TnpscTnpsc Current Affairs

31st March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

31st March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 31st March 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. காசநோயை ஒழிப்பதற்கு தரவு சார்ந்த ஆராய்ச்சியான, ‘Dare2eraD TB’ஐத் தொடங்கியுள்ள நாடு எது?

அ) வங்காளதேசம்

ஆ) இந்தியா 

இ) நேபாளம்

ஈ) சீனா

  • மத்திய அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங், உலக காசநோய் நாளன்று, உயிரி தொழில்நுட்பத் துறையின், ‘Dare2eraD TB’ என்னும் காசநோயை ஒழிப்பதற்கான தரவு அடிப்படையிலான ஆராய்ச்சியைத் தொடங்கினார். ‘Dare2eraD TB’ என்பது, இந்திய காச நோய் மரபணு கண்காணிப்பு கூட்டமைப்பு, இந்திய காச நோய் அறிவுசார் மையம் போன்ற முன்முயற்சிகளை உள்ளடக்கிய ஒரு திட்டமாகும்.

2. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் எத்தேதியை, ‘தேசிய டால்பின் நாள்’ என அறிவித்துள்ளது?

அ) ஏப்ரல்.5

ஆ) மே.5

இ) ஜூலை.5

ஈ) அக்டோபர்.5 

  • மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமானது அக்டோபர்.5ஆம் தேதியை தேசிய டால்பின் நாள் என அறிவித்துள்ளது. இந்த ஆண்டு (2022) முதல் ஆண்டுதோறும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படும். தேசிய டால்பின் நாளை அறிவிப்பதற் -கான முடிவு தேசிய வனவுயிரிகள் வாரியத்தின் நிலைக் குழுவால் எடுக்கப்பட்டது.

3. சமீபத்தில் கடற்படையின் எந்தக்கப்பலுக்கு மதிப்புமிக்க ‘குடியரசுத்தலைவரின் வண்ண விருது’ வழங்கப்பட்டது?

அ) INS வல்சுரா 

ஆ) INS கோமதி

இ) INS பிரம்மபுத்திரா

ஈ) INS பெட்வா

  • இந்தியக்குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த், ‘INS வல்சுரா’ கப்பலுக்கு மதிப்புமிக்க ‘குடியரசுத்தலைவரின் வண்ண விருதை’ வழங்கினார். இரண்டாம் உலகப் போரின்போது ராயல் இந்திய கடற்படைக்காக 1942இல் இக்கப்பல் உருவாக்கப்பட்டது. இந்தியா குடியரசாக ஆன பிறகு, 1950 ஜூலை 01-இல், இக்கப்பலுக்கு ‘INS வல்சுரா’ எனப் பெயர் சூட்டப்பட்டது.

4. ‘தனியுரிமை மற்றும் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு குறித்த பேரறிவிப்பை’ வெளியிட்ட சங்கம் எது?

அ) G-20

ஆ) ஐரோப்பிய ஒன்றியம் 

இ) G-7

ஈ) NATO

  • ஐரோப்பிய ஒன்றியம் (EU), ஆஸ்திரேலியா, கொமொரோஸ், இந்தியா, ஜப்பான், மொரிஷியஸ், நியூசிலாந்து, தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகியவற்றின் கூட்டுப் பிரகடனத்தை ஐரோப்பிய வெளியக நடவடிக்கை சேவை அறிவித்தது.
  • ‘தனியுரிமைபற்றிய பிரகடனம் மற்றும் தனிப்பட்ட தரவுக
    -ளின் பாதுகாப்பு’ – டிஜிட்டல் சூழலில் நம்பிக்கையை வலுப்படுத்துவதோடு உயர்நிலை தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமையின் தரங்களை மேம்படுத்துவதில் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதை இது தனது நோக்கம் எனக் கொண்டுள்ளது.

5. மத்திய பட்ஜெட்டின்படி, அனல்மின் நிலையங்களில் எத்தனை % பயோமாஸ் துகள்கள் பயன்படுத்தப்படும்?

அ) 2-3%

ஆ) 3-5%

இ) 5-7% 

ஈ) 7-9%

  • 2022-23 மத்திய பட்ஜெட்டில் கூறியபடி, அனல்மின் நிலையங்களில் 5-7% பயோமாஸ் துகள்கள் பயன்படுத்த -ப்படும். இதன் விளைவாக ஆண்டுதோறும் 38 MMT CO2 வெளியேற்றம் மீதப்படும்.
  • “நிலக்கரி அடிப்படையிலான மின்னுற்பத்தி நிலையங்க
    -ளில் இணை உலையூட்டிமூலம் மின்னுற்பத்திக்கான உயிரிப்பொருட்களைப் பயன்படுத்துவதற்கான திருத்தப்ப -ட்ட கொள்கையின்” கீழ், நிலக்கரியுடன் வேளாண் எச்சங்களால் செய்யப்பட்ட உயிரித் துகள்களை கலப்பதை எரிசக்தி அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது. இவ்வாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஈராண்டுகளுக்குப்பிறகு இது முழு சதவீதமான 7%-த்தை எட்டியிருக்கும்.

6. உலக காற்று தர அறிக்கை – 2022இன்படி, தொடர்ந்து 4ஆம் ஆண்டாக உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகரம் என உள்ள நகரம் எது?

அ) டோக்கியோ

ஆ) புது தில்லி 

இ) பெய்ஜிங்

ஈ) நியூயார்க்

  • சுவிஸ் நிறுவனமான ‘IQAir’ தயாரித்த உலக காற்று தர அறிக்கையின்படி, புது தில்லி தொடர்ந்து நான்காவது ஆண்டாக உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகராக உள்ளது. இவ்வறிக்கையின்படி, எந்த நாட்டாலும் 2021-இல் WHOஆல் நிர்ணயிக்கப்பட்ட காற்றின் தரத்தை பெற இயலவில்லை. 2021ஆம் ஆண்டிற்கான மிகமோசமான காற்று தரத்துடன் 35 இந்திய நகரங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அதில், பிவாடி (ராஜஸ்தான்) பட்டியலில் முதலிடத்திலும், அதைத்தொடர்ந்த இடத்தில் காஜியாபாத் (உத்தர பிரதேசம்) நகரம் 2ஆம் இடத்திலும் உள்ளது.

7. அண்மையில், 53.2°C வெப்பநிலையுடன் புவியின் மிக வெப்பமான இடமாக மாறிய நாடு எது?

அ) ஐக்கிய அரபு அமீரகம்

ஆ) குவைத் 

இ) ஓமன்

ஈ) மாலத்தீவுகள்

  • சமீபத்தில் 53.2°C (127.7°F) வெப்பநிலையுடன் பூமியின் மிகவெப்பமான இடமாக குவைத் மாறியது. சமீபத்திய ஆய்வின்படி, அதன் தலைநகரத்தில் நிகழ்ந்த வெப்பம் தொடர்பான இறப்புகளில் 67% காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதாகும். உலக வளக் கழகத்தின் கூற்றுப்படி, அந்த நாடு மின்சாரத்திற்காக தொடர்ந்து எண்ணெயை எரித்து வருகிறது. மேலும் தனிநபர் CO2 உமிழ்வு பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளது.

8. சமீபத்தில் தனது டென்னிஸ் வாழ்விலிருந்து ஓய்வுற்ற ஆஷ்லி பார்டி சார்ந்த நாடு எது?

அ) ஆஸ்திரேலியா 

ஆ) அமெரிக்கா

இ) இத்தாலி

ஈ) சுவிச்சர்லாந்து

  • உலகின் நெம்பர்.1 டென்னிஸ் வீராங்கனையான ஆஷ்லி பார்டி தனது 25ஆம் வயதில் தொழிற்முறை டென்னிஸில் இருந்து ஓய்வுறுவதாக அறிவித்தார். ஆஷ்லி பார்டி இந்த ஆண்டு ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலிய ஓப்பன் உட்பட 3 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் போட்டிகளில் வென்றார்.

9. “The Little Book of Joy” என்ற நூலின் ஆசிரியர்கள் யார்?

அ) தலாய் லாமா மற்றும் டெஸ்மண்ட் டுட்டு 

ஆ) சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாரா

இ) பராக் ஒபாமா மற்றும் மிச்செல் ஒபாமா

ஈ) சுதா மூர்த்தி மற்றும் நாராயண மூர்த்தி

  • 2016ஆம் ஆண்டில், பேராயர் டெஸ்மண்ட் டுட்டு மற்றும் தலாய் லாமா ஆகியோர் இணைந்து, “The Book of Joy: Lasting Happiness in a Changing World” என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதினர். இந்த நூல் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றுள்ளதோடு 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

10. ‘இராஜீவ் காந்தி பூமிஹீன் கிரிஷி மஸ்தூர் நியாய் யோஜனா’ சார்ந்த மாநிலம் எது?

அ) பஞ்சாப்

ஆ) இராஜஸ்தான்

இ) சத்தீஸ்கர் 

ஈ) மணிப்பூர்

  • சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல், 2022-23ஆம் ஆண்டிற்கான `1,04,000 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது, முந்தைய ஆண்டை விட 7% அதிகமாகும்.
  • மாநில அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பதாகவும், சமஉ-க்களுக்கு வழங்கப் -படும் உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதியை இரட்டிப்பாக்கு -வதாகவும் அவர் அறிவித்தார். இராஜீவ் காந்தி கிசான் நியாய் திட்டத்திற்கு `6,000 கோடி நிதி ஒதுக்கீடு மற்றும் இராஜீவ்காந்தி பூமிகீன் கிரிஷி மஸ்தூர் நியாய் யோஜனா திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு `6,000 முதல் `7,000 வரை ஊதியம் உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. நிகழாண்டில் ஏழு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படும்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

நிகழாண்டில் இஸ்ரோ ஏழு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய அறிவியல் & தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், “PSLV C-52 ஏவுகலம்மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் EOS-4 கடந்த பிப்.14-இல் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.

விண்வெளியின் சுற்று வட்டப்பாதையில் செயல்படுவதற்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 2ஆம் தலைமுறை நானோ செயற்கைக்கோள்களில் முதலாவதான INS-2டிடி-உம் இதனுடன் அனுப்பப்பட்டது. இதேபோல, நிகழாண்டில் இஸ்ரோ ஏழு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.

2. மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்திய அகாதெமியின் உயரிய அங்கீகாரம்

மூத்த தமிழ் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, சாகித்திய அகாதெமியின் உயரிய பெல்லோஷிப் அங்கீகாரம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

மூத்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரும் தமிழ்ப் பேராசிரியருமான இந்திரா பார்த்தசாரதி, சாகித்திய அகாதெமியின் மதிப்புக்குரிய 21 உறுப்பினர்களில் ஒருவராக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தோ்ந்தெடுக்க -ப்பட்டார். 91 வயதான இவர் சாகித்திய அகாதெமி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இலக்கியத்துக்கு நீண்டகாலமாகத் தொண்டாற்றிய எழுத் -தாளர்களுக்கு வழங்கப்படும் சாகித்திய பெல்லோஷிப் அங்கீகாரம் தமிழ்நாட்டைச் சேர்ந்த இராஜாஜி, தெ பொ மீனாட்சி சுந்தரனார், கே ஆர் சீனிவாசன், ஜெயகாந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது மூத்த தமிழ் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

1. Which country launched “Dare2eraD TB”, a Data–Driven Research to eradicate TB?

A) Bangladesh

B) India 

C) Nepal

D) China

  • Union Minister for Science and Technology Dr. Jitendra Singh launched the Data–Driven Research to Eradicate TB named “Dare2eraD TB” by the Department of Biotechnology, on World TB Day.
  • “Dare2eraD TB” will be the umbrella TB program comprising initiatives like, Indian Tuberculosis Genomic Surveillance Consortium, Indian TB Knowledge Hub – Webinar Series.

2. Union Environment Ministry has designated which day as ‘National Dolphin Day’?

A) April 5

B) May 5

C) July 5

D) October 5 

  • The Union Environment Ministry has designated October 5 as National Dolphin Day, to be observed annually from this year. The decision to designate a National Dolphin Day was taken by the Standing Committee of the National Board for Wildlife.

3. Which Naval Ship was recently presented the prestigious President’s Colour?

A) INS Valsura

B) INS Gomati

C) INS Brahmaputra

D) INS Betwa

  • The President of India Ram Nath Kovind presented the prestigious President’s Colour to INS Valsura.
  • The advanced Torpedo Training Facility was created in 1942 for the Royal Indian Navy during World War–II. After India became a Republic, it was renamed as INS Valsura on 01 Jul 1950.

4. Which global association released the ‘Declaration on Privacy and the protection of personal data’?

A) G–20

B) European Union 

C) G–7

D) NATO

  • European External Action Service (‘EEAS’) announced a joint declaration by the EU, Australia, Comoros, India, Japan, Mauritius, New Zealand, South Korea, Singapore, and Sri Lanka. The ‘Declaration on Privacy and the protection of personal data’–Strengthening trust in the digital environment aims to improve international cooperation to promote high data protection and privacy standards.

5. As per the Union Budget, what per cent of biomass pellets will be used in thermal power plants?

A) 2–3%

B) 3–5%

C) 5–7% 

D) 7–9%

  • The Union Budget 2022–23 proposed that 5–7% biomass pellets will be used in thermal power plants, resulting in CO2 saving of 38 MMT annually. The Ministry of Power has mandated blending of biomass pellets made primarily of agro residue along with coal, under the “Revised Policy for Biomass Utilization for power generation through Co–firing in Coal based Power Plants”. The obligation shall increase to 7% with effect from two years after the date of issue of this order.

6. Which is the world’s most polluted capital city for the 4th consecutive year, as per the World Air Quality Report 2022?

A) Tokyo

B) New Delhi 

C) Beijing

D) New York

  • According to the World Air Quality Report, prepared by Swiss organisation IQAir, New Delhi continues to be the world’s most polluted capital city for the fourth consecutive year.
  • As per the report, no country managed to meet the WHO’s air quality standard in 2021. The index listed 35 Indian cities with the worst air quality tag for 2021 with Bhiwadi (Rajasthan) topping the list followed by Ghaziabad (Uttar Pradesh).

7. Which country recently became the hottest place on earth, with the temperature at 53.2 degrees Celsius?

A) UAE

B) Kuwait 

C) Oman

D) Maldives

  • Kuwait recently became the hottest place on earth, with the temperature at 53.2 degrees Celsius (127.7 degrees Fahrenheit).
  • As per a recent study, 67 percent of heat–related deaths in the capital was due to climate change. The Country continues to burn oil for electricity and ranks among the top global carbon emitters per capita, according to the World Resources Institute.

8. Ashleigh Barty, who retired from her Tennis Career recently, is from which country?

A) Australia 

B) USA

C) Italy

D) Switzerland

  • World number one Ashleigh Barty has announced that she will retire from professional tennis at the age of just 25.
  • Ashleigh Barty won three Grand Slam singles events, including this year’s Australian Open in January.

9. Who are the authors of the book titled “The Little Book of Joy”?

A) Dalai Lama and Desmond Tutu 

B) Sachin Tendulkar and Brian Lara

C) Barack Obama and Michelle Obama

D) Sudha Murty and Narayana Murty

  • In 2016, Archbishop Desmond Tutu and the Dalai Lama co–authored on “The Book of Joy: Lasting Happiness in a Changing World”. The book has sold more than 1 million copies and has been translated into more than 40 languages.

10. ‘Rajiv Gandhi Bhoomiheen Krishi Mazdoor Nyay Yojana’ is a scheme of which state?

A) Punjab

B) Rajasthan

C) Chhattisgarh 

D) Manipur

  • Chhattisgarh Chief Minister Bhupesh Baghel presented a Budget of Rs 1,04,000 crore for 2022–23, 7% more than the previous year He announced to restore old pension scheme for state government employees, and double the annual MLA local area development fund.
  • A provision of Rs 6,000 crore for Rajiv Gandhi Kisan Nyay Yojana and increase in remuneration from Rs 6,000 to Rs 7,000 per annum under Rajiv Gandhi Bhoomiheen Krishi Mazdoor Nyay Yojana were also announced.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!