing additional food–grain to NFSA beneficiaries, has been extended till November?

A) PM KISAN

B) PM Garib Kalyan Yojana

C) PM Atmanirbhar Yojana

D) PM Food grain Yojana

  • The cabinet has recently approved further allocation of additional foodgrain to National Food Security Act (NFSA) beneficiaries under Pradhan Mantri Garib Kalyan Yojana (Phase IV) till November.
  • Under the scheme, the government will provide 5 kg foodgrains per person per month free of cost to maximum 81.35 crore beneficiaries covered under National Food Security Act (NFSA), including those covered under Direct Benefit Transfer (DBT).

4. Which country is home to the world’s largest variety of butterflies, as per a recent study?

A) Colombia

B) Fiji

C) Papua New Guinea

D) New Zealand

  • As per a recent study published by the Natural History Museum, Colombia is home to the world’s largest variety of butterflies. The South American country has approximately 20% of all known species.
  • An international team of scientists prepared a document titled “Checklist of Colombian Butterflies.” Over 200 butterfly species are found only in Colombia

5. Ingenuity, the NASA’s robotic helicopter, operating on which astronomical body?

A) Moon

B) Mars

C) Venus

D) Jupiter

  • Ingenuity, the NASA’s small robotic helicopter operating on the Mars, as a part of the Mars 2020 Mission of the American Space Agency. The helicopter completed its eighth flight to land on another new location. In its latest flight, Ingenuity flew 160 meters south to a new location, previously not surveyed by the helicopter or the Perseverance rover.

6. Which country plays host to the BRICS summit on Green Hydrogen initiatives?

A) India

B) Russia

C) Brazil

D) China

  • India’s state–owned power sector major NTPC Ltd is anchoring a two–day summit on Green Hydrogen initiatives. The event would involve participation from BRICS nations.
  • This summit creates a platform to share Green Hydrogen initiatives by the nations across the globe and present detailed road maps to take green energy to the next levels. The event is proposed to be held in a virtual format.

7. Which organisation released the ‘Annual report on children and armed conflict’?

A) UN

B) UNESCO

C) UNICEF

D) IUCN

  • As per the UN chief Antonio Guterres’ annual report to the Security Council on children and armed conflict, more than 8,500 children were used as soldiers last year in various conflicts across the world. The most violations in 2020 were committed in Somalia, Democratic Republic of the Congo, Afghanistan, Syria and Yemen.

8. When is World Music Day observed every year?

A) June.20

B) June.21

C) June.22

D) June.23

  • Every year, the 21st of June is celebrated as World Music Day. This day was first celebrated in the year 1982 in France. The day coincides with the summer solstice and is aimed to bring people out on the streets and enjoy themselves listening to the music.

9. What is the rank of India in the ‘Digital News Report 2021’, on levels of overall trust in news?

A) 11

B) 21

C) 31

D) 41

  • The 10th edition of Digital News Report for the year 2021 has been released by Reuters Institute for the Study of Journalism. It details the impact of COVID 19 pandemic on news consumption across the globe.
  • The report has been compiled based on the data collected from six continents and 46 markets, which includes India, Indonesia, Thailand, Nigeria, Colombia, and Peru for the first time. India ranked 31 out of 46 countries on levels of trust in news.

10. Which institution has launched a ‘Centre for research on start–ups and risk financing’ (CREST)’?

A) IIT Chennai

B) IIT Mumbai

C) IIT Ahmedabad

D) IIT Bengaluru

  • Indian Institute of Technology Madras launched a ‘Centre for research on start–ups and risk financing’ (CREST)’. It would also create a data repository on Indian start–ups to address a major hurdle for engaging in high–quality research.
  • This information would be made accessible for researchers and policymakers that can result in international publications.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!