TnpscTnpsc Current Affairs

3rd February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

3rd February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 3rd February 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

February Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி சுற்றிவரும் விண்வெளிப்பரப்பின் பெயர் என்ன?

அ) லாக்ரேஞ்ச் புள்ளி L2 

ஆ) கியூரி புள்ளி

இ) நியூட்டன் புள்ளி

ஈ) CV இராமன் புள்ளி

  • ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கிமீ தொலைவில் அதன் இறுதி இலக்கை அடைந்தது. அது ‘லாக்ரேஞ்ச் புள்ளி’ எனப்படும் விண்வெளிப் பகுதியில் சுற்றும், அங்கு சூரியன் மற்றும் பூமியின் ஈர்ப்பு விசை சுழலும் அமைப்பின் மையவிலக்கு விசையால் சமநிலைப்படுத்தப்பட்டிருக்கும்.
  • இப்புள்ளிகள் முதலில் இத்தாலிய பிரெஞ்சு கணிதவியலா -ளர் ஜோசப்-லூயிஸ் லாக்ரேஞ்ச் என்பவரால் கோட்பாடு செய்யப்பட்டது.

2. IIT கரக்பூரின் அறிவியலாளர்கள், கீழ்காணும் எந்த நோயைக் கண்டறிவதற்கான ஒரு சிறிய சாதனத்தை உருவாக்கியுள்ளனர்?

அ) வாய்ப்புற்றுநோய் 

ஆ) மார்பகப்புற்றுநோய்

இ) ஆண்மைச்சுரப்பிப் புற்றுநோய்

ஈ) நுரையீரல் புற்றுநோய்

  • IIT கரக்பூரின் விஞ்ஞானிகள், வாய்வழி புற்றுநோயைக் கண்டறிவதற்கான ஒரு சிறிய, மலிவான சாதனத்தை உருவாக்கியுள்ளனர். ஒரு சாதனத்திற்கான மதிப்பிடப்பட் -ட விலை $500 அமெரிக்க டாலருக்குள் இருக்கும்.
  • இந்தப் புதிய தொழில்நுட்பம், சுகாதார மையத்தில் உள்ள மருத்துவரால், முதல் பரிசோதனையின்போதே பாதிப்புக -ளைக் கண்டறிய உதவுகிறது.

3. சமீப செய்திகளில் இடம்பெற்ற ‘MY2022’ செயலியுடன் தொடர்புடைய நாடு எது?

அ) அமெரிக்கா

ஆ) ரஷ்யா

இ) சீனா 

ஈ) இஸ்ரேல்

  • ‘MY2022’ என்பது பெய்ஜிங்கில் நடக்கவுள்ள குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் விளையாட்டு வீரர்கள் மற்றும் பிறரால் பயன்படுத்தப்படும் செயலியின் பெயராகும். ‘சிட்டிசன் லேப்’ என்ற இணைய கண்காணிப்புக் குழுவின் சமீபத்திய அறிக்கையின்படி, செயலியில் உள்ள குறியாக்கத்தில் குறைபாடு உள்ளது. அதன்மூலம் முக்கியமான தரவு மற்றும் பிற தரவுகள் ஹேக் செய்யப்பட வாய்ப்புண்டு.

4. முதலாவது UNDP இந்திய இளையோர் காலநிலை சாம்பியனாக அறிவிக்கப்பட்டவர் யார்?

அ) பிரஜக்தா கோலி 

ஆ) லிசிப்ரியா கங்குஜம்

இ) தியா மிர்சா

ஈ) A திஷா ரவி

  • ஐநா வளர்ச்சித் திட்டம்-இந்தியா, உள்ளடக்க உருவாக்கு -நரும் நடிகருமான பிரஜக்தா கோலியை அவற்றின் முதல் UNDP இந்திய இளையோர் காலநிலை சாம்பியனாக அறிவித்தது. பல்வேறு உலகளாவிய சமூக பிரச்சாரங்கள் மூலம் மனநலம், பெண்கள் உரிமைகள் மற்றும் பெண் குழந்தை கல்வி ஆகியவற்றிற்கான அவரது பங்களிப்பை UNDP அங்கீகரித்துள்ளது.

5. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பிரஸ்ஸின் அண்மைய ஆய்வின்படி, 2021ஆம் ஆண்டிற்கான சிறார்களுக்கான சொல்லாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சொல் எது?

அ) Depression (மனச்சோர்வு)

ஆ) Virus (தீநுண்மம்)

இ) Anxiety (கவலை) 

ஈ) Teacher (ஆசிரியர்)

  • ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பிரஸ்ஸின் ஒரு புதிய ஆராய்ச்சியின்படி, குழந்தைகளால் ‘Anxiety’ என்ற சொல் 2021ஆம் ஆண்டிற்கான சொல்லாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. ஆசிரியர்கள் “Resilience” என்ற சொல்லை தங்களின் சொல்லாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
  • ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பிரஸ் ஆனது குழந்தைகள் மொழியின் பரிணாம வளர்ச்சியையும், அவர்களின் உண -ர்வுகளையும் அனுபவங்களையும் பிரதிபலிக்க அவர்கள் அதை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதையும் ஆய்வுசெய்தது.

6. ஒற்றையர் (அ) இரட்டையர் பிரிவில் முதலிடத்திற்கு உயர்ந்த முதல் இந்திய டென்னிஸ் வீராங்கனை யார்?

அ) அங்கிதா ரெய்னா

ஆ) சானியா மிர்சா 

இ) கர்மன் தண்டி

ஈ) ரியா பாட்டியா

  • சானியா மிர்சா 2015’இல் இரட்டையர் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்தபோது, ஒற்றையர் அல்லது இரட்டையர் பிரிவில் முதலிடத்திற்கு முன்னேறிய இந்திய டென்னிஸ் வீராங்கனை ஆனார்.
  • விம்பிள்டனில் வென்றபோது கிராண்ட்ஸ்லாம் இரட்டைய -ர் பட்டத்தை வென்ற முதல் இந்தியப்பெண்மணி என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். ஒரு இடைவெளி -க்குப் பிறகு, ஃபெட் கோப்பை இதய விருதை வென்று சாதனை படைத்தார். சமீபத்தில் அவர் 2022 சீசனுக்குப் பிறகு ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

7. 2022 ஜனவரி மாதத்தில், எந்த நாட்டின் தலைவர் உலகளாவிய ரேட்டிங் சர்வேயில் மிகவும் பிரபலமான தலைவராக முதலிடம் பிடித்தார்?

அ) சீனா

ஆ) இந்தியா 

இ) ரஷ்யா

ஈ) அமெரிக்கா

  • இந்தியப்பிரதமர் மோடி 71 சதவீத ஒப்பளிப்பு மதிப்பீட்டுடன் உலகத்தலைவர்களிடையே மிகவும் பிரபலமான தலைவராக உலகளாவிய ரேட்டிங் சர்வேயில் முதலிடம் பிடித்தார். இந்தக் கருத்துக்கணிப்பு மார்னிங் கன்சல்ட் அரசியல் நுண்ணறிவு நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. 2022 ஜனவரி 13-19 வரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இது அமைந்துள்ளது.
  • மெக்ஸிக்கோ அதிபர் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோ 66% மதிப்பீட்டுடன் இரண்டாவது இடத்தையும், இத்தாலிய பிரதமர் மரியோ ட்ராகி 60% மதிப்பீட்டுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

8. ‘ஸ்வச்சதா ஸ்டார்ட்-அப் சவாலை’ அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சகம் எது?

அ) வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் 

ஆ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

இ) விவசாய அமைச்சகம்

ஈ) உள்துறை அமைச்சகம்

  • வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமானது தூய்மை மற்றும் கழிவு மேலாண்மை துறையை மாற்றி அமைக்க புதுமையான ஸ்டார்ட்-அப்களை ஊக்குவிக்க ‘ஸ்வச்சதா ஸ்டார்ட்-அப் சவாலை’ தொடங்கியது. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) மற்றும் Agence Française de Developpement (AFD) ஆகியவற்றுடன் இணைந்து இது தொடங்கப்பட்டுள்ளது.
  • இது தூய்மை இந்தியா இயக்கம்-நகர்ப்புறம் 2.0’இன்கீழ், நிறுவன வளர்ச்சியை ஊக்குவிக்க முயல்கிறது.

9. 2022 ஜனவரி மாத நிலவரப்படி, கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு எவ்வகையான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது?

அ) அவசரகால பயன்பாட்டுக்கான அங்கீகாரம்

ஆ) நிபந்தனையுடனான சந்தை அங்கீகாரம் 

இ) அத்தியாவசிய சந்தை அங்கீகாரம்

ஈ) முழுமையான சந்தை அங்கீகாரம்

  • சீரம் இந்தியா நிறுவனத்தின் ‘கோவிஷீல்டு’ மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவாக்ஸின்’ COVID-19 தடுப்பூசிகளுக்கு மருந்து ஒழுங்காற்றுநர் “நிபந்தனையுட -ன் கூடிய சந்தை அங்கீகாரத்தை” வழங்கியுள்ளது.
  • கடந்தாண்டு ஜனவரி முதல், இவ்விரண்டு தடுப்பூசிகளும் “அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தின்கீழ் கிடைத்து வருகின்றன. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தரவை அந்நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இது முன்னர் 15 நாட்களுக்கு ஒருமுறையாக இருந்தது. இது முழுமையான சந்தை (Full Market) அங்கீகாரத்திலிருந்து வேறுபட்டது.

10. கோடைகால முகாமுக்கு விவசாயம் குறித்த தேசிய கருத்தரங்கின் மற்றொரு பெயர் என்ன?

அ) ரபி மாநாடு

ஆ) சயத் மாநாடு 

இ) கரீப் மாநாடு

ஈ) பணப்பயிர் மாநாடு

  • 2021-22 கோடைகால முகாமுக்கு வேளாண்மைகுறித்த 4ஆவது தேசிய கருத்தரங்கு காணொலி காட்சிமூலம் தொடங்கியது. இது ‘சயத் மாநாடு’ என்றும் அழைக்கப்படு -கிறது. கரீப் மற்றும் ராபி பருவங்களுக்கு இடையே ‘சயத் பயிர்கள்’ பயிரிடப்படுகின்றன.
  • இந்த மாநாட்டில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர குமார் தோமர் கலந்துகொண்டார். முந்தைய பயிர் பருவங்களில் பயிரின் செயல்திறனை மறுபரிசீலனை செய்வதும், மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து அடுத்த கோடை பருவத்திற்கான பயிர்வாரியான இலக்குகளை நிர்ணயிப்பதும் இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ‘பத்ம’ விருதுகளால் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தவர்கள்

* சதிராட்டத்தில் சாதனை படைத்த முத்து கண்ணம்மாள் *தூய்மையே வெல்லும் என உழைக்கும் தாமோதரன்

தங்களது துறைகளில் அரிய சாதனைகளை செய்திருந்தாலும் அதிகம் அறியப்படாத இருதமிழர்களை ‘பத்மஸ்ரீ’ விருதுக்கு நடுவணரசு தேர்ந்தெடுத்துள்ளது.

பரதநாட்டியத்தின் முன்னோடியான சதிராட்டம் என்னும் நடனத்தில் கைதேர்ந்த விராலிமலையைச் சேர்ந்த முத்து கண்ணாம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த 70 வருடங்களுக்கும் மேலாக 1,000’க்கும் மேற்பட்ட நடனம் மற்றும் இசைநிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளார். 84 வயதான இவர், இளங்கலைஞர்களுக்கு இன்னமும் பயிற்சியளிக்கிறார்.

உயிரோடிருக்கும் ஒரே மற்றும் கடைசி தேவதாசியான முத்துக்கண்ணாம்மாள், 7ஆம் தலைமுறை சதிர் கலைஞர் ஆவார். இந்தக் கலையைக்காக்க பல்வேறு முயற்சிகளை அவர் எடுத்துவருகிறார். அவரது சேவையை பாராட்டும் விதமாக கலைப்பள்ளியில் அவரது சிலை ஒன்றை மூத்த சிற்பி ஜி சந்திரசேகரன் நிறுவியுள்ளார்.

தூய்மைப்பணிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள 57 வயதான எஸ் தாமோதரன், நான்கு மாநிலங்களில் ஆறு இலட்சம் குறைந்த விலையிலான குட்டைக்கழிவறை அமைப்புகளைக் கட்டமைத்துள்ளார்.

இந்தியாவின் தெற்குப்பகுதியிலுள்ள கிராமங்கள் மற்றும் குடிசைப்பகுதிகளில் தண்ணீர், கழிவுநீர்மேலாண்மை மற்றும் சுகாதாரத்திற்கான அணுகலுக்கு அவரது முயற்சிகள் வழிவகுத்தன.

இந்தியாவிலேயே முதல்முறையாக, வசதிகளற்ற மக்களுக்காக சமூக மேலாண்மை முறையில் நடத்தப்படு -ம் கட்டணக் கழிவறை அமைப்புகளை ‘கிராமாலயா’ என்னும் தனது முன்முயற்சி மூலம் அறிமுகப்படுத்தினார்.

மகளிர் சுய உதவிக்குழுக்களை நிறுவி கழிவறைகள் தூய்மையாக பேணப்படுவதை உறுதி செய்தார்.

2. இலங்கைக்கு இந்தியா `3,737 கோடி கடன் வழங்க ஒப்பந்தம் கையெழுத்து

இலங்கைக்கு அவசரகால உதவியாக `3,737 கோடி கடன்வழங்க முன்வருவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் G L பீரிசுக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கடந்த மாதம் எழுதிய கடிதத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம், எந்த ஒரு இந்திய வினியோகஸ்தர்மூலமும் எரிபொருளை இலங்கை இறக்குமதி செய்ய முடியும் என அந்நாட்டு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியா தற்போது வழங்கும் கடன், அந்நாட்டின் அந்நியச் செலாவணி நெருக்கடியை ஓரளவு தணிக்கும் என்று கருதப்படுகிறது. இலங்கையின் அந்நியச் செலாவணி இருப்பை மேம்படுத்தும் விதமாக, பணப்பரிமாற்ற திட்டத்தில் `2,990 கோடி வழங்கவும் இந்தியா கடந்த வாரம் ஒப்புதல் தெரிவித்தது.

இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து தலா 40 ஆயிரம் டன் பெட்ரோல், டீசலை வாங்க இலங்கை நேற்று முன்தினம் முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

3. தெற்கு ரயில்வேவின் 10 புதிய பாதை திட்டங்கள்: தலா `1,000 மட்டுமே ஒதுக்கீடு

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2022-23ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் தெற்கு ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு `7,114 கோடியே 45 லட்சத்து 69 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் புதிய பாதை திட்டங்களுக்கு `59 கோடியே 10 ஆயிரம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் 8 திட்டங்கள் உள்பட 10 புதிய பாதை திட்டங்களுக்கு தலா `1,000 மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அகலப்பாதை திட்டப்பணிகளுக்கு `346 கோடியே 80 லட்சத்து ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரட்டை பாதை திட்டங்களுக்கு `381 கோடியே 51 லட்சத்து ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, இந்த திட்டங்களுக்காக, `1,064 கோடியே 34 லட்சம் 58 ஆயிரம் வெளிமூலதனம் மூலமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய பாதை திட்டம்: தெற்கு ரயில்வே பகுதிக்குட்பட்ட 11 புதிய திட்டங்களில் 2 திட்டங்கள் கேரளப் பகுதியில் திருநின்னவாயா-குருவாயூர் (35 கிமீ), அங்கமாலி-சபரிமலா (116 கிமீ) ஆகிய திட்டங்கள் வருகின்றன. மீதம் 9 திட்டங்கள் தமிழக பகுதிகளில் வருகின்றன.

இதில் திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை திட்டம் (70 கிமீ), திண்டிவனம்-நகரி (179.2 கிமீ), அத்திப்பட்டு-புத்தூா் (88.30 கிமீ), ஈரோடு-பழனி (91.05 கிமீ), சென்னையில் இருந்து மாமல்லபுரம் வழியாக கடலூர் (179.28 கிமீ), மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி (143.5 கிமீ), ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி (60 கிமீ), மொரப்பூர்-தருமபுரி (36 கிமீ) ஆகிய 8 திட்டங்களுக்கு தலா `1,000 மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோல, கேரளத்தில் இரண்டு புதிய பாதை திட்டங்களுக்கும் தலா `1,000 ஒதுக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம்-தனுஷ்கோடி (17.2 கிமீ) புதிய பாதை திட்டத்துக்கு `59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அகலப்பாதை திட்டம்: திருச்சிராப்பள்ளி-காரைக்கால் திட்டத்தில், நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி-திருத்துறைப்பூண்டி (வழி: திருக்குவளை) புதிய பாதை திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி `121.80 கோடி ஆகும். இந்தத் திட்டத்தில் திருச்சிராப்பள்ளி-காரைக்கால் அகலப் பாதை பணிகள் முடிந்து ரயில்கள் இயக்கப்படுவதால், இந் நிதி நாகைப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி புதிய பாதை திட்டத்துக்கு கிடைக்கும். மேலும், இத்திட்டம் வேகமடையும்.

மன்னார்குடி-பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டை-தஞ்சை ஆகிய புதிய பாதை திட்டங்களும், திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி அகலப்பாதை திட்டமும் உள்ளடக்கிய மயிலாடுதுறை-திருவாரூர்-காரைக்குடி அகலப்பாதை திட்டத்துக்கு `75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில், மயிலாடுதுறை-காரைக்குடி அகலப்பாதை திட்டப்பணிகள் முடிந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி திட்டப்பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைய உள்ளது. இதற்கு இந்நிதி பயன்படுத்தப்படும். அகலப்பாதை திட்டப்பணிகளு -க்கு மொத்தம் `346 கோடியே 80 லட்சத்து ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இரட்டைபாதை திட்டம்: சென்னை கடற்கரை-கொருக்குப் பேட்டை இடையே 3ஆவது பாதை திட்டத்துக்கு `10 கோடியும், சென்னை கடற்கரை-அத்திப்பட்டு இடையே 4ஆவது பாதை (22 கிமீ) `25 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு-விழுப்புரம் (103 கிமீ) பாதையுடன் தாம்பரம்-செங்கல்பட்டு 3ஆவது பாதையில் மின்மயமாக்குதல் திட்டத்துக்கு `25 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஒமலூர்-மேட்டூர் அணை (29.03) இரட்டை பாதை மற்றும் மின்மயமாக்கும் திட்டப்பணிக்கு `11 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணிகள்: பழைய தண்டவாளங்களை புதுப்பித்தல் பணிக்கு `1,470 கோடியும், பாலப் பணிகளுக்கு `105 கோடியே 91 லட்சத்து 22 ஆயிரமும், சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பணிக்கு `189 கோடியே 76 லட்சத்து 98 ஆயிரமும், பயணிகள் வசதிக்காக `327 கோடியே 77 லட்சத்து 95 ஆயிரமும், இதர மின்னணு பணிகளுக்கு `30 கோடியே 8 லட்சத்து 78 ஆயிரமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

4. தமிழகத்தில் 50,296 மின்சார வாகனங்கள் இதுவரை விற்பனை

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தமிழகத்தில் மின்சார வாகனங்களின் விற்பனை நிலவரம் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதில், “சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து வழி முறைகளை மேம்படுத்துவதற்கும், போக்குவரத்துத் துறையின் கரியமில வாயு மையத்தை போக்குவதற்கும், மாற்று எரிபொருட்களை அறிமுகப்படுத்துவதற்காக வெகுஜன உமிழ்வு தரநிலைகளைச் சாலை போக்குவரத் -து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்துள்ளது.

எத்தனால் கலந்த பெட்ரோல் (இ-10, இ-12, இ-15, இ-20), நெகிழ்வு எரிபொருள் (இ 85 அல்லது இ 100) மற்றும் டீசல் வாகனங்களுக்கான எத்தனால் கலவை (இடி 95), பயோடீசல், உயிரி எரிவாயு, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, மெத்தனால் (எம் 15 அல்லது எம் 100) இரட்டை எரிபொருள், ஹைட்ரஜன் எரிபொருள் உள்ளிட்டவை இதில் அடங்கும். மேலும், மின்சாரப் போக்குவரத்தை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் எடுத்து வருகிறது.

நாட்டில் 9,66,363 மின்சார வாகனங்கள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் இரு சக்கர வாகனங்கள் 2,82,542, மூன்று சக்கர வாகனங்கள் 6,47,186, நான்கு சக்கர வாகனங்கள் 26,335, சரக்கு வாகனங்கள் 3,036, பொதுச் சேவை வாகனங்கள் 2,039, சிறப்புப் பிரிவு வாகனங்கள் 410, அவசரகால ஊர்திகள் அல்லது அமரர் ஊர்திகள் 6, கட்டுமான உபகரண வாகனங்கள் 397, இதர வாகனங்கள் 4412 ஆகும்.

தமிழ்நாட்டில் 50,296 மின்சார வாகனங்கள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் இரு சக்கர வாகனங்கள் 44,302, மூன்று சக்கர வாகனங்கள் 4,470, நான்கு சக்கர வாகனங்கள் 13, சரக்கு வாகனங்கள் 1,281, பொது சேவை வாகனங்கள் 37, இதர வாகனங்கள் 193 ஆகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. சாம்பல் நீர் எனப்படும் கழிவு நீர் மேலாண்மையில் வழி காட்டும் தமிழ்நாட்டின் பாப்பாங்குழி கிராமம்

சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தும் வகையில் வீடுகளின் சமையலறைகள் மற்றும் குளியல் பகுதிகளில் இருந்து நிரம்பி வழியும் அல்லது தேங்கி நிற்கும் சாம்பல் நீர் பிரச்சினையைத் தீர்க்க, தனி நபர் மற்றும் சமூக கழிவு நீர் ஊறவைக்கும் குழிகளை தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள பாப்பாங்குழி கிராமப் பஞ்சாயத்து அமைத்துள்ளது.

இரண்டு குடியிருப்பு பகுதிகளைக் கொண்ட பாப்பாங்குழி கிராமப் பஞ்சாயத்தில் 254 குடும்பங்களில் 1016 பேர் வசிக்கின்றனர். தலா 900 மீட்டர் நீளமுள்ள 13 தெருக்களும், ஒவ்வொன்றிலும் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலைத் தொட்டிகளும் இருந்தன.

கடந்த காலத்தில், முறையான சுத்திகரிப்பு செயல்முறை இல்லாத நிலையில், கிராமப்புற வீடுகளில் இருந்து தெருக்கள், காலி நிலங்கள் அல்லது நீர்நிலைகளில் கழிவு நீர் வெளியேற்றப்பட்டதன் விளைவாக நீர் மாசுபடுதல், நிலம் மாசுபடுதல் மற்றும் நீரால் பரவும் நோய்கள் ஏற்பட்டன.

இதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் ஆதரவுடன் 93 வீடுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் தனிநபர் கழிவு நீர் ஊறவைக்கும் குழிகள் உருவாக்கப்பட்டன மற்றும் 161 குடும்பங்கள் கழிவுநீர் கால்வாயுடன் இணைக்கப்பட்டன.

மேலும், அப்புறப்படுத்தும் இடத்தில் இரண்டு கிடைமட்ட கழிவு நீர் ஊறவைக்கும் குழிகள் அமைக்கப்பட்டு, வடிகட்டிய நீர் பெரிய ஏரி மற்றும் ராஜந்தாங்கல் ஏரியின் நீர்நிலைகளில் விடப்பட்டது.

இந்த முன்முயற்சிகள் பஞ்சாயத்தின் தூய்மை நடவடிக்கைகளுக்குப் பெரும் பங்களிப்பை அளித்து, திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத கிராமமாகவும் பாப்பாங்குழியை ஆக்கியுள்ளன.

6. பாரத் மாலா திட்டத்தின் கீழ் பொருளாதார பெருவழித்தடங்கள்: மாநிலங்களவையில் கட்கரி தகவல்

நெடுஞ்சாலைகள் மற்றும் பலவகை சரக்குப் போக்கு வரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கான பாரத் மாலா திட்டத்தின் முதல்கட்டத்தில், 9,000 கி.மீ. தொலைவுக்கு பொருளாதார பெருவழித்தடங்களை அமைக்க வகை செய்யப்பட்டுள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு, எழுத்து மூலம் அளித்த பதிலில் இத்தகவலைத் தெரிவித்துள்ளாா்.

இதில், 6,087 கிமீ தொலைவு திட்டங்களுக்கு ஒப்புதல், ஒப்பந்தப்பணி வழங்கப்பட்டிருப்பதுடன், எஞ்சிய தொலை -வுள்ள சாலைகளுக்கு அடுத்த இரு நிதியாண்டுகளில் அனுமதியளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதுவரை, 1,613 கிமீ பணிகள் முடிக்கப்பட்டு, எஞ்சிய தொலைவுக்கா -ன பணிகளை 2026-27ஆம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் தனது பதிலில் கட்கரி தெரிவித்துள்ளார்.

7. அமெரிக்கா: உலகின் மிக நீண்ட மின்னல்

அமெரிக்காவில் கடந்த 2020ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மின்னல், உலகின் மிகநீண்ட மின்னலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜெனீவாவில் இயங்கி வரும் உலக வானியல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அமெரிக்காவின் மிஸிஸிபி, லூசியானா, டெக்ஸாஸ் மாகாணங்களிடையே மிகநீளமான மின்னல் கடந்த 2020 ஏப்.29ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது.

768.8 கிமீ நீளத்துக்கு ஏற்பட்ட இந்த மின்னல் உலகில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மின்னல்களிலேயே அதிக நீளமாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

8. அயல்நாடு-வெளிமாநிலத்தவர் தமிழ்மொழி கற்க தனி பரப்புரைக் கழகம்

அயல்நாடுகள், வெளிமாநிலங்களில் வசிக்கும் தமிழர்களுக்குத் தமிழ் கற்பிக்க தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் பரப்புரைக் கழகம் உருவாக்கப்பட உள்ளது. இதற்கான நிதிகளுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து, மாநில அரசு வெளியிட்ட உத்தரவு:

வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள், தமிழ்மொழியை கற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்துதரப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் தமிழ் மொழியை கற்பிக்கும் அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கவும், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதற்கென தமிழ் இணையக்கல்விக்கழகத்தில் இருந்து தமிழ்ப்பரப்புரை கழகம் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கழகத்தின் மூலமாக, தமிழ் மொழியின் பண்பாடு, கலாசாரப் பரப்புரை, ஒலி-ஒளி உச்சரிப்புடன் பாடப் புத்தகம் வடிவமைப்பு, தமிழ் கற்பதற்கான வசதிகள் ஏற்படுத்துதல், இணையதளத்தில் தமிழ் ஆசிரியா்கள் மூலம் கற்றுத் தருதல், தமிழ் கற்பிக்கும் அமைப்புகளுக்கு நிதியுதவி அளித்தல், தமிழாசிரியருக்கான பயிற்சிகள் அளித்தல், பயிற்சிபெற்ற ஆசிரியர்களை அனுப்பி வைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகளுக்கா -க `1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. What is the area of space around which the James Webb Space Telescope orbits?

A) Lagrange point L2 

B) Curie Point

C) Newton Point

D) CV Raman Point

  • James Webb Space Telescope reached its final destination, at around 15 lakh km from Earth. The telescope will orbit in an area of space known as a Lagrange point, where the gravitational pull from the Sun and Earth will be balanced by the centrifugal force of the rotating system.
  • The points were first theorized by Italian French mathematician Joseph–Louis Lagrange.

2. Scientists from IIT Kharagpur have developed a portable device for detecting which disease?

A) Oral Cancer 

B) Breast Cancer

C) Prostate Cancer

D) Lung Cancer

  • Scientists from IIT Kharagpur have developed a portable, inexpensive device for detecting oral cancer. The estimated cost per device is within USD500. The new technology enables a clinician in a community health centre detect potential vulnerable cases early enough, during the first examination.

3. ‘MY2022’ application, which was seen in the news, is associated with which country?

A) USA

B) Russia

C) China 

D) Israel

  • MY2022 is the name of the application used by athletes and others attending the upcoming Winter Games in Beijing. As per the recent report by Citizen Lab, an internet watchdog group, the application has flawed the encryption that would make sensitive data and other data communicated through it vulnerable to being hacked.

4. Who has been announced as the first UNDP India Youth Climate Champion?

A) Prajakta Koli 

B) Licypriya Kangujam

C) Dia Mirza

D) A Disha Ravi

  • The United Nations Development Programme–India announced Content creator and actor Prajakta Koli as their first UNDP India Youth Climate Champion. The UNDP recognised her contribution towards mental health, women’s rights and girl child education through various global social campaigns.

5. As per recent research by Oxford University Press, which has been chosen as Children’s word of the year for 2021?

A) Depression

B) Virus

C) Anxiety 

D) Teacher

  • ‘Anxiety’ has been chosen by children as their word of the year for 2021, according to new research from Oxford University Press.
  • The research also highlights that Teachers have chosen “resilience” as their word. Oxford University Press analysed the evolution of children’s language, and how they use it to reflect their emotions and experiences.

6. Who is the first Indian woman tennis player to rise to the top spot in either singles or doubles?

A) Ankita Raina

B) Sania Mirza 

C) Karman Thandi

D) Riya Bhatia

  • Sania Mirza was the Indian woman tennis player to rise to the top spot in either singles or doubles, when she claimed the No 1 place in Doubles in 2015. She also holds the record of the first Indian woman to lift a Grand slam doubles title, when she won at the Wimbledon.
  • After a break, she created a record by winning the Fed Cup heart Award. Recently, the ace tennis player has announced retirement after 2022 season.

7. Which country’s head topped the global rating survey as the most popular leader in January 2022?

A) China

B) India 

C) Russia

D) USA

  • Indian Prime Minister Narendra Modi topped the global rating survey among the world leaders as the most popular leader, with an approval rating of 71 percent. The survey was released by Morning Consult Political Intelligence and it is based on data collected from January 13–19, 2022. Mexican President Andrés Manuel López Obrado came second with 66 percent rating and Italian Prime Minister Mario Draghi ranked third with 60 percent rating.

8. Which Union Ministry launched the ‘Swachhata Start–Up Challenge’?

A) Ministry of Housing & Urban Affairs 

B) Ministry of Rural Development

C) Ministry of Agriculture

D) Ministry of Home Affairs

  • Ministry of Housing & Urban Affairs (MoHUA) launched the Swachhata Start–Up Challenge to encourage innovative start–ups to transform the sanitation and waste management sector.
  • The challenge has been launched in partnership with Department of Promotion of Industry and Internal Trade (DPIIT) and Agence Française de Développement (AFD). It seeks to promote enterprise development under Swachh Bharat Mission–Urban 2.0 (SBM–U 2.0).

9. What is the type of authorisation granted to Covishield and Covaxin vaccines, as of January 2022?

A) Emergency Use Authorisation

B) Conditional Market Authorisation 

C) Essential Market Authorisation

D) Full Market Authorisation

  • The drug regulator has granted Serum Institute of India’s Covishield and Bharat Biotech’s Covaxin Covid–19 vaccines “conditional market authorisation”. Since January last year, the two vaccines have been available under “Emergency Use Authorisation” (EUA).
  • They have to submit the safety and efficacy data every six months, under the new authorisation against 15 days earlier. This is different from the Full Market Authorisation.

10. What is the other name of ‘National Conference on Agriculture for Summer Campaign’?

A) Rabi Conference

B) Zaid Conference

C) Kharif Conference

D) Cash Crop Conference

  • The National Conference on Agriculture for Summer Campaign 2021–22 was held through video conference. It is also called as Zaid Conference. Zaid crops are grown between Kharif and Rabi Seasons. Union Agriculture Minister Narendra Kumar Tomar attended the conference. The objective is to review the crop performance during the preceding crop seasons and fix crop–wise targets for the next summer season in consultation with State Governments.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!