28th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English
28th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English
Hello aspirants, you can read 28th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.
February Daily Current Affairs Pdf
1. ‘பிரதம அமைச்சர் கிராம சதக் யோஜனா’ திட்டத்தைச் செயல்படுத்துகிற மத்திய அமைச்சகம் எது?
அ) சாலைப்போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சகம்
ஆ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்
இ) உழவு மற்றும் உழவர்கள் நல அமைச்சகம்
ஈ) பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
- மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகமானது தேசிய ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு முகமையுடன் இணைந்து ‘பிரதம அமைச்சர் கிராம சதக் யோஜனா’ திட்டத்தைச் செயல்படுத்துகிறது. சமீபத்தில், மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங், பொது வெளியில் கிராமப்புற இணைப்புக்கான GIS தரவை வெளியிட்டார்.
- பிரதமரின் கிராமப்புற சாலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக 800,000+ கிராமப்புற வசதிகள் தொடர்பான புவியியல் தகவல் அமைப்பு பற்றிய தரவுகளும், ஒரு மில்லியன்+ வசிப்பிடங்கள் மற்றும் 25,00,000+ கிலோமீட்டர் தூர சாலைகள் பற்றிய தரவுகளும் சேகரிக்கப்பட்டு ஜிஐஎஸ் அமைப்பை பயன்படுத்தி டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
2. இந்தியாவில் அனைத்து முன்கட்டண கருவிகளையும் அங்கீகரிக்கும் நிறுவனம் எது?
அ) NPCI
ஆ) RBI
இ) நிதி அமைச்சகம்
ஈ) அமலாக்க இயக்குநரகம்
- இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவில் உள்ள அனைத்து ப்ரீ-பெய்டு கருவிகளையும் (PPI) அங்கீகரிக்கிறது. பணஞ் செலுத்துதல் மற்றும் செட்டில்மென்ட் சிஸ்டம்ஸ் சட்டம், 2007 (PSS சட்டம்) கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் அது அங்கீகரிக்கிறது. PSS சட்டம், 2007’இன்கீழ், மத்திய வங்கியின் அங்கீகாரம் இல்லாமல், வாடகை கார் சேவை வழங்கும் செயலியான ‘sRide’ குறித்து RBI அண்மையில் நாட்டு மக்களை எச்சரித்தது.
3. எந்த இந்திய கணிதவியலாளருக்கு 2021-க்கான ‘இளம் கணிதவியலாளர்களுக்கான இராமானுஜன் பரிசு’ வழங்கப்பட்டுள்ளது?
அ) நீனா குப்தா
ஆ) R பிரக்ஞானந்தா
இ) Dr B உமா சங்கர்
ஈ) Dr குந்தல் கோஷ்
- கொல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளியியல் கழகத்தின் கணிதவியலாளரான பேராசிரியர் நீனா குப்தாவுக்கு ‘இளம் கணிதவியலாளர்களுக்கான இராமானுஜன் பரிசு’ வழங்கப்பட்டது. அஃபைன் இயற்கணித வடிவியல் மற்றும் பரிமாற்ற இயற்கணிதம் ஆகியவற்றில் அவர் செய்த குறிப்பிடத்தக்க பணிக்காக கடந்த 2021ஆம் ஆண்டிற்கான விருதை அவர் பெற்றார்.
- சர்வதேச கோட்பாட்டு இயற்பியல் மையம் (ICTP) மற்றும் சர்வதேச கணித ஒன்றியம் ஆகியவற்றுடன் இணைந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நிதியுதவியுடன் ஒரு வளரும் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளருக்கு ஆண்டுதோறும் இப்பரிசு வழங்கப்படுகிறது.
4. நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டுக் கவுன்சிலின் தலைவர் யார்?
அ) RBI ஆளுநர்
ஆ) மத்திய நிதி அமைச்சர்
இ) பிரதமர்
ஈ) NITI ஆயோக் CEO
- நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டுக் கவுன்சிலின் 25ஆவது கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது. நிதித்துறையின் வளர்ச்சிக்கும், பொருளாதார நிலைப்புத்தன்மையுடன் உள்ளடங்கிய பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கும் தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நாணய மேலாண்மை தொடர்பான பல்வேறு செயல்பாட்டு சிக்கல்களையும் அக்கவுன்சில் விவாதித்தது.
5. National Means-cum-Merit Scholarship (NMMSS) திட்டமானது எந்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது?
அ) 2023-24
ஆ) 2025-26
இ) 2029-30
ஈ) 2031-32
- 2025-26 வரை தேசிய மீன்ஸ்-கம்-மெரிட் ஸ்காலர்ஷிப் திட்டத்தை (NMMSS) தொடர கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. வருமான உச்சவரம்பை ஆண்டுக்கு `1.5 இலட்சத்திலிருந்து `3.5 இலட்சமாக அதிகரிப்பதுபோன்ற தகுதி அளவுகோல்களில் சில மாற்றங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எட்டாம் வகுப்பில் தேர்ச்சியடைந்த மாணவர்ளின் இடைநிற்றலை தடுத்தலும், 2ஆம் நிலைக் கட்டத்தில் கல்வியைத் தொடர ஊக்குவிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
6. ‘சர்வதேச விண்வெளி நிலையத்தின் நிலைமாற்ற அறிக்கை’யை வழங்கிய விண்வெளி நிறுவனம் எது?
அ) ஸ்பேஸ்X
ஆ) NASA
இ) ESA
ஈ) CNSA
- NASA, ‘சர்வதேச விண்வெளி நிலையத்தின் நிலைமாற்ற அறிக்கை’யின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை வெளியிட்டுள்ளது. வணிகச் சேவைகளுக்கு சுமூகமான மாற்றத்திற்கு வழி வகுக்கும் அடுத்த பத்தாண்டிற்கான நிலைய செயற்பாடுக -ளுக்கான இலக்குகள் இதில் அடங்கும்.
- தாழ்புவி சுற்றுவழி குறித்த வணிகப் பொருளாதாரத்தின் அளிப்பு மற்றும் தேவைப் பக்கம் ஆகிய இரண்டையும் மேம்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் மாற்றத்திற்குத் தேவையான தொழில்நுட்ப நிலைகள் மற்றும் பட்ஜெட் ஆகியவையும் இதில் அடங்கும்.
7. ‘COVID-19 தொற்றுச்சூழலில் சுகாதாரக் கழிவுகளின் உலகளாவிய பகுப்பாய்வு’ என்ற அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?
அ) NITI ஆயோக்
ஆ) WHO
இ) ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்
ஈ) FDA
- உலக சுகாதார நிறுவனம், ‘COVID-19 சூழலில் சுகாதாரக் கழிவுகளின் உலகளாவிய பகுப்பாய்வு’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, உலகளவில் செலுத்தப்பட்ட 8 பில்லியன் தடுப்பூசிகள் கண்ணாடி குப்பிகள், மருந்தூசிகள் மற்றும் முதலுதவிப் பெட்டிகள் வடிவில் கூடுதலாக 144,000 டன் கழிவுகளை உற்பத்தி செய்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
8. ‘விண்வெளி பயன்பாட்டு மையம் மற்றும் இயற்பியல் ஆய்வுக்கூடம்’ எந்த நிறுவனத்தின்கீழ் செயல்படுகிறது?
அ) DRDO
ஆ) ISRO
இ) CSIR
ஈ) BARC
- அகமதாபாத்தைச் சார்ந்த விண்வெளி பயன்பாட்டு மையம் மற்றும் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகமானது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்கீழ் செயல்படுகிறது. சமீபத்தில், இந்த நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ‘குவாண்டம் சிக்கலை’ வெற்றிகரமாக நிரூபித்துள்ளனர்.
- நிகழ்நேர குவாண்டம் கீ விநியோக உத்தியை (QKD) பயன்படுத்தி, 300 மீ இடைவெளியில் அமைந்த இரண்டு கட்டடங்களுக்கு இடையே ஹேக்-புரூப் தகவல் தொடர்பு முறையை அவர்கள் மேற்கொண்டனர்.
9. 2021-2022இல் தனது முதல் ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பையை வென்ற அணி எது?
அ) செனகல்
ஆ) மலாவி
இ) கினியா
ஈ) நமீபியா
- பெனால்டி ஷூட் ஔட்டில் எகிப்தை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 2022ஆம் ஆண்டில் செனகல் தனது முதல் ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பையை வென்றது. செனகலின் சாடியோ மானே வெற்றிக்கான கோலை அடித்தார். செனகல், 2019 – ஆப்பிரிக்கக் கோப்பையின் இறுதிப்போட்டியில் அல்ஜீரியாவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்ந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
- செனகல் ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பையின் பதினாறு பதிப்புகளில் விளையாடியுள்ளது. இறுதியாக 2021’இல் இவ்வணி தனது முதல் AFCON பட்டத்தை வென்றது.
10. 2022 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரே இந்திய ஆவணப்படம் எது?
அ) India Untouched
ஆ) Writing with Fire
இ) Period. End Of Sentence
ஈ) Jai Bhim
- திரைப்பட தயாரிப்பாளர்களான ரிந்து தாமஸ் மற்றும் சுஷ்மித் கோஷ் இயக்கிய ‘ரைட்டிங் வித் பையர்’ என்ற இந்திய ஆவணப்படம் 94ஆவது அகாதமி விருதுகளில் ‘சிறந்த ஆவணப்பட’ப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஒரே இந்திய ஆவணப்படம் இதுவாகும்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. முதல்வரின் சுயசரிதை: இன்று வெளியிடுகிறார் ராகுல்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தன் வரலாற்று நூலான ‘உங்களில் ஒருவன்’ நூலின் முதல் பாகத்தை அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிப்.28 அன்று வெளியிடுகிறார்.
நூலை இராகுல் காந்தி வெளியிட, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பெற்றுக்கொள்கிறார்.
2. பல்கேரியாவில் நடைபெறும் 73ஆவது ஸ்ட்ரேண்ட்ஜா நினைவு பாக்சிங் தொடரில், இந்திய வீராங்கனைகள் நிக்கத் ஜரீன் (52 கிகி), நீட்டு (48 கிகி) தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
3. மெக்சிகோ ஓபன்; 4ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற நடால்
மெக்சிகோ நாட்டின் அகாபல்கோ நகரில் மெக்சிகோ ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான நடால் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த கேமரூன் நார்ரி ஆகியோர் விளையாடினர்.
இந்தப் போட்டியில், 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கேமரூனை வீழ்த்தி ரபேல் நடால் பட்டம் வென்றுள்ளார். அகாபல்கோவில் நடாலுக்கு இது 4ஆவது சாம்பியன்பட்டம் ஆகும். நடப்பு 2022ஆம் ஆண்டில் நடாலின் மூன்றாவது சாம்பியன் பட்டம் இதுவாகும்.
4. பொதுத்துறை வங்கிகளுக்கு `15,000 கோடி மூலதன நிதி
பொதுத்துறை வங்கிகளுக்கு `15,000 கோடி மூலதன நிதியை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதில் பெரும் பங்கானது நிதிப் பிரச்னையைச் சந்தித்து வரும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் & சிந்து வங்கி உள்ளிட்டவற்றுக்கு வழங்கப்படவுள்ளது.
வங்கிகள் கடன் வழங்குவதில் பிரச்னை ஏற்படக்கூடாது என்பதற்காக மூலதன நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது. நடப்பு 2021-22ஆம் நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகளுக்கு `20,000 கோடி மூலதன நிதி வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது.
அதில் `15,000 கோடி நிதியைப் பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு விரைவில் வழங்கும் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் & சிந்து வங்கி உள்ளிட்ட வங்கிகளுக்கு அதிக நிதி வழங்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறப்பு நிதிப்பத்திரங்கள் வாயிலாக இந்த மூலதன நிதி வழங்கப்படவுள்ளது. அப்பத்திரங்களுக்கு வட்டி எதுவும் விதிக்கப்படாது. அதே வேளையில், நிதிப்பத்திரங்களின் அசல் விலையில் குறிப்பிட்ட தள்ளுபடியுடன் அவை விநியோகிக்கப்படவுள்ளன.
எந்தெந்த வங்கிகளுக்கு எவ்வளவு நிதி வழங்குவது என்பது தொடர்பாக மார்ச்சில் முடிவெடுக்கப்படவுள்ளதாக -வும், அதையடுத்து மூலதன நிதியானது பகிர்ந்து வழங்கப்படும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப் & சிந்து வங்கிக்குக் கடந்த 2020-21ஆம் நிதி ஆண்டின் 3ஆவது காலாண்டின்போது மூலதன நிதி வழங்கப்பட்டது. அதையடுத்து பேங்க் ஆப் இந்தியா (`3,000 கோடி), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (`4,100 கோடி), சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா (`4,800 கோடி), யுசிஓ வங்கி (`2,600 கோடி) ஆகியவற்றுக்குக் கடந்த ஆண்டு மார்ச்சில் `14,500 கோடி மூலதன நிதி வழங்கப்பட்டிருந்தது. அடுத்த 2022-23ஆம் நிதியாண்டில் வங்கிகளுக்கான மூலதன நிதி இலக்கு `15,000 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
5. 30 ‘பிரிடேட்டர் ட்ரோன்’கள் வாங்கும் ஒப்பந்தம்: இறுதிக்கட்டத்தில் இந்திய-அமெரிக்க பேச்சுவார்த்தை
அமெரிக்காவிடமிருந்து $3 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் `22,500 கோடி) மதிப்பில் பன்முகத் தாக்குதலுக்கு பயன்படக்கூடிய 30-எம்கியூ9பி பிரிடேட்டர் ட்ரோன்களை (ஆளில்லா விமானங்கள்) இந்தியா வாங்குவதற்கான ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கு அட்லாண்டிக் பாதுகாப்பு ஒத்துழைப்பு (நேட்டோ) கூட்டமைப்பில் அங்கம் வகிக்காத ஒரு நாட்டுக்கு இந்த ட்ரோன்களை வழங்க அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
இந்த மிகப்பெரிய பாதுகாப்புத்துறைசார் ஒப்பந்தத்துக்கான முன்மொழிவு, கடந்த 2017-ஆம்ஆண்டு முந்தைய அதிபர் டிரம்ப் ஆட்சி காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது அறிவிக்கப்பட்டதாகும்.
அதன் பிறகு, இரு நாடுகளிடையே நடத்தப்பட்ட தீவிர பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தியாவின் ராணுவம், விமானப் படை மற்றும் கடற்படை என முப்படைகளுக்கும் தலா 10 ட்ரோன்கள் வீதம் 30 பிரிடேட்டர் ட்ரோன்களை இந்தியாவுக்கு விற்க முதல்கட்ட அளவில் உடன்பாடு எட்டப்பட்டது. இந்த உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தை தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் மற்றும் சீனா என இரு எல்லை தொடர்பான போர் வந்தாலும், அதனை சமாளிக்கும் வகையில் எல்லையில் ராணுவ மற்றும் உள் கட்டமைப்புகளை இந்தியா பலப்படுத்தி வருகிறது. இந்தச் சூழலில், பிரிடேட்டர் ட்ரோன்களுக்கான உடன்பாடு இறுதி கட்டத்தை எட்டியிருப்பது இந்தியாவுக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
பயன் என்ன? அமெரிக்க பாதுகாப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த பிரிடேட்டர் ட்ரோன்கள் மணிக்கு 482 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து 27 மணி நேரம் பறக்கும் திறன் கொண்டது. மேலும், வானில் 50,000 அடி உயரம் வரை பறக்கக் கூடியது.
அதோடு, 215 கிலோ எடையை தாங்கிச் செல்லும் திறன் கொண்டது. கண்காணிப்பு, உளவு பார்த்தல், உளவுத் தகவல் சேகரிப்பு மற்றும் எதிரி இலக்குகளை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இந்த ட்ரோன்களைப் பயன்படுத்த முடியும்.
6. சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கான இழப்பீடு 8 மடங்காக உயர்கிறது
சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் இழப்பீட்டுத் தொகை 8 மடங்காக உயர்த்தப்பட்டு `2 லட்சமாக வழங்கப்படவுள்ள -து. இது, வரும் ஏப்.1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதுதொடர்பான அறிவிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை அமைச்சகம் பிப்.25ஆம் தேதி வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
சாலை விபத்துகளில் பலத்த காயமடைந்தவர்களுக்கு நிவாரணமாக தற்சமயம் வழங்கப்படும் தொகை `12,500-இல் இருந்து `50,000-ஆக உயர்த்தப்படுகிறது. விபத்தில் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு தற்போது வழங்கப்படும் தொகை `25,000-இல் இருந்து `2 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
கடந்த 1989ஆம் ஆண்டின் நிவாரண உதவித் திட்டத்துக்கு மாற்றாக, 2022ஆம் ஆண்டின் மோட்டார் வாகன விபத்துகளால் பாதிக்கப்படுவோருக்கு நிவாரணம் வழங்கும் திட்டம், வரும் ஏப்.1 முதல் அமலுக்கு வரவுள்ளது.
இழப்பீடு கேட்டு பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவதை குறித்த காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சமீபத்திய தகவல்படி, கடந்த 2020இல் நாடு முழுவதும் 3,66,138 சாலை விபத்துகள் நிகழ்ந்தன. அவற்றின் காரணமாக 1,31,714 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
7. உக்ரைன் போரின் பின்னணி
ஓட்டோமான் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, ரஷ்யப் பேரரசு கிரீமியா தீபகற்பத்தைத் தன்னோடு இணைத்துக்கொண்டது. ரஷ்யப் பேரரசில் உக்ரைன் இணைந்ததன் 300-ம் ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில், 1954-ல் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் அதிபர் நிகிதா குருஷேவ் கிரீமியாவை உக்ரைனுக்குப் பரிசாக வழங்கினார். 40 ஆண்டுகளில் சோவியத் ஒன்றியம் தகர்ந்துவிடும் என்று அவர் அன்று நினைத்திருக்க வாய்ப்பில்லை.
சோவியத் ஒன்றியம் 1991-ல் உடைந்தபோது, சோவியத்தின் அணு ஆயுதக் கிடங்குகளில் மூன்றில் ஒரு பகுதி உக்ரைனில் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் அது உலகின் மூன்றாவது பெரிய அணு ஆயுதக் கிடங்கு என்று கூறலாம். இதிலிருந்தே முன்பு நிலவிய உக்ரைன்-ரஷ்ய பரஸ்பர உறவைப் புரிந்துகொள்ள முடியும். பின்பு, இந்த அணு ஆயுதங்கள் அனைத்தும் சோவியத்திலிருந்து பிரிந்து சென்ற சுதந்திர நாடுகளின் கூட்டமைப்பின் கண்காணிப்பில் இருந்தன. உக்ரைன் 1994-ல் ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திட்ட பின்பு, தன்னிடம் இருக்கிற அனைத்து அணு ஆயுதங்களையும் 1996-ல் ரஷ்யாவிடம் ஒப்படைத்தது.
1991-ல் சோவியத் ஒன்றியம் சிதறுண்டதோடு பனிப்போர் முடிவுக்கு வந்தது. ஆனால், தன்னுடன் எல்லையைப் பகிர்ந்துகொண்டுள்ள முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளின் உள்நாட்டு அரசியல் மாற்றங்கள் ரஷ்யாவுக்குப் புதிய பாதுகாப்பு சவால்களைத் தோற்றுவித்துள்ளன. கிழக்கு ஐரோப்பிய நாடுகள், மேற்கத்திய நாடுகளால் தூண்டப்படுகின்றன. குறிப்பாக, ஐரோப்பியக் கூட்டமைப்பு, அமெரிக்கா ஆகியவற்றின் வழிகாட்டுதலில் உள்ள வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் (நேட்டோ) உக்ரைன் சேர்வதற்கான முயற்சிகளைத் தனது பாதுகாப்புக்கான பெரும் அச்சுறுத்தல் என்று ரஷ்யா கருதுகிறது. உக்ரைன் மக்களில் ஒருசாராரிடம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் ஆர்வம் இருக்கிறது. சோவியத் ஆட்சிமுறையில் கட்டுப்பாடுகளை அனுபவித்த அம்மக்கள், ஐரோப்பிய சுதந்திர ஜனநாயகத்தைப் பெரிதும் விரும்புகின்றனர். இதனால், உக்ரைன் அதிபர் தேர்தல்களில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்வதற்கு முன்மொழியும் தலைவருக்கே கூடுதல் ஆதரவு கிடைத்தது. அதே நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கான சாத்தியங்கள் இன்னும் அங்கு உருவாகவில்லை. குறிப்பாக, அதன் வளர்ச்சி பெறாத பொருளாதாரம், வலுப்பெறாத ஜனநாயக அமைப்பு, அரசுக்கு எதிராக நடக்கும் தொடர் ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
மாஸ்கோவின் சுற்றுப்பாதையிலிருந்து கீவ் விலகி மேற்கத்திய சித்தாந்தத்தை நோக்கிய மாற்று வழியில் பயணிக்கத் தடைக்கல்லாக உக்ரைன் முன்னாள் அதிபர் விக்டர் யெனுகோவேய்க் இருந்தார். அவர் ஒரு ரஷ்ய ஆதரவாளர். 2010-ல் அவருடன் போட்டியிட்டுத் தோல்வியடைந்த பெண் வேட்பாளர் டைமோஷென்ஸ்கோ இருமுறை பிரதமராகப் பதவி வகித்தவர். இவர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைன் அங்கம் வகிக்க வேண்டும், அவ்வாறு இணைந்தால் உக்ரைன் செழிப்படையும் என்று வெளிப்படையாக ஆதரவு திரட்டியவர். உக்ரைனின் பாதுகாப்புக்கு நேட்டோவுடன் இணைவது முக்கியம் என்ற கருத்தைக் கொண்டவர். அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த அவர், அரசியல் கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தன் மருத்துவச் சிகிச்சைகளுக்காக ஜெர்மனி செல்லவும், உக்ரைனில் அரசியல் பதற்றம் தணியவும் உக்ரைன் நாடாளுமன்றத்தில் நவம்பர் 2013-ல் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து பேரலையைப் போல அங்கு போராட்டங்கள் வெடித்தன.
அதிபர் விக்டர் யெனுகோவேய்க் தலைமையிலான அரசு, ஐரோப்பிய ஒன்றியத்துடனான அனைத்துப் பேச்சுவார்த்தைகளையும் முடித்துக்கொண்டு, ரஷ்யாவுடன் கைகோக்கத் தயாரானது. இதன் காரணமாக, ஏற்கெனவே நடந்துகொண்டிருந்த போராட்டங்கள் மேலும் வலுப்பெற்றன. இந்தப் போராட்டங்களில் 18 காவல் துறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 130 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே, எதிர்க் கட்சியினருக்கும் அதிபர் விக்டர் யெனுகோவேய்க்குக்கும் இடையே ஒருங்கிணைந்த ஒரு அரசை நிறுவுவதற்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கும் ஒரு இடைக்கால ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில் விக்டர் யெனுகோவேய்க் அதிபர் பதவியிலிருந்து விடுவிக்கப்படுவதாக நாடாளுமன்றம் பிரகடனப்படுத்தியது. அதற்கு முன்பே அவர் ரஷ்யாவின் உதவியை நாடி, அங்கு தப்பி ஓடினார். இதன் தொடர்ச்சியாக ரஷ்ய ஆதரவாளர்களுக்கும் ஐரோப்பிய ஆதரவாளர்களுக்கும் இடையே பெரும் மோதல்கள், உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்குப் பிராந்தியங்களில் தோன்றின. பூர்விக ரஷ்யர்கள் பெருமளவில் வாழும் கிரீமியாவில் கீவுக்கு எதிராகவும் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் போராட்டங்கள் வெடித்தன. ரஷ்ய ஆதரவாளர்கள் கிரீமியாவில் உள்ள அரசாங்கக் கட்டிடங்களையும் விமான நிலையங்களையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக உக்ரைன் முன்வைத்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்தது. மேலும், உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்காக ராணுவத்தை அனுப்பவும் மார்ச், 2014-ல் ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். கிரீமியாவில் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பு ஒன்றும் நடந்தது. பெரும்பான்மையினர் ரஷ்யாவுடன் இணைய வாக்களித்தனர். இதை எதிர்பார்த்துக் காத்திருந்த ரஷ்யாவும் கிரீமியாவை ரஷ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரித்தது. அதைத் தொடர்ந்து, ரஷ்யாவின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்தது. பனிப்போர் காலகட்டத்துக்குப் பிறகு ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு கடுமையான பாதிப்புக்குள்ளாகியது. உக்ரைனுடனான ரஷ்யாவின் உறவும் தீர்க்கவியலாத சிக்கலுக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான அதிகாரப் போட்டியில், உக்ரைன் சிக்குண்டு தன்னுடைய நிலப்பரப்பை ரஷ்யாவிடம் இழந்தது, சர்வதேசச் சட்டங்களுக்கு ஒரு சவாலாக அமைந்துவிட்டது. உக்ரைனின் எல்லையோரப் பிராந்தியமான டான்பாஸில் ரஷ்ய ஆதரவுப் படையினருக்கும் உக்ரைன் ராணுவத்துக்கும் இடையே கடந்த 2021-லிருந்தே மோதல்கள் தொடங்கிவிட்டன. அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன், ‘நோட்டோ’வுடன் உக்ரைன் சேர்வதற்கு ஊக்கமளித்தார். ஜோ பைடனுடனான காணோளிப் பேச்சுவார்த்தையின்போது, இந்த முயற்சிகள் தங்களது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன என்று புதின் தமது தரப்பு நியாயங்களை முன்வைத்தார். அதற்கு பைடனின் பதில், ரஷ்யாவின் மீது கடுமையான பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்பதாகவே இருந்தது.
இதற்கிடையில், உக்ரைன் எல்லையில் படை குவிப்புக்கு புதின் உத்தரவிட்டார். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உக்ரைன் எல்லையை நோக்கி விரைந்தனர். கூடுதலாகத் தனது நேசநாடான பெலாரஸில் அணு ஆயுதப் போர்ப் பயிற்சியிலும் ரஷ்ய ராணுவம் ஈடுபட்டுவந்தது. உக்ரைன் மீது முப்படைகளின் மூலமும் முழுத் தாக்குதலுக்கு உத்தரவிட்டுள்ளார் புதின். தாக்குதல் தொடங்கிய முதல் நாளிலேயே செர்னோபில் அணுமின் உலை இயங்கிய பகுதியை ரஷ்யா கைப்பற்றிவிட்டது. இந்நடவடிக்கை உக்ரைன் அரசை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஐரோப்பிய எல்லையில் இரு நாடுகள் மோதிக்கொள்வது இதுவே முதல்முறை.
1. Which Union Ministry implements the ‘Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY)’ scheme?
A) Ministry of Road Transport and Highways
B) Ministry of Rural Development
C) Ministry of Agriculture and Farmers Welfare
D) Ministry of Panchayati Raj
- Union Ministry of Rural Development implements the ‘Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY)’ scheme, with National Rural Infrastructure Development Agency (NRIDA) as the nodal implementation agency. Recently, the union minister for Rural Development and Panchayati Raj Giriraj Singh released Rural Connectivity GIS Data in Public Domain.
- This includes GIS data for 800,000+ rural facilities as points, 1 million+ habitations and 25,00,000+ km of rural roads, digitised using the GIS platform.
2. Which institution authorises all Pre–paid Instruments (PPI) in India?
A) NPCI
B) RBI
C) Finance Ministry
D) Enforcement Directorate
- The Reserve bank of India authorises all Pre–paid Instruments (PPI) in India, under the powers conferred under Payment and Settlement Systems Act, 2007 (PSS Act). The RBI recently cautioned public against car pooling app sRide, that the firm was operating pre–paid instrument without authorization from the central bank, under PSS Act, 2007.
3. Which Indian mathematician was conferred ‘Ramanujan Prize for Young Mathematicians’ 2021?
A) Neena Gupta
B) R Praggnanandhaa
C) Dr. B. Uma Shankar
D) Dr. Kuntal Ghosh
- Professor Neena Gupta, a mathematician at the Indian Statistical Institute in Kolkata, was conferred the Ramanujan Prize for Young Mathematicians. She received the award for the year 2021 for her significant work in affine algebraic geometry and commutative algebra.
- The prize is awarded annually to a researcher from a developing country, funded by the Department of Science and Technology (DST) in association with the International Centre for Theoretical Physics (ICTP) and the International Mathematical Union (IMU).
4. Who chairs the Financial Stability and Development Council?
A) RBI Governor
B) Union Finance Minister
C) Prime Minister
D) NITI Aayog CEO
- The 25th meeting of the Financial Stability and Development Council (FSDC) was held, under the Chairpersonship of Union Finance Minister Nirmala Sitharaman.
- The Council discussed measures required for development of the financial sector and to achieve an inclusive economic growth with macroeconomic stability. The Council discussed various operational issues relating to currency management.
5. National Means–cum–Merit Scholarship Scheme (NMMSS) has been extended till which year?
A) 2023–24
B) 2025–26
C) 2029–30
D) 2031–32
- The Ministry of Education (MoE) has approved the continuation of the National Means–cum–Merit Scholarship Scheme (NMMSS) till 2025–26.
- Some changes in eligibility criteria have been introduced such as increasing income ceiling from Rs 1.5 lakh to Rs 3.5 lakh per annum. It aims to deter meritorious students from dropping out at class 8 and encourage them to continue their education at secondary stage.
6. Which space agency has provided a ‘International Space Station Transition Report’?
A) SpaceX
B) NASA
C) ESA
D) CNSA
- NASA has released an updated International Space Station Transition Report. It includes the goals for the next decade of station operations leading to a smooth transition to commercial services.
- It also includes the steps being taken to develop both the supply and demand side of the low–Earth orbit commercial economy, and technical steps and budget required for transition.
7. Which institution released the report on ‘Global analysis of health care waste in the context of COVID–19’?
A) NITI Aayog
B) WHO
C) John Hopkins University
D) FDA
- The World Health Organisation released the report on ‘Global analysis of health care waste in the context of COVID–19’. As per the report, eight billion vaccine doses administered globally were estimated to have produced an additional 144,000 tonnes of waste in the form of glass vials, syringes, needles and safety boxes.
8. ‘Space Applications Centre and Physical Research Laboratory’ function under the aegis of which institution?
A) DRDO
B) ISRO
C) CSIR
D) BARC
- Ahmedabad–based Space Applications Centre and Physical Research Laboratory function under the aegis of Indian Space Research Organisation (ISRO). Recently, the Scientists from the institute successfully demonstrated ‘Quantum entanglement’. Using real–time Quantum Key Distribution (QKD), they conducted hack–proof communication between two buildings separated by 300 meters.
9. Which team won its 1st African Cup of Nations title in 2021–2022?
A) Senegal
B) Malawi
C) Guinea
D) Namibia
- Senegal won its first African Cup of Nations title in the year 2022 by beating Egypt 4–2 in a penalty shootout.
- Senegal’s Sadio Mané scored the winning spot kick. Senegal had finished as runners–up in 2019 African Cup, losing the final 0–1 to Algeria. Senegal has played in sixteen editions of the Africa Cup of Nations and the team finally won their first AFCON title in 2021.
10. Which is the only Indian documentary that has been nominated at 2022 Oscar awards?
A) India Untouched
B) Writing with Fire
C) Period. End Of Sentence
D) Jai Bheem
- Indian documentary ‘Writing with Fire’, directed by filmmakers Rintu Thomas and Sushmit Ghosh, has been nominated at the 94th Academy Awards in the Best Documentary Feature category.
- Writing with Fire is the only Indian documentary to be nominated at this year’s Oscar awards.