Tnpsc

25th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

25th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 25th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

25th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. இந்தியாவின் மிகவுயரமான மூலிகைப்பூங்கா திறக்கப்பட்டுள்ள மாநிலம் எது?

அ) உத்தரகண்ட் 

ஆ) இமாச்சல பிரதேசம்

இ) சிக்கிம்

ஈ) மிசோரம்

  • உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தின் மனா கிராமத்தில் இந்திய -சீன எல்லைப்பகுதிக்கு அருகே 11,000 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட மூலிகைப்பூங்கா திறந்துவைக்கப்பட்டது. மத்திய அரசின் காடுவளர்த்தல் நிதித்திட்டத்தின் கீழ் உத்தரகண்ட் வனத்துறையால் இந்தப்பூங்கா அமைக்கப்பட்டது. இமயமலையின் உயரமான பகுதிகளில் காணப்படும் சுமார் 40 மூலிகை இனங்கள் இப்பூங்காவில் வளர்க்கப்பட்டுள்ளன.

2. அண்மையில், முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் காலமானார். அவர் எந்த மாநிலத்தின் முதல்வராக இருந்தார்?

அ) ஹரியானா

ஆ) இராஜஸ்தான்

இ) உத்தர பிரதேசம் 

ஈ) மத்திய பிரதேசம்

  • உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வரும் இராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநருமான கல்யாண் சிங், 2021 ஆகஸ்ட்.21 அன்று தனது 89ஆவது வயதில் இலக்னோவில் காலமானார். கல்யாண் சிங், 1991இல் முதல்முறையாக உபி மாநிலத்தின் முதல்வரானார். 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது உபி மாநில முதலமைச்சராக பதவி வகித்தவர் கல்யாண் சிங். அவர், 24 ஜூன் 1991 – 1992 டிச.6 வரை & 1997 செப்.21 முதல் 1999 நவ.12 வரை முதல்வராக இருந்தார்.

3. தேசிய அனல்மின் கழகமானது பின்வரும் எந்த நகரத்தில், 25 MW திறன்கொண்ட மிகப்பெரிய மிதவை சோலார் PV திட்டத்தை தொடங்கியுள்ளது?

அ) காயங்குளம்

ஆ) ஓம்கரேஷ்வர்

இ) இராமகுண்டம்

ஈ) விசாகப்பட்டினம் 

  • தேசிய அனல்மின் கழகமானது, 25 MW திறன்கொண்ட மிகப்பெரிய மிதவை சூரியசக்தி ஒளிமின்னழுத்தத் திட்டத்தை ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினத்திலுள்ள அதன் சிம்காத்ரி அனல்மின் நிலையத்தின் நீர்த்தேக்கத்தில் உருவாக்கியுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட நெகிழ்வுத்தன்மை திட்டத்தின்கீழ் உருவாக்கப்ப -ட்டுள்ள முதல் சூரியசக்தி திட்டமாகவும் இது அமைந்துள்ளது.
  • இந்த மிதவை சூரிய ஆற்றல் திட்டம், நீர்த்தேக்கத்தில் சுமார் 75 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட சூரியசக்தி ஒளிமின்னழுத்த கலங்களிலிருந்து மின்சாரத்தை உருவாக்கும் திறனை இந்தத் திட்டம் பெற்றுள்ளது.

4. மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையிலான வன்முறைச் செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் பன்னாட்டு நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) 23 ஆகஸ்ட்

ஆ) 22 ஆகஸ்ட் 

இ) 20 ஆகஸ்ட்

ஈ) 24 ஆகஸ்ட்

  • மதம் / நம்பிக்கையின் அடிப்படையிலான வன்முறைச் செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் பன்னாட்டு நாள் ஆக.22 அன்று ஐநா’ஆல் அனுசரிக்கப்பட்டது. மதம் / நம்பிக்கை சார்ந்த வன்முறைச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தார்க்கும் பொருந்தக்கூடிய சட்டத்தின்படி ஆதரவு மற்றும் உதவியை நல்குவதன் முக்கியத்துவத்தை இந்த நாள் நினைவுகூருகிறது. இது முதன்முதலில் 2019’இல் அதிகாரப்பூர்வமாக அனுசரிக்கப்பட்டது.

5. எந்த மாநிலத்தைச் சார்ந்த 7 உள்ளூர் உணவுப்பொருட்களை, மத்திய உணவுப்பதப்படுத்தும் தொழிற்துறைகள் மற்றும் ஜல் சக்தித் துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல் அறிமுகம் செய்தார்?

அ) அஸ்ஸாம்

ஆ) மணிப்பூர் 

இ) ஒடிஸா

ஈ) மத்திய பிரதேசம்

  • ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் ஒருபகுதியாக, மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் மற்றும் ஜல்சக்தித் துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல், மணிப்பூர் மாநிலத்தின் ஏழு உள்ளூர் உணவுப் பொருட்களை இம்பாலில் அறிமுகம் செய்து வைத்தார். அவை, கருப்பரிசி லட்டு, கருப்பரிசி பழம் & கொட்டை பிஸ்கோத்துகள், சூடான மற்றும் காரமான புஜியா, கபோக் (பொறி) கலவை, மணிப்பூரி கிழங்கு பர்பி, மூங்கில் தளிர் முரபா மற்றும் அத்தி லட்டு ஆகும்.
  • இப்பொருட்கள் மணிப்பூர் உணவுத் தொழிற்துறைகள் நிறுவன அடைவு ஆய்வகத் திட்டத்தின்கீழ் TQS குளோபல், காஜியாபாத்துடன் இணைந்து 10 லட்சம் பட்ஜெட் ஒதுக்கீட்டில் உருவாக்கப்பட்டது.

6. ஐநா பாதுகாப்பு அவையில், வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கர் ஒரு மொபைல் தொழில்நுட்ப தளத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தார். இந்தத் தளத்தின் பெயர் என்ன?

அ) UNITE Peace

ஆ) UNITE Aware 

இ) UNITE X

ஈ) UNITE World

  • மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், S ஜெய்சங்கர், ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையினரைப் பாதுகாக்க உதவுவதற்காக, “UNITE Aware” தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தார். நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில், அவர், “தொழில்நுட்பம் மற்றும் அமைதி காத்தல்” பற்றிய ஐநா பாதுகாப்பு அவையின் விவாதத்திற்கு தலைமை தாங்கியபோது இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
  • “UNITE Aware” என்பது அமைதிப்படையினருக்கு தரை-தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக இந்தியாவால் உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இது அப்படையினரின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்காக இந்தியா $1.64 மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது.

7.போர் வானூர்திகளை ரேடார் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க, அதிநவீன சாப் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ள அமைப்பு எது?

அ) ISRO

ஆ) HAL

இ) DRDO 

ஈ) BHEL

  • ரேடார்மூலம் செயல்படும் எதிரிநாட்டு ஏவுகணைகளிலிருந்து இந்திய விமானப்படையின் போர் விமானங்களை பாதுகாக்க அதிநவீன ‘சாஃப்’ தொழில்நுட்பத்தை இராணுவ ஆராய்ச்சி & மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கியுள்ளது. ஜோத்பூரில் உள்ள DRDO ஆய்வகம், புனேவில் உள்ள DRDO’இன் உயராற்றல் பொருட்கள் ஆய்வகத்துடன் இணைந்து இந்த ‘சாஃப்’ காட்ரிட்ஜ் – 118/I சாதனத்தை உருவாக்கியுள்ளது.
  • போர் விமானங்களில் பொருத்தப்படும் இச்சாதனத்தில், சிறு அலுமினியம் அல்லது துத்தநாகம் பூசப்பட்ட நார் துகள்கள் மில்லியன் கணக்கில் அடைக்கப்பட்டிருக்கும். தீப்பிழம்புடன் இது போர் விமானங்களிலிருந்து வெளியேறி காற்றில் பறக்கும்போது, லேசர்மூலம் செயல்படும் எதிரி நாட்டு ஏவுகணைகளை திசைதிருப்பும். இதன்மூலம் தாக்குதலில் இருந்து போர் விமானங்கள் தப்பிக்க முடியும்.

8. அண்மையில், தொலையுணர்திறன் செயற்கைக்கோள் தரவு பகிர்வில் ஒத்துழைப்பு நல்குவதற்காக, எந்த அமைப்பு, தங்களுக்குள் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுக்கொண்டது?

அ) G20

ஆ) BIMSTEC

இ) BRICS 

ஈ) ஐரோப்பிய ஒன்றியம்

  • பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா (BRICS) ஆகியவை தொலையுணர்திறன் செயற்கைக்கோள் தரவு பகிர்வில் ஒத்துழைப்பு நல்குவதற்கான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • BRICS விண்வெளி முகமைகளின் குறிப்பிட்ட தொலையுணர்திறன் செயற்கைக்கோள்களின் மெய்நிகர் விண்மீன் தொகுப்பை உருவாக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்மூலம் அந்தந்த தரைநிலையங்கள் தரவைப்பெறும். இந்த ஒப்பந்தம், இந்தியா BRICS தலைமையின்கீழ் உள்ள இச்சமயத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

9. நடைபாதை பொறியியல் மற்றும் அறிவார்ந்த போக்குவரத்து அமைப்புகளுக்காக பின்வரும் எந்த நிறுவனத்துடன் மத்திய சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சகம் ஒத்துழைத்துள்ளது?

அ) ஐஐடி மெட்ராஸ் 

ஆ) ஐஐடி காந்திநகர்

இ) ஐஐடி பம்பாய்

ஈ) ஐஐடி தில்லி

  • நடைபாதை (pavement) பொறியியல் மற்றும் அறிவார்ந்த போக்குவரத்து அமைப்புகளுக்காக இந்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்துடன் (MoRTH) மெட்ராஸ் ஐஐடி நிறுவனம் கூட்டிணைகிறது. புதுமையான நடைபாதைபொருட்கள் மற்றும் தொழில் நுட்பங்கள், ஹைட்ரஜன் மின்கலத்தில் இயங்கும் போக்குவரத்து, தானியங்கி வாகன வகைப்பாடு, புதிய கட்டண அமைப்புகள், நிகழ்வு மேலாண்மை அமைப்புகள், பயணிகளின் தகவலமைப்புகள், FastTAG தரவு பகுப்பாய்வு மற்றும் போக்குவரத்து பாதுகாப்பு தவிர போக்குவரத்து உருவகப்படுத்துதல் ஆகியவை இதிலடங்கும்.
  • நெடுஞ்சாலை பொறியியல் துறையில் MoRTH’ஆல் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரிகள் உட்பட 8-10 மாணவர்களுக்கு மெட்ராஸ் IIT நிறுவனம், பயிற்சியளிக்கும்.

10. உலக மனிதாபிமான நாள் கடைபிடிக்கப்படுகிற தேதி எது?

அ) ஆகஸ்ட் 19 

ஆ) ஆகஸ்ட் 21

இ) ஆகஸ்ட் 23

ஈ) ஆகஸ்ட் 25

  • அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக மனிதகுலத்திற்கு சேவை செய்ய எண்ணும் அனைவரின் தியாகங்களையும் கௌரவிக்கும் வகையில், ஐநா அவை, ஆகஸ்ட்.19ஆம் தேதியை உலக மனிதாபிமான நாளாகக் கொண்டாடுகிறது. “#TheHumanRace: a global challenge for climate action in solidarity with people who need it the most” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.
  • கடந்த 2009ஆம் ஆண்டில் ஐநா பொது அவையால் இந்நாள் முறையாக அங்கீகரிக்கப்பட்ட பின்னர், 2009 ஆகஸ்ட்.19 அன்று முதன்முறையாக நினைவுகூரப்பட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழகத்தில் 6 புதிய மாநகராட்சிகள்

தமிழ்நாட்டிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஒருங்கிணைத்து மேலும் 6 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்று பேரவையில் நகராட்சித் துறை அமைச்சர் KN நேரு அறிவித்தர்.

தாம்பரம், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய நகராட்சிகளையும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகளையும் ஒருங்கிணைத்தும் மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என அறிவித்தார்.

நகராட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்ட அறிவிப்புகள்: 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நகர்ப்புற மக்கள்தொகை 48.45 சதவீதம் ஆகும். 2021ஆம் ஆண்டு தற்போதைய சூழலில் மொத்த மக்கள்தொகையில் நகர்ப்புற மக்கள்தொகை சுமார் 53 சதவீதமாக உயர்ந்துள்ளது எனக் கருதப்படுகிறது. அதனால், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளை ஒட்டியுள்ள நகர்ப்புறத் தன்மையோடு உள்ள பகுதிகளை நகர்ப்புறங்களோடு இணைத்து தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவது இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.

தற்போதுள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில், நகர்ப்புறத்தன்மை, மக்கள்தொகை அடர்த்தி, ஆண்டு வருமானம், பொருளாதார முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையிலும் நகர்ப்புறமாக மாறி வரும் பகுதிகளிலும் நகரத்துக்கு இணையான அடிப்படை வசதிகளை அளித்திடும் நோக்கிலும் உள்ளாட்சி அமைப்புகளின் தரம் உயர்த்தப்படுகிறது.

தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு மாநகராட்சியாக அமைக்கப்படும். மேலும், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள் அதனைச் சுற்றி வளர்ச்சி அடைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.

4 மாநகராட்சிகள் விரிவாக்கம்: திருச்சி, நாகர்கோவில், தஞ்சாவூர், ஓசூர் ஆகிய மாநகராட்சிகளும், செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி, மன்னார்குடி ஆகிய நகராட்சிகளும் அவற்றைச் சுற்றியுள்ள வளர்ச்சியடைந்துள்ள பேரூராட்சிகளையும், ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து விரிவாக்கம் செய்யப்படும்.

புதிய நகராட்சிகள்: பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர், நந்திவரம் – கூடுவாஞ்சேரி, பொன்னேரி, திருநின்றவூர், சோளிங்கர், இடங்கனசாலை, தாரமங்கலம், திருமுருகன்பூண்டி, கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, வடலூர், கோட்டக்குப்பம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, அதிராம்பட்டினம், மானாமதுரை, சுரண்டை, களக்காடு, திருச்செந்தூர், கொல்லன்கோடு, முசிறி, லால்குடி ஆகிய பேரூராட்சிகள் அதன் அருகே வளர்ச்சியடைந்துள்ள ஊராட்சிகளை ஒன்றிணைத்து நகராட்சிகளாக மாற்றப்படும்.

மேலும், புஞ்சை புகளூர் மற்றும் புகளூர் ஆகிய 2 பேரூராட்சிகளையும் இணைத்து புகளூர் நகராட்சியாக அமைக்கப்படும்.

உறுப்பினர்கள் பதவிக்காலம்: தரம் உயர்த்தப்படும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும்போது மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுடன் இணைக்கப்படும் ஊராட்சிகளில் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட (அ) தேர்ந்தெடுக்கப்படுகின்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அவர்களது பதவிக் காலம் முடியும் வரை அப்பதவிகளிலேயே தொடர்வார்கள்.

சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் பதவிக்காலம் முடிவடையும்போது இணைக்கப்படும் பகுதிகள் புதிதாக உருவாக்கப்படும் (அ) விரிவாக்கம் செய்யப்படும் நகராட்சி அல்லது மாநகராட்சியின் முழுமையான ஆளுமைக்கு உட்படுத்தப்படும் என்றார் அமைச்சர் K N நேரு.

மொத்தம் 21 மாநகராட்சிகள்

தமிழ்நாட்டில் ஏற்கனவே 15 மாநகராட்சிகள் உள்ளன. மாநகராட்சிகள் விவரம் (மாநகராட்சிகள் தொடங்கப்பட்ட காலம் அடைப்புக்குறிக்குள் அளிக்கப்பட்டுள்ளது):

சென்னை (1688), மதுரை (1971), கோயம்புத்தூர் (1981), திருச்சி (1994), சேலம் (1994), திருநெல்வேலி (1994), திருப்பூர் (2008), ஈரோடு (2008), வேலூர் (2008), தூத்துக்குடி (2008), தஞ்சாவூர் (2014), திண்டுக்கல் (2014), நாகர்கோவில் (2019), ஓசூர் (2019), ஆவடி (2019) ஆகிய மாநகராட்சிகள் உள்ளன. இத்துடன் புதிய ஆறு மாநகராட்சிகளையும் சேர்த்து மாநகராட்சிகளின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னை மட்டும் பெருநகர மாநகராட்சியாக உள்ளது.

2. இந்தியாவின் கரோனா தடுப்பூசி ‘ஹக்கோ19’: முதல்கட்ட பரிசோதனையில் வெற்றி

கரோனா நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகின்ற, பாரம்பரிய முறையில் உருவான ‘ஹக்கோ19 (HGCO 19) தடுப்பூசியின் முதல்கட்ட பரிசோதனையை மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) ஏற்றுக்கொண்டுள்ளது. ‘ஹக்கோ19’ பாதுகாப்பானது, செல்லத்தக்கது, தடுப்பூசி ஆய்வில் பங்கேற்றவர்கள் நோய் எதிர்ப்பாற்றலைக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்து டிசிஜிஐ நிபுணர் குழு அனுமதியை வழங்கியுள்ளது.

மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள உயிரி தொழில்நுட்பத் துறை தன்னுடைய உயிரி தொழில்நுட்ப தொழிலக ஆய்வு உதவி கவுன்சில் என்கிற லாப நோக்கமற்ற பொதுத் துறை நிறுவனத்தை அமைத்துள்ளது.

இந்த நிறுவனம் கரோனா பாதுகாப்புக்கான இயக்கத்தில் புணேவை சேர்ந்த ஜென்னோவா பயோ பார்மசூட்டிகல்ஸ் என்கிற தனியார் மருந்து நிறுவனத்துடன் இணைந்து, தடுப்பூசி தயாரிப்பு ஆய்வுகளை மேற்கொண்டது. இதற்கு மத்திய உயிரிதொழில்நுட்பத்துறை நிதியுதவி அளித்தது. இந்த ‘ஹக்கோ19’ தடுப்பூசி மற்ற தடுப்பூசிகளைவிட வேறுபட்டது. ‘mRNA’ அடிப்படையில் இந்திய பாரம்பரிய முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் தூண்டும்விதமான தடுப்பூசியை உருவாக்குவதற்கான ஆய்வை மேற்கொண்டு, முதல்கட்ட பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஹெச்டிடி பயோ கார்ப்பரேஷன் நிறுவனமும் உதவ முன்வந்துள்ளது. இந்தத் தடுப்பூசிக்கு ‘ஹக்கோ19’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தத் தடுப்பூசிக்கான முதல்கட்ட ஆய்வை பரிசீலனை செய்து ஏற்றுக் கொண்ட மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு, இத்தடுப்பூசிக்கான 2ஆம், 3ஆம் கட்ட ஆய்வுகளை மேற்கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது.

3. இந்தியாவின் தலைமையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் முக்கியக் கூட்டங்கள்

இந்தியாவின் தலைமையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 3 முக்கியக் கூட்டங்கள் நடைபெற்றதாகவும், அந்தக் கூட்டங்கள் வாயிலாக உறுப்பு நாடுகளின் கருத்துகள் முழுமையாகப் பெறப்பட்டதாகவும் ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூா்த்தி தெரிவித்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஆகஸ்ட் மாதத்துக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது. கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்றபிறகு கடல்சாா் பாதுகாப்பு, அமைதிப்படை, பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய தலைப்புகளில் 3 முக்கியக் கூட்டங்களை இந்தியா நடத்தியது.

இன்னும் 1 வாரத்தில் இந்தியாவின் தலைமைப் பொறுப்பு நிறைவடைய உள்ள சூழலில், ஐ.நா.வுக்கான இந்திய தூதர் டி எஸ் திருமூர்த்தி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்தியாவின் தலைமையில் நடத்தப்பட்ட முக்கியக் கூட்டங்களின் வாயிலாக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. ஒவ்வொரு கூட்டத்திலும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகள் தெரிவித்த முழுமையான கருத்துகளும் பெற்றுக் கொள்ளப்பட்டன. 3 முக்கியக் கூட்டங்கள் வாயிலாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் ஐ.நா.வின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு முக்கியப் பங்கு வகிக்கும். இந்தக் கூட்டங்களில் அனைத்து நாடுகளுடன் கலந்தாலோசித்து ஆவணங்களை இந்தியா தயாரித்துள்ளது.

உறுப்பு நாடுகளின் தேவைகள், பிரச்னைகள் உள்ளிட்ட அனைத்தும் அந்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ளன. கூட்டங்களில் இந்தியா முன்னெடுத்த கலந்தாலோசனை யுக்தியை அனைத்துத் தரப்பினரும் வரவேற்றனா். இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற 3 முக்கியக் கூட்டங்களும் வெற்றி பெற்றன. நாடுகள் வரவேற்பு: கடந்த 9-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கடல்சாா் பாதுகாப்பு தொடா்பான கூட்டம் பல்வேறு வழிகளில் சிறப்புவாய்ந்தது. இந்தியப் பிரதமா் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்குத் தலைமை தாங்கியது அதுவே முதல் முறை.

கடல்சாா் பாதுகாப்புக்கென பிரத்யேகமாக நடத்தப்பட்ட முதல் கூட்டமும் அதுவே. கடல்சாா் பாதுகாப்பு முக்கியத்துவம் பெற்று வரும் சூழலில் நடத்தப்பட்ட அக்கூட்டத்துக்குப் பல்வேறு நாடுகள் வரவேற்பு தெரிவித்தன. முக்கிய விவகாரத்தில் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளும் அந்தக் கூட்டத்தின் வாயிலாகப் பெறப்பட்டன.

தீா்மானம் நிறைவேற்றம்: அமைதிப்படை, பயங்கரவாத எதிா்ப்பு ஆகியவை தொடா்பான கூட்டங்கள் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தலைமையில் நடைபெற்றன. உலகம் முழுவதும் அமைதியை ஏற்படுத்துவதற்கு இந்தியா தொடா்ந்து கைகொடுத்து வருகிறது. அமைதிப் படைகளுக்கு அதிக எண்ணிக்கையிலான வீரா்களை இந்தியா அனுப்பி வருகிறது.

அமைதிப் படையினருக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்றங்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரும் நோக்கிலான தீா்மானம் இந்தியா சாா்பில் நிறைவேற்றப்பட்டது. பயங்கரவாத எதிா்ப்பு விவகாரத்தில் அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென சிறப்புக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்தியாவின் தலைமையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சிரியா, லெபனான், சோமாலியா, மியான்மா், யேமன் உள்ளிட்ட நாடுகளில் நிலவும் சூழல் குறித்தும் விவாதிக்கப்பட்டது என்றாா் அவா்.

4. தொடங்கியது டோக்கியோ பாராலிம்பிக்: இன்று முதல் போட்டிகள் ஆரம்பம்

ஜப்பானின் டோக்கியோ நகரில் 16-ஆவது பாராலிம்பிக் போட்டி செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூா்வமாகத் தொடங்கியது. வரும் செப்டம்பா் 5-ஆம் தேதி வரை 13 நாள்களுக்கு நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த பாராலிம்பிக்கில், விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமையிலிருந்து தொடங்குகின்றன. டோக்கியோவில் உள்ள தேசிய மைதானத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் சா்வதேச பாராலிம்பிக் கமிட்டி (ஐபிசி) தலைவா் ஆன்ட்ரூ பாா்சன்ஸ், ஜப்பான் அரசா் நருஹிடோ, ஜப்பான் பிரதமா் யோஷிஹிடே சுகா உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.

தொடக்க நிகழ்ச்சியானது, எண்ண இயலாத துன்பங்களுக்கு இடையேயும் உயரப் பறக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகள் மேற்கொள்ளும் முயற்சிகளை சித்தரிக்கும் வகையில், ‘எங்களுக்கும் சிறகுள்ளது’ என்ற கருத்துருவை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டது. நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் அதைச் சாா்ந்தே இருந்தன. நிகழ்ச்சியானது, பாராலிம்பிக் போட்டியாளா்களின் பலத்தை பிரதிபலிக்கும் வகையிலான காணொலி திரையிடப்பட்டதில் இருந்து தொடங்கியது. அதைத் தொடா்ந்து கவுன்ட்டவுன் நடைபெற்று, அதன் நிறைவில் பாராலிம்பிக் போட்டி தொடங்கியதை குறிக்கும் வகையில் மைதானத்திலிருந்து வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. அதன் பிறகு ஐபிசி தலைவா், அரசா் நருஹிடோ ஆகியோா் மேடையில் தோன்ற, பாராலிம்பிக் போட்டி தொடங்கியதாக அரசா் நருஹிடோ அதிகாரப்பூா்வமாக அறிவித்தாா். அதைத் தொடா்ந்து ஜப்பானைச் சோ்ந்த பாராலிம்பிக் மல்யுத்த சாம்பியன் காவ்ரி இசோ உள்பட 6 போ் ஜப்பான் கொடியை மேடைக்கு ஏந்தி வந்தனா். அதன் பிறகு கொடியேற்றப்பட்டது.

பின்னா் பங்கேற்பு நாடுகளின் அணிவகுப்பு, அகதிகள் குழுவிலிருந்து தொடங்கியது. அதில் இஸ்ரேல் அணியினரை ஒரு வழிகாட்டி நாய் அணிவகுத்து நடத்தி வந்தது அனைவரின் கவனத்தையும் ஈா்ப்பதாக இருந்தது. தலிபான்கள் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் வகையில், அந்நாட்டின் தேசியக் கொடியும் அணிவகுப்பில் ஏந்தி வரப்பட்டது. அப்போது மைதானத்தில் கூடியிருந்தவா்கள் பலமான கரவொலி மூலம் அதற்கு வரவேற்பு தெரிவித்தனா். நடப்பு அரசியல் சூழல் காரணமாக அந்நாட்டிலிருந்து போட்டியாளா்கள் பங்கேற்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

இந்தியா…

தொடக்க விழா நிகழ்ச்சியில் இந்தியாவின் சாா்பில் 5 போட்டியாளா்கள், 6 அதிகாரிகள் என 11 போ் பங்கேற்றனா். முன்னதாக, இந்தியாவின் அணிவகுப்பில் தமிழக உயரம் தாண்டுதல் வீரா் மாரியப்பன் தேசியக் கொடியை ஏந்திச் செல்வதாக இருந்தது. எனினும், விமானத்தில் வரும்போது மாரியப்பனுடன் நெருங்கிய தொடா்பில் இருந்த நபருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கையாக மாரியப்பனும், அவருடன் இருந்த வட்டு எறிதல் வீரா் வினோத் குமாரும் தனிமைப்படுத்தப்பட்டனா்.

இதனால் நிகழ்ச்சியில் இந்தியாவின் தேசியக் கொடியை குண்டு எறிதல் வீரா் தேக் சந்த் ஏந்திச் சென்றாா். எனினும், பரிசோதனையில் மாரியப்பன், வினோத் குமாருக்கு தொற்று பாதிப்பு இல்லை எனத் தெரியவந்ததால் அவா்கள் போட்டியில் பங்கேற்பதில் தடையில்லை என்று அணி நிா்வாகம் தெரிவித்தது.

பாராலிம்பிக் போட்டியானது 57 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டோக்கியோ நகரில் நடத்தப்படுகிறது. இதன் மூலம், பாராலிம்பிக் போட்டியை இரு முறை நடத்திய முதல் நகரம் என்ற பெருமையை டோக்கியோ பெற்றுள்ளது. 4,403 – டோக்கியோ பாராலிம்பிக்கில் பங்கேற்கும் போட்டியாளா்கள் எண்ணிக்கை. கடந்த ரியோ பாராலிம்பிக்கில் பங்கேற்றோா் எண்ணிக்கையை விட (4,328) இது அதிகமாகும். 2,550 ஆண் போட்டியாளா்கள்/ 1,853 பெண் போட்டியாளா்கள். 22/540 – இந்த பாராலிம்பிக்கில் மொத்தம் 22 விளையாட்டுகளில் 540 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.

5. நியூயார்க்கின் முதல் பெண் ஆளுநர் பதவியேற்பு

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்திற்கு முதல் பெண் ஆளுநராக கேத்தலீன் ஹோக்கல் (Kathleen Hogle) அவர்கள் பதவியேற்றார். அமெரிக்காவிலுள்ள நியூயாா்க் மாகாணத்தின் முதல் பெண் ஆளுநராக கேத்தலீன் ஹோக்கல் (Kathleen Hogle) செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். 62 வயதாகும் அவா், 16 மாதங்களுக்கு ஆளுநா் பொறுப்பை வகிப்பாா். இதுவரை ஆளுநராக இருந்து வந்த ஆண்ட்ரூ குவாமோ மீது அடுக்கடுக்காக பாலியல் புகாா்கள் எழுந்ததைத் தொடா்ந்து அவா் பதவியை ராஜிநாமா செய்தாா்.

அதனைத் தொடா்ந்து, அந்தப் பதவிக்கு கேத்தலீன் ஹோக்கல் (Kathleen Hogle) தோந்தெடுக்கப்பட்டுள்ளாா். அவரையும் சோத்து, தற்போது அமெரிக்காவின் 9 மாகாணங்களில் பெண்கள் ஆளுநா்களாக உள்ளனா். இது, அந்த நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

1. How many gold medals did India win at the World Archery Youth Championships?

A) 1

B) 2

C) 3 

D) 4

  • India has won 3 gold medals in Archery Championships. The Indian contingent won 15 medals at the World Archery Youth Championships.
  • The 2021 World Archery Youth Championships was held in Wroclaw in Poland. Out of the 15 medals, India has won three gold medals in the compound cadet women’s and men’s and mixed team events. The women’s team defeated Turkey 228–216 in the final match to win a gold medal.

2. Which organization has launched a year–long Amrit Mahotsav Quiz programme?

A) AIR 

B) CSIR

C) ISRO

D) NITI Aayog

  • All India Radio has launched a unique innovative programme named Azadi Ka Safar Akashvani Ke Saath on national as well as regional channels. A year–long Amrit Mahotsav Quiz is being organized by the News Services Division of All India Radio as part of Azadi Ka Amrit Mahotsav celebrations.

3. Which organization has flagged off Freedom Cyclothon 2021?

A) Border Security Force 

B) Ministry of Home Affairs

C) Indian Air Force

D) DRDO

  • To mark the 75th Anniversary of Independence Day, Border Security Force (BSF) Director General SS Deswal flagged off ‘Freedom Cyclothon 2021’ from the RS Pura area in Jammu and Kashmir that will end at Dandi in Gujarat. The Cyclists will cover four States/Union Territories namely Jammu and Kashmir, Punjab, Rajasthan and Gujarat.
  • The mission of the Cyclothon is to spread the message of New India Fit India, Atmanirbhar Bharat, Ek Bharat Shresth Bharat and Clean Village Green Village. The cyclists will cover a distance of 1993 kilometres.

4. Who has been elected as the new president of Institute of Economic Growth (IEG) Society?

A) Dr Manmohan Singh

B) Amitabh Kant

C) Ajay Tyagi

D) NK Singh 

  • Chairman of 15th Finance Commission, NK Singh, has been elected as the new president of Institute of Economic Growth (IEG) Society. He succeeded former Prime Minister Dr Manmohan Singh who was the President of IEG since 1992. His name was recommended by Dr Manmohan Singh for the consideration of the IEG’s general assembly.
  • Manmohan Singh stepped down from this position for health concerns. It is an autonomous, multidisciplinary centre that is used for advanced research and training. It was founded by VKRV Rao in 1952, but became operational in 1958. It is located at University Enclave of University of Delhi, New Delhi.

5. With which country, India has participated in the bilateral naval exercise ‘Exercise Konkan 2021?’

A) Sri Lanka

B) Australia

C) Russia

D) United Kingdom 

  • India has participated in the bilateral naval exercise ‘Exercise Konkan 2021’ with United Kingdom. This naval exercise was held between the Indian Navy and the Royal Navy of Britain in Portsmouth, UK.
  • INS Tabar took part in the annual bilateral exercise Konkan between the Indian Navy and Britain’s Royal Navy. The Indian Navy and Royal Navy have been conducting the bilateral naval exercise Konkan every year since 2004.

6. Which Indian city was adjudged the second most polluted city out of the 50 ‘most polluted cities’ in the world?

A) Ghaziabad 

B) Kanpur

C) Gurugram

D) Delhi

  • Uttar Pradesh’s Ghaziabad was adjudged the second most polluted city out of the 50 ‘most polluted cities’ in the world in 2020 by a report prepared by British company HouseFresh. Ghaziabad reported an average Air Quality Index (AQI) of 2.5 particulate matter (PM) in 106.6µg/m3, the report said.
  • Preceding Ghaziabad, Chinese city of Hotan in Xinjiang province has been named the most polluted city with a PM2.5 of 110.2µg/m3. The report attributed the air pollution in Hotan to sandstorms resulting from its closeness to the Taklimakan Desert, which is the largest shifting sand desert in the world. For Ghaziabad, the cause of pollution has been assigned to traffic volumes.

7. With which organization, MyGov under the Ministry of Electronics and Information Technology have come together to jointly launch the Amrit Mahotsav Shri Shakti Innovation Challenge 2021?

A) Global Fund for Women

B) National Organization for Women

C) Women for Women International

D) UN Women 

  • On the occasion of Azadi ka Amrit Mahotsav, the 75th year of Independence of India, MyGov under the Ministry of Electronics and Information Technology and UN Women have come together to jointly launch the Amrit Mahotsav Shri Shakti Innovation Challenge 2021. The aim is to empower women to help them achieve their full potential. The winners will be awarded 5,00,000 each.

8. Recently, who has been appointed as the brand ambassador for Amway?

A) P V Sindhu

B) Neeraj Chopra

C) Sushila Chanu

D) Saikhom Mirabai Chanu 

  • Amway India has announced that it has appointed Olympian Saikhom Mirabai Chanu as the brand ambassador for Amway and its Nutrilite range of products. Chanu will spearhead the company’s campaigns focused on product ranges such as Nutrilite Daily, Omega and All Plant Protein among others.
  • Saikhom Mirabai Chanu, a weightlifter, won the silver medal at the 2020 Tokyo Olympics in the women’s 49kg category.

9. Which organization has launched Urja, an AI enabled virtual assistant?

A) Hindustan Petroleum

B) NTPC Limited

C) Power Grid Corporation of India

D) Bharat Petroleum Corporation Limited 

  • Bharat Petroleum Corporation Limited (BPCL), has launched Urja, a virtual assistant with AI/NLP (Artificial Intelligence/Natural Language Processing) capabilities and trained on more than 600 use cases.
  • In an effort to make BPCL’s customer interface complete and digitally integrated, Urja, the chabot is now available on the company’s website for any questions. Urja speaks in 13 languages (English, Hindi, Tamil, Kannada, Malayalam, Telugu, Marathi, Gujarati, Oriya, Bengali, Punjabi, Urdu and Assamese).

10. Which day is observed as Hiroshima Day?

A) August 6 

B) August 7

C) August 10

D) August 15

  • 6 August is observed as Hiroshima Day to acknowledge the massive devastation and human suffering brought by the dropping of nuclear bomb on Hiroshima in 1945. This year is the 76th anniversary of the atomic bombing. It was the first city to be attacked by a nuclear bomb. The US created two atomic bombs named ‘The Little Boy’ dropped in the city of Hiroshima and ‘The Fat Man’ in the city of Nagasaki on August 6 and 9 respectively.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!