TnpscTnpsc Current Affairs

27th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

27th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 27th September 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

27th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. மாதிரிப் பதிவு அமைப்பு அறிக்கை – 2020இன்படி, 2018–20இல் இந்தியாவில் குறைவான பாலின விகிதத்தை கொண்டிருந்த மாநிலம் எது?

அ. பீகார்

ஆ. உத்தர பிரதேசம்

இ. ஹரியானா

ஈ. உத்தரகாண்ட்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. உத்தரகாண்ட்

  • இந்தியத் தலைமைப் பதிவாளர் வெளியிட்ட மாதிரிப் பதிவு அமைப்பின் புள்ளிவிவர அறிக்கை–2020இன்படி, உத்தரகாண்டின் பிறப்பு பாலின விகிதம் நாட்டிலேயே மிகமோசமாக 844ஆகக் கண்டறியப்பட்டது. பாலின விகிதம் என்பது 1,000 ஆண் குழந்தைகளுக்கு இருக்கும் பெண் குழந்தைகளின் விகிதமாகும். கேரளத்தின் விகிதம் 974 ஆக சிறப்பாக உள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த பிறப்பு பாலின விகிதம் 2017–19இல் 904ஆக இருந்து 2018–20 இல் மூன்று புள்ளிகள் அதிகரித்து 907ஆக உள்ளது என்று அவ்வறிக்கை கூறியது. இது கிராமப்புறங்களில் 907 ஆகவும், நகர்ப்புறங்களில் 910 ஆகவும் உள்ளது.

2. ‘ஸ்வச் டாய்கேத்தான்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய நடுவண் அமைச்சகம் எது?

அ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

ஆ. கல்வி அமைச்சகம்

இ. திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம்

ஈ. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமானது சமீபத்தில் ஸ்வச் அம்ருத் மகோத்சவத்தின்கீழ், ‘ஸ்வச் டாய்கேத்தனை’ அறிமுகப்படுத்தியது. இப்போட்டியானது பொம்மைகளுக்கான தேசிய செயல் திட்டம் மற்றும் ஸ்வச் பாரத் இயக்கத்தின் இரண்டாம் கட்டம் (SBM 2.0) ஆகியவற்றுக்கு இடையேயான ஓர் ஒருங்கிணைப்பாக உள்ளது. பொம்மைகளைத் தயாரிப்பதில் கழிவுகளைப் பயன்படுத்துவதற்கான தீர்வுகளை ஆராய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஐஐடி காந்திநகரில் உள்ள படைப்பாக்க கற்றல் மையம், இத்திட்டத்திற்கான அறிவுப்பங்காளராக உள்ளது.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ஆபரேஷன் ‘மேகா சக்ரா’ என்பதுடன் தொடர்புடைய நிறுவனம் எது?

அ. இந்திய இராணுவம்

ஆ. நடுவண் புலனாய்வுப் பணியகம்

இ. இந்திய கடலோர காவல்படை

ஈ. மத்திய விஜிலென்ஸ் ஆணையம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. நடுவண் புலனாய்வுப் பணியகம்

  • ‘மேகா சக்ரா’ நடவடிக்கையின் ஒருபகுதியாக, நடுவண் புலனாய்வுப்பிரிவு (CBI) 19 மாநிலங்களில் 56 இடங்களிலும், ஒரு யூனியன் பிரதேசத்திலும் சிறுவர் பாலியல் வன்கொடுமை சம்பந்தப்பட்ட காணொளிகளை இணையதளத்தில் தரவேற்றம் மற்றும் தரவிறக்கம் செய்தது தொடர்பான இரண்டு வழக்குகள் தொடர்பாக சோதனை நடத்தியது. சிங்கப்பூர் இன்டர்போலின் தரவுகள் மற்றும் இணையதளத்தில் சிறுவர் பாலியல் வன்கொடுமை சம்பந்தப்பட்ட காணொளிகளை விற்பனை செய்தோருக்கு எதிராக கடந்த ஆண்டு நடத்தப்பட்ட, ‘ஆபரேஷன் கார்பன்’போது பெறப்பட்ட உளவுத்துறையின் தகவல்கள் அடிப்படையில் இந்த சமீபத்திய சோதனைகள் நடத்தப்பட்டன.

4. சாம்பலைப் பயன்படுத்தி காண்டாமிருகங்களுக்காக உருவாக்கப்பட்ட, ‘ஒற்றைக்கொம்பிகளின் உறைவிடம்’ என்ற நினைவிடத்தை உருவாக்கியுள்ள மாநிலம் எது?

அ. மேற்கு வங்கம்

ஆ. அஸ்ஸாம்

இ. ஒடிஸா

ஈ. அருணாச்சல பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. அஸ்ஸாம்

  • அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசியப்பூங்காவில் அஸ்ஸாம் மாநில அரசால் எரிக்கப்பட்ட காண்டாமிருக கொம்புகளிலிருந்து சேகரிக்கப்பட்ட சாம்பலைப்பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மூன்று காண்டாமிருகங்களின் சிலைகள் திறந்து வைக்கப்பட்டன. ஓராண்டுக்கு முன், உலக காண்டாமிருக நாளன்று, வேட்டைக்காரர்கள் மற்றும் சட்டவிரோத வியாபாரிகளிடமிருந்து பாதுகாப்பு அதிகாரிகளால் சேகரிக்கப்பட்ட சுமார் 2500 காண்டாமிருக கொம்புகளை அஸ்ஸாம் மாநில அரசு எரித்துச்சாம்பலாக்கியது. மூன்று காண்டாமிருக சிற்பங்களைக்கொண்ட இந்த நினைவுச்சின்னத்திற்கு, ‘ஒற்றைக்கொம்பிகளின் உறைவிடம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

5. சமீபத்திய ஆய்வின்படி, கூட்டாக 12 மில்லியன் டன் உலர் கார்பனைக் கொண்டிருக்கின்ற உயிரினம் எது?

அ. கொசுக்கள்

ஆ. எறும்புகள்

இ. தேனீக்கள்

ஈ. பட்டாம்பூச்சிகள்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. எறும்புகள்

  • ஓர் அண்மைய ஆய்வின்படி, உலகம் முழுவதும் உள்ள எறும்புகள் மொத்தமாக சுமார் பன்னிரண்டு மில்லியன் டன் உலர் கரிமத்தைக் கொண்டிருக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள எறும்புகளின் எண்ணிக்கை சுமார் இருபது குவாட்ரில்லியன் அல்லது இருபதாயிரம் மில்லியன் மில்லியன்கள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவை கூட்டாக காட்டுப்பறவைகள் மற்றும் பாலூட்டிகளைவிட அதிக எடை கொண்டவையாக இருக்கும்.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சுப்ரோதோ கோப்பையுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. ஹாக்கி

ஆ. கால்பந்து

இ. மட்டைப்பந்து

ஈ. பூப்பந்து

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. கால்பந்து

  • சுப்ரோதோ கோப்பைக்கான சர்வதேச கால்பந்து போட்டியின் 61ஆவது பதிப்பு ஈராண்டு இடைவெளிக்குப்பிறகு தொடங்கியது. நாடு முழுவதுமுள்ள பள்ளிகளுக்கு இது மிகவும் மதிப்புமிக்க கால்பந்துப் போட்டியாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியை இந்திய வான்படையுடன் இணைந்து சுப்ரோதோ முகர்ஜி விளையாட்டுக் கல்விச்சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவின் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மொத்தம் 92 பள்ளிகள் மற்றும் வங்காளதேசத்தின் வான்படை பள்ளி ஆகியவை இப்போட்டியில் போட்டியிடுகின்றன.

7. 2023 ஜன.1 வரை அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு தடைவிதிப்பதாக அறிவித்த மாநிலம்/யூடி எது?

அ. மகாராஷ்டிரா

ஆ. புது தில்லி

இ. சிக்கிம்

ஈ. ஹிமாச்சல பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. புது தில்லி

  • அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கான தடை 2023 ஜனவரி.1 வரை நீட்டிக்கப்படும் என தில்லி சுற்றுச்சூழலமைச்சர் கோபால் ராய் அறிவித்தார். பண்டிகை காலங்களில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் பட்டாசு விற்பனைக்கும் தடைநீட்டிக்கப்பட்டுள்ளது. இத் தடையை கடுமையாக அமல்படுத்துவதை உறுதிசெய்வதற்கான செயல்திட்டம் வரையப்படவுள்ளது. ‘ஆம் ஆத்மி’ கட்சி பட்டாசு வெடிப்பதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ‘படகே நகி தியே ஜலாவ்’ என்ற பிரச்சாரத்தையும் தொடங்கியது.

8. ‘கலாச்சாரத்திற்கான சிறந்த இடத்திற்கான’ சர்வதேச சுற்றுலா விருதை பெற்ற மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. மேற்கு வங்கம்

ஈ. ஜம்மு காஷ்மீர்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. மேற்கு வங்கம்

  • ஐநா உலக சுற்றுலா அமைப்பின் துணை அமைப்பான பசிபிக் ஏரியா டிராவல் ரைட்டர்ஸ் அசோசியேஷன், மேற்கு வங்காளத்திற்கு 2023ஆம் ஆண்டுக்கான சர்வதேச பயண விருதை, ‘கலாச்சாரத்திற்கான சிறந்த இடம்’ என்ற தலைப்பில் வழங்கவுள்ளது. பெர்லினில் நடைபெறும் உலக சுற்றுலா மற்றும் வான்போக்குவரத்து தலைமைகளின் உச்சிமாநாட்டில் இவ்விருது வழங்கப்படும். UNESCO பாரம்பரிய தகுதி மேற்கு வங்கத்தின் துர்கா பூஜைக்கு இதற்கு முன்னர் வழங்கப்பட்டுள்ளது.

9. திருநங்கையருக்காக பிரத்யேகமாக, ‘ரெயின்போ சேமிப்புக்கணக்கை’ அறிமுகப்படுத்திய இந்திய வங்கி எது?

அ. ESAF சிறு நிதி வங்கி

ஆ. AU சிறு நிதி வங்கி

இ. YES வங்கி

ஈ. கோடக் மஹிந்திரா வங்கி

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. ESAF சிறு நிதி வங்கி

  • ESAF சிறு நிதி வங்கி திருநங்கைகளுக்காக பிரத்யேகமாக, ‘ரெயின்போ சேமிப்புக்கணக்கை’ அறிமுகப்படுத்தியது. அதிக சேமிப்பு விகிதம் மற்றும் மேம்பட்ட கடனட்டை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை இந்தக் கணக்கு வழங்குகிறது. கேரளாவைச் சார்ந்த இந்த நிறுவனம், கடந்த 2017இல் ஒரு சிறு நிதிய வங்கியாக நிறுவப்பட்டது.

10. UNESCOஇன் உலக பாரம்பரிய தளமான மொகஞ்சதாரோ அமைந்துள்ள நாடு எது?

அ. இந்தியா

ஆ. ஆப்கானிஸ்தான்

இ. பாகிஸ்தான்

ஈ. கஜகஸ்தான்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. பாகிஸ்தான்

  • UNESCOஇன் உலக பாரம்பரிய தளமாக விளங்கும் மொகஞ்சதாரோவின் இடிபாடுகள் பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் சிந்து ஆற்றுக்கருகில் அமைந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத பருவமழைக்காலம் காரணமாக பாகிஸ்தானில் நூற்றுக்கணக்கான மக்கள் மாண்டனர். இந்தச் சூழ்நிலை, 1922இல் கண்டுபிடிக்கப்பட்ட 4,500 ஆண்டுகளுக்கு முந்தைய மொகஞ்சதாரோ தொல்பொருள் தளத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்   

1. 2020 – தாதா சாஹேப் பால்கே விருது வழங்கி ஆஷா பரேக் கௌரவிக்கப்படவுள்ளார்.

202ஆம் ஆண்டுக்கான தாதா சாஹேப் பால்கே விருது பிரபல திரைப்பட நடிகை ஆஷா பரேக் பெறுவதாக நடுவண் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. புது தில்லியில் நடைபெறும் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்படும்.

ஆஷா பரேக் புகழ்பெற்ற திரைப்பட நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் இவற்றுடன் இந்திய செவ்வியல் நடனக் கலைஞருமாவார். 1992இல் பரேக், ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 1998 முதல் 2001 வரை நடுவண் திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் தலைவராக அவர் பணியாற்றியுள்ளார்.

2. காலாண்டு வேலைவாய்ப்பு கணக்கெடுப்பின் நான்காவது சுற்று (ஜனவரி-மார்ச், 2022) தகவல் அறிக்கை வெளியிடப்பட்டது.

நிறுவனம்சார்ந்த வேலைவாய்ப்புகுறித்த அகில இந்திய காலாண்டு ஆய்வின் ஒருபகுதியாக காலாண்டு வேலை வாய்ப்பின் நான்காவது சுற்றுபற்றிய ஆய்வறிக்கையை நடுவண் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் பூபேந்தர் யாதவ் வெளியிட்டார்.

உழவுசாராத துறைகளில் உள்ள மொத்த வேலைவாய்ப்பில் பெரும்பங்காற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 துறைகளில் முறைப்படுத்தப்பட்ட மற்றும் முறைசாரா வேலைவாய்ப்புகுறித்த தகவல்களைக் காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வு அக்கைகள் தொடர்ந்து வழங்குகின்றன. உற்பத்தி, கட்டுமானம், வர்த்தகம், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், உணவகம் மற்றும் தங்குமிடங்கள், தகவல் தொழில்நுட்பம் / பிபிஓ மற்றும் நிதி சேவைகள் ஆகியவை இந்த ஒன்பது துறைகளாகும்.

நிறுவனம் சார்ந்த வேலைவாய்ப்புகுறித்த அகில இந்திய காலாண்டு ஆய்வு, இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. முதலாவதாக, “காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வு”, இரண்டாவதாக, “பகுதி திட்ட அமைப்பு ஆய்வு”. காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வு என்பது பத்து அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தியுள்ள நிறுவனங்கள் சம்பந்தப்பட்டதும், இரண்டாவது ஆய்வு, ஒன்பது அல்லது அதற்கும் குறைவான பணியாளர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் பற்றியதுமாகும்.

பொருளாதாரத்தின் முறைப்படுத்தப்பட்ட துறைகளில் வேலைவாய்ப்பு மற்றும் அதுசம்பந்தமான முக்கிய தகவல்களை திரட்டுவதற்காக அகில இந்திய காலாண்டு ஆய்வின் ஒருபகுதியாக காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வு ஏப்ரல், 2021இல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு காலண்டிலும் சுமார் 12000 அமைப்புகள் தொடர்பான தகவல்கள் திரட்டப்படுகின்றன. இவ்வாறு, முதன்முதலில் 2021 ஏப்ரல்-ஜூன் காலத்திற்கான அறிக்கை, 2021 செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது.

பொருளாதாரத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் வேலைவாய்ப்பு நிலவரம் அதிகரித்து வருவதாக நான்காவது காலாண்டு அறிக்கையை வெளியிடுகையில், நடுவண் அமைச்சர் தெரிவித்தார். மூன்றாம் காலாண்டில் (செப்டம்பர்-டிசம்பர் 2021) 3.14 கோடியாக இருந்த மதிப்பிடப்பட்ட வேலைவாய்ப்பு, நான்காவது காலாண்டில் (ஜனவரி-மார்ச், 2022) 3.18 கோடியாக உயர்ந்தது. ஆறாவது பொருளாதாரக்கணக்கெடுப்பில் (2013-2014) இத்தேர்ந்தெடுக்கப்பட்ட 9 துறைகளில் மொத்த வேலைவாய்ப்பின் அளவு 2.37 கோடியாக பதிவானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வறிக்கை என்பது, விநியோகம் மற்றும் தேவை குறித்த ஆய்வாகும். அதாவது குறிப்பிட்ட கால அளவிற்கான தொழிலாளர் ஆய்வு என்பதால் நாட்டில் வேலைவாய்ப்புகுறித்த தரவு இடைவெளிகளை இது குறைக்கும்.

நான்காவது காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

• 3ஆவது காலாண்டில் 3.14 கோடி பணியாளர்கள் பணியாற்றியதுடன் ஒப்பிடுகையில், நான்காவது காலாண்டில் 5.31 இலட்சம் நிறுவனங்களில் மொத்தம் 3.18 கோடி தொழிலாளர்கள் பணிபுரிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

• பணியாளர்களின் மொத்த எண்ணிக்கையில் உற்பத்தித்துறை முதலிடமும் (38.5%), அதைத்தொடர்ந்து 21.7% உடன் கல்வித்துறையும், 12% உடன் தகவல் தொழில்நுட்பம் / பிபிஓ துறையும், 10.6% உடன் சுகாதாரத் துறையும் உள்ளன.

• 1.4% நிறுவனங்களில் மட்டுமே குறைந்தபட்சம் 500 பேர் பணியாற்றினார்கள். இதுபோன்ற மிகப்பெரிய அமைப்புகள் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்பம் / பிபிஓ மற்றும் சுகாதாரத் துறையில் இயங்குகின்றன.

• மூன்றாவது காலாண்டில் 31.6%ஆக இருந்த பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை, நான்காவது காலாண்டு அறிக்கையில் 31.8%ஆக, சற்று உயர்ந்தது. இருப்பினும், சுகாதாரத்துறையில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 52%ஆக இருந்தது. அதைத்தொடர்ந்து கல்வி, நிதி சேவை மற்றும் தகவல் தொழில்நுட்பம்/பிபிஓ துறைகளில் முறையே 44%, 41% மற்றும் 36%ஆக பதிவானது. சுயதொழில் புரியும் ஆண்களைவிட நிதி சேவை துறையில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய விஷயம்.

27th September 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. As per the Sample Registration System (SRS) Report, which state had the lowest sex ratio in India in 2018–20?

A. Bihar

B. Uttar Pradesh

C. Haryana

D. Uttarakhand

Answer & Explanation

Answer: D. Uttarakhand

  • According to the Sample Registration System (SRS) Statistical Report 2020, released by the Registrar General of India (RGI), Uttarakhand’s sex ratio at birth was found to be the worst in the country at 844. Sex Ratio is the number of females per 1,000 males. Kerala’s ratio was the best, at 974. The report stated that India’s overall sex ratio at birth had gone up by 3 points to 907 in 2018–20 from 904 in 2017–19. It was 907 in rural areas and 910 in urban areas.

2. Which Union Ministry launched the ‘Swachh Toycathon’ programme?

A. Ministry of Housing And Urban Affairs

B. Ministry of Education

C. Ministry of Skill Development and Entrepreneurship

D. Ministry of Labour and Employment

Answer & Explanation

Answer: A. Ministry of Housing And Urban Affairs

  • The Ministry of Housing and Urban Affairs (MoHUA) has recently launched the Swachh Toycathon under the Swachh Amrit Mahotsav. The competition is a convergence between the National Action Plan for Toys (NAPT) and Swachh Bharat Mission phase two (SBM 2.0). It aims to explore solutions for the use of waste in manufacturing toys. The Center for Creative Learning, IIT Gandhinagar is the knowledge partner for the programme.

3. Operation ‘Megha Chakra’, which was seen in the news, is associated with which institution?

A. Indian Army

B. Central Bureau of Investigation

C. Indian Coast Guard

D. Central Vigilance Commission

Answer & Explanation

Answer: B. Central Bureau of Investigation

  • As part of Operation ‘Megha Chakra’, the Central Bureau of Investigation (CBI) carried out searches at 56 locations in 19 states and a UT in connection with two cases of circulation of Child Sexual Abuse Material (CSAM) online. The recent searches were based on inputs from Interpol Singapore and intelligence obtained during Operation Carbon, conducted last year against peddlers of CSAM on Internet.

4. Which state has created a memorial for rhinos using ashes named as ‘Abode of the Unicorns’?

A. West Bengal

B. Assam

C. Odisha

D. Arunachal Pradesh

Answer & Explanation

Answer: B. Assam

  • Statues of three rhinos created using ashes collected from rhino horns burnt by the Assam Government were launched at Kaziranga National Park in Assam. A year ago, on World Rhino Day, Assam Government burnt around 2500 rhino horns that were collected by the conservation authorities from poachers and illegal traders. The memorial, which consists of three rhino sculptures– an adult male, an adult female and a calf, is named as ‘Abode of the Unicorns’.

5. As per a recent study, which species across the world collectively constitute about 12 million tonnes of dry carbon?

A. Mosquitoes

B. Ants

C. Bees

D. Butterflies

Answer & Explanation

Answer: B. Ants

  • As per a recent study, ants present across the world collectively constitute about 12 million tonnes of dry carbon. The number of ants across the world is estimated about 20 quadrillion or 20 thousand million million. They collectively weigh more than wild birds and mammals combined.

6. Subroto Cup, which was seen in the news, is associated with which sports?

A. Hockey

B. Football

C. Cricket

D. Badminton

Answer & Explanation

Answer: B. Football

  • The 61st edition of the Subroto Cup International Football Tournament began after a gap of two years. It is regarded as the most prestigious football tournament for schools all over the country. The tournament is organised by the Subroto Mukherjee Sports Education Society along with the Indian Air Force. A total of 92 schools representing 25 States and UTs of India along with the Air Force School, Bangladesh are competing in the tournament.

7. Which state/UT announced a ban on production, sale and use of all types of firecrackers till January 1, 2023?

A. Maharashtra

B. New Delhi

C. Sikkim

D. Himachal Pradesh

Answer & Explanation

Answer: B. New Delhi

  • Delhi environment minister Gopal Rai announced that the ban on production, sale and use of all types of firecrackers will be extended till January 1, 2023. The decision has been taken to contain the pollution during the festival season. The ban has been also been extended to online sale of firecrackers. An action plan is set to be drawn to ensure strict enforcement of the ban. The AAP also launched the ‘patakhe nahi diye jalao’ campaign to create awareness against bursting of firecrackers.

8. Which state bagged the International Tourism award for ‘best destination for culture’?

A. Tamil Nadu

B. Kerala

C. West Bengal

D. Jammu and Kashmir

Answer & Explanation

Answer: C. West Bengal

  • The Pacific Area Travel Writers Association, an affiliate of the UN World Tourism Organization, will confer West Bengal with the International Travel Award 2023 for ‘Best Destination for Culture’. The award will be presented in Berlin at the World Tourism and Aviation Leaders’ Summit. The UNESCO heritage status was earlier conferred to West Bengal’s Durga Puja. .

9. Which Indian bank launched a ‘Rainbow Savings Account’ exclusively for the transgender community?

A. ESAF Small Finance Bank

B. AU Small Finance Bank

C. YES Bank

D. Kotak Mahindra Bank

Answer & Explanation

Answer: A. ESAF Small Finance Bank

  • ESAF Small Finance Bank launched a ‘Rainbow Savings Account’ exclusively for the transgender community. The account hosts a lot of features, including high savings rate and advanced debit card facilities. The Kerala–based institution was founded as a small finance bank in 2017.

10. Mohenjo Daro, the UNESCO World Heritage Site, is located in which country?

A. India

B. Afghanistan

C. Pakistan

D. Kazakhstan

Answer & Explanation

Answer: C. Pakistan

  • A UNESCO World Heritage Site, the ruins of Mohenjo Daro is located in southern Sindh province of Pakistan near the Indus River. An unprecedented monsoon season has killed hundreds of people in Pakistan and this condition has posed a threat to the archeological site of Mohenjo Daro dating back 4,500 years, which were discovered in 1922.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!