TnpscTnpsc Current Affairs

31st December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

31st December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 31st December 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

31st December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. டாக்டர். சியாமா பிரசாத் முகர்ஜி – தேசிய நீர் மற்றும் சுகாதார நிறுவனம் தொடங்கப்பட்டுள்ள மாநிலம் எது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. மேற்கு வங்காளம்

இ. தெலுங்கானா

ஈ. கர்நாடகா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மேற்கு வங்காளம்

  • பிரதமர் நரேந்திர மோதி மேற்கு வங்காள மாநிலத்தில் நிறுவப்படவுள்ள `7,800 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மெய்நிகராக அடிக்கல் நாட்டினார். அவர் டாக்டர். சியாமா பிரசாத் முகர்ஜி – நீர் மற்றும் சுகாதாரத்திற்கான தேசிய நிறுவனத்தையும் (DSPM – NIWAS) திறந்துவைத்தார். இது நாட்டில் தண்ணீர், துப்புரவு மற்றும் சுகாதாரம் (WASH) ஆகியவற்றுக்கான நாட்டின் உயர் அமைப்பாக செயல்படும். நடுவண், மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்களுக்கு தகவல் மற்றும் அறிவின் மையமாகவும் இது செயல்படும்.

2. இந்திய தேர்தல் ஆணையம் எந்த வகை மக்களுக்காக தொலைவிட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் (remote electronic voting machine) முன்மாதிரியை உருவாக்கியுள்ளது?

அ. வெளிநாடு வாழ் இந்தியர்கள்

ஆ. உள்நாட்டு புலம்பெயர் தொழிலாளர்கள்

இ. 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்

ஈ. மாற்றுத்திறனாளிகள்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. உள்நாட்டு புலம்பெயர் தொழிலாளர்கள்

  • இந்திய தேர்தல் ஆணையமானது உள்நாட்டில் புலம்பெயரும் தொழிலாளர்களுக்காக தொலைவிட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் முன்மாதிரியை உருவாக்கியுள்ளது. அரசியல் கட்சிகளை இதன் செயல்விளக்கக் கூட்டத்திற்காக அழைத்துள்ளது. இது செயல்படுத்தப்பட்டால், புலம்பெயர்ந்த வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கு தங்கள் சொந்த மாவட்டத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமிருக்காது. மேலும் இது வாக்காளர் பங்கேற்பை அதிகரிப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

3. இந்தியாவின் முதல் நீலகிரி வரையாடு திட்டத்தைத் தொடங்கிய அரசு எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. ஒடிஸா

ஈ. கர்நாடகா

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. தமிழ்நாடு

  • `25.14 கோடி செலவில் மாநில விலங்கான நீலகிரி வரையாட்டைப் பாதுகாப்பதற்காக தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது நாட்டிலேயே முதல் நீலகிரி வரையாடு பாதுகாப்புத் திட்டமாக கருதப்படுகிறது. இந்தத் திட்டம் 2022–2027 வரையிலான ஐந்தாண்டு காலப்பகுதியில் செயல்படுத்தப்படும். மேலும் வரையாடுகளின் எண்ணிக் –கையை மதிப்பிடுவதற்கு ஓர் உத்தியையும் இது பின்பற்றும். அழிந்துவரும் இனமான நீலகிரி வரையாடு இந்திய வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972இன் அட்டவணை–Iஇன்கீழ் பாதுகாக்கப்படுகிறது.

4. பிரம்மோஸ் ஏவுகணையின் நீண்டதூர இலக்கைத் தாக்கும் பதிப்பை வெற்றிகரமாக சோதனை செய்த இந்திய ஆயுதப்படை எது?

அ. இந்திய இராணுவம்

ஆ. இந்திய கடற்படை

இ. இந்திய வான்படை

ஈ. இந்திய கடலோர காவல்படை

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. இந்திய வான்படை

  • இந்திய வான்படையானது மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை ஒன்றை SU–30MKI இரக போர் விமானத்தில் இருந்து கடலில் 400 கிமீ தொலைவில் உள்ள இலக்கை நோக்கி செலுத்தியது. இந்தப் பரிசோதனை வெற்றிகரமாக அமைந்தது. போர் விமானத்தில் இருந்து ஏவப்படும் இந்த பிரம்மோஸ் ஏவுகணையின் முதல் சோதனை கடந்த மே 12 அன்று மேற்கொள்ளப்பட்டது. பிரம்மோஸ் ஏவுகணைகள் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம் (DRDO) மற்றும் ரஷ்யாவின் மஷினோஸ்ட்ரோயெனியாவால் நிறுவப்பட்ட கூட்டு நிறுவனமான பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ்மூலம் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, தயாரிக்கப்படுகின்றன.

5. எந்த நகரத்தில் இராணுவ வீரர்களுக்காக முதன்முறையாக 3D முறையில் அச்சிடப்பட்டு உருவாக்கப்பட்ட வீடுகளை இந்திய இராணுவம் ஒப்படைத்தது?

அ. லே

ஆ. அகமதாபாத்

இ. ஜெய்சால்மர்

ஈ. தவாங்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. அகமதாபாத்

  • இந்திய இராணுவமானது அகமதாபாத்தின் படையினர் நகரத்தில் இராணுவ வீரர்களுக்காக முதன்முறையாக 3D முறையில் அச்சிடப்பட்டு உருவாக்கப்பட்ட வீடுகளை வழங்கியுள்ளது. MiCoB தனியார் நிறுவனத்துடன் இணைந்து இராணுவ பொறியியல் சேவைகள்மூலம் அவை கட்டப்பட்டுள்ளன. தரைத்தளம்கொண்ட இந்தக் குடியிருப்பு அலகு மலிவானதும் குறைந்த நேரத்தில் கட்டமைக்கப்பட்டதும் ஆகும். இதன் கட்டுமானப் பணிகள் பன்னிரு வாரங்களில் முடிக்கப்பட்டுள்ளன.

6. கீழ்காணும் எந்த நகரத்தில், டிசம்பர் 8, 1985 அன்று சார்க் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது?

அ. புது தில்லி

ஆ. டாக்கா

இ. காத்மாண்டு

ஈ. கொழும்பு

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. டாக்கா

  • பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (SAARC) பட்டய நாள் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர்.08 அன்று அனுசரிக்கப்படுகிறது. 1985ஆம் ஆண்டில் இதே நாளில், அந்தக் குழுவின் முதல் உச்சிமாநாட்டின்போது, டாக்காவில் ‘சார்க் சாசனம்’ ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டு, மண்டலக் குழுவின் 38ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. கடந்த 1985ஆம் ஆண்டு முதல் 18 உச்சிமாநாடுகளை SAARC ஏற்பாடு செய்துள்ளது.

7. டிசம்பர்.18 அன்று கீழ்க்காணும் எந்த மொழி நாள் அனுசரிக்கப்படுகிறது?

அ. பிரெஞ்சு

ஆ. கிரேக்கம்

இ. அரபு

ஈ. உருது

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. அரபு

  • உலகளவில் 400 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பேசப்படும் மொழியைக் கௌரவிக்கும் வகையில் டிச.18 அன்று உலக அரபு மொழி நாள் அனுசரிக்கப்படுகிறது. ஐநா அவையின் ஆறாவது அலுவல் மொழியாக அரபு மொழியை ஐநா பொது அவை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில், கடந்த 2012ஆம் ஆண்டு முதல் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. “The Contribution of the Arabic Language to Human Civilization and Culture” என்பது இந்த ஆண்டு (2022), உலக அரபு மொழி நாளுக்கானக் கருப்பொருளாகும்.

8. இந்தியாவில, ‘தேசிய நுகர்வோர் உரிமைகள் நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. டிசம்பர்.20

ஆ. டிசம்பர்.22

இ. டிசம்பர்.24

ஈ. டிசம்பர்.25

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. டிசம்பர்.24

  • இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் டிச.24 அன்று தேசிய நுகர்வோர் உரிமைகள் நாள் கொண்டாடப்படுகிறது. இது தேசிய நுகர்வோர் நாள் என்றும் அழைக்கப்படுகிறது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இந்தியக்குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற்ற 1986 டிசம்பர்.24ஆம் தேதிதான் இந்நாளாக நினைவுகூரப்படுகிறது. நுகர்வோரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும். உலக நுகர்வோர் உரிமை நாள் ஆண்டுதோறும் மார்ச்.15 அன்று கொண்டாடப்படுகிறது.

9. சர்வதேச புலம்பெயர்ந்தோர் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. டிசம்பர்.18

ஆ. டிசம்பர்.21

இ. டிசம்பர்.24

ஈ. டிசம்பர்.27

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. டிசம்பர்.18

  • உலகளாவிய குடியேற்றத்தின் பிரச்சனை & சவால்களை சமாளிப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர்.18 அன்று சர்வதேச புலம்பெயர்ந்தோர் நாள் அனுசரிக்கப்படுகிறது. ஐநா பொதுச்சபையானது 1999ஆம் ஆண்டில் அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு சர்வதேச தீர்மானத்தை உருவாக்கியது. “Integrating migrants into primary health care” என்பது நடப்பு 2022ஆம் ஆண்டில் வரும் இந்நாளிற்கான கருப்பொருளாகும்.

10. NTPC ஆனது 150 மெகாவாட் (MW) & 90 மெகாவாட் (MW) உற்பத்தித் திறன்கொண்ட தேவிகோட் சோலார் PV திட்டங்களை கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது?

அ. தமிழ்நாடு

ஆ. குஜராத்

இ. மகாராஷ்டிரா

ஈ. இராஜஸ்தான்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. இராஜஸ்தான்

  • NTPC ஆனது 150 மெகாவாட் மற்றும் 90 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட தேவிகோட் சூரியவொளி ஆற்றல் உற்பத்தித் திட்டங்களை இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மரில் செயல்படுத்தியுள்ளது. அவை வணிக ரீதியான செயல்பாட்டைத் தொடங்கியுள்ளன. இதன்மூலம், NTPCஆல் சொந்தமாக நிறுவப்பட்ட உற்பத்தித்திறன் 58041 மெகாவாட்டாகவும், குழுமமாக நிறுவப்பட்ட உற்பத்தித் திறன் 70656 மெகாவாட்டையும் எட்டியுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ‘லும்பி–ப்ரோவாக்’ தடுப்பூசியை வணிகரீதியாக தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.

ஆட்டு அம்மைக்கான தடுப்பூசியான ‘லும்பி ப்ரோவாக்’ஐ வணிகரீதியில் தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாக்பூரில் நடுவண் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, மகாராஷ்டிர மாநில முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.

தேசிய கால்நடை தடுப்பூசி உருவாக்க மையம், ஹரியானா மாநிலம் ஹிசாரில் அமைந்துள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய குதிரைகள் ஆராய்ச்சி மையம், உ பி மாநிலம் இசட்நகர் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து, லும்பி ப்ரோவாக் என்ற பெயரில் எல்எஸ்டி தடுப்பூசியை உருவாக்கியது.

2. சிறுசேமிப்புகளுக்கான வட்டி 1.1% வரை உயர்வு.

நடப்பு 2022-23ஆம் நிதியாண்டின் இறுதிகாலாண்டில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத்திட்டம் உள்ளிட்ட சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 1.1% வரை நடுவண் அரசு உயர்த்தியுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான இறுதி காலாண்டில் சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறித்த விவரங்களை நடுவண் நிதியமைச்சகம் வெளியிட்டது.

அதன்படி, 8 சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்துக்குரிய வட்டி 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தபால் நிலைய மூன்றாண்டு கால வைப்புத்தொகைக்கான வட்டி 5.8 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாகவும், ஈராண்டு கால வைப்புத் தொகைக்கான வட்டி 5.7 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தபால் நிலைய ஓராண்டுகால வைப்புத்தொகைக்கான வட்டி 5.5 சதவீதத்தில் இருந்து 6.6 சதவீதமாகவும், ஐந்தாண்டு கால வைப்புத் தொகைக்கான வட்டி 6.7 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

தேசிய சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி 6.8 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும், விவசாயிகள் வளர்ச்சிப் பத்திர திட்டத்துக்கான வட்டி 7 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வளர்ச்சிப் பத்திரத்துக்கான முதிர்வு காலம் 123 மாதங்களிலிருந்து 120 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், வருங்கால வைப்புநிதித்திட்டம் (7.1 சதவீதம்), சேமிப்புக்கணக்கு (4 சதவீதம்), பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டம் (7.6 சதவீதம்) ஆகியவற்றுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. புதிய வட்டி விகிதங்கள் ஜன.1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் தொடர்ந்து 2ஆவது காலாண்டாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

3. செங்கல்பட்டு மாவட்டத்தில் தாவரவியல் பூங்கா அரசாணை பிறப்பிப்பு.

செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூர் கிராமத்தில் தாவரவியல் பூங்கா அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்ட உத்தரவு:

செங்கல்பட்டு மாவட்டம், கடம்பூர் கிராமத்தில் 137.65 ஹெக்டேர் பரப்பில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இத்திட்டம் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். மரக்கன்றுகள், மூலிகைத்தோட்டம், ரோஜா தோட்டம், ஜப்பானிய தோட்டம், பண்டைய தமிழ்நாட்டின் நிலப்பரப்புபோன்ற பல்வேறு அம்சங்கள் இந்தத் திட்டத்தில் இடம்பெற்றிருக்கும்.

மேலும், இத்திட்டத்தின்கீழ், நடைபயிற்சி, தாவர உயிரியல் பன்முகத்தன்மைபற்றி மாணவர்களுக்குத் தெரிவிக்கும் கல்வித்திட்டம், ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களுக்கான பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகள், படகு சவாரி, இயற்கை பாதைகள், சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி, விளையாட்டு மற்றும் பிற ஆரோக்கிய நடவடிக்கைகள் உள்ளிட்ட செயல்பாடுகளும் இத்தாவரவியல் பூங்காவில் இடம்பெற்றிருக்கும். பூங்காவுக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க தமிழ்நாடு அரசு `1 கோடி விடுவித்துள்ளது.

4. உலக பிளிட்ஸ் செஸ்: கோனெரு ஹம்பிக்கு வெள்ளி.

கஜகஸ்தானில் நடைபெற்ற FIDE உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பில் மகளிர் பிரிவில் இந்தியாவின் கோனெரு ஹம்பி வெள்ளிப்பதக்கம் வென்றார். மொத்தம் நடந்த 17 சுற்றுகளின் முடிவில் கோனெரு ஹம்பி 12.5 புள்ளிகளுடன் 2ஆம் இடம்பிடித்தார். இதில் கடைசி சுற்றில் அவர் சீனாவின் ஜோங்யி டானை வீழ்த்தி அசத்தினார். ஜோங்யி 2 நாள்களுக்கு முன் இதே போட்டியில் ரேப்பிட் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த பிளிட்ஸ் பிரிவில் கஜகஸ்தானின் அசௌபயேவா பிபிசரா 13 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வெல்ல, ரஷியாவின் ஷுவாலோவா பாலினா 12 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் பெற்றார். முன்னதாக இந்தப்பிரிவில் 9 சுற்றுகள் நிறைவில் கோனெரு ஹம்பி 4 வெற்றிகளையே பதிவு செய்திருந்தார். ஆனால், அடுத்த எட்டுச் சுற்றுகளில் அவர் 7இல் வெற்றிபெற்று இந்த முன்னேற்றத்தைச் சந்தித்தார். எஞ்சிய ஒரு ஆட்டத்தில் சக இந்தியரான துரோண வள்ளி ஹரிகாவுடன் டிரா செய்தார்.

இப்பிரிவில் களம்கண்ட மற்ற இந்தியர்களான துரோணவள்ளி ஹரிகா 10ஆம் இடமும், பத்மினி ரௌத் 17ஆம் இடமும், தானியா சச்தேவ் 21ஆவது இடமும், சவிதா ஸ்ரீ 34ஆவது இடமும் பிடித்தனர். இதில் சவிதா ரேப்பிட் சாம்பியன்ஷிப்பின் மகளிர் பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார்.

31st December 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. ‘Dr. Syama Prasad Mookerjee – National Institute of Water and Sanitation (DSPM – NIWAS)’ has been inaugurated in which state?

A. Uttar Pradesh

B. West Bengal

C. Telangana

D. Karnataka

Answer & Explanation

Answer: B. West Bengal

  • Prime Minister Narendra Modi virtually laid foundation stone and projects worth more than ₹7,800 crore in West Bengal. He also virtually inaugurated Dr. Syama Prasad Mookerjee – National Institute of Water and Sanitation (DSPM – NIWAS). It will serve as an apex body in the country on water, sanitation and hygiene (WASH) in the country, serving as a hub of information and knowledge for Central, State and local governments.

2. Election Commission of India has developed a prototype of a remote electronic voting machine (RVM) for which category of people?

A. Non Resident Indians

B. Domestic Migrant Workers

C. Elderly citizens above 80 years

D. Persons with Disabilities

Answer & Explanation

Answer: B. Domestic Migrant Workers

  • The Election Commission of India has developed a prototype of a remote electronic voting machine (RVM) for domestic migrant workers. It has invited political parties for a demonstration. If implemented, migrant voters do not need to travel to their home district to exercise their franchise and this will be a major move to increase voter participation.

3. Which state commenced India’s first Nilgiri Tahr project?

A. Tamil Nadu

B. Kerala

C. Odisha

D. Karnataka

Answer & Explanation

Answer: A. Tamil Nadu

  • Tamil Nadu government has issued orders to conserve the Nilgiri tahr, the state animal, at a cost of Rs 25.14 crore. This is regarded as the first Nilgiri Tahr conservation project in the country. The project would be implemented during a 5–year period from 2022–2027, and follow a strategy including synchronised surveys to estimate numbers of the tahrs. The tahr is an endangered species and is protected under Schedule–I of the Wildlife (Protection) Act of India, 1972.

4. Which Indian Armed Force successfully test–fired the extended–range version of BrahMos Air–Launched missile?

A. Indian Army

B. Indian Navy

C. Indian Air Force

D. Indian Coast Guard

Answer & Explanation

Answer: C. Indian Air Force

  • Indian Air Force (IAF) successfully test–fired the extended–range version of BrahMos Air–Launched missile. It was test fired against a ship target from a frontline SU–30MKI aircraft. The maiden test of the extended range of the Brahmos Air Launched missile was conducted on May 12. BrahMos missiles are designed, developed and produced by BrahMos Aerospace, a joint venture company set up by India’s DRDO and Russia’s Mashinostroyenia.

5. The Indian Army has handed over first–ever 3D printed houses for soldiers at which city?

A. Leh

B. Ahmedabad

C. Jaisalmer

D. Tawang

Answer & Explanation

Answer: B. Ahmedabad

  • The Indian Army has offered the first 3D printed houses for soldiers at Ahmedabad Cantt. They are constructed by the Military Engineering Services (MES) in collaboration with MiCoB Pvt Ltd. The dwelling unit, with a ground floor plus one configuration are not only cheap but can be constructed in less time. Construction work of the dwelling unit with garage space and first floor was completed in 12 weeks.

6. The SAARC Charter was adopted in which city on December 8, 1985?

A. New Delhi

B. Dhaka

C. Kathmandu

D. Colombo

Answer & Explanation

Answer: B. Dhaka

  • The South Asian Association for Regional Cooperation (SAARC) Charter Day is observed every year on 8th December. On this day in 1985, SAARC Charter was adopted in Dhaka, during the first summit of the group. This year also marks the 38th Anniversary of the regional group. SAARC has organised 18 summits since 1985.

7. Which language Day is observed on 18 December?

A. French

B. Greek

C. Arabic

D. Urdu

Answer & Explanation

Answer: C. Arabic

  • World Arabic Language Day is observed on 18 December to honour the language, which is spoken by over 400 million people globally. It has been celebrated since 2012 to mark the adoption of Arabic as the sixth official language of the United Nations by the UN General Assembly. This year, the theme of the World Arabic Language Day is “The Contribution of the Arabic Language to Human Civilization and Culture”.

8. When is the ‘National Consumer Rights Day’ observed across India?

A. December.20

B. December.22

C. December.24

D. December.25

Answer & Explanation

Answer: C. December.24

  • December 24 is celebrated annually across India as National Consumer Rights Day. It is also called National Consumer Day. The Day commemorates December 24, 1986, the date when the Consumer Protection Act received assent of the President of India. The purpose of the day is to make consumers aware of their rights and responsibilities. World Consumer Rights Day is celebrated annually on March 15.

9. When is the International Migrants Day observed?

A. December.18

B. December.21

C. December.24

D. December.27

Answer & Explanation

Answer: A. December.18

  • The International Migrant Day is observed every year on December 18, to tackle the problem and challenges of global migration. The United Nations General Assembly in the year 1999 created the International Convention on the Protection of the Rights of All Migrant Workers and Members of their Families. The theme for the year 2022 is “Integrating migrants into primary health care”.

10. NTPC commissioned 150 MW & 90 MW Devikot Solar PV Projects in which state?

A. Tamil Nadu

B. Gujarat

C. Maharashtra

D. Rajasthan

Answer & Explanation

Answer: D. Rajasthan

  • NTPC has commissioned capacities of 150 MW & 90 MW Devikot Solar PV Projects at Jaisalmer in Rajasthan. They are declared on Commercial Operation. With this, standalone installed and commercial capacity of NTPC has become 58041 MW, while group installed and commercial capacity of NTPC has reached 70656 MW.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!