TnpscTnpsc Current Affairs

31st January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

31st January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 31st January 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

January Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘உலகப்பொருளாதார நிலை & வாய்ப்புகள்’ என்பது எந்த அமைப்பின் முதன்மை வெளியீடாகும்?

அ) உலக வங்கி

ஆ) ஆசிய வளர்ச்சி வங்கி

இ) ஐக்கிய நாடுகள் 

ஈ) இந்திய ரிசர்வ் வங்கி

  • “உலகப்பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள்” என்பது ஐநா சபையின் முதன்மையான வெளியீடாகும். சமீபத்தில் இதன் 2022ஆம் ஆண்டின் பதிப்பு வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையின்படி, உலகளாவிய உற்பத்தி 2022’இல் 4 சதவீதமாகவும், 2023’இல் 3.5 சதவீதமாகவும் மட்டுமே வளரும் எனக்கணிக்கப்பட்டுள்ளது.

2. பெஞ்ச் புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) மகாராஷ்டிரா

ஆ) மத்திய பிரதேசம் 

இ) கர்நாடகா

ஈ) கேரளா

  • மத்திய பிரதேச மாநிலத்தில் பெஞ்ச் புலிகள் காப்பகம் உள்ளது. இந்தப் புலிகள் காப்பகத்தில் இருந்த ‘காலர்வாலி’ என்ற மிகப்பிரபலமான புலி சமீபத்தில் இறந்துவிட்டதாக அக்காப்பகம் அறிவித்தது. இந்தப் புலி (டி-15) செப்டம்பர் 22, 2005 அன்று பிறந்தது. ஒரே பிரசவத்தில் 5 குட்டிகளைப் ஈன்றெடுத்து புகழ்பெற்ற சாதனையைப் பெற்றதால், அது ‘சூப்பர்மாம்’ என்றும் அன்புடன் அழைக்கப்படுகிறது. அந்தப் புலி இதுவரை 29 குட்டிகளைப் பெற்றெடுத்துள்ளது. அதில் 25 குட்டிகள் உயிரோடு உள்ளன.

3. ‘மன ஊரு, மன பதி’ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிற மாநிலம் எது?

அ) ஒடிஸா

ஆ) தெலுங்கானா 

இ) மேற்கு வங்கம்

ஈ) கர்நாடகா

  • `7,289 கோடி பட்ஜெட்டில் 3 ஆண்டுகளில் செயல்படுத்தப் -படும் ‘மன ஊரு, மன பதி’ திட்டத்திற்கு தெலுங்கானா அமைச்சரவை சமீபத்தில் தனது ஒப்புதலை அளித்துள்ளது.
  • இது மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளின் ஒட்டுமொத்த மேம்பாடு மற்றும் அவற்றில் பயனுள்ள அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 26000 பள்ளிகளைச் சேர்ந்த 19.84 லட்சம் குழந்தைகள் இதனால் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

4. ‘திறந்தவெளி தரவு வாரம்’ அனுசரிக்கும் அமைச்சகம்?

அ) மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

ஆ) வீட்டுவசதி & நகர்ப்புற விவகார அமைச்சகம் 

இ) அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ) தகவல் & ஒலிபரப்பு அமைச்சகம்

  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ‘திறந்தவெளி தரவு வாரத்தை’ அனுசரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இது திறந்தவெளி தரவுகளை ஏற்றுக் கொள்வதை ஊக்குவிப்பது மற்றும் இந்தியாவின் நகர்ப் புறச்சூழலமைப்பு முழுவதும் புதுமைகளை ஊக்குவிப்ப
    -தை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2022 பிப்ரவரியில் சூரத்தில் நடைபெறவுள்ள ‘அமுதப் பெருவிழா – சீர்மிகு நகரங்கள்: சீர்மிகு நகரமயமாக்கல்’ மாநாட்டிற்காக, திறந்தவெளி தரவுகள் குறித்த விழிப்புண -ர்வையும் பயன்பாட்டையும் ஊக்குவிப்பதற்காக மத்திய வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படும் நிகழ்வுக்கு முந்தைய முயற்சிகளின் ஒருபகுதியாக இந்தத் திறந்தவெளி தரவு வாரம் உள்ளது.

5. “யோக்யதா” என்ற திறன்பேசி செயலி கீழ்காணும் எதனால் தொடங்கப்பட்டது?

அ) பொது சேவை மையங்கள் 

ஆ) தேசிய பசுமை தீர்ப்பாயம்

இ) இந்திய தேர்தல் ஆணையம்

ஈ) இந்திய உச்சநீதிமன்றம்

  • பொதுசேவை மையமானது (CSC) சமீபத்தில் “யோக்யதா” என்ற திறன்பேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது கிராமப்புறங்களில் உள்ள இளையோர் மற்றும் பிற குடிகளுக்கு தொழிற்சார் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வேலைவாய்ப்பை அதிகரிக்க, சைபர் செக்யூரிட்டி, CAD மற்றும் முப்பரிமாண (3D) அச்சுபோன்ற படிப்புகளுக்கான அணுகலை இது உள்ளடக்கியுள்ளது.

6. இந்தியாவின் முதல் மாவட்ட நல்லாட்சி குறியீட்டை அறிமுகப்படுத்திய மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ) கேரளா

ஆ) ஜம்மு & காஷ்மீர் 

இ) கோவா

ஈ) சிக்கிம்

  • இந்தியாவின் முதல் மாவட்ட நல்லாட்சி குறியீடு ஜம்மு -காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் வெளியிடப்பட்டது. இந்தக் குறியீட்டின் கூட்டுத்தரவரிசையில், ஜம்மு மாவட்டம் முதல் இடத்திலும், தோடா, சம்பா, புல்வாமா மற்றும் ஸ்ரீநகர் மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. இந்தக் குறியீடு 58 குறிகாட்டிகளுடன் பத்து நிர்வாகத் துறைகளின்கீழ் செயல்திறனை மதிப்பிடும் ஒரு கட்டமைப்பு ஆவணமாகும்.

7. ‘உழவு எந்திரமயமாக்கலின் துணைப்பணி’ என்பது எந்த மத்திய அமைச்சகத்தின் திட்டமாகும்?

அ) அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகம்

ஆ) உழவு & உழவர்கள் நல அமைச்சகம் 

இ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஈ) மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

  • உழவு மற்றும் உழவர்கள் நல அமைச்சகம் 2014-15’இல் Sub-Mission on Agricultural Mechanization (SMAM) என்ற திட்டத்தைத்தொடங்கியது. இது சிறு & குறு உழவர்களின் பண்ணை எந்திரமயமாக்களுக்கு உதவும். SMAM’இன் சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, வேளாண் இயந்திரப் பயிற்சி மையங்கள், வேளாண் ஆராய்ச்சி மையங்கள், கிரிஷி விஞ்ஞான் மையங்கள், வேளாண் பல்கலைகள் வாங்கும் டிரோன்களுக்கு 100 சதவீத மானியம் அல்லது `10 இலட்சம் இதில் எது குறைவோ அது வழங்கப்படும். வேளாண் உற்பத்தியாளர் சங்கங்கள், ட்ரோன்கள் வாங்க 75% மானியம் வழங்கப்படும்.

8. ‘மசாலாப் பொருட்கள் வாரியம்’ என்பது பின்வரும் எந்த அமைச்சகத்தின்கீழுள்ள ஒழுங்குமுறை மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனமாகும்?

அ) உழவு & உழவர்கள் நல அமைச்சகம்

ஆ) வணிகம் & தொழிற்துறை அமைச்சகம் 

இ) MSME அமைச்சகம்

ஈ) பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

  • ‘மசாலாப்பொருட்கள் வாரியம்’ என்பது மசாலாப்பொருட்கள் சார்ந்த ஓர் ஒழுங்குமுறை மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு நிறுவனமாகும். இது வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது.
  • இதன் தலைமையகம் கேரளாவின் கொச்சியில் உள்ளது. மசாலா வாரியம் மசாலா ஏற்றுமதிக்கான நாட்டின் முதல் மெய்நிகர் தளமான ‘Spice Xchange’ஐ தொடக்கியது. இந்தியா ஆனது 180’க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 225 வகையான மசாலா மற்றும் மசாலாப் பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. இது ஒரு 3D மெய்நிகர் தளமாகும், இது இந்தியாவில் உள்ள மசாலா ஏற்றுமதியாளர்களை உலகெங்கிலும் உள்ள வாங்குபவர்களுடன் AIமூலம் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

9. ‘மக்களுக்காக வீதிகள்’ என்பது கீழ்காணும் எந்த மத்திய அமைச்சகத்தின் முன்னெடுப்பாகும்?

அ) மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

ஆ) வீட்டுவசதி & நகர்ப்புற விவகார அமைச்சகம் 

இ) அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ) தகவல் & ஒலிபரப்பு அமைச்சகம்

  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த இணையவழி நிகழ்வில், ‘மக்களுக் -காக வீதிகள்’ என்பதில் வெற்றி பெற்ற 11 நகரங்கள் ‘அண்டை அயல் நட்புகளை வளர்த்தல்’ என்பதன் முதற் கட்டத்தில் வென்ற 10 நகரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • இந்த நிகழ்வின்போது, மாற்றத்திற்கான மிதிவண்டிகள் மக்களுக்காக வீதிகள் என்பதன் இரண்டாம் கட்டத்தை அமைச்சகம் தொடங்கியது. ‘அண்டை அயல் நட்புகளை வளர்த்தல்: களத்திலிருந்து கதைகள்’ எனப்பெயரிடப்பட்ட ஒரு நூல் வெளியிடப்பட்டது.

10. ‘கிராம ஒன்’ திட்டமானது பின்வரும் எம்மாநிலத்தின் முன்முயற்சியாகும்?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) கர்நாடகா 

ஈ) ஆந்திர பிரதேசம்

  • 12 மாவட்டங்களில் உள்ள கிராமப்புறங்களில் குடியரசு நாளிலிருந்து ‘கிராம ஒன்’ திட்டம் செயல்படுத்தப்படும் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறினார்.
  • இத்திட்டம் குடிமக்களின் வீட்டு வாசலிலேயே பல்வேறு துறைகளின் சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பல்வேறு அரசு சேவைகளை வழங்குதற் -காக மாநிலங்கள் முழுவதும் 30000 ‘கிராம ஒன்’ சேவை மையங்கள் திறக்கப்படவுள்ளன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மத்திய பட்ஜெட் – வரலாறும் சுவாரஸ்யங்களும்

மத்திய அரசின் 2022-23ஆம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) பிப்.1 தாக்கல்செய்யப்படவுள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 4ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில், பட்ஜெட்டின் வரலாறு குறித்தும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் குறித்தும் காண்போம்.

வரலாற்று சிறப்பு தாக்கல் செய்யப்பட்ட நாள் / ஆண்டு தாக்கல் செய்தவர்.

இந்தியாவுக்கான முதலாவது பட்ஜெட் ஏப்ரல் 7, 1860 பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தால் அந்நாட்டு அரசி விக்டோரியா முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டது.

சுதந்திர இந்தியாவில் முதல் பட்ஜெட் நவம்பர் 26, 1947 ஆர் கே சண்முகம் செட்டி

நீண்ட பட்ஜெட் உரை பிப்ரவரி 1, 2020 (2 மணி நேரம் 42 நிமிஷங்கள்) நிர்மலா சீதாராமன்

பட்ஜெட் உரையில் அதிக சொற்கள் 1991 (18,650 சொற்கள்) மன்மோகன் சிங்

2018 (18,604 சொற்கள்) அருண் ஜேட்லி

பட்ஜெட் உரையில் குறைந்த சொற்கள் 1977 (800 சொற்கள்) எச் எம் படேல்

முதல் காகிதமில்லா பட்ஜெட் 2021-22 நிர்மலா சீதாராமன்

சுவாரஸ்யங்கள்:

அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்தவர்கள் மொரார்ஜி தேசாய்-10 முறை; ப சிதம்பரம்-9 முறை; பிரணாப் முகர்ஜி, யஷ்வந்த் சின்ஹா (8 முறை)

பட்ஜெட் மொழி 1955 வரை ஆங்கிலம் மட்டுமே; அதன் பிறகு ஹிந்தி, ஆங்கிலம்

பட்ஜெட் தாக்கல்செய்த முதல் பெண் இந்திராகாந்தி (1970-71)

நிர்மலா சீதாராமன்-முழுநேர நிதியமைச்சர் (2019)

இரயில்வே பட்ஜெட் 2017 வரை தனியாகத்தாக்கல்; அதன் பிறகு பொது பட்ஜெட்டுடன் இணைப்பு

சிறப்புப் பெயர்கள் பட்ஜெட் காரணம்

கருப்பு பட்ஜெட் 1973-74 `550 கோடி நிதிப்பற்றாக்குறை.

கேரட்-ஸ்டிக் பட்ஜெட் 1986 சலுகைகளும் அபராதங்களும் ஒருசேர அறிவிப்பு.

புதிய சகாப்தம் வகுத்த பட்ஜெட் 1991 தாராளமய கொள்கை அறிமுகம்.

கனவு பட்ஜெட் 1997-98 தனிநபர், நிறுவன, இறக்குமதி வரிகள் குறைப்பு.

ஆயிரமாண்டுக்கான பட்ஜெட் 2000 தகவல்-தொழில் நுட்ப வளர்ச்சிக்கு வழிகோலியது.

பின்வாங்கிய பட்ஜெட் 2002-03 பெரும்பாலான அறிவிப்புகள் திரும்பப்பெறப்பட்டன.

நூற்றாண்டுக்கு ஒருமுறை பட்ஜெட் 2021-22 கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் அறிவிப்பு.

2. திருப்பூர் இளநீர் விற்கும் பெண்ணுக்கு பிரதமர் மோடி பாராட்டு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த இள நீர் விற்கும் பெண் தாயம்மாள் பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி கட்டமைப்புக்காக `1 லட்சம் நன்கொடை வழங்கி இருந்தார்.

அவருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிய மோடி, தாயம்மாளை குறிப்பிட்டு பேசினார்.

கல்வி பற்றிய விழிப்புணர்வு சமூகத்தில் ஒவ்வொரு மட்டத்திலும் தெரிகிறது. தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வசிக்கும் தாயம்மாளின் செயல்மிகவும் ஊக்கம் அளிக்கிறது.

அவருக்கு சொந்தமாக நிலம் எதுவும் இல்லை. இவர்களது குடும்பம் பல ஆண்டுகளாக இளநீர் விற்று சம்பாதித்து வருகிறார்கள். பொருளாதார நிலை அவருக்கு நன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் தாயம்மாள் தனது மகன், மகளுக்கு கல்வி கற்பதற்கு எந்த தடைக்கல்லையும் ஏற்படுத்தவில்லை.

இவரது குழந்தைகள் சீன்னவீரம்பட்டு பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள். அந்த பள்ளியில் பெற்றோர்கள் கூட்டம் நடந்த போது, வகுப்பறைகள் மற்றும் பள்ளியின் நிலையை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

பள்ளியின் உட்கட்டமைப்புகளை சரி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த பணிக்கான பண பற்றாக்குறை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் தாயம்மாளும் பங்கேற்றிருந்தார். அவர் என்ன செய்தார் என்று யாராலும் நினைத்து பார்க்க முடியவில்லை. இளநீர் விற்று ஓரளவுக்கு சம்பாதித்த பணத்தை தாயம்மாள் பள்ளி கட்டமைப்புக்காக ரூ.1 லட்சம் நன்கொடை அளித்தார்.

உண்மையில் இதை செய்வதற்கு ஒரு பெரிய மனது, சேவை உணர்வு தேவை. அங்குள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை இருப்பதாக தாயம்மாள் கூறுகிறார்.

இப்போது பள்ளியின் உட்கட்டமைப்பு மேம்பட்டால் மேல் நிலை கல்வி வரை வகுப்புகள் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

3. தேசிய மகளிர் ஆணைய தொடக்க தினம்

கடந்த 1992ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி தேசிய மகளிர் ஆணையம் தொடங்கப்பட்டது.

4. வாகை சூடினார்; வரலாறு படைத்தார்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில், உலகின் 5ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் (35) சாம்பியன் பட்டம் வென்றார்.

இதன்மூலம் தனது 21ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றிய நடால், டென்னிஸ் வரலாற்றில் அத்தனை கிராண்ட்ஸ்லாம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். முன்னதாக அவர் 20 கிராண்ட்ஸ்லாம்கள் வென்று, ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், செர்பியாவின் ஜோகோவிச் ஆகியோருடன் சமனிலையில் இருந்தார்.

அவா்களில் யாா் முதலில் 21-ஆவது கிராண்ட்ஸ்லாமை எட்டி சாதனை படைப்பது என்ற போட்டி இருந்தது. இந்த நிலையில், முழங்கால் அறுவைச் சிகிச்சை காரணமாக ரோஜர்பெடரரும், கரோனா தடுப்பூசி சர்ச்சையால் நோவக் ஜோகோவிச்சும் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்காமல் போனது நடால் அந்தச் சாதனையை முதலில் எட்டுவதற்கு சற்று சாதகமாகிப்போனது.

2ஆவது அதிகபட்சம்…

இந்த இறுதிச்சுற்று மொத்தமாக 5 மநே 24 நிமிஷங்கள் நடைபெற்றது. ஆஸ்திரேலிய ஓபன் வரலாற்றில் நீண்ட நேரம் நடைபெற்ற இறுதிச்சுற்றில் இது 2ஆவது இடத்தில் இருக்கிறது. முன்னதாக, 2012இல் ஜோகோவிச்சிடம் நடால் தோல்வி கண்ட இறுதிச்சுற்று 5 மணி நேரம் 53 நிமிஷங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது.

தலா 2 கிராண்ட்ஸ்லாம்கள்…

இந்த ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் ஆனதன்மூலம், அனைத்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் குறைந்தது 2 முறை பட்டங்கள் வென்ற கணக்கை எட்டியிருக்கிறார் நடால். ஓபன் எராவில் இத்தகைய சாதனையை எட்டும் 2ஆவது வீரர் இவர். முதல் வீரர் நோவக் ஜோகோவிச்.

முதல் வீரர்

ஆஸ்திரேலிய ஓபன் வரலாற்றில், இறுதிச்சுற்றில் முதல் இருசெட்களை இழந்து அடுத்த 3 செட்களை கைப்பற்றி சாம்பியன் ஆன முதல் வீரர் என்ற பெருமையை நடால் பெற்றிருக்கிறார். மறுபுறம், நடாலின் டென்னிஸ் வரலாற்றில் அவர் இவ்வாறு முதலிரு செட்களை இழந்தும் வெற்றியை பதிவு செய்தது இது 4ஆவது முறை.

5. ஒடிஸா ஓபன்: வாகை சூடினார் உன்னாட்டி ஹூடா

ஒடிஸா ஓபன் பாட்மின்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் உன்னாட்டி ஹூடா வாகை சூடினார். இப்போட்டியில் சாம்பியன் ஆன மிக இளவயது இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

14 வயதே ஆகியிருக்கும் உன்னாட்டி தனது இறுதிசுற்றில் சக இந்தியரான ஸ்மித் டோஷ்னிவாலை 21-18, 21-11 என்ற நேர் கேம்களில் 35 நிமிஷங்களில் தோற்கடித்தார். உன்னாட்டிக்கு `4.22 லட்சம் ரொக்கம் வழங்கப்பட்டது.

ஆடவர் ஒற்றையர்: மறுபுறம், போட்டித்தரவரிசையில் இடம்பிடிக்காவிட்டாலும் அசத்தலாக ஆடி முன்னேறி வந்த கிரண் ஜார்ஜ் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் 21-15, 14-21, 21-18 என்ற கேம்களில் மற்றொரு இந்திய வீரரான பிரியான்ஷு இரஜாவத்தை வீழ்த்தி முதலிடம் பிடித்தார். அவருக்கும் `4.22 லட்சம் ரொக்கம் கிடைத்தது.

மகளிர் இரட்டையர்: இப்பிரிவின் இறுதிச்சுற்றில் போட்டித் தரவரிசையில் 5ஆம் இடத்திலிருந்த இந்தியாவின் டிரிசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் இணை 21-12, 21-10 என்ற நேர் கேம்களில் மிக எளிதாக, போட்டித்தரவரிசையில் 8ஆவது இடத்திலிருந்த இந்தியாவின் சன்யோகிதா கோர்படே/ஷ்ருதி மிஸ்ரா கூட்டணியை வீழ்த்தியது.

இந்த ஆட்டம் 28 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது. டிரிசா /காயத்ரி இணை `4.44 லட்சம் ரொக்கப்பரிசை பகிர்ந்து கொள்கிறது.

2 வெள்ளி: எனினும் ஆடவர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் இந்தியா சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது.

ஆடவர் இரட்டையர் இறுதிச்சுற்றில் இந்தியாவின் ரவி கிருஷ்ணா /சங்கர் பிரசாத் உதயகுமார் இணை 21-18, 14-21, 16-21 என்ற கேம்களில் மலேசியாவின் நூர் முகமது அஸ்ரியின்/லிம் கிம் வா இணையிடம் 51 நிமிஷங்களில் வெற்றியை இழந்தது.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் M R அர்ஜூன் / டிரீசா ஜாலி ஜோடி 16-21, 20-22 என்ற கேம்களில் இலங்கையின் சச்சின் டியாஸ்/தில்லினி ஹெந்தஹேவா இணையிடம் 36 நிமிஷங்களில் தோற்றது.

இந்த இரு பிரிவுகளிலும் 2ஆம் இடம்பிடித்த இந்திய இணை தலா `2.13 லட்சம் பரிசைப் பகிர்ந்துகொண்டன.

1. ‘World Economic Situation and Prospects (WESP)’ is the flagship publication of which institution?

A) World Bank

B) Asian Development Bank

C) United Nations 

D) Reserve Bank of India

  • World Economic Situation and Prospects (WESP) is the flagship publication of United Nations. Recently the 2022 edition was launched. As per the report, the global output is projected to grow by only 4 per cent in 2022 and 3.5 per cent in 2023.

2. Pench Tiger Reserve is located in which state?

A) Maharashtra

B) Madhya Pradesh 

C) Karnataka

D) Kerala

  • Pench Tiger Reserve is located in the state of Madhya Pradesh. It was seen in the news, as its most famous tigress named ‘Collarwali’ recently passed away. The tigress (T–15) was born on September 22, 2005. She is also fondly called as ‘Supermom’ as held the distinguished record of giving birth to five cubs in a litter. She also birthed 29 cubs totally and successfully raised 25 of them.

3. ‘Mana ooru, mana badi’ programme is implemented in which state?

A) Odisha

B) Telangana 

C) West Bengal

D) Karnataka

  • Telangana Cabinet recently approved ‘Mana ooru, mana badi’ programme, which is to be implemented in three years with a budget of ₹7,289 crore. It aims to provide overall development and creation of effective basic infrastructure in schools across the State.
  • The programme is expected to benefit 19.84 lakh children of over 26000 schools in the state of Telangana.

4. Which Union Ministry launched the ‘Open Data Week’?

A) Ministry of Electronics & IT

B) Ministry of Housing and Urban Affairs 

C) Ministry of Science & Tech

D) Ministry of Information & Broadcasting

  • The Ministry of Housing and Urban Affairs (MoHUA) announced the launch of the Open Data Week. It aims to encourage the adoption of open data and promote innovation across India’s urban ecosystem.
  • Open Data Week is part of the pre–event initiatives being undertaken by MoHUA to promote awareness and use of open data, for the ‘Azadi Ka Amrit Mahotsav – Smart Cities: Smart Urbanization’ conference to be held in Surat, during February 2022.

5. “Yogyata” mobile phone application was launched by ……….

A) Common Services Centers 

B) National Green Tribunal

C) Election Commission of India

D) Supreme Court of India

  • The Common Services Centers (CSC) has recently launched the “Yogyata” mobile phone application. It aims to provide vocational education and skill enhancement opportunities to youth and other citizens in rural areas. It includes the access to courses like Cyber Security, CAD and 3D printing, to increase employability.

6. Which state/UT launched India’s 1st District Good Governance Index?

A) Kerala

B) Jammu & Kashmir 

C) Goa

D) Sikkim

  • India’s first ever District Good Governance Index (DGGI) was released in the Union Territory of Jammu and Kashmir. In the composite ranking of the index, the Jammu district tops the list followed by districts of Doda, Samba, Pulwama and Srinagar in the UT.
  • The Index is a framework document which assesses the performance under ten governance sectors with 58 indicators.

7. “Sub–Mission on Agricultural Mechanization (SMAM)” is a scheme of which Union Ministry?

A) Ministry of Science and Technology

B) Ministry of Agriculture and Farmers Welfare 

C) Ministry of Rural Development

D) Ministry of Electronics and IT

  • Ministry of Agriculture and Farmers Welfare launched a Sub–Mission on Agricultural Mechanization (SMAM) in 2014–15, to increase the reach of farm mechanization to small and marginal farmers and to the regions where farm power availability is low.
  • As per recent guidelines of SMAM, a grant of up to 100 percent of the cost of agriculture drone or Rs 10 lakh is provided for purchase of drones by the Farm Machinery Training & Testing Institutes, ICAR institutes, KVKs and State Agriculture Universities for demonstrations of this technology the farmers’ fields. FPOs can get up to 75 percent of the cost of agriculture drone.

8. ‘Spices Board’ is a regulatory and export promotion agency under which Ministry?

A) Ministry of Agriculture and Farmers Welfare

B) Ministry of Commerce and Industry 

C) Ministry of MSME

D) Ministry of Tribal Affairs

  • ‘Spices Board’ is a regulatory and export promotion agency of Spices, working under the aegis of Ministry of Commerce and Industry. It is headquartered at Kochi, Kerala. Spices Board launched the country’s first virtual platform for spice exports “Spice Xchange India”.
  • India exports 225 different spices and spice products to more than 180 countries. It is a 3D virtual platform which aims to connect India’s spice exporters with buyers from around the world, using AI.

9. ‘Streets for People Challenge’ is an initiative of which Union Ministry?

A) Ministry of Electronics & IT

B) Ministry of Housing and Urban Affairs 

C) Ministry of Science & Tech

D) Ministry of Information & Broadcasting

  • Streets for People Challenge is the flagship initiative of Ministry of Housing and Urban Affairs. Recently the Ministry announced eleven winning cities for the Streets for People Challenge, and ten winning cities for the pilot stage of the Nurturing Neighbourhoods Challenge.
  • The Ministry also launched Season–2 of India Cycles4Change and Streets for People Challenges and a book titled ‘Nurturing Neighbourhoods Challenge: Stories from the Field”.

10. ‘Grama One’ programme is an initiative of which state?

A) Tamil Nadu

B) Kerala

C) Karnataka 

D) Andhra Pradesh

  • Karnataka Chief Minister Basavaraj Bommai said the ambitious ‘Grama One’ programme will be implemented from Republic Day in rural areas of 12 districts. The programme is aimed at providing services of various departments at the citizens’ doorsteps.
  • As many as 30000 ‘Grama One’ service centre would be opened across the states to provide various government services.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!