TnpscTnpsc Current Affairs

25th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

25th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 25th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

February Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘இன்டர்-ஆபரேபிள் கிரிமினல் ஜஸ்டிஸ் சிஸ்டம் (ICJS)’ உடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ) சட்டம் & நீதித்துறை அமைச்சகம்

ஆ) உள்துறை அமைச்சகம் 

இ) வீட்டுவசதி & நகர்ப்புற விவகார அமைச்சகம்

ஈ) சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம்

  • 2022-23 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் `3,375 கோடி செலவில், ‘இன்டர்-ஆபரேபிள் கிரிமினல் ஜஸ்டிஸ் சிஸ்டம்’ (ICJS) திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்த நடுவணரசு ஒப்புதலளித்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் ICJS திட்டத்தின் இக்கட்டம், மத்திய துறை திட்டமாக செயல்படுத்தப்படும்.
  • ICJS என்பது நாட்டில் குற்றவியல் நீதி வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய தகவல் தொழில்நுட்ப அமைப்பின் ஒருங்கிணைப்பை செயல்படுத்துவதற்கான ஒரு தேசிய தளமாகும்.

2. ‘கஜுராஹோ நடன விழா’ நடைபெறும் மாநிலம் எது?

அ) குஜராத்

ஆ) பீகார்

இ) மத்திய பிரதேசம் 

ஈ) மகாராஷ்டிரா

  • 48ஆவது ‘கஜுராஹோ நடன விழா’ மத்திய பிரதேசத்தில் இருந்து தொடங்கியது. 1 வாரகாலம் நடக்கும் இவ்விழா 2022 பிப்ரவரி.26 வரை நடைபெறும். உலகப்புகழ்பெற்ற ‘கஜுராஹோ நடன விழா’ மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கஜுராஹோவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்’ என்ற கருப்பொருளில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

3. இமயமலை சுற்றுச்சூழலில், ‘மகரந்தச் சேர்க்கையில்’ முக்கிய பங்கு வகிக்கிற உயிரினம் எது?

அ) அந்துப்பூச்சிகள் 

ஆ) தேனீக்கள்

இ) பட்டாம்பூச்சிகள்

ஈ) வௌவால்கள்

  • சமீபத்திய ஆய்வின்படி, வடகிழக்கு இந்தியாவின் இமய மலை சுற்றுச்சூழல் அமைப்பில் மகரந்தச் சேர்க்கைக்கு அந்துப்பூச்சிகள் இன்றியமையாதவை. சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 21 தாவரக்குடும்பங்களின் மகரந்தச் சேர்க்கையாளர்களாக 91 வகையான அந்துப்பூச்சிகளை இந்த ஆய்வு குறிப்பிட்டுக் கூறுகிறது.

4. ‘பிரம்மாண்ட மீட்டர் வேவ் ரேடியோ தொலைநோக்கி’ அமைந்துள்ள இந்திய மாநிலம் எது?

அ) குஜராத்

ஆ) சிக்கிம்

இ) மகாராஷ்டிரா

ஈ) உத்தரகாண்ட்

  • ‘Giant Metrewave Radio Telescope (GMRT)’ என்பது 30° வரை முழுமையாகத் திசைதிருப்பக்கூடிய பரவளைய ரேடியோ தொலைநோக்கியாகும். இது மகாராஷ்டிராவில் புனே அருகே ‘கோதாத்’ என்ற இடத்தில் அமைந்துள்ளது.
  • புனேவில் உள்ள தேசிய வானொலி வானியற்பியல் மையம், கலிபோர்னிய பல்கலைக்கழகம், சாண்டா குரூஸ் ஆகியவற்றின் வானியலாளர்கள், Fast Radio Burst (FRB) பேரடையிலிருந்து அணு ஹைட்ரஜன் வாயுவின் வழங்க -லை வரைபடமாக்க GMRT’ஐப் பயன்படுத்தியுள்ளனர்.

5. 2023 – பன்னாட்டு ஒலிம்பிக் குழுமத்தின் அமர்வின் தொகுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகரம் எது?

அ) புது தில்லி

ஆ) மும்பை 

இ) சென்னை

ஈ) ஹைதராபாத்

  • 2023 – பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் (IOC) அமர்வை இந்தியா மும்பையில் நடத்தவுள்ளது. 86ஆவது அமர்வு 1983ஆம் ஆண்டில் புதுதில்லியில் நடைபெற்றது. அதற்குப் பிறகு முதன்முறையாக இந்தியா இந்த மதிப்புமிக்க IOC கூட்டத்தை நடத்தவுள்ளது. அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்தில் நடைபெறும் அமர்வில், 2030 குளிர்கால ஒலிம்பிக்கிற்கான போட்டி நடத்தும் நாட்டிற்கான தேர்தல் நடைபெறும்.

6. மாறிவரும் மக்கள்தொகையைக் கருத்தில்கொண்டு ‘மூத்தகுடிகட்கான வரைவுக்கொள்கையை’ வகுத்துள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு 

ஆ) கேரளா

இ) ஒடிஸா

ஈ) தெலுங்கானா

  • மாறிவரும் மக்கள்தொகையைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு மூத்த குடிமக்களுக்கான வரைவுக் கொள்கையை உருவாக்கியுள்ளது. மூத்த குடிமக்களின் நலனுக்கான இயக்குநரகத்தை உருவாக்கவும் இந்தக் கொள்கை முன்மொழிகிறது.
  • வரைவு ஆவணம் அரசியலமைப்பின் 41ஆவது பிரிவை அடிப்படையாகக் கொண்டது. இது வேலை, கல்வி மற்றும் வேலையின்மை, முதுமை, நோய் மற்றும் இயலாமை போன்ற நிலைகளில் பொது உதவிக்கான உரிமையைப் பாதுகாக்க மாநிலத்திற்குப் பயன்படுகிறது.

7. உழவர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு `20,000 கருணைத் தொகை வழங்க ஒப்புதலளித்துள்ள மாநிலம்/UT எது?

அ) மேற்கு வங்கம்

ஆ) தில்லி 

இ) பஞ்சாப்

ஈ) உத்தர பிரதேசம்

  • கடந்தாண்டு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 20,000 ரூபாய் கருணை நிவாரணம் வழங்க தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. செப்டம்பர்-அக்டோபர் – 2021’இல், கனமழை மற்றும் வயல்களில் தண்ணீர் தேங்கியதால் பல ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்தன. சேதம் 70% அல்லது அதற்கும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டால், இழப்பீடு தொகையில் 70% வழங்கப்படும். இழப்பு சதவீதம் 70%க்கு மேல் இருந்தால், ஏக்கருக்கு `20,000 வழங்கப்படும்.

8. மூன்று தென்னாப்பிரிக்க நாடுகளில் கரையைக்கடந்த வெப்பமண்டல புயலின் பெயர் என்ன?

அ) ரீனா

ஆ) ஆனா 

இ) பாஸ்

ஈ) சூ

  • வெப்பமண்டல புயல் ‘ஆனா’ மூன்று தென்னாப்பிரிக்க நாடுகளைத் தாக்கியது. இதன் காரணமாக 70 பேர் இறந்தனர். இந்தப் புயல் மொசாம்பிக் மற்றும் மலாவிக்குள் நுழைவதற்கு முன்பு மடகாஸ்கரில் கரையைக்கடந்தது. மடகாஸ்கரில் 41 பேரும், மொசாம்பிக்கில் 18 பேரும் மலாவியில் 11 பேரும் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

9. சமீப செய்திகளில் இடம்பெற்ற மசாடா கோட்டை உள்ள நாடு எது?

அ) இந்தியா

ஆ) இலங்கை

இ) இஸ்ரேல் 

ஈ) ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

  • இஸ்ரேலில் அமைந்துள்ள ‘மசாடா கோட்டை’ என்பது யூத வீரத்தின் சின்னமாகும். இந்தியாவுக்கான இசுரேல் தூதர் நவர் கிலோன், இஸ்ரேலில் உள்ள ‘மசாடா கோட்டை’ விளக்குகளால் ஒளிர்வதைக் காட்டும் காணொளியைப் பகிர்ந்துள்ளார். இருநாடுகளும் தூதரக உறவுகளின் 30 ஆண்டுகளைக்கொண்டாடும் நிலையில், இது இந்தியா-இஸ்ரேல் உறவுகளை நினைவுகூருவதாக உள்ளது.

10. இருபத்தொரு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் டென்னிஸ் வீரர் யார்?

அ) ரோஜர் பெடரர்

ஆ) ரபேல் நடால் 

இ) நோவக் ஜோகோவிச்

ஈ) ஆண்ட்ரே அகாசி

  • ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவை வீழ்த்தி, 21ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்தார் ரபேல் நடால்.
  • இருபத்தொரு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் டென்னிஸ் வீரர் என்ற பெருமையை அவர்பெற்றார். சுவிச்சர்லாந்தின் ரோஜர்பெடரரும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் தலா 20 பட்டங்களைப்பெற்று சம நிலை -யில் உள்ளனர். ஓய்வுபெற்ற ஆஸ்திரேலிய டென்னிஸ் வீராங்கனை மார்கரெட் கோர்ட், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் முதன் முறையாக மகா சிவராத்திரி விழா, கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் முதன் முறையாக மகா சிவராத்திரி விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான சென்னை, இராமகிருஷ்ணா மடம் சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மகா சிவராத்திரி தினத்தன்று சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

2. ரஷ்யா மீது ஜி7 நாடுகள் பொருளாதார தடை: உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலை

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 கூட்டமைப்பு சார்பில் ரஷ்யா மீது ஏற்கெனவே பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த நாட்டின் மீது ஜி7 சார்பில் மேலும் பல்வேறு கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று ஜெர்மனி அறிவித்துள்ளது.

உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று முன்தினம் விவாதம் நடந்தது. இதில் உக்ரைன் போர் பதற்றம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த இந்தியா, அனைத்து தரப்பும் அமைதி காக்க வேண்டுகோள் விடுத்தது. எனினும் ரஷ்யா மீது இந்தியா எவ்வித விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை. இறுதியில் நடந்த வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. உக்ரைன் விவகாரத்தில் ஆரம்பம் முதலே இந்தியா நடுநிலை வகித்து வருகிறது.

3. நாசாவின் செயற்கைக்கோளுக்கு சிக்காத சூரிய புரோட்டான் நிகழ்வுகளை சந்திரயான்-2 விண்கலம் கண்டறிந்தது: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தகவல்

நாசாவின் செயற்கைக்கோளுக்கு சிக்காத சூரிய புரோட்டான் நிகழ்வுகளைச் சந்திரயான்-2 விண்கலம் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), சந்திரயான்-2 விண்கலத்தை 2019 ஜூலை 22-ல் ஹரிகோட்டாவில் இருந்து அனுப்பியது.

பல்வேறு கட்டத்துக்குப் பிறகு, சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக நிலவை நெருங்கியது. ஆனால், செப்.7-ம் தேதி சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் கலன் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கவில்லை. திடீர் தொழில்நுட்பக் கோளாறால் லேண்டர் வேகமாகச் சென்று நிலவின் தரையில் மோதியதாகக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், விண்கலத்தின்மற்றொரு பகுதியான ஆர்பிட்டர், நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அதன்பிறகு, நிலவைச் சுற்றிவரும் ஆர்பிட்டர் பல்வேறு தகவல்களைப் பூமிக்கு அனுப்பி வருவதாக இஸ்ரோ தெரிவித்தது. இந்நிலையில், சூரிய புரோட்டான் நிகழ்வுகளை சந்திரயான் விண்கலம் கண்டறிந்துள்ளது.

இதுதொடர்பாக ’இஸ்ரோ’ கூறியதாவது: சந்திரயான் 2-ன் ஆர்பிட்டர் கருவியானது சூரியனின் வெப்ப பிழம்புகளின் வெளியேற்றங்கள், அயனியாக்கம் செய்யப்பட்ட துகள் மற்றும் காந்தப்புலங்களின் சக்திவாய்ந்த ஓடை ஆகியவற்றைக் கடந்த ஜன.18-ம் தேதி பதிவு செய்துள்ளது. இந்த வெப்ப வெளியேற்றங்கள்தான் புவி காந்தப் புயல்களுக்கும், வானத்தில் துருவ ஒளியை ஒளிரவும் வழிவகுக்கிறது. இத்தகைய சூரிய புரோட்டான் நிகழ்வுகளின் தாக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதால், வெவ்வேறு கிரக அமைப்புகளில் இது எவ்வாறுசெயல்படுகிறது என்பது புரிந்துகொள்ள உதவும்.

சூரியன் மிக உக்கிரமாக இருக்கும்போது, ​​சூரிய எரிப்பு எனப்படும் கண்கவர் வெடிப்புகள் ஏற்படுகின்றன. அப்போது சூரியனின் பிழம்புகள் விண்வெளியில் வெடித்துச் சிதறும். அவை சில நேரங்களில் ஆற்றல்மிக்க துகள்களைப் பூமி போன்ற கிரகங்களுக்குள் நுழைகிறது. இவற்றில் பெரும்பாலானவை அதிக ஆற்றல் கொண்ட புரோட்டான்களே ஆகும்.

இந்த ஆற்றலின் சக்திக்கு ஏற்ப, அவை விண்வெளியைக் கடுமையாகப் பாதிக்கிறது. இதில் ஏற்படும் கதிர்வீச்சு விண்வெளி நிலையங்களில் இயங்கும் மனிதர்களைப் பாதிக்கிறது.

மேலும், பூமியின் நடுத்தர வளிமண்டலத்தில் பெரிய அளவில் அயனியாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவைன சூரியவெடிப்பில் ஏற்படும் பிழம்புகளின்வலிமைக்கு ஏற்ப வகைப்படுத்தப்படுகின்றன.

ஏ – மிகச்சிறியவை. அதைத் தொடர்ந்து பி, சி, எம் மற்றும் எக்ஸ் உள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் 1-9 வரையிலான நுணுக்கமான அளவுகளும் உள்ளன. உதாரணமாக எம்2 என்பது எம்1-ஐ விட 2 மடங்கு வலிமை கொண்டது.

அதன்படி, சமீபத்தில், இரண்டு எம் வகுப்பு அளவுள்ள வெடிப்புகள் நடந்துள்ளன. அவற்றில், ஒன்று எம் 1.5 அளவில் வெப்ப பிழம்புகளின் வெளியேற்றங்களுடனும், மற்றொன்று எம் 5.5 அளவுக்கு ஆற்றல்மிக்க துகள்களையும் கிரகங்களுக்குள் செலுத்தியுள்ளது.

இந்த சூரிய புரோட்டான் நிகழ்வைப் பூமியைச் சுற்றி வரும் நாசாவின் புவிசார் செயல்பாட்டுச் சுற்றுச்சூழல் செயற்கைக்கோள் (GOES) கண்டறியவில்லை. ஆனால், நிலவைச் சுற்றி வரும் நமது சந்திரயான் -2 தனது மென்மையான எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் மூலம் இந்த நிகழ்வைக் கண்டறிந்துள்ளது. இவ்வாறு இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக நிலவை அடையாமல்போனதும், இஸ்ரோ விஞ்ஞானிகள் கடுமையாக சோர்வடைத்திருந்தனர். ஆனால், தற்போது நாசாவுக்கு சிக்காத அறிய தகவல்கள் சந்திரயான்-2வின் ஆர்ப்பிட்டரில் சிக்கிஉள்ளது விஞ்ஞானிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூரியனின் பிழம்புகள் விண்வெளியில் வெடித்துச் சிதறும். அவை சில நேரங்களில் ஆற்றல்மிக்க துகள்களைப் பூமி போன்ற கிரகங்களுக்குள் நுழைகிறது. இவற்றில் பெரும்பாலானவை அதிக ஆற்றல் கொண்ட புரோட்டான்களேயாகும்.

1. ‘Inter–Operable Criminal Justice System (ICJS)’ is associated with which Union Ministry?

A) Ministry of Law and Justice

B) Ministry of Home Affairs 

C) Ministry of Housing and Urban Affairs

D) Ministry of Social Justice and Empowerment

  • The Central Government has approved the implementation of Phase II of the Inter–Operable Criminal Justice System (ICJS) project, at a total cost of Rs 3,375 crore during the period from 2022–23 to 2025–26.
  • This phase of the ICJS project by the Home Affairs Ministry will be implemented as a central sector scheme. ICJS is a national platform for enabling integration of main IT system used for delivery of Criminal Justice in the country.

2. ‘Khajuraho Dance Festival’ is a famous event organised in which Indian state?

A) Gujarat

B) Bihar

C) Madhya Pradesh 

D) Maharashtra

  • The 48th Khajuraho Dance Festival commenced from in Madhya Pradesh. The weeklong festival will be held till February 26, 2022. The world famous ‘Khajuraho Dance Festival’ is being organized in Khajuraho, located in Chhatarpur district of Madhya Pradesh. The festival is being organized on the theme of Azadi ka Amrit Mahotsav.

3. Which nocturnal pollinator has been found to have vital role in ‘Pollination’ in the Himalayan ecosystem?

A) Moths 

B) Bees

C) Butterflies

D) Bats

  • As per a recent study, Moths are vital to pollination in the Himalayan ecosystem of northeast India.
  • The study highlights 91 species of moths as potential pollinators of 21 plant families in Sikkim and Arunachal Pradesh.

4. In which Indian state is the ‘Giant Metrewave Radio Telescope’ located?

A) Gujarat

B) Sikkim

C) Maharashtra 

D) Uttarakhand

  • ‘Giant Metrewave Radio Telescope (GMRT)’ is an array of thirty fully steerable parabolic radio telescopes. It is located near Pune at Khodad in Maharashtra. Astronomers from the National Centre of Radio Astrophysics (NCRA–TIFR) in Pune, and the University of California, Santa Cruz, have used GMRT to map the distribution of atomic hydrogen gas from the host galaxy of a fast radio burst (FRB).

5. Which Indian city has been elected as the host of 2023 International Olympic Committee’s (IOC) session?

A) New Delhi

B) Mumbai 

C) Chennai

D) Hyderabad

  • India will host the 2023 International Olympic Committee’s (IOC) session in Mumbai.
  • India will be hosting the prestigious IOC meeting for the first time since 1983, when the 86th Session was held in New Delhi. The session which will be held in May or June next year, will include election for the host country for the 2030 Winter Olympics and sports programmes for LA 2028 Olympic Games.

6. Which state has framed a ‘Draft policy for senior citizens’ recognising Demographic transition?

A) Tamil Nadu 

B) Kerala

C) Odisha

D) Telangana

  • The Government of Tamil Nadu has framed a draft policy for senior citizens, acknowledging the State’s demographic transition.
  • The policy also proposes to create a Directorate for the Welfare of Senior Citizens. The draft document is based on Article 41 of the Constitution, which requires the State ‘to secure the right to work, education and to public assistance in cases of unemployment, old age, sickness and disablement’.

7. Which State/UT has approved Ex–gratia relief of Rs 20,000 per acre to farmers?

A) West Bengal

B) Delhi 

C) Punjab

D) Uttar Pradesh

  • The Delhi cabinet approved ex–gratia relief of Rs 20,000 per acre to farmers whose lands were damaged by rains last year.
  • In September–October 2021, several acres of farmland were damaged due to heavy rain and water–logging in fields. If the damage is found to be 70% or less, the compensation will be 70% of the amount. If the assessed loss is more than 70%, Rs 20,000 per acre will be paid.

8. What is the name of the Tropical Storm which made landfall on three southern African countries?

A) Rina

B) Ana 

C) Boss

D) Sue

  • Tropical Storm Ana hit three southern African countries, leading to a death count of 70. The storm made landfall in Madagascar before entering into Mozambique and Malawi. Madagascar reported 41 dead and 18 others were killed in Mozambique and 11 in Malawi.

9. Masada Fortress, which was seen in the news, is located in which country?

A) India

B) Sri Lanka

C) Israel 

D) UAE

  • Masada Fortress, which is located in Israel, is a symbol of Jewish Heroism. Israel’s Ambassador to India Naor Gilon shared a video that showed the Masada Fortress in Israel illuminated with lights. It commemorates the India–Israel Ties, as the two countries celebrate 30 years of diplomatic relations.

10. Who is the first male Tennis star to win 21 Grand Slam titles?

A) Roger Federer

B) Rafael Nadal 

C) Novak Djokovic

D) Andre Agassi

  • Ace Tennis player Rafael Nadal created history as he won a historic 21st Grand Slam title, defeating Russia’s Daniil Medvedev in the final of the Australian Open. The Spaniard became the first male tennis player to win 21 Grand Slam titles.
  • He went ahead of Switzerland’s Roger Federer and Serbia’s Novak Djokovic–both tied at 20 each. Australian retired tennis player Margaret Court won 24 Grand Slam women’s singles titles.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!