3rd March 2022 Tnpsc Current Affairs in Tamil & English
3rd March 2022 Tnpsc Current Affairs in Tamil & English
Hello aspirants, you can read 3rd March 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.
March Daily Current Affairs Pdf
1. ‘தர்மா கார்டியன்’ பயிற்சி என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெறும் இராணுவப் பயிற்சி ஆகும்?
அ) இலங்கை
ஆ) ஜப்பான்
இ) ஆஸ்திரேலியா
ஈ) ஐக்கிய அரபு அமீரகம்
- இந்தியாவும் ஜப்பானும் ஆண்டுதோறும் நடத்தப்படும் தங்களது ‘தர்மா கார்டியன்’ பயிற்சியை கர்நாடகாவில் தொடங்கியுள்ளன. இந்தப் பயிற்சி பிப்.27 முதல் மார்ச்.10 வரை தொடங்கியது. ‘மராத்தா லைட்’ காலாட்படைப் பிரிவின் 15ஆவது பட்டாலியன் இந்தியாவின் சார்பாக பங்கேற்கிறது. இந்தப் பயிற்சியானது 2018ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
2. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘IVFRT திட்டம்’ எந்தத் துறையுடன் தொடர்புடையது?
அ) குடியேற்றம்
ஆ) நீர்ப்பாசனம்
இ) தகவல்
ஈ) தொழிற்துறை
- 2021 முதல் 2026 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு ‘குடியேற்ற விசா வெளிநாட்டினர் பதிவு கண்காணிப்பு’ திட்டத்தைத் தொடர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் `1,364.88 கோடி செலவில் அங்கீகரிக்கப்பட்டது.
- விசா வழங்குதற்கான காலம் IVFRT திட்டம் அமல்படுத்தும் முன் வரை, 15 முதல் 30 நாட்களாக இருந்தது. தற்போது அதிகபட்சமாக 72 மநேரத்துக்குள் விசா வழங்கப்படுகிறது.
3. ‘எம்னாதி’ புயலால் பாதிக்கப்பட்ட நாடு எது?
அ) இந்தோனேசியா
ஆ) மடகாஸ்கர்
இ) பிலிப்பைன்ஸ்
ஈ) ஜப்பான்
- ‘எம்னாட்டி’ புயலின் வருகையை அடுத்து 5 வாரங்களில் நான்காவது சூறாவளியை மடகாஸ்கர் காண்கிறது.
- ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மடகாஸ்கர் பல சூறாவளிகளால் தாக்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் 120’க்கும் மேற்பட்டவர்களின் பலிக்கு காரணமான பட்சிராய் சூறாவளியின் தாக்கத்திலிருந்து அந்தத் தீவு நாடு இன்னும் மீளவில்லை.
4. ‘மொழிச் சான்றிதழ் தன்பட’ பிரச்சாரத்தை தொடங்கிய மத்திய அமைச்சகம் எது?
அ) கல்வி அமைச்சகம்
ஆ) கலாசார அமைச்சகம்
இ) சுற்றுலா அமைச்சகம்
ஈ) வெளியுறவு அமைச்சகம்
- நாட்டின் கலாசார பன்முகத்தன்மை மற்றும் பன்மொழி பயன்பாட்டை ஊக்குவித்து, ‘ஒன்றுபட்ட பாரதம்–வலிமையான பாரதம்’ என்ற உணர்வை ஏற்படுத்தும் விதமாக, மத்திய கல்வித்துறை, மொழிச்சான்றிதழ் தன்பட இயக்கத்தை தொடங்கியுள்ளது.
- மத்திய கல்வித்துறை மற்றும் MyGov இந்தியா ஆகியவை இதற்கென ‘பாஷா சங்கம்’ என்ற செல்போன் செயலியை உருவாக்கியுள்ளன. இந்தச் செயலியைப் பயன்படுத்தி, அட்டவணையிடப்பட்ட 22 இந்திய மொழிகளில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் 100+ வாக்கியங்களை கற்றுக் கொள்ளலாம். இந்தச்சான்றிதழுடன் மக்கள் செல்பி எடுத்து அதனை தங்களது சமூக ஊடக கணக்கு வாயிலாக ‘மொழிச்சான்று தன்படம்’ எனப் பதிவேற்றஞ்செய்யலாம்.
5. சமீப செய்திகளில் இடம்பெற்ற ஸ்மீன்யீ தீவு (பாம்புத் தீவு) அமைந்துள்ள கடல்/பெருங்கடல் எது?
அ) கருங்கடல்
ஆ) பசிபிக் பெருங்கடல்
இ) மத்தியதரைக்கடல்
ஈ அட்லாண்டிக் பெருங்கடல்
- ஸ்மீன்யீ தீவு (பாம்புத் தீவு) என்பது உக்ரைனுக்குச் சொந்தமான சுமார் 16 ஹெக்டேர் பரப்பளவிலான பாறைத் தீவாகும். இது கருங்கடலில் கிரிமியாவிற்கு மேற்கே 300 கிமீ தொலைவில் உள்ளது.
- ரஷ்யப்படைகளிடம் இருந்து இத்தீவைக்காத்த பதிமூன்று வீரர்களுக்கு உக்ரைன் அரசு மரியாதை செலுத்தியுள்ளது. உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, மரணித்த ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் “உக்ரைனின் நாயகன்” என்ற பட்டத்தை வழங்கினார்.
6. அன்டோனியோ கோஸ்டா, கீழ்காணும் எந்த நாட்டின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்?
அ) இத்தாலி
ஆ) போர்ச்சுகல்
இ) ஜெர்மனி
ஈ) இஸ்ரேல்
- கடந்த 2015ஆம் ஆண்டு முதல் போர்ச்சுகலின் பிரதமராக இருந்துவருகிறார் அன்டோனியோ கோஸ்டா. சமதர்மவாத கட்சியின் தலைவரான கோஸ்டா, சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் 2ஆவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
7. ‘DESH–Stack’ என்பது எத்துறையுடன் தொடர்புடைய இணையதளமாகும்?
அ) முதலீடு
ஆ) திறன் மேம்பாடு
இ) ஜிஎஸ்டி
ஈ) ஊட்டச்சத்து
- மத்திய பட்ஜெட்டில் ‘திறன் மற்றும் வாழ்வாதாரத்திற்கான டிஜிட்டல் சூழலமைப்பு’ அல்லது ‘DESH–Stack’ இணைய தளம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- இணையவழி பயிற்சிமூலம் நாட்டின் குடிகளுக்கு திறன் அல்லது மேம்பாட்டை வளர்த்தெடுப்பதை இது தனது நோக்கமாகக்கொண்டுள்ளது. பொருத்தமான வேலைகள் மற்றும் தொழில்முனைவு வாய்ப்புகளை கண்டறிதற்கான நம்பகமான வாய்ப்புகளை இது வழங்கும்.
8. ஒரு பன்னாட்டுக் குழு நடத்திய ஒரு புதிய ஆய்வின்படி, இன்னமும் கண்டுபிடிக்கப்படாத மொத்த மரங்களின் எண்ணிக்கை என்ன?
அ) 92
ஆ) 920
இ) 9200
ஈ) 19200
- உலகம் முழுமைக்கும் உள்ள 100 அறிவியலாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், பூமியில் உள்ள மொத்த மர இனங்களின் எண்ணிக்கை 73,000 என்று கண்டறியப்பட்டது. 9,200 மர இனங்கள் மர்மமானவை மற்றும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன என்பதையும் இந்த ஆய்வறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
- பிறவிடங்களைவிட தென்னமெரிக்காவில் 40 சதவீதத்தி –ற்கும் அதிகமான கண்டுபிடிக்கப்படாத மர இனங்கள் உள்ளன. இம்மதிப்பீடுகளின்படி, பூமியின் அனைத்து மர வகைகளிலும் 43% தென்னமெரிக்காவில் உள்ளன. அதைத்தொடர்ந்து யூரேசியா (22 சதவீதம்), ஆப்பிரிக்கா (16 சதவீதம்) ஆகியன உள்ளன.
9. ‘தேசிய புரத நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?
அ) மார்ச் 01
ஆ) மார்ச் 02
இ) பிப்ரவரி 27
ஈ) பிப்ரவரி 28
- தேசிய அளவிலான பொதுநல முன்னெடுப்பான ‘Right to Protein’ இந்தியாவின் முதல் ‘புரத நாளை’ 2020 பிப்.27 அன்று அறிமுகப்படுத்தியது. புரதத்தின் ஊட்டச்சத்து நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. “Food Futurism” என்பது நடப்பாண்டு (2022) வரும் இந்நாளின் கருப்பொருளாகும்.
10. இந்திய ரயில்வேயின் எந்த நெட்வொர்க் 100ஆவது ஜவுளி எக்ஸ்பிரஸை இயக்கி சாதனை படைத்துள்ளது?
அ) மேற்கு ரயில்வே
ஆ) மத்திய ரயில்வே
இ) வடக்கு ரயில்வே
ஈ) வட மேற்கு ரயில்வே
- மேற்கு ரயில்வேயின் மும்பை மத்திய கோட்டம், சல்தாகன் பகுதியிலிருந்து (சூரத்) ஷாங்ரயிலுக்கு (காரக்பர் கோட்டம், தென்கிழக்கு ரயில்வே) ஜவுளிப்பொருட்கள் ஏற்றிய 100ஆவது ரயிலை இயக்கி சாதனை படைத்துள்ளது. முதலாவது ரயில் உத்னாவிலிருந்து 01.09.2021 அன்று இயக்கப்பட்டது.
- ஐந்து மாதங்களுக்குள் இந்தச் சாதனை எட்டப்பட்டுள்ளது. இந்த ஜவுளி எக்ஸ்பிரஸ்மூலம் இதுவரை இரயில்வே துறைக்கு `10.2 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. சீர்மிகு நகரம் திட்டத்தில் முறைகேடு: ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது தமிழக அரசு
‘சீர்மிகு நகரம்’ திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை செய்ய ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. ஓய்வு பெற்ற இ ஆ ப அதிகாரி தேவிதார் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
சீர்மிகு நகரம் திட்ட முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, மதுரை, திருப்பூர் உள்பட் 11 நகரங்களில் ‘சீர்மிகு நகரம்’ திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘சீர்மிகு நகரம்’ திட்ட முறைகேடு குறித்து விசாரணை நடத்த விசாரணைக் குழு அமைக்கப்படும் என ஏற்கனவே முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்து இருந்த நிலையில், ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.
2. முதலீட்டு கண்காட்சி: முதலமைச்சர் ஸ்டாலின் துபை பயணம்
சர்வதேச அளவில் பிரமாண்ட முறையில் நடைபெறும் தொழில் முதலீட்டு காட்சியில் பங்கேற்க முதலமைச்சர் மு க ஸ்டாலின், துபை செல்லவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
துபையில் நடைபெறும் தொழில் கண்காட்சி சர்வதேச அளவில் புகழ்பெற்றது. இந்தக் கண்காட்சியில் 180க்கும் மேற்பட்ட நாடுகள் தங்களது அரங்குகளை அமைக்கும். இந்த ஆண்டும் சர்வதேச கண்காட்சி நடைபெறவுள்ளது. தமிழகத்தின் சார்பில் கைத்தறி, வேளாண்மை உள்ளிட்ட காட்சி அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.
3. அரசு குழந்தைகள் மையங்களில் தங்கியுள்ள பெண்களுக்கு தற்காப்பு பயற்சி அளிக்க மத்திய அரசு திட்டம்
பெண்களின் பாதுகாப்புக்காக அரசு நடத்தும் குழந்தைகள் மையங்களில் தங்கியுள்ள பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பெண்கள் நாள் மார்ச்.8 அன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
பெண்கள் பாதுகாப்பின் முக்கிய அங்கமாக இளம் பெண்களுக்கு தற்காப்புப் பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. மத்திய அரசால் நடத்தப்படும் குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள் & கடினமான சூழ்நிலைகளில் சிக்கித்தவிக்கும் பெண்களுக்கான தங்குமிடங்களிலும் 704 மையங்களில் இளம்பெண்கள், பெண் பணியாளர்க -ளுக்கு தற்காப்பு பயிற்சியளிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
அவசரகால உதவி எண்
தேசிய அவசரகால உதவி எண் 112 மற்றும் பெண்களுக்கான உதவி எண்ணான 181 ஆகியவை இணைக்கப்படும். இந்த இரண்டு எண்களில் எதை அழைத்தாலும் ஆபத்தில் உள்ள பெண்கள் உதவிகளை பெறமுடியும். ஆபத்தில் உள்ள பெண்கள் 112 எண்ணை அழைத்தால் அது 181’க்கு அனுப்பப்படும். இது ஆபத்துக் காலத்தில் பெண்களுக்கான உதவியை மேம்படுத்தும்.
1. ‘Dharma Guardian’ Exercise is an annual Military Exercise between India and which country?
A) Sri Lanka
B) Japan
C) Australia
D) UAE
- India and Japan have commenced their annual Dharma Guardian exercise in Karnataka. The exercise began from Feb.27 to March 10. The 15th battalion of the Maratha Light Infantry regiment will participate for India. The exercise is being conducted annually since 2018.
2. Which country has been hit by ‘Cyclone Emnati’?
A) Indonesia
B) Madagascar
C) Philippines
D) Japan
- Madagascar is witnessing its fourth cyclone in five weeks after ‘Emnati’ arrival. Madagascar is hit by numerous cyclones between November and April every year. The island nation is still recovering from the impact of another storm earlier this month named Cyclone Batsirai, which killed more than 120 people.
3. Which Union Ministry launched the ‘Bhasha Certificate Selfie’ Campaign?
A) Ministry of Education
B) Ministry of Culture
C) Ministry of Tourism
D) Ministry of External Affairs
- Union Ministry of Education recently launched a campaign ‘Bhasha Certificate Selfie’ to encourage cultural diversity and promote Multilingualism. The initiative aims to promote Bhasha Sangam mobile app, developed by Ministry of Education and MyGov India.
- Using the app, people can learn over 100 sentences of daily use in as many as 22 scheduled Indian languages. It encourages people to upload their selfie with the certificate.
4. ‘IVFRT Scheme’, which was seen in the news recently, is associated with which field?
A) Immigration
B) Irrigation
C) Information
D) Industry
- The Centre has approved continuation of the Immigration Visa Foreigners Registration Tracking (IVFRT) Scheme for a period of five years from 2021 to 2026. The scheme was approved with an outlay of Rs 1,364.88 crore. The average visa processing time, which was earlier at 15–30 days, has been reduced to 72 hours, in e–visas.
5. Zmiinyi Island (Snake Island), which was seen in the news, is located in which Sea/Ocean?
A) Black Sea
B) Pacific Ocean
C) Mediterranean Sea
D) Atlantic Ocean
- Zmiinyi Island (Snake Island) is a roughly 16–hectare rocky island owned by Ukraine that lies about 300km west of Crimea, in the Black Sea. Ukraine has honoured 13 soldiers who were killed defending the island from Russian forces.
- Ukraine’s President Volodymyr Zelensky has awarded each of the guards the posthumous title of “Hero of Ukraine”.
6. Antonio Costa, has been re–elected as the Prime Minister of which country?
A) Italy
B) Portugal
C) Germany
D) Israel
- Antonio Costa is serving as the current Prime Minister of Portugal since 2015. The 60–year–old leader of Socialist Party has been re–elected for the second term in the snap general election.
7. ‘DESH–Stack’ is an Online Platform associated with which field?
A) Investment
B) Skill Development
C) GST
D) Nutrition
- The Union Budget has announced to set up a Digital Ecosystem for Skilling and Livelihood or DESH–Stack e–portal. It aims to empower citizens to skill, reskill or upskill through on–line training. The portal will provide trusted skill credentials to find relevant jobs and entrepreneurial opportunities.
8. As per a new study conducted by an international team, what is the total number of trees still undiscovered?
A) 92
B) 920
C) 9200
D) 19200
- A study was conducted jointly by 100 scientists across the world and it found out that the total number of tree species on Earth is 73,000. It also highlights that 9,200 tree species have remained mysterious and undiscovered.
- South America has likely more undiscovered tree species than others at about 40%. As per the estimates, 43 percent of all Earth’s tree species occur in South America, followed by Eurasia (22 percent), Africa (16 percent).
9. ‘India Protein Day’ is celebrated on which date?
A) March 01
B) March 02
C) February 27
D) February 28
- A national–level public health initiative, ‘Right to Protein’ has launched India’s first ‘Protein Day’ on February 27, 2020. The day is observed to raise awareness about the nutritional benefits of protein. This year, the theme of the day is selected as “Food Futurism”.
10. Which network of the Indian Railways has achieved a milestone of loading the 100th Textile Express?
A) Western Railway
B) Central Railway
C) Northern Railway
D) North Western Railway
- Mumbai Central Division of Western Railway, has achieved a milestone of loading the 100th Textile Express from Chaltahan (Surat area) to Sankrail (Kharagpur Division).
- The first Textile Express was started on 1st September 2021. The milestone has been kachieved within a span of five months. Surat textile sector is prominent in the western part of India. Textile Express fetched revenue of over ten crore rupees to Railways.