TnpscTnpsc Current Affairs

4th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

4th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 4th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

February Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. சர்வதேச சுங்க நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) ஜனவரி 25

ஆ) ஜனவரி 26 

இ) ஜனவரி 27

ஈ) ஜனவரி 28

  • ‘சர்வதேச சுங்க நாள்’ ஒவ்வோராண்டும் ஜன.26 அன்று உலகம் முழுவதும் ஐநா அவையால் அனுசரிக்கப்படுகிறது. சுங்க அதிகாரிகள் மற்றும் முகமைகளின் பங்கை இது அங்கீகரிக்கிறது. சுங்க ஒத்துழைப்பு கவுன்சில் 1953’இல் இந்த நாள் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்தது.
  • 1994’இல் இந்தக் கவுன்சிலுக்கு உலக சுங்க அமைப்பு என மறுபெயரிடப்பட்டது. “Scaling up Customs Digital Transformation by Embracing a Data Culture and Building a Data Ecosystem” என்பது நடப்பு 2022இல் வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும்

2. 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நாடு எது?

அ) ஜப்பான்

ஆ) சீனா 

இ) இரஷ்யா

ஈ) அமெரிக்கா

  • 2022ஆம் ஆண்டின் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அதிகாரப்பூர்வமாக 2022 பிப்.4 முதல் 20 வரை சீனாவில் உள்ள பெய்ஜிங் மற்றும் அதன் அண்டை நகரங்களில் நடைபெறவுள்ளது. ஸ்போர்ட் எக்காலஜி குழுமம் மற்றும் சேவ் எவர் வின்டர்ஸ் ஆகிய அமைப்புகளால் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், ஒலிம்பிக்கில் தடகள வீரர்களின் உடலில் உற்பத்தி செய்யப்படும் செயற்கை பனியின் இடர்கள்குறித்து கூறப்பட்டுள்ளது. இவ்விளையாட்டுகளில் செயற்கை பனிப்பொழிவுக்காக ஏற்படும் தண்ணீர்விரயம் குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

3. எந்த உலக அமைப்பு 2022ஆம் ஆண்டிற்கான ‘Five-alarm global fire’ என முன்னுரிமைகளை வழங்கியது?

அ) உலக வங்கி

ஆ) உலக பொருளாதார மன்றம்

இ) ஐக்கிய நாடுகள் 

ஈ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்

  • ஐநா பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் பொதுச் சபையில் உரையாற்றி, நடப்பு 2022ஆம் ஆண்டிற்கான முன்னுரிமைகளை வகுத்தார். இதை ‘ஐந்து எச்சரிக்கை உலகளாவிய தீ’ என்று குறிப்பிட்ட அவர், தார்மீக ரீதியாக COVID-19 தொற்றுநோயால் நொடிந்துபோன உலக நிதி அமைப்பு, காலநிலை நெருக்கடி, இணையவெளியில் சட்டமின்மை மற்றும் குறைந்து வரும் அமைதி மற்றும் பாதுகாப்பு என ஐந்து முன்னுரிமைகளை பட்டியலிட்டார்.

4. எந்த நகரத்தில் நெகிழிப்பூங்கா அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது?

அ) சென்னை

ஆ) மங்களூரு 

இ) பெங்களூரு

ஈ) திருநெல்வேலி

  • கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள கஞ்சிமட்டில் ‘நெகிழிப்பூங்கா’ அமைப்பதற்கு மத்திய அரசு தனது இறுதி ஒப்புதலை வழங்கியுள்ளது. `62.77 கோடி மதிப்பீட்டில் 104 ஏக்கரில் அமைக்கப்படும் இப்பூங்காவின் 50% திட்ட மதிப்பீட்டை நடுவணரசும், மீதியை கர்நாடக தொழிற் துறை பகுதி மேம்பாட்டு வாரியமும் (KIADB) ஏற்கும்.

5. ‘வாழும் வேர்ப்பாலங்கள்’ என்பது எந்த மாநிலத்தில் காணப்படும் ஒரு தனித்துவமிக்க கட்டமைப்பாகும்?

அ) மேற்கு வங்காளம்

ஆ) மேகாலயா 

இ) ஹிமாச்சல பிரதேசம்

ஈ) மத்திய பிரதேசம்

  • ‘வாழும் வேர்ப்பாலங்கள்’ மேகாலயா மாநிலத்தில் காணப்படுகின்றன. அவை ‘பிகஸ் எலாஸ்டிகா’ மரம் என அழைக்கப்படும் இரப்பர் மரத்தின் வேர்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. மேலும் அவற்றின் பின்னலான வேர்கள் மரப்பாலங்களுக்கு நிலையான மாற்றாக அமைகின்றன.
  • சமீபத்தில், இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு நிறுவனம் ஆனது UNESCO உலக பாரம்பரிய தள குறிச்சொல்லைப் பெறுவதற்கு ‘வாழும் வேர்ப்பாலங்களுக்கான’ சில விதி முறைகளை அடிக்கோடிட்டுக்காட்டியது. மேகாலய மாநில முதல்வர் கான்ராட் K சங்மா 50ஆவது மாநில நாளான ஜன.21 அன்று UNESCOஇன் அங்கீகாரத்தைக்கோரினார்.

6. சமீப செய்திகளில் இடம்பெற்ற கிரிபட்டி அமைந்துள்ள கண்டம் எது?

அ) ஆசியா

ஆ) ஓசியானியா 

இ) ஐரோப்பா

ஈ) ஆப்பிரிக்கா

  • கிரிபட்டி உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட தீவுகளுள் ஒன்றாகும். ஓசியானியாவில் அமைந்துள்ள இது ஆஸ்திரேலியாவிலிருந்து சுமார் 4,800 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கடந்தவாரம் வரை, கிரிபட்டி இரு COVID பாதிப்புகளை மட்டுமே கண்டுள்ளது. முதல் சர்வதேச விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு COVID தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்நாடு தனது முதல் பொது முடக்கத்தை அறிவித்துள்ளது.

7. இந்தியாவில் ‘அமர் ஜவான் ஜோதி’ கட்டப்பட்ட ஆண்டு எது?

அ) 1947

ஆ) 1950

இ) 1972 

ஈ) 1958

  • ‘அமர் ஜவான் ஜோதி’ நினைவகம் 1972ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 1971 போரில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றியைக் குறிக்கும் வகையில் இது உள்ளது. இந்தப் போரின் வெற்றியை அடுத்து வங்கதேசம் உருவானது. இந்திய அரசாங்கம் இந்தியாவின் நுழைவு வாயிலின் அடியில் உள்ள ‘அமர் ஜவான் ஜோதி’யுடைய அழியாச்சுடரை அணைத்து, கடந்த 2019இல் தேசிய போர் நினைவகத்தில் நிறுவப்பட்ட சுடருடன் இணைத்தது.
  • 1972ஆம் ஆண்டு குடியரசு நாளில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அதைத் திறந்து வைத்தார்.

8. ஆதி பத்ரா அணையைக் கட்டுவதன்மூலம் சரஸ்வதி ஆற்றை புதுப்பிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இரு மாநில அரசுகள் எவை?

அ) ஹரியானா-ஹிமாச்சல பிரதேசம் 

ஆ) குஜராத்-ராஜஸ்தான்

இ) ஹரியானா-பஞ்சாப்

ஈ) ஹிமாச்சல பிரதேசம்-தில்லி

  • யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஆதி பத்ரியில் அணை கட்டுவதற்கு ஹரியானா மற்றும் இமாச்சல பிரதேச மாநில அரசுகள் ஒப்பந்தம் செய்துகொண்டன. இத்துடன், இப்பகுதி புனித யாத்திரை தலமாகவும் உருவாகும்.
  • சரஸ்வதி ஆற்றுக்கு புத்துயிரளிப்பதுடன் நிலத்தடி நீர்மட்ட -த்தை உயர்த்துவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். இமாச்சல பிரதேசத்தில் 31.66 ஹெக்டேர் நிலப்பரப்பில் ஆதி பத்ரி அணை கட்டப்படும். இதற்காக `215.33 கோடி செலவிடப்படும்.

9. தேலிநீலாபுரம் பறவைகள் புகலிடம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) ஆந்திர பிரதேசம் 

இ) ஒடிஸா

ஈ) மேற்கு வங்கம்

  • தேலிநீலாபுரம் சர்வதேச பறவைகள் சரணாலயம் ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சமீபத்தில், இப்பறவைகள் சரணாலயத்தில் புலம்பெயர்ந்த கூழைக்கடாக்கள் பெருமளவில் இறந்துகிடந்தன.
  • அரசாங்க தரவுகளின்படி, சைபீரியா, ரஷ்யா, மலேசியா, ஹங்கேரி, சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 113 வகையான அயல் நாட்டுப்பறவைகள் இப்பகுதிகளுக்கு இனப்பெருக்கத்திற் -காக வருகின்றன.

10. சமீப செய்திகளில் இடம்பெற்ற ‘நியோகோவ்’, முதலில் எந்த உயிரினத்தில் கண்டறியப்பட்டது?

அ) குரங்கு

ஆ) வௌவால் 

இ) ஆந்தை

ஈ) கொறித்துண்ணி

  • ‘நியோகோவ்’ என்பது வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நியோரோமிசியா வௌவால் இனத்தைக் குறிக்கிறது.
  • இப்புதிய வைரஸ் MERS கொரோனா தீநுண்மத்துடன் (SARs-CoV-2 அன்று) தொடர்புடையது. தென்னாப்பிரிக்காவில் வௌவால்களில் கண்டறியப்பட்ட இவ்வைரஸ் குறித்த செய்திகள் சமீபத்தில் தீயாகப்பரவின. இருப்பினும், ‘நியோகோவ்’ கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதா? என்பது குறித்த கூடுதல் ஆய்வு தேவை என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பிப்ரவரி 4 – உலக புற்றுநோய் நாள்

கருப்பொருள்: “Close the Care Gap”.

2. இன்று தொடங்குகிறது குளிா்கால ஒலிம்பிக் போட்டிகள்

24ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனாவின் பெய்ஜிங் நகரில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

பெய்ஜிங்கில் உள்ள தேசிய மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருசில விளையாட்டுகளின் முதல்கட்ட சுற்றுகள் கடந்த 2ஆம் தேதியே தொடங்கிவிட்டாலும், ஒலிம்பிக் தீபமேற்றிய பிறகே, ஒலிம்பிக்ஸ் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியதாக அறிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்.18 அன்று, ஒலிம்பிக்ஸின் பிறப்பிடமான கிரீஸில் தொடங்கிய ஒலிம்பிக் ஜோதி ஓட்டம், வெள்ளிக்கிழமை போட்டியின் தொடக்க நிகழ்ச்சி நடக்கும் மைதானத்தில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றுவதுடன் நிறைவடைகிறது. கரோனா தொற்று அச்சம் காரணமாக பெய்ஜிங் நகரில் ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தின் கால அளவு குறைக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பாதிப்பு சூழலில் டோக்கியோ ஒலிம்பிக் கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், அதேபோல் நடத்தி முடிக்கப்படும் நோக்குடன் தொடங்குகிறது இந்த குளிர்கால ஒலிம்பிக். உலகெங்கும் கரோனா பாதிப்பு மீண்டும் தீவிரமாகியிருக்கும் நிலையில் இந்தப் போட்டியை ஒத்திவைப்பதற்கு கோரிக்கைகளும், பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன.

அவற்றைக் கடந்த வகையில் உரிய பாதுகாப்பு முன்னெச் -சரிக்கை நடவடிக்கைகளுடன் போட்டியை நடத்துவதற் -கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ‘பயோ பபுள்’ பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளதுடன், போட்டியா -ளர்கள் உள்பட ஒலிம்பிக்குடன் தொடர்புடைய அனைவருக்கும் அவ்வப்போது கரோனா பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

எனினும், போட்டியில் பங்கேற்க வந்துள்ள வீரர், வீராங்க -னைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் இருக்கின்றனர்.

இதனிடையே, மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் சீனா ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ராஜ்ஜீய ரீதியிலாக இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை தவிர்த்துள்ளன. எனினும், அந்த நாடுகளின் சார்பில் போட்டியாளர்கள் களம் காண்கின்றனர்.

இந்தியாவின் பங்கேற்பு:

இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் ஒரேயொரு வீரர் மட்டும் பங்கேற்கிறார். பனிச் சறுக்கு வீரரான ஆரிப்கான், ‘ஸ்லாலம்’, ‘ஜயன்ட் ஸ்லாலம்’ ஆகிய இரு பிரிவுகளில் களம் காண்கிறார். அவரோடு 6 பேர்கொண்ட இந்திய குழு பெய்ஜிங் சென்றுள்ளது.

தொடக்கம் – பிப்ரவரி 4

நிறைவு – பிப்ரவரி 20

விளையாட்டுகள் – 15 விளையாட்டுகள்/109 போட்டிகள்

பங்கேற்பு – 91 நாடுகள்

போட்டியாளர்கள் (சுமார்) – 2,871

ஆடவர் – 1,581

மகளிர் – 1,290

3. கடலூர் மாவட்டம் வடலூரில் தோட்டக்கலை பூங்கா அமைக்க `1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

கடலூர் மாவட்டம் வடலூரில் தோட்டக்கலை பூங்கா அமைக்க `1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 3.20 ஏக்கரில் அமைக்கப்ப -டும் இப்பூங்காவில் நடைபாதைகள், மூலிகைச் செடிகள், குளம், பார்வையாளர் இருக்கை வசதி, சிறுவர் பூங்கா ஆகியவை இடம்பெறவுள்ளன.

1. When is the ‘International Customs Day’ observed every year?

A) January 25

B) January 26 

C) January 27

D) January 28

  • ‘International Customs Day’ is observed every year on January 26, across the world with the United Nations as the host. It recognises the role of customs officials and agencies in ensuring flow of goods across the world borders. The Customs Cooperation Council (CCC) announced the observance of ICD in 1953.
  • CCC was renamed as World Customs Organization (WCO) in 1994. The theme of 2022 is ‘Scaling up Customs Digital Transformation by Embracing a Data Culture and Building a Data Ecosystem’.

2. Which country is the host of the 2022 Winter Olympics?

A) Japan

B) China 

C) Russia

D) USA

  • The 2022 Winter Olympics, officially the XXIV Olympic Winter Games is scheduled to take place from 4 to 20 February 2022 in Beijing and its neighbouring town in China. A report released by Sport Ecology Group and Save Our Winters has stated the dangers of artificial snow to be produced in the Olympics on athletes’ bodies. It also warned on water wastage that happens for the snow at these games.

3. Which global institution laid out priorities for 2022 as ‘Five–alarm global fire’?

A) World Bank

B) World Economic Forum

C) United Nations 

D) International Monetary Fund

  • United Nations Secretary–General António Guterres addressed the General Assembly and laid out the priorities for 2022.
  • Terming it as a ‘Five–alarm global fire’ he listed down the five priorities as the raging COVID–19 pandemic, a morally bankrupt global financial system, the climate crisis, lawlessness in cyberspace, and diminished peace and security.

4. Union Government has approved to set up a Plastic Park in which city?

A) Chennai

B) Mangaluru 

C) Bengaluru

D) Tirunelveli

  • The Union Government has given the final approval for setting up a plastic park at Ganjimutt in Mangaluru, Karnataka. The park will be set up on 104 acres at an estimated cost of ₹62.77 crore, out of which 50% of the project cost will be borne by the Union Government and the rest by Karnataka Industrial Areas Development Board (KIADB).

5. ‘Living root bridges’ is an iconic structure, found in which Indian state?

A) West Bengal

B) Meghalaya 

C) Himachal Pradesh

D) Madhya Pradesh

  • The ‘Living Root Bridges’ are found in Meghalaya. They are made from rubber tree roots, known as ‘Ficus elastica’ tree and their tangled roots provides a stable alternative to wooden bridges.
  • Recently, the Zoological Survey of India (ZSI) has underlined some green rules for the living root bridges to get the UNESCO World Heritage Site tag. Meghalaya Chief Minister Conrad K. Sangma sought UNESCO recognition on its 50th statehood day – January 21.

6. Kiribati, which was seen in the news recently, is a country located in which continent?

A) Asia

B) Oceania 

C) Europe

D) Africa

  • Kiribati is one of the most isolated islands in the world. It is located in Oceania and is about 4,800km from Australia. Until last week, Kiribati had recorded just two Covid cases.
  • After the passengers on the first international flight tested positive for Covid, the country has imposed its first lock–down.

7. When was the ‘Amar Jawan Jyoti’ established in India?

A) 1947

B) 1950

C) 1972 

D) 1958

  • The Amar Jawan Jyoti was established in 1972, to mark India’s victory over Pakistan in the 1971 War, which resulted in the creation of Bangladesh. The Indian Government has put out the eternal flame of the Amar Jawan Jyoti underneath India Gate and merged it with the flame instituted at the National War Memorial in 2019.
  • The then Prime Minister Indira Gandhi inaugurated it on Republic Day 1972, after India defeated Pakistan in 1971.

8. Which state governments signed agreement to rejuvenate the Saraswati River by constructing Adi Badra Dam?

A) Haryana–Himachal Pradesh 

B) Gujarat–Rajasthan

C) Haryana–Punjab

D) Himachal Pradesh–Delhi

  • The Governments of Haryana and Himachal Pradesh entered into an agreement to build a dam at Adi Badri in Yamunanagar district. Along with this, the area will also develop as a pilgrimage site.
  • The objective of the project is to revive the Saraswati River as well as increase ground water level. Adi Badri dam will be built on 31.66 hectares of land in Himachal Pradesh and Rs 215.33 crore will be spent for the same.

9. Telineelapuram Bird Sanctuary is located in which state?

A) Tamil Nadu

B) Andhra Pradesh 

C) Odisha

D) West Bengal

  • Telineelapuram International Bird Sanctuary is located in Andhra Pradesh’s Srikakulam district. Recently, mass deaths of migratory spot–billed pelicans happened at the Bird Sanctuary.
  • According to government data, about 113 species of exotic birds come to these areas each year from Siberia, Russia, Malaysia, Hungary, Singapore and Germany for breeding.

10. ‘NeoCov’, which was seen in the news, was first identified in which species?

A) Monkey

B) Bat 

C) Owl

D) Rodent

  • NeoCov stands for Neoromicia, the species of bat that have been infected with the virus. This virus is associated with MERS Coronavirus and not the SARs–CoV–2. Recently news about the virus discovered in South Africa amongst bats is being circulated widely. However, the World Health Organization has said that whether NeoCov coronavirus poses a threat to humans requires further study.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!