TnpscTnpsc Current Affairs

5th & 6th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

5th & 6th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 5th & 6th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

February Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. மிகப்பெரிய கச்சா எண்ணெய் கசிவுக்குப் பிறகு, எந்த நாடு, 90 நாள் “சுற்றுச்சூழல் அவசரநிலை” அறிவித்தது?

அ) அர்ஜென்டினா

ஆ) பெரு 

இ) ஆஸ்திரேலியா

ஈ) கனடா

  • 6,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெய் கடலில் கசிந்ததை அடுத்து, சேதமடைந்த கடலோரப் பகுதிகளில் 90 நாள் “சுற்றுச்சூழல் அவசரநிலையை” பெருவிய அரசாங்கம் அறிவித்தது. ஸ்பானிய எரிசக்தி நிறுவனமான ரெப்சோலு -க்குச் சொந்தமான “மேர் டோரிகம்” டேங்கர் 9,65,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெயைக் கொண்டு சென்ற லா பாம்பிலா சுத்திகரிப்பு நிலையத்தில் இச்சம்பவம் நிகழ்ந்து உள்ளது. இக்கசிவு கடல்வாழ உயிரிகளின் இறப்பிற்கு காரணமாக அமைந்தது.

2. “தேசிய பெண் குழந்தைகள் நாள்” கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) ஜனவரி 24 

ஆ) ஜனவரி 25

இ) ஜனவரி 26

ஈ) ஜனவரி 27

  • இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஜன.24 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு முன்னெடுப்பாகும். இது இந்தியப் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்புகளை வழங்குவதற்குமாக கொண்டாடப்படுகிறது.

3. சையத் மோடி சர்வதேச போட்டியில் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை யார்?

அ) பி வி சிந்து 

ஆ) சாய்னா நேவால்

இ) அஷ்மிதா சாலிஹா

ஈ) மாளவிகா பன்சோட்

  • சையத் மோடி சர்வதேச போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் முதல் நிலை வீராங்கனையான சிந்து 21-13, 21-16 என்ற செட் கணக்கில் மாளவிகா பன்சோட்டை தோற்கடித்தார்.
  • சையத் மோடி சர்வதேச போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியானது, இறுதிப்போட்டியாளர்களில் ஒருவருக்கு COVID பாசிட்டிவ் என அறிவிக்கப்பட்டதால், ‘போட்டி இல்லை’ என அறிவிக்கப்பட்டது.

4. சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை ‘தேஷ் நாயக் திவாஸ்’ எனக் கொண்டாடுகிற மாநிலம் எது?

அ) மேற்கு வங்காளம் 

ஆ) பஞ்சாப்

இ) மகாராஷ்டிரா

ஈ) நாகாலாந்து

  • கடந்தஆண்டு, S C போஸின் பிறந்தநாளை ‘பராக்கிரம திவாஸ்’ (வீரத்தின் நாள்) எனக் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்தது. மேற்கு வங்காளத்தில் அந்த நாள் ‘தேஷ் நாயக் திவாஸ்’ (தேச நாயகனின் நாள்) என்று அனுசரிக்கப்படும் என்று அம்மாநிலம் அறிவித்தது.
  • ‘நேதாஜி’ SC போசின் ஹாலோகிராம் சிலையை இந்தியா கேட்டில் பிரதமர் திறந்து வைத்தார். இந்த ஆண்டு (2022) நேதாஜியின் 125ஆவது பிறந்தநாளாகும்.

5. ‘G20 மக்கள் காலநிலை வாக்கு-2021 அறிக்கையை’ வெளியிட்ட நிறுவனம் எது?

அ) UNFCCC

ஆ) UNDP 

இ) UNEP

ஈ) WEF

  • அண்மையில் ஐநா வளர்ச்சித்திட்டத்தால் (UNDP) வெளியிடப்பட்ட “G20 People’s Climate Vote – 2021” என்ற அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள 67 சதவீத இளைஞர்கள் காலநிலை நெருக்கடியை ‘உலகளாவிய அவசரநிலை’ என்று கருதுகின்றனர்.
  • அவசரக்கொள்கை உருவாக்கம் மற்றும் மாற்றத்தின் அவசியம் குறித்தும் இளைஞர்கள் குரல் கொடுக்கின்றனர். அதேசமயம், பருவநிலை மாற்றத்தை உலகளாவிய அவசரநிலையாகக்கருதும் வயதுவந்தோருள் இந்தியாவி -ல் 58 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர்.

6. நேதாஜி ஆராய்ச்சி பணியகத்தால் 2022ஆம் ஆண்டுக் -கான ‘நேதாஜி விருது’, கீழ்காணும் எந்த முன்னாள் பிரதமருக்கு வழங்கப்பட்டது?

அ) டொனால்டு டிரம்ப்

ஆ) மன்மோகன் சிங்

இ) ஷின்சோ அபே 

ஈ) தெரசா மே

  • சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு நேதாஜி ஆராய்ச்சி பணியகத்தால் 2022 – நேதாஜி விருது வழங்கப்பட்டது. முன்னாள் பிரதமர் சின்சோ அபே சார்பில் கொல்கத்தாவில் உள்ள ஜப்பான் தூதரக அதிகாரி நகாமுரா யுடகா இந்த விருதினைப் பெற்றுக்கொண்டார்.

7. பண்டிட் ஜஸ்ராஜுடன் தொடர்புடைய துறை எது?

அ) இலக்கியம்

ஆ) சாஸ்திரிய சங்கீதம் 

இ) கதக்

ஈ) ஓவியம்

  • மேவதி கரானாவைச் சேர்ந்த பண்டிட் ஜஸ்ராஜ் (1930-2020) ஓர் இந்திய பாரம்பரிய பாடகர் ஆவார். சமீபத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பண்டிட் ஜஸ்ராஜ் கலாச்சார அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இது தேசிய பாரம்பரியம், கலை மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்கும் மற்றும் மேம்படுத்தும் நோக்கத்துடன் அமைக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும்.

8. உலகின் மிகப்பெரிய பவளப்பாறை அமைப்பான ‘பெருந்தடுப்புப்பவளப்பாறை’ அமைந்துள்ள நாடு எது?

அ) ஆஸ்திரேலியா 

ஆ) ரஷ்யா

இ) ஜப்பான்

ஈ) அமெரிக்கா

  • ‘பெருந்தடுப்புப்பவளப்பாறை’ என்பது ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய பவளப்பாறை அமைப்பபாகும். ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ‘பெருந்தடுப்புப்பவளப்பாறையைப்’ பாதுகாக்க மேலும் ஒரு பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் நிதியை ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார்.
  • புவிவெப்பமடைதலால் இந்தப் பாறைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக ஆஸி. அரசாங்கம் தெரிவித்துள்ளது.

9. எரிசக்தி பாதுகாப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒத்துழைக்க ஒப்புக்கொண்ட நாடு எது?

அ) அமெரிக்கா 

ஆ) ஆஸ்திரேலியா

இ) இந்தியா

ஈ) ஜப்பான்

  • அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் ஐரோப்பாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க ஒத்துழைக்க உறுதியளித்தனர்.
  • உக்ரைனின் எல்லையில் துருப்புக்களை இரஷ்யா பலப்ப -டுத்தியதால் ஏற்பட்ட மோதலுக்கு மத்தியில் அவர்கள் ஒரு கூட்டு ஒத்துழைப்பு அறிக்கையை வெளியிட்டனர். ஐரோப்பிய ஒன்றியம் அதன் எரிவாயு விநியோகத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு ரஷ்யாவைச் சார்ந்துள்ளது.

10. நடப்பு 2022ஆம் ஆண்டு நிலவரப்படி, உலக எஃகு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடு எது?

அ) இந்தியா

ஆ) சீனா 

இ) அமெரிக்கா

ஈ) ஆஸ்திரேலியா

  • உலக எஃகு சங்கத்தின் கூற்றுப்படி, 2021ஆம் ஆண்டில் இந்தியாவின் கச்சா எஃகு உற்பத்தி 18% அதிகரித்து 118 மில்லியன் டன்னாக (MT) உள்ளது. இந்தியா 2020’இல் 100.3 MT எஃகு உற்பத்தி செய்து உலகின் இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. சீனா 1064.7 MT எஃகு உற்பத்தி செய்து உலகின் மிகப்பெரிய எஃகு உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. சீனா, 2021இல் 1032.8 MTஆக 3 சதவீதம் சரிவைப் பதிவுசெய்தது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தொழில்-வணிக பயன்பாட்டுக்கு நிலங்கள்: இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

தொழில் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கு நிலங்களை உபயோகிக்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

முன்னதாக, காகிதங்களின் வழியே விண்ணப்பிக்கும் முறை அமலில் இருந்தது. இப்போது இணையதளத்தின் வழி (https://edistricts.tn.gov.in/) விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இதற்கென தமிழ்நாடு நில சீர்திருத்தச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

2. 1000-ஆவது ஒன் டே ஆட்டத்தில் இந்தியா: மைல் கல்லை எட்டும் முதல் அணி

கிரிக்கெட் விளையாட்டில் ஒன் டே பார்மட்டில் 1000ஆவது ஆட்டத்தில் களம் காணும் சாதனையை படைக்கிறது இந்திய அணி.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒன் டே தொடரின் முதல் ஆட்டத்தில் வரும் 6ஆம் தேதி விளையாடுவதன் மூலம் இந்திய அணி இந்த மைல் கல்லை மகுடமாக தரித்துக்கொள்ள இருக்கிறது.

கடந்த 1974 முதல் ஒன் டே ஆட்டங்களில் பங்கேற்று வரும் இந்திய அணி தொடக்க காலத்தில் தடுமாறினாலும் பிறகு காலப்போக்கில் அந்த பார்மட்டிலும் சிறந்த அணியாக தன்னை உருமாற்றிக் கொண்டது இந்தியா.

ICC ஒன்டே தரவரிசையில் முதலிடம் பிடித்தது, இருமுறை உலகக்கோப்பையை வென்றது என தனது பெருமையை பறைசாற்றிக் கொண்டது. தற்போது 1000ஆவது ஒன் டே ஆட்டத்தில் களம் காணும் முதல் அணி என்ற தனிச் சிறப்பையும் பெறுகிறது.

அந்த ஆட்டத்தில் இந்திய அணியை வழி நடத்தும் கேப்டனாக இருக்கும் பெருமையை ரோகித் சர்மா பெற்றி -ருக்கிறார். ஒன் டே பார்மட் கேப்டனாக அறிவிக்கப்பட்ட பிறகு இந்திய அணியை அவர் வழிநடத்த இருக்கும் முதல் ஆட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டம், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமா -ன, குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவிருப்பது கூடுதல் சிறப்பு ஆகும். எனினும், கரோனா சூழல் கட்டுப்பாடு காரணமாக இந்த ஆட்டத்தை காண மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

முதல் ஆட்டம்

கடந்த 1974ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் ஒன் டே ஆட்டத்தை விளையாடிய இந்தியா, அதில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. 2 ஆட்டங்கள் கொண்ட அந்த முதல் தொடரையும் முழுமையாக இழந்தது.

1971

கிரிக்கெட் உலகின் முதல் ஒன் டே ஆட்டம் நடைபெற்றது, 1971ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி. இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மெல்போர்ன் நகரில் மோதிய இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

4000…

ஒன் டே பார்மட் அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை, உலக அளவில் 28 அணிகளால் 4000க்கும் அதிகமான ஒன் டே ஆட்டங்கள் விளையாடப்பட்டுள்ளன.

12 அணிகள்…

ICC தரவுப்படி, டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் 12 அணிகளுக்கு தான் ‘நிரந்தர ஒன் டே அணி’ என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய அணிகளுக்கு தற்காலிக அடிப்படையில் அந்த அந்தஸ்து அளிக்கப்படுகிறது.

3. இராமானுஜர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

ஐதராபாத் முச்சிந்தலாவில் 216 அடி உயர இராமானுஜர் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாதின் புறநகர் பகுதியான ஷம்ஷாபாதில் `1,000 கோடி செலவில் மிகப் பிரமாண்டமாய் இராமானுஜருக்கு சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இச்சிலை தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை மற்றும் துத்தநாகம் என ஐந்து விதமான உலோகங்களின் கலவையான “பஞ்சலோக” சிலையாக நிறுவப்பட்டுள்ளது.

இராமாநுஜர் சிற்பம் மேல் கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் கோயில்களில் உள்ள இராமாநுஜரின் செதுக்கப்பட்ட கல் உருவங்களை அடிப்படையாகக்கொண்டு வடிவமைக்கப் -பட்டுள்ளது. இராமாநுஜர் இந்தப் பூமியில் 120 வருடங்கள் வாழ்ந்ததை நினைவுகூரும் வகையில் 120 கிலோ தங்கத்தைக்கொண்டு சிலையின் கருவறை அமைக்கப்ப -ட்டுள்ளது. கருவறை தங்கத்தால் செய்யப்பட்டுள்ள அதே நேரத்தில் 216 அடி கொண்ட வெளிப்புறச்சிலை, உட்கார்ந்த நிலையில் உள்ள உயரமான சிலைகளில் ஒன்றாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘சமத்துவத்துக்கான சிலை’ என வர்ணிக்கப்படும் இந்தச் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

உட்கார்ந்த நிலையில் தாய்லாந்தில் அமைந்துள்ள 302 அடி உயரம்கொண்ட புத்தர் சிலையே உலகின் மிகப் பெரிய சிலையாக இருந்து வருகிறது. இதற்கடுத்ததாக, உலகின் இரண்டாவது பெரிய சிலை என்ற பெருமையை இராமாநுஜரின் 216 அடி உயர சிலை பெறவுள்ளது.

இராமாநுஜரின் 1000ஆவது பிறந்தநாளைக்கொண்டாடும் வகையில் இந்தச் சிலை அமைக்கும் பணி கடந்த 2014 ஆம் ஆண்டே தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

4. ஜூனியர் உலகக்கோப்பை: 5ஆவது முறையாக இந்தியா சாம்பியன்

14ஆவது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் ஆன்டிகுவாவில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் விளையாடின.

இந்திய அணி 47.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்களை சேர்த்து வெற்றி பெற்று கோப்பையை தட்டிச்சென்றுள்ளது. நான்கு முறை கோப்பையை வென்றுள்ள நிலையில், இந்த வெற்றியால் 5ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.

5. பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்: முதல் தங்கம் வென்றார் தெரஸே ஜோஹாக்

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார் நார்வே வீராங்கனை தெரஸே ஜோஹாக்.

சீனத்தலைநகர் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நார்வே கிராஸ் கண்ட்ரி ஸ்கையர் தெரஸே ஜோஹாக் 15 கிமீ ஸ்கையத்லானில் இப்போட்டியின் முதல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். கடும் காற்று மற்றும் குளிரையும் பொருள்படுத்தாமல் ஜோஹாக் சிறப்பாக செயல்பட்டு முதல் தங்கத்தை வென்றார்.

பிரான்ஸின் போ குயின்டின், ரஷியாவின் லேட்டிபோவ் முறை வெள்ளி, வெண்கலம் வென்றனர்.

மகளிர் ஸ்பீட்ஸ்கேட்டிங் 3000 மீ பிரிவில் டச்சு வீராங்கனை ஐரீன் சௌடென் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம் ஜெர்மன் வீராங்கனையின் கிளாடியா பெச்ஸ்டென் 20 ஆண்டுகால சாதனையையும் முறியடித்தார்.

6. லதா மங்கேஷ்கர் காலமானார்

பழம்பெரும் திரைப்படப் பாடகி லதா மங்கேஷ்கர் இன்று (06-02-2022) காலமானார்.

லதா மங்கேஷ்கர் தனது 13ஆம் வயதில் பாடல்கள் பாடத் தொடங்கினார். 1942இல் முதல் பாடலைப் பதிவுசெய்தார். பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். தமிழில் வளையோசை உள்ளிட்ட நிறைய பாடல்களைப் பாடியுள்ளார்.

இவர் 1969இல் பத்ம பூஷண், 1999இல் பத்ம விபூஷண், 2001இல் ‘பாரத் ரத்னா’ விருதுகளைப் பெற்றுள்ளார். திரைத்துறையின் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே விருதையும்’ இவர் பெற்றுள்ளார்.

1. Which country has declared a 90–day “environmental emergency” after a massive Crude Oil Spill?

A) Argentina

B) Peru 

C) Australia

D) Canada

  • The Peruvian Government declared a 90–day “environmental emergency” in damaged coastal territories, after 6,000 barrels of crude oil spilled into the sea. The incident occurred at the La Pampilla refinery, where the “Mare Doricum” tanker belonging to the Spanish energy firm Repsol was transporting 965,000 barrels of crude oil.
  • The spill has caused death of marine wildlife and the spill is investigated as an environmental pollution crime.

2. When is the “National Girl Child Day” celebrated in India?

A) January 24 

B) January 25

C) January 26

D) January 27

  • India celebrates National Girl Child Day on January 24 every year. It is an initiative undertaken by the Ministry of women and child development, to create awareness and provide opportunities to the girls of India. The government of India, in 2008, declared January 24 to be celebrated as the National Girl Child Day every year.

3. Which Indian badminton player won the womens singles title at the Syed Modi International tournament?

A) P V Sindhu 

B) Saina Nehwal

C) Ashmita Chaliha

D) Malvika Bansod

  • India ace badminton player PV Sindhu won the women’s singles title at the Syed Modi International tournament. The top–seed Sindhu defeated Malvika Bansod 21–13, 21–16 in the final clash. The men`s singles final of the Syed Modi India International 2022 was declared a `No Match’ as one of the finalists was declared Covid positive.

4. Which state celebrates Subash Chandra Bose’s birth anniversary ‘Desh Nayak Diwas’?

A) West Bengal 

B) Punjab

C) Maharashtra

D) Nagaland

  • Last year, the Centre decided to celebrate Bose’s birth anniversary as ‘Parakram Diwas’ (the day of valour), West Bengal announced that the day would be observed as ‘Desh Nayak Diwas’ (the day of the national hero). The Prime Minister unveiled the hologram statue of Netaji Subhas Chandra Bose at India Gate, until a grand statue of the freedom fighter will be installed. This year is 125th birth anniversary of Netaji.

5. Which institution released the ‘G20 People’s Climate Vote 2021 report’?

A) UNFCCC

B) UNDP 

C) UNEP

D) WEF

  • According to the G20 People’s Climate Vote 2021 report, which was recently released by the United Nations Development Program (UNDP), around 67 per cent of the youth in India consider the climate crisis as a global emergency. The youth are also vocal about the need for urgent policy creation and change. Whereas, India has only about 58 per cent adults, who consider climate change a global emergency.

6. Which former Prime Minister was conferred with ‘Netaji Award 2022’, by the Netaji Research Bureau?

A) Donald Trump

B) Manmohan Singh

C) Shinzo Abe 

D) Therasa May

  • Former Prime Minister of Japan Shinzo Abe was conferred with the Netaji Award 2022 by the Netaji Research Bureau on the 125th birth anniversary of the freedom fighter, Netaji Subash Chandra Bose. Consul general of Japan in Kolkata, Nakamura Yutaka, received the honour on behalf of former PM Shinzo Abe.

7. Pandit Jasraj was associated with which field?

A) Literature

B) Vocal Music 

C) Kathak

D) Painting

  • Pandit Jasraj (1930–2020) was an Indian classical vocalist, belonging to the Mewati Gharana. Recently the Pandit Jasraj Cultural Foundation was launched, presided over by the Indian Prime Minister Narendra Modi. It is a not–for–profit organisation set up with the objective of protecting and promoting national heritage, art and culture.

8. ‘Great Barrier Reef’, the world’s largest coral reef system, is located in which country?

A) Australia 

B) Russia

C) Japan

D) USA

  • ‘Great Barrier Reef’ is the world’s largest coral reef system located in Australia. Australian Prime Minister Scott Morrison has recently announced a further one billion Australian dollars to protect the Great Barrier Reef. The reef is under threat from global warming said Australian government.

9. Which country has agreed to cooperate with the European Union on Energy Security?

A) USA 

B) Australia

C) India

D) Japan

  • US President Joe Biden and European Union President Ursula von der Leyen pledged to cooperate on guaranteeing Europe’s energy security. They released a joint cooperation statement amidst standoff triggered by Russia consolidating troops at Ukraine’s border. The European Union depends on Russia for around one–third of its gas supplies.

10. As of 2022, which country is the top Steel Producer in the world?

A) India

B) China 

C) USA

D) Australia

  • According to World Steel Association, India’s crude steel production rose by 18 per cent to 118 million ton (MT) in 2021. India is the second largest steel producing nation, as it manufactured 100.3 MT steel in 2020 and China produced 1064.7 MT of steel in the same year. China recorded a 3 percent decline to 1032.8 MT in 2021.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!