Tnpsc

25th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

25th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 25th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

25th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1.வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய-அமெரிக்கர் யார்?

அ) சுவாதி மோகன்

ஆ) நீரா டாண்டன்

இ) விவேக் மூர்த்தி

ஈ) M இரங்கசாமி

  • அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த ஆலோசகராக இந்திய-அமெரி -க்கர் நீரா டாண்டன் வெள்ளை மாளிகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக USA நிர்வாகம் அறிவித்துள்ளது.
  • இருகட்சிசார்புடைய விமர்சனங்களுக்கு மத்தியில் மேலாண்மை மற்றும் வரவுசெலவு திட்ட அலுவலகத்தின் தலைமைப் பொறுப்புக்கான வேட்பு மனுவை அவர் திரும்பப்பெற்றார். டாண்டன், CAP’இன் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் அமெரிக்க முன்னேற்ற நட -வடிக்கை நிதியத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பணியாற் -றியுள்ளார்.

2. ஐநா உலகளாவிய சாலை பாதுகாப்பு வாரம் என்பது ஈராண்டுக்கு ஒருமுறை, எந்த மாதத்தில் நடத்தப்படுகிற உலக சாலை பாதுகாப்பு பிரச்சாரமாகும்?

அ) ஏப்ரல்

ஆ) மே

இ) ஜூன்

ஈ) ஜூலை

  • ஐநா உலகளாவிய சாலை பாதுகாப்பு வாரம் என்பது மே மாதத்தில் உலக நலவாழ்வு அமைப்பால் ஈராண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஓர் உலக சாலை பாதுகாப்பு பிரச்சாரமாகும். 2021 மே 17-23 தேதிகளில் நடைபெறவிருக்கும் ஆறாவது சாலை பாதுகாப்பு பிரச்சாரத்துக்கான கருப்பொருள் Streets for Life #Love30 என்பதாகும்.
  • உலகின் எங்கெல்லாம் மக்கள் வாழ்கிறார்களோ, நடக்கிறார்களோ, விளையாடுகிறார்களோ அங்கெல்லாம் மணிக்கு 30 கிமீ என்ற வேக வரம்புகளை விதிக்க வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது.

3. COVID-19 நோயாளிகளுக்கு ‘AYUSH கர் திவர்’ என்ற நலத்திட் -டத்தை தொடங்கியுள்ள மாநிலம் எது?

அ) உத்தரகண்ட்

ஆ) ஹிமாச்சல பிரதேசம்

இ) உத்தர பிரதேசம்

ஈ) மத்திய பிரதேசம்

  • ஹிமாச்சல பிரதேசத்தில், AYUSH துறை COVID-19 நோயாளிகளுக்காக ‘ஆயுஷ் கர் திவர்’ என்ற மாநில அளவிலான நலத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த முயற்சி, AYUSHமூலம் ஒரு முழுமையான சுகாதார சேவையை வழங்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. இது தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்பட் -டுள்ள சுமார் 30,000 COVID நோயாளிகளை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற SPOT தொழில்நுட்பம் உரு -வாக்கப்பட்டதற்கான நோக்கம் எது?

அ) விண்வெளி ஆய்வுத்திட்டம்

ஆ) கொரோனா வைரஸ் பரிசோதனை முறை

இ) ஊட்டச்சத்து மதிப்புகளை சரிபார்த்தல்

ஈ) கணினி நிரல்மொழி

  • இல்லினாய்ஸ் அர்பானா-சாம்பெயின் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், Scalable and Portable Testing (SPOT) என்ற புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். உமிழ்நீரிலிருந்து கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனைகளை மேற்கொண்டு அவற்றுக்கான துல்லியமான முடிவுகளைப்பெற இது உதவும். சிக்கலான செயல்முறை ஏதுமின்றி இதில் முடிவுகளைப் பெறமுடியும்.
  • SPOT’இனால் ஒரு மாதிரியில் உள்ள பல மரபணுக்களைக் கண்டறிய முடியும். மேலும், 1-மைக்ரோலிட்டர் துளியில் உள்ள வைரஸ் துகள் வரை இதனால் கண்டறிய முடியும்.

5. ‘பொருளாதார நிலை’ குறித்த அறிக்கையை வெளியிடுகிற நிதி நிறுவனம் எது?

அ) NITI ஆயோக்

ஆ) இந்திய ரிசர்வ் வங்கி

இ) பொருளாதார விவகாரங்கள் துறை

ஈ) ஆசிய வளர்ச்சி வங்கி

  • இந்திய ரிசர்வ் வங்கி அதன் மாதாந்திர தகவலேட்டுடன் ‘பொருளாதார நிலை’ அறிக்கையை வெளியிடுகிறது. ஏப்ரல் மாதத்திற்கான சமீபத்திய அறிக்கையின்படி, பொருளாதாரத்தைப் பொருத்தவரை, இரண்டாவது அலையின் தாக்கம் முதல் அலையுடன் ஒப்பிடுகையில் இதுவரை மட்டுப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. 2021 ஏப்ரலில் GST’இன் அதிகபட்ச வசூலையும் இது எடுத்துக்காட்டுகிறது.

6. COVID தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வுகாண, சிறார்களுக்கு உளவியல் ரீதியான உதவி வழங்குவதற்காக அரசாங்கம் வழங்கும் தொலைபேசி ஆலோசனை சேவையின் பெயர் என்ன?

அ) SWAMITVA

ஆ) SURAKSHA

இ) SAMVEDNA

ஈ) SAMASTHA

  • தேசிய சிறார் உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையம், SAMVEDNA சேவையின்மூலம், தகுதிவாய்ந்த மருத்துவ வல்லுநர்கள் / மருத்துவர்க -ள் வலையமைப்பின்மூலம் குழந்தைகளுக்கு தொலைபேசி வாயிலான ஆலோசனை சேவைகளை செய்துவருகிறது. “Sensitizing Action on Mental Health Vulnerability through Emotional Development and Necessary Acceptance” என்பதன் சுருக்கந்தான் “SAMVEDNA”.
  • COVID தொடர்பாக சிறார்களுக்கு ஏற்படும் மனவழுத்தத்திற்கும் அச்சத்திற்கும் தீர்வுகாண்பதற்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்குவதே இந்தச் சேவையின் நோக்கமாகும்.

7. நாட்டின் மூத்த குடிமக்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்கும் சமூக நீதி அமைச்சகத்தின் திட்டத்தின் பெயர் என்ன?

அ) ElderLine

ஆ) OldAge

இ) HelpAge

ஈ) Helping Hands

  • தற்போதைய COVID பெருந்தொற்றின் பின்னணியில், முதியோர்களின் பிரச்னைகளுக்கு தீர்வுகாணும்பொருட்டு, மத்திய சமூக நீதி அமைச்சகம் ‘எல்டர்லைன்’ திட்டத்தின்கீழ் முக்கிய மாநிலங்களில் அழைப்பு மையங் -களைத் தொடங்கியுள்ளது. இந்த வசதி தமிழ்நாடு, உபி, மபி, ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அண்மையில் தொடங்கப்பட்டு, செயல்ப -ட்டு வருகிறது. தெலுங்கானாவில், இந்த வசதி ஓராண்டுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.
  • இந்த அழைப்பு மையங்களை கட்டணமில்லா எண் 14567 மூலம் தொடர்பு கொள்ளலாம். இந்த எல்டர்லைன், TATA அறக்கட்டளை மற்றும் NSE அறக்கட்டளை உதவியுடன் செயல்படுகிறது. தமிழ்நாட்டில் 2021 ஏப்.28 அன்று இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

8. பன்னாட்டு அருங்காட்சியக நாள் கடைப்பிடிக்கப்படும் தேதி எது?

அ) மே 16

ஆ) மே 18

இ) மே 20

ஈ) மே 21

  • சமுதாய உயர்வுக்கு அருங்காட்சியகத்தின் பங்களிப்பு எவ்வளவு முக்கிய -ம் என்பதை மக்களுக்கு உணர்த்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வோர் ஆண்டும் மே.18 அன்று பன்னாட்டு அருங்காட்சியக நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த நிகழ்வுகள் அருங்காட்சியகங்களின் பன்னாட்டுப் பேரவையினால் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. “The Future of Museums: Recover & Reimagine” என்பது நடப்பாண்டு (2021) கடைப்பிடிக்கப்பட்ட இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

9. திரிபுரா மாநிலத்தின் சமீபத்திய முயற்சியான வந்தே திரிபுராவின் நோக்கம் என்ன?

அ) COVID குறித்த விழிப்புணர்வு

ஆ) தொலைநிலைக்கல்வி

இ) சுற்றுலாத்துறை புத்துயிரளிப்பு

ஈ) உழவர்களுக்கான ஆதரவு

  • பள்ளி பாடத்திட்டங்களில் உள்ள பாடங்களை வழங்குவதற்காக, திரிபுரா மாநிலம் அண்மையில், 24×7 அர்ப்பணிப்பு உடைய கல்வி தொலைக்காட்சி அலைவரிசையை ‘வந்தே திரிபுரா’ என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. தொடக்கத்தில், பதிவுசெய்யப்பட்ட பாடங்களுடன் இந்த அலைவரிசை தொடங்கப்பட்டது. எதிர்வரும் ஜூன்.1 முதல் நேரலை வகுப்புகள், வெவ்வேறு கல்வித்தலைப்புகள் பற்றிய விவாதங்கள், கல்வித்துறை தொடர்பான பல்வேறு தகவல்கள் அதில் இடம்பெறும்.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஷாஹித் ஜமீல் என்பவர் யார்?

அ) நச்சுயிரியல் வல்லுநர்

ஆ) அரசியல்வாதி

இ) விளையாட்டு வீரர்

ஈ) வேளாண் நிபுணர்

  • இந்திய அரசாங்கத்தின் ஆலோசனைக் குழுவான ‘இந்திய SARS-COV-2 மரபணுத்தொகுதியியல் கூட்டமைப்பின் (INSACOG)’ தலைவராக இருந்த பிரபல நச்சுயிரியல் வல்லுநரான ஷாஹித் ஜமீல் தனது அப் பதவியிலிருந்து விலகியுள்ளார். இந்த முடிவுக்கு அவர் எந்தக் காரணத்தையும் கூறவில்லை. INSACOG என்பது இந்தியாவில் உள்ள பத்து ஆய்வகங்களின் குழுவாகும். அது, கொரோனா வைரஸின் வளர்ந்து வரும் திரிபுகளை எதிர்த்துப் போராடும் பணியில் ஈடுபட்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. அந்நிய நேரடி முதலீடு 19% அதிகரிப்பு

இந்தியாவில் கடந்த 2020-21ஆம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 19 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

சீர்திருத்தம்: முதலீட்டு கொள்கைகளில் சீர்திருத்தம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை எளிதாக்க மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளுக்கு பலனாக கடந்த நிதியாண்டில் FDI எனப்படும் அந்நிய நேரடி முதலீடு 19 சதவீதம் அதிகரித்து 5,964 கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமார் `4.47 லட்சம் கோடி) எட்டியுள்ளது. முந்தைய 2019-20ஆம் நிதியாண்டில் இந்த முதலீடு 4,998 கோடி டாலராக (`3.75 லட்சம் கோடி) காணப்பட்டது.

முன்னெப்போதும் இல்லா உச்சம்: பங்குகள், மறு-முதலீட்டு வருவாய் மற்றும் மூலதனம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீடு கடந்த 2021ஆவது நிதியாண்டில் 10 சதவீதம் வளர்ச்சி கண்டு 8,172 கோடி டாலரைத் தொட்டுள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அதிகபட்ச அளவாகும். இது, 2020ஆம் நிதியாண்டில் 7,439 கோடி டாலராக காணப்பட்டது.

முதலிடம் சிங்கப்பூர்: இந்தியாவில் கடந்த நிதியாண்டில் அதிக அளவில் முதலீட்டை மேற்கொண்ட பட்டியலில் சிங்கப்பூர் 29 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து 23 சதவீத பங்களிப்புடன் அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், 9 சதவீத பங்களிப்புடன் மோரீஷஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

கணினி துறை: அதிக அளவு முதலீட்டை ஈர்த்த துறைகளில் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் துறை 44 சதவீத பங்களிப்பை வழங்கி முன்னிலை பெற்றது. அதனைத் தொடர்ந்து, கட்டுமான (உள்கட்டமைப்பு) நடவடிக்கைகள் (13 சதவீதம்), சேவைகள் துறை (8 சதவீதம்) ஆகியவை உள்ளன.

குஜராத் முன்னிலை: கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத் -த அந்நிய நேரடி பங்கு முதலீட்டு வரத்தில் அதிகபட்சமாக 37 சதவீதம் குஜாரத்துக்கு சென்றடைந்துள்ளது. இந்தப் பட்டியலில் மகாராஷ்டிரம் (27 சதவீதம்), கர்நாடகம் (13 சதவீதம்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2. சேதி தெரியுமா?

மே 12: கேரளத்தில் நீண்ட காலம் அமைச்சராகப் பணியாற்றிய பெண் என்கிற பெருமைக்குரிய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் KR கெளரி அம்மாள் (101) காலமானார்.

மே 13: கரோனாவிலிருந்து மீண்டவர்களைப் பாதிக்கும் கருப்புப் பூஞ்சை நோயைக் கட்டுப்படுத்த அம்போடெரிசின் – பி என்கிற மருந்தைப் பயன்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டது.

மே 14: நேபாள பிரதமராக சர்மா ஒலி மீண்டும் பதவியேற்றார். அவருடைய ஆட்சிகவிழ்ந்திருந்த நிலையில், அந்த நாட்டு குடியரசுத்தலைவர் வித்யா தேவி பண்டாரி மீண்டும் அவரைப் பிரதமராக நியமித்தார்.

மே 16: கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாம் தவணையைப் பெறுவதற் -கான இடைவெளிக்காலத்தை 6-8 வாரங்களிலிருந்து 12-16 வாரங்களா -க மத்திய அரசு அதிகரித்தது.

மே 17: புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய கல்வியமைச்சகம் நடத்திய அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்
-தைத் தமிழக அரசு புறக்கணித்தது.

மே 17: DRDO டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த 2DG என்கிற கரோனா பவுடர் தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்பட் -டது.

மே 17: கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் என்றழைக்கப்பட்ட கி.ரா. என்கிற கி இராஜநாராயணன் (97) காலமானார். காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவர், கல்வியாளர், தஞ்சை முன்னாள் M P துளசி அய்யா (94) காலமானார்.

மே 17: அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் குஜராத்தின் போர்பந்தர் அருகே கரையைக்கடந்தது.

மே 20: 2ஆம் முறை கேரள முதல்வராக பினராயி விஜயன் தலைமையில் 21 பேர்கொண்ட அமைச்சரவை பதவியேற்றது.

மே 20: கரோனா தொற்று பாதிப்பை உறுதிசெய்ய ஆண்டிஜென் ரேபிட் டெஸ்ட் என்ற பரிசோதனைக் கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி அளித்தது.

மே 22: தமிழகத்தில் நடைமுறையில் உள்ள கரோனா முழு ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்டது.

1. Which Indian–American has been appointed as the White House Senior adviser?

A) Swati Mohan

B) Neera Tanden

C) Vivek Murthy

D) M Rangaswami

  • The U.S administration has announced that Indian–American Neera Tanden is set to join the White House as a senior adviser to President Joe Biden. She had withdrawn her nomination to lead the Office of Management and Budget (OMB) amid bipartisan criticism. Tanden serves as president and CEO of CAP and has served as the CEO of the Center for American Progress Action Fund.

2. UN Global Road Safety Week (UNGRSW) is a biennial global road safety campaign hosted in which month?

A) April

B) May

C) June

D) July

  • UN Global Road Safety Week (UNGRSW) is a biennial global road safety campaign hosted by WHO in the month of May. The theme for the 6th UNGRSW, which is to be held 17–23 May 2021, is Streets for Life #Love30. It calls for 30 km/h default speed limits to be imposed wherever people live, walk and play in all parts of the world.

3. Which state has launched the wellness programme ‘AYUSH Ghar Dwar’ for COVID–19 patients?

A) Uttarakhand

B) Himachal Pradesh

C) Uttar Pradesh

D) Madhya Pradesh

  • In Himachal Pradesh, AYUSH Department launched a state–wide wellness programme ‘AYUSH Ghar Dwar’ for COVID–19 patients. The initiative aims to provide a holistic healthcare through AYUSH. It is expected to reach around 30,000 COVID patients who are currently on home isolation and hospitalized in institutions.

4. SPOT, which was making news recently, is a technology developed for which purpose?

A) Space Exploration Project

B) Testing Coronavirus

C) Checking Nutrition values

D) Computer Programming Language

  • Researchers from University of Illinois Urbana–Champaign have developed a new technology called Scalable and Portable Testing– SPOT. It can be used as a coronavirus test to get accurate results from a saliva sample in less than 30 minutes. It does not require the complicated process of heating and cooling each sample to get results. SPOT also can detect multiple genes per sample and it can detect as little as one viral particle per 1–microliter drop of fluid.

5. Which institution releases the ‘State of the Economy’ report?

A) NITI Aayog

B) Reserve Bank of India

C) Department of Economic Affairs

D) Asian Development Bank

  • India’s central bank, the Reserve Bank of India releases the ‘State of the Economy’ report along with its monthly bulletin. As per the recent report for the month of April, it said that the impact of the second wave on the real economy appears limited so far in comparison with the first wave. It also highlighted the highest collection of GST in April 2021.

6. What is the name of the tele counselling service provided by the Government for psychological support to children to address Covid related issues?

A) SWAMITVA

B) SURAKSHA

C) SAMVEDNA

D) SAMASTHA

  • The National Commission for Protection of Child Rights (NCPCR) has been providing Tele Counselling to children through the SAMVEDNA service, through a network of qualified medical professionals / Doctors. SAMVEDNA stands for “Sensitizing Action on Mental Health Vulnerability through Emotional Development and Necessary Acceptance”. It is a tele counselling service for psychological support to children to address their stress and fear regarding COVID.

7. What is the name of Social Justice Ministry’s scheme to provide emotional support to elderly citizens of the country?

A) ElderLine

B) OldAge

C) HelpAge

D) Helping Hands

  • In order to address the problems of elders in the context of the ongoingCOVID pandemic, the Ministry of Social Justice has started state wise call centres in major states under the ELDERLINE project.
  • The facility is already made operational in 5 major States of UP, MP, Rajasthan, TN and Karnataka.In Telangana, this facility has been working for more than a year. These call centres can be reached by toll free number 14567. All elders may be advised to use this facility. The ELDERLINE is a facility operationalised with the assistance of Tata Trusts and NSE foundation.

8. When the International Museum Day celebrated every year?

A) May 16

B) May 18

C) May 20

D) May 22

  • The International Museum Day is observed every year on May 18 to raise awareness of the fact that, “Museums are an important means of cultural exchange, enrichment of cultures and development of mutual understanding, cooperation and peace among peoples”. The 2021 theme is “The Future of Museums: Recover and Reimagine”.

9. What is the objective of Vande Tripura, a recent initiative of the state of Tripura?

A) COVID Awareness

B) Tele–Education

C) Tourism Revival

D) Support to Farmers

  • Tripura recently launched Vande Tripura, a 24×7 dedicated educational channel to offer lessons on the school syllabus.
  • The channel initially has started with recorded lessons. It would shift to live classes, discussions on different academic topics, various information relating to the education department from June 1.

10. Who is Shahid Jameel, who has been in news recently?

A) Virologist

B) Politician

C) Sportsperson

D) Agriculturalist

  • Mr. Shahid Jameel, the eminent virologist who was the head of “Indian SARS–COV–2 Genomics Consortia (INSACOG)” – an advisory group to the Indian Government, has stepped down from the post and has tendered his resignation. He has not stated any reason for this decision. INSACOG is a group of 10 laboratories in India which has been tasked with combating evolving variants of the coronavirus.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!