TnpscTnpsc Current Affairs

30th & 31st October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

30th & 31st October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 30th & 31st October 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ஆர்டனன்ஸ் இயக்குநரகத்தின் முதல் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ) S வைத்தியநாதன்

ஆ) ER ஷேக் 

இ) M சத்யன்

ஈ) Dr C சைலேந்திர பாபு

  • மூத்த IOFS அதிகாரி ER ஷேக், ஆர்டனன்ஸ் இயக்குநரகத்தின் முதல் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார். ஆர்ட்னன்ஸ் டைரக்டரேட் என்பது ஆர்ட்னன்ஸ் ஃபேக்டரி போர்டுக்கு (OFB) பதிலாக புதிதாக உருவாக்கப்பட்ட ஓரமைப்பாகும். ER ஷேக், 1984 பேட்ச் இந்திய ஆயுதத் தொழிற்சாலை சேவை (IOFS) அதிகாரி ஆவார்; இவர் பல்வேறு ஆயுத தொழிற்சாலைகளில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

2. NITI ஆயோக், அமேசான் வெப் சர்வீசஸ் & இன்டெல் ஆகியவை கூட்டாக, பின்வரும் எந்த இடத்தில் புதிய அனுபவ ஸ்டுடியோவை நிறுவியுள்ளன?

அ) மும்பை

ஆ) சென்னை

இ) புது தில்லி 

ஈ) ஹைதராபாத்

  • NITI Aayog, Amazon Web Services மற்றும் Intel ஆகியவை இணைந்து ஒரு புதிய அனுபவ ஸ்டுடியோவை உருவாக்கியுள்ளன. அது NITI Aayog Frontier Technologies Cloud Innovation Center, புது தில்லியில் அமைந்துள்ளது. அரசு, ஸ்டார்ட் அப்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கான பரிசோதனை வசதியாக இந்த வளாகம் செயல்படும். இது செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திர கற்றல் (ML), இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT), ஆக்மென்டட் ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கும்.

3. டேர் டு ட்ரீம் 2.0 & இளம் விஞ்ஞானிகளின் விருதுகள், எந்த நிறுவனத்தால் வழங்கப்பட்டன?

அ) ISRO

ஆ) DRDO 

இ) AIIMS

ஈ) BARC

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) ‘டேர் டு ட்ரீம் 2.0’ போட்டியில் வெற்றி பெற்றவர்களை பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் பாராட்டினார். புத்தாக்கம் மற்றும் ஸ்டார்ட்அப்களை ஊக்குவிப்பதற்காக ‘டேர் டு ட்ரீம் 3.0’ ஐயும் அவர் தொடங்கினார்.
  • டேர் டு ட்ரீம் என்பது டிஆர்டிஓவின் தேசிய அளவிலான போட்டியாகும், இது இந்திய கல்வியாளர்கள், தனிநபர்கள் மற்றும் ஸ்டார்ட்-அப்களை பாதுகாப்பு & விண்வெளி தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது. டிஆர்டிஓ தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்தின்கீழ் வெற்றியாளர்களுக்கு ஆதரவை வழங்குகிறது. 2019ஆம் ஆண்டிற்கான DRDO இளம் விஞ்ஞானிகள் விருதுகள், 16 DRDO விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டது.

4. ‘இந்திய வான்படை நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) அக்டோபர் 2

ஆ) அக்டோபர் 4

இ) அக்டோபர் 5

ஈ) அக்டோபர் 8 

  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்.8 அன்று, இந்திய வான்படை நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, இந்திய வான்படை நாளின் 89 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. 1932ஆம் ஆண்டு இதே நாளில் இந்திய வான்படை நிறுவப்பட்டதை இந்நாள் நினைவுகூருகிறது. முதல் செயல்பாட்டுப் படை, 1933 ஏப்ரலில் நிறுவப்பட்டது. இந்த நாள், ‘பாரதிய வாயு சேனா’ என்றும் அழைக்கப்படும் இந்திய விமானப்படை பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

5. உலகம் முழுவதும் அதிர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்குவது எது?

அ) சாலைப் போக்குவரத்து விபத்து 

ஆ) இயற்கை பேரிடர்கள்

இ) இடம்பெயர்தல்

ஈ) சுற்றுச்சூழல் அபாயங்கள்

  • ஒவ்வோர் ஆண்டும் அக்.17ஆம் தேதி உலக அதிர்ச்சி தினமாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. உலகெங்கிலும் இறப்பு & ஊனத்தை ஏற்படுத்தும் பெரு விபத்துக்கள் மற்றும் காயங்கள் மற்றும் அவற்றைத் தடுப்பதன் அவசியத்தை இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது.
  • சாலைபோக்குவரத்து விபத்து என்பது உலகம் முழுவதும் பேரதிர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், உலகம் முழுவதும் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காயங்களால் இறக்கின்றனர். இந்தியாவில் மட்டும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு மில்லியன் மக்கள் இறக்கின்றனர் மற்றும் 20 மில்லியன் பேர் காயங்களால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

6. G20 நாடுகளில் தனிநபர் அடிப்படையில் கரியமில வாயுவை (CO2) அதிக அளவில் வெளியேற்றும் நாடு எது?

அ) இந்தியா

ஆ) சீனா

இ) சவூதி அரேபியா 

ஈ) ரஷ்யா

  • உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களுள் ஒன்றான சவூதி அரேபியா, 2060ஆம் ஆண்டுக்குள் பைங்குடில் இல்லவாயு வெளியேற்றத்தில் “நிகர சுழியத்தை” அடைவதை இலக்காகக் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளது. உலகளவில் சவூதி அரேபியா 10ஆவது மிகப்பெரிய கரியமில வாயு வெளியிடும் நாடாக உள்ளது. G20 நாடுகளில் தனிநபர் அடிப்படையில் இது மிகப்பெரிய உமிழ்வாளராக உள்ளது. சவூதியின் முதல் பசுமை முன்முயற்சி மன்றத்தின் தொடக்க விழாவில், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இதை அறிவித்தார்.

7. இந்தியாவில், எந்தக் கால்நடை இனத்தின் முதல் கன்று, இன்-விட்ரோ கருத்தரிப்பைப் (IVF) பயன்படுத்தி பிறந்துள்ளது?

அ) சாகிவால்

ஆ) பண்ணி 

இ) ஓங்கோல்

ஈ) முர்ரா

  • மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம், பண்ணி எருமை இனத்தின் முதல் கன்று, இன்-விட்ரோ கருத்தரிப்பின்மூலம் பிறந்ததாக அறிவித்துள்ளது. கிர் சோம்நாத்தில், பால் பண்ணையாளருக்கு சொந்தமான பண்ணி எருமை IVF ஆண் கன்றை ஈன்றது. பால் உற்பத்தியை அதிகரிக்க, மரபணு ரீதியாக உயர் இரக எருமைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்தச் செயல்முறை மேற்கொள்ளப்பட்டது.
  • குஜராத்தின் கட்ச் பகுதியில் முதன்மையாகக்காணப்படும் பண்ணி இன எருமைகள், வறட்சியான சூழலில் அதன் வாழுந்தன்மை மற்றும் அதிக பால் உற்பத்தித் திறனுக்காக பொதுவாக அறியப்படுகின்றன.

8. அண்மையில் 51ஆவது தாதாசாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் யார்?

அ) இரஜினிகாந்த் 

ஆ) கமலஹாசன்

இ) சத்யராஜ்

ஈ) பார்த்திபன்

  • இந்திய திரையுலகில், ‘சூப்பர் ஸ்டார்’ இரஜினிகாந்த் அவர்களின் சிறந்த பங்களிப்பிற்காக அவருக்கு 51ஆவது தாதாசாகேப் பால்கே விருது வழங் -கப்பட்டுள்ளது. சமீபத்தில், புது தில்லியில் நடைபெற்ற 67ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், குடியரசுத்துணைத்தலைவர் வெங்கையா, இந்த விருதை வழங்கினார்.
  • ‘தாதாசாகேப் பால்கே விருது’ என்பது இந்தியாவின் மிகவுயரிய திரைப் பட விருதாகக்கருதப்படுகிறது. 1969’இல் இந்திய அரசால் நிறுவப்பட்டது.

9. உலக உணவுத் திட்டத்தின் ஓர் அண்மைய அறிவிப்பின்படி, ‘பட்டினியை நோக்கிச் சென்றுகொண்டுள்ள’ நாடு எது?

அ) வெனிசுலா

ஆ) ஆப்கானிஸ்தான் 

இ) சிரியா

ஈ) சூடான்

  • உலக உணவுத் திட்டத்தின் நிர்வாக இயக்குநர் டேவிட் பீஸ்லி கூறுகையில், 22.8 மில்லியன் மக்கள் (ஆப்கானிஸ்தானின் 39 மில்லிய -ன் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள்) கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ‘பட்டினியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்”. 2 மாதங்களுக்கு முன்பு, 14 மில்லியன் மக்கள் உணவு நெருக்கடியின் விளிம்பில் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
  • உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் குழந்தைகள் உட்பட மில்லியன் கணக்கான ஆப்கானியர்கள் பட்டினியால் இறக்க நேரிடும் என்றும் அவர் அறிவித்தார். முடக்கப்பட்ட நிதியை மனிதாபிமான முயற்சி -களுக்குப் பயன்படுத்தவும் அவர் வலியுறுத்தினார்.

10. NIPUN பாரத் மிஷனை செயல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட புதிய தேசிய வழிகாட்டுதல் குழுவின் தலைவர் யார்?

அ) மத்திய கல்வி அமைச்சர் 

ஆ) மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சர்

இ) NITI ஆயோக் CEO

ஈ) ISRO தலைவர்

  • பாரத் மிஷன் – NIPUN – புரிதல் மற்றும் எண்ணியல் மூலம் வாசிப்பில் நிபுணத்துவத்திற்கான தேசிய முன்முயற்சியை செயல்படுத்துவதற்காக சமீபத்தில் தேசிய வழிகாட்டுதல் குழு உருவாக்கப்பட்டது. இதற்கு மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமைதாங்குவார்.
  • கல்வித்துறை இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி துணைத்தலை
    -வராக இருப்பார். பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையானது 2026-27ஆம் ஆண்டுக்குள் மூன்றாம் வகுப்பு முடிவதற்குள் ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படைக் கல்வியறிவு மற்றும் எண்ணியல் ஆகியவற் -றில், உலகளாவிய நிபுணத்துவம் என்ற இலக்கை அடைய 2021 ஜூலையில் இந்த மிஷன் தொடங்கப்பட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்திய போர்க்கப்பல் ‘துஷில்’ ரஷியாவில் இயக்கம்

இந்திய கடற்படையின் ‘பி1135.6’ வகையைச் சேர்ந்த 7ஆவது போர்க் கப்பல், ரஷியாவின் கலினின்கிராட் நகரில் அமைந்துள்ள யந்தர் கப்பல் கட்டுமான தளத்தில் முதல்முறையாக இயக்கப்பட்டது.

ரஷியாவுக்கான இந்திய தூதர் டி பாலவெங்கடேஷ் வர்மா மற்றும் ரஷிய கூட்டமைப்பு மற்றும் இந்திய கடற்படை அதிகாரிகளின் முன்னிலையில் கப்பல் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.

‘துஷில்’ என்றால் சம்ஸ்கிருதத்தில் பாதுகாப்பு கவசம் என்று பொருள். கோவா கப்பல் கட்டுமான நிறுவனத்தில் 2 கப்பல்களும் ரஷியாவில் இரண்டு 1135.6 ரக கப்பல்களும் கட்டமைப்பதற்காக ஒப்பந்தம் இந்தியா-ரஷியா இடையே மேற்கொண்டது. இந்திய கடற்படையின் தேவைகளு -க்கேற்ப கட்டமைக்கப்படும் இக்கப்பல்களில் அதிநவீன வசதிகளும், ஆயுதங்களும் உள்ளன. யந்தர் கப்பல் கட்டும் தளத்தின் தலைமை இயக்குநர் இல்யா சமரின், இந்தியாவின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

2. அக்டோபர்.30 – உலக சிக்கன நாள்.

3. ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரோம் நகருக்கு சென்றார் பிரதமர் மோடி: வாடிகனில் போப் பிரான்சிஸை சந்திக்க திட்டம்

ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, இத்தாலி சென்றுள்ளார். வாடிகனில் போப் ஆண்டவர் பிரான்சிஸை சந்தித்து பேசவும் மோடி திட்டமிட்டுள்ளார்.

இத்தாலி தலைநகர் ரோம் நகரில் 16ஆவது ஜி20 உச்சிமாநாடு இன்றும் நாளையும் நடக்கிறது. இத்தாலி பிரதமர் மரியோ டிரகியின் அழைப்பை ஏற்று இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, முதல்முறையாக வாடிகனுக்கு சென்று போப் ஆண்டவர் பிரான்சிஸை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.

பிரதமரின் பயணம் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

இத்தாலி தலைமையின் கீழ்நடக்கவுள்ள ஜி20 மாநாட்டில் கரோனாவுக்கு பிறகான பொருளாதார மீட்பு நடவடிக்கைகள், பருவ நிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்படும். ஜி20 மாநாட்டுக்கு இடையே இத்தாலி பிரதமர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.

அதன்பின், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகருக்கு செல்லும் மோடி, அங்கு நவ.1, 2 ஆகிய தேதிகளில் நடக்கும் பருவநிலை தொடர்பான மாநாட்டில் பங்கேற்கிறார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனையும் சந்திக்க உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

3. ஒரே செடியில் கத்தரிக்காய், தக்காளி

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனத் தின் வேளாண் விஞ்ஞானிகள் கலப்பின முறையில் ஒரே செடியில் கத்தரிக்காய் மற்றும் தக்காளியை வளர்த்து புதிய சாதனை செய்துள்ளனர். கத்தரிக்காயின் ஆங்கிலப் பெயரான ‘பிரிஞ்சால்’, தக்காளியின் ஆங்கிலப்பெயரான ‘டொமாட்டோ’ ஆகியவற் -றை இணைத்து இச்செடிக்கு ‘பிரிமாட்டோ’ என்று பெயர்வைத்துள்ளனர்.

ஒரு செடியின் பாகத்தை மற்றொரு செடியின் தண்டு அல்லது வேரில் இணைத்து வளர்க்கப்படும் முறையில் இந்தப் புதிய கலப்பின செடி வளர்க்கப்பட்டுள்ளது. 25-30 நாட்கள் ஆன கத்திரிக்காய் விதைகள், 25 நாட்களான தக்காளி விதைகள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு வாரத்துக்கு கட்டுப்படுத்தப் பட்ட சீதோஷ்ண நிலையில் வளர்த்து பின்னர் மேலும் ஒரு வாரம் நிழலில் வளர்த்து அதன் பிறகு நிலத்தில் பயிரிடப்படுகிறது.

இதுபோல் நகரங்களில் சிறிய இடத்தில் கூட வளர்க்கலாம். ஒவ்வொரு செடியும் 2.3 கிலோ தக்காளி, 2.6 கிலோ கத்தரிக்காய் விளைவிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

4. இந்தியா-ஐரோப்பிய யூனியன் வர்த்தக மேம்பாடு: பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

ஐரோப்பிய யூனியன் நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தக உறவை மேம்படுத்துவது தொடர்பாக ஐரோப்பிய கவுன்சில், ஐரோப்பிய ஆணையம் ஆகியவற்றின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கூட்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜி20 நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி இத்தாலிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் ரோமில் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மிஷெல், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லியன் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்துப்பேசினார்.

அப்போது, ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான வர்த்தகத் தொடர்பை மேம்படுத்துவது தொடர்பாக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

15ஆவது இந்தியா-ஐரோப்பிய யூனியன் மாநாடு கடந்த ஆண்டு ஜூலையில் காணொலி வாயிலாக நடைபெற்றது. ஐரோப்பிய யூனியனின் 10ஆவது மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது. ஐரோப்பிய யூனியன் நாடுகள் இறக்குமதி செய்யும் பொருள்களில் 1.8 சதவீதம் இந்தியாவைச் சேர்ந்தவையாகும்.

கடந்த ஆண்டு நிலவரப்படி ஐரோப்பிய யூனியனில் இடம்பெற்றுள்ள 27 நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான வர்த்தகம் சுமார் `5.55 லட்சம் கோடியாக இருந்தது.

5. ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் மூன்றாண்டுகள் நீட்டிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

ஆர்பிஐ ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து, கடந்த 2018ஆம் ஆண்டு ஆர்பிஐ-யின் 25ஆவது ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டார். 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்ட அவரது பதவிக்காலம் டிச.10ஆம் தேதியுடன் நிறைவடை -வதாக இருந்தது.

இந்நிலையில், அவரது பதவிக் காலத்தை பிரதமர் மோடி தலைமையிலா -ன நியமனங்களுக்கான குழு மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் டிச.10ஆம் தேதியில் இருந்து மேலும் 3 ஆண்டுகளுக்கோ அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையோ நீட்டிக்கப்படுகிறது’ எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக ஆர்பிஐ’இன் தலைமைப்பொறுப்பை 2024ஆம் ஆண்டு டிசம்பர் வரை சக்திகாந்த தாஸ் வகிக்க வழி ஏற்பட்டுள்ளது.

நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்வதற்காக மத்திய அரசு `12.60 லட்சம் கோடி கடன் பெறுவதிலும் அவர் முக்கியப் பங்கு வகித்தார். தமிழகப் பிரிவு இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) அதிகாரியான சக்திகாந்த தாஸ் கடந்த 2017ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.

கடந்த 2015ஆம் ஆண்டுமுதல் பணி ஓய்வு பெறும் வரை பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலராக அவர் பதவி வகித்தார். 15ஆவது நிதிக்குழுவின் உறுப்பினராகவும் அவர் இருந்தார்.

தனது பதவிக் காலத்தை சக்திகாந்த தாஸ் முழுமையாக நிறைவு செய்தால், நீண்ட காலம் ஆர்பிஐ ஆளுநராக இருந்த 2ஆவது நபர் என்ற சிறப்பைப் பெறுவார். இதற்கு முன்பு பெனகல் ராமா ராவ் 1949 முதல் 1957 வரை தொடர்ந்து ஆர்பிஐ ஆளுநராக இருந்தார். அவரைத் தவிர 4 ஆளுநர்கள் மட்டுமே 5 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்துள்ளனர்.

ஆர்பிஐ ஆளுநரின் பதவிக்காலத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு நீட்டிப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த 2016ஆம் ஆண்டில் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன், பதவிக்கால நீட்டிப்பை ஏற்க மறுத்துவிட்டார். அதையடுத்து பதவியேற்ற ஆளுநர் உர்ஜித் படேல் 3 ஆண்டு பதவிக்காலம் முடியும் முன்பே ராஜிநாமா செய்தார்.

6. ஒரே ஆண்டில் 1.53 லட்சம் பேர் தற்கொலை – தமிழ்நாடு இரண்டாம் இடம்

நாட்டில் கடந்த 2020ஆம் ஆண்டு 1.53 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதில் மகாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 16,000 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இதுதொடர்பாக தேசிய குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு நாடு முழுவதும் 1,39,123 பேர் தற்கொலை செய்துகொண்டனர். இது கடந்த ஆண்டு 1,53,052-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு 10.4 சதவீதமாக இருந்த தற்கொலை விகிதம், கடந்த ஆண்டு 11.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடந்தாண்டு அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 19,909 பேர் தற்கொலை செய்துகொண்டனர். அதற்கு அடுத்த இடங்களில் தமிழ்நாடு (16,883), மத்திய பிரதேசம் (14,578), மேற்கு வங்கம் (13,103), கர்நாடகம் (12,259) மாநிலங்கள் உள்ளன.

தற்கொலை செய்துகொண்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 50.1 சதவீதம் பேர் இந்த 5 மாநிலங்களைச் சோந்தவர்கள். நாட்டில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலம் உத்தர பிரதேசம். மொத்த மக்கள் தொகையில் 16.9% பேர் அந்த மாநிலத்தில் வசிக்கின்றனர். ஆனால், அந்த மாநிலத்தில் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகப் பதிவாகியுள்ளது.

மொத்த தற்கொலை எண்ணிக்கையில் 3.1% பேர்தான் அந்த மாநிலத்
-தைச் சோந்தவர்கள். யூனியன் பிரதேசங்களை பொருத்தவரை, தில்லி -யில் அதிக அளவில் தற்கொலைகள் (3,142) பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்த இடத்தில் புதுச்சேரி (408) உள்ளது.

நகரங்களில் அதிக தற்கொலை: நாட்டில் உள்ள 53 பெரிய நகரங்களில் 23,855 பேர் தற்கொலை செய்துகொண்டனர். நகரங்களில் தற்கொலை செய்துகொண்டவர்களின் வீதம் (14.8%) ஒட்டுமொத்தமாக இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டவர்களின் விகிதத்தைவிட (11.3%) அதிகம்.

மொத்த தற்கொலை எண்ணிக்கையில் 56.7% தற்கொலைகளுக்கான காரணங்களாக குடும்பப் பிரச்னைகள், திருமணம் சார்ந்த பிரச்னைகள், உடல்நல பாதிப்புகள் உள்ளன.

10,000 விவசாயிகள்: கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்ட 1.53 லட்சம் பேரில் 10,677 போ விவசாயிகள்.

இவர்களில் 5,579 பேர் சொந்தமாக நிலம் வைத்திருந்தவர்கள்; 5,098 பேர் பிறர் நிலங்களில் பணிபுரிந்த விவசாயத் தொழிலாளர்கள். மொத்த தற்கொலை எண்ணிக்கையில் இவர்களின் விகிதம் ஏழு சதவீதமாகும். ஒட்டுமொத்த தற்கொலை எண்ணிக்கையில் 70.9% பேர் ஆண்கள்; 29.1 பேர் பெண்கள்.

7. மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை 35% எட்டியது

மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை முதல் அரையாண்டில் பட்ஜெட் இலக்கில் 35 சதவீதத்தை எட்டியுள்ளது.

இதுகுறித்து பொதுக் கணக்கு கட்டுப்பாட்டாளர் (சிஜிஏ) வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

2021 செப்டம்பருடன் முடிவடைந்த முதல் அரையாண்டில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.5,26,851 கோடியைத் தொட்டுள்ளது. இது, நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பீட்டில் 35 சதவீதமாகும்.

இருப்பினும், கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் நிதிப் பற்றாக்குறை -யானது நடப்புநிதியாண்டில் மிகவும் கட்டுப்பாட்டுக்குள்ளேயே உள்ளது. கடந்த நிதியாண்டில் கரோனா பேரிடரை எதிர்கொள்ள அதிக செலவிட வேண்டியிருந்ததால் நிதிப்பற்றாக்குறையானது பட்ஜெட் இலக்கை தாண்டி 114.8 சதவீதமாக அதிகரித்தது என சிஜிஏ தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தி
-யில் 6.8 சதவீதமாக (`15,06,812 கோடி) இருக்கும் என்பது மத்திய அரசின் எதிர்பார்ப்பாக உள்ளது.

8. பிரதமரின் ஜன் தன் யோஜனா: வங்கிக் கணக்குகள் எண்ணிக்கை 44 கோடியாக அதிகரிப்பு

பிரதமரின் மக்கள் நிதி திட்டத்தின் (ஜன் தன் யோஜனா) கீழுள்ள வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை 44 கோடியாக அதிகரித்துள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

அசோசேம் வர்த்தகக் கூட்டமைப்பு சார்பில் நிதித்துறை தொடர்பான இணையவழி கருத்தரங்கு நடந்தது. இதில் மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொருளாதார விவகாரங்கள் துறையின் ஆலோசகர் மணீஷ் சென்சர்மா பங்கேற்று பேசுகையில், “பிரதமரின் ஜன் தன் திட்டத்தின் கீழுள்ள வங்கிக்கணக்குகளின் எண்ணிக்கை, இந்த ஆண்டு அக்டோபர் வரை இந்த சுமார் 44 கோடியாக அதிகரித்துள்ளது”.

கடந்த 2014ஆம் ஆண்டு சுதந்திர தினத்தின்போது பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். அந்த ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி அத்திட்டம் அமலுக்கு வந்தது.

பொதுமக்களுக்கு நிதிச்சேவைகள், குறிப்பாக பணப்பரிவர்த்தனை, கட
-ன் பெறுதல், காப்பீடு, ஓய்வூதியம் சார்ந்த சேவைகள் எளிதில் கிடைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக்கொண்டு இத்திட்டம் அறிமுகப்படுத்த -ப்பட்டது.

1. Who has been appointed as the first Director General of the Ordnance Directorate?

A) S Vaidhyanathan

B) ER Sheikh 

C) M Sathyan

D) Dr C Sylendra Babu

  • Senior IOFS officer ER Sheikh has assumed charge as the first director general of the Ordnance Directorate. The Ordnance Directorate is a newly created entity to replace the Ordnance Factory Board (OFB). ER Sheikh is a 1984 batch Indian Ordnance Factory Service (IOFS) officer who has served in various capacities in various ordnance factories.

2. NITI Aayog, Amazon Web Services and Intel have jointly established a new experience studio at which location?

A) Mumbai

B) Chennai

C) New Delhi 

D) Hyderabad

  • The NITI Aayog, Amazon Web Services and Intel have jointly created a new experience studio, which is located at NITI Aayog Frontier Technologies Cloud Innovation Center, New Delhi. This premise would serve as an experimentation facility for government, start–ups, enterprises, and industry experts. It would house technologies such as artificial intelligence (AI), machine learning (ML), Internet of Things (IoT), augmented reality and virtual reality etc.

3. Dare to Dream 2.0 & Young Scientists’ awards were presented by which institution?

A) ISRO

B) DRDO 

C) AIIMS

D) BARC

  • Defence Minister Rajnath Singh felicitated the winners of ‘Dare to Dream 2.0’ Contest of Defence Research & Development Organisation (DRDO). He also launched ‘Dare to Dream 3.0’ to promote innovators & startups. Dare to Dream is DRDO’s nation–wide contest to promote Indian academicians, individuals and start–ups to develop defence and aerospace technologies. DRDO provides support to the winners under Technology Development Fund (TDF) scheme. DRDO Young Scientists awards for the year 2019 were also presented to 16 DRDO scientists.

4. When is the ‘Indian Air Force Day’ celebrated every year?

A) October 2

B) October 4

C) October 5

D) October 8 

  • Every year on October 8, the country celebrates Indian Air Force Day. This year will celebrate the 89th anniversary of Indian Air Force Day. The day commemorates the establishment of Indian Air Force (IAF) on the same day in 1932. The first operational squadron was established in April 1933. The day also aims to increase awareness about the Indian Air Force, also known as the ‘Bhartiya Vayu Sena’.

5. Which is the leading cause of trauma across the world?

A) Road Traffic Accident 

B) Natural Calamities

C) Migration

D) Environmental Risks

  • Every year, 17th October is celebrated as World Trauma Day across the world. This day highlights the high rate of accidents and injuries causing death and disability across the world and the need to prevent them. Road Traffic Accident (RTA) is the leading cause of trauma across the world. Every year, over 5 million people die from injuries across the world. In India alone, around one million people die and 20 million are hospitalized every year due to injuries.

6. Which country is the largest emitter of carbon dioxide on a per capita basis among G–20 countries?

A) India

B) China

C) Saudi Arabia 

D) Russia

  • Saudi Arabia, one of the world’s largest oil producers, announced that it aims to reach “net zero” greenhouse gas emissions by 2060. Saudi Arabia is the 10th largest emitter of carbon dioxide globally. It is also the largest emitter on a per capita basis among G–20 countries. This was announced by the Crown Prince Mohammed bin Salman at the inauguration of the kingdom’s first–ever Saudi Green Initiative Forum.

7. The first calf of which cattle breed was born using in–vitro fertilisation (IVF) in India?

A) Sahiwal

B) Banni 

C) Ongole

D) Murrah

  • Union Ministry of Fisheries, Animal Husbandry and Dairying announced that the first calf of Banni buffalo breed was born using in–vitro fertilisation (IVF). A Banni buffalo belonging to a dairy farmer in Gir Somnath gave birth to the IVF male calf.
  • The process was carried out to enhance the number of genetically superior buffaloes to increase milk production. Banni breed of buffaloes, found primarily in Gujarat’s Kutch region, are known for its resilience and higher milk producing capacity in an arid environment.

8. Which actor has been conferred with 51st Dadasaheb Phalke Award recently?

A) Rajinikanth 

B) Kamal Hassan

C) Sathyaraj

D) Parthiban

  • ‘Superstar’ Rajinikanth was conferred with 51st Dadasaheb Phalke Award for his outstanding contribution to the Indian Cinema. The award was presented by Vice–President M Venkaiah at the 67th National Film Awards ceremony, recently held in New Delhi. The Dadasaheb Phalke Award is considered to be India’s highest film award and was instituted by the Indian Government in the year 1969.

9. As per World Food Programme’s recent announcement, which country is ‘marching to starvation’?

A) Venezuela

B) Afghanistan 

C) Syria

D) Sudan

  • The World Food Programme (WFP) Executive Director David Beasley said that 22.8 million people, more than half of Afghanistan’s 39 million population, were facing acute food insecurity and “marching to starvation”. Two months ago, it was announced that 14 million were in the edge of food crisis.
  • The UN official also announced that millions of Afghans, including children, could die of starvation unless urgent action is taken. He also urged to free the frozen funds to be used for humanitarian efforts.

10. Who is the chairperson of the new National Steering Committee setup to implement the NIOUN Bharat Mission?

A) Union Education Minister 

B) Union Skill Development Minister

C) NITI Aayog CEO

D) ISRO Chairperson

  • A National Steering Committee (NSC) has been recently formed for the implementation of National Initiative for Proficiency in Reading with Understanding and Numeracy (NIPUN) Bharat Mission. It will be chaired by the Union Education Minister Dharmendra Pradhan and Minister of State for Education Annapurna Devi would be the vice–chairperson.
  • The Department of School Education and Literacy had launched the Mission in July 2021, to achieve the goal of universal proficiency in foundational literacy and numeracy for every child by end of Class 3 by 2026–27.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!