TnpscTnpsc Current Affairs

24th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

24th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 24th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

January Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. கோல்டன் குளோப்ஸ் – 2022இல் ‘சிறந்த பட (நாடகம்)’ விருதை வென்ற திரைப்படம் எது?

அ) தி பவர் ஆஃப் எ டாக் 

ஆ) கிங் ரிச்சர்ட்

இ) பெல்ஃபாஸ்ட்

ஈ) கோடா

  • கோல்டன் குளோப்ஸ் 2022’இல் ‘தி பவர் ஆஃப் எ டாக்’ ‘சிறந்த படம் (நாடகம்)’ என அறிவிக்கப்பட்டது. பெனடிக்ட் கம்பெர்பாட்ச் நடித்த இந்தப்படம் ஜேன் கேம்பியனுக்கு சிறந்த இயக்குநர் விருதையும், கோடி ஸ்மிட்-மெக்ஃபீக்கு சிறந்த துணை நடிகர் விருதையும் பெற்றுத்தந்தது.
  • ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ‘வெஸ்ட் சைட் ஸ்டோரி’ சிறந்த திரைப்படம் (இசை அல்லது நகைச்சுவை), சிறந்த திரைப் பட நடிகை (இசை அல்லது நகைச்சுவை) மற்றும் சிறந்த துணை நடிகைக்கான திரைப்பட விருதுகளை வென்றது. வில் ஸ்மித் (கிங் ரிச்சர்ட்) திரைப்படம், நாடகம் ஆகியவற் -றில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.

2. மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதய மாற்று அறுவை சிகிச்சையை முதன்முதலில் வெற்றிகரமாக நடத்திய நாடு எது?

அ) சீனா

ஆ) ரஷ்யா

இ) அமெரிக்கா 

ஈ) இந்தியா

  • அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவ மையத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை மனிதருக்கு பொருத்தும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.
  • 57 வயதான டேவிட் பென்னட், இதுபோன்ற இதய மாற்று அறுவை சிகிச்சையை செய்துகொண்ட உலகின் முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார்.

3. ‘ரோஜ்கர் மிஷன்’ என்பது எந்த மாநிலத்தின் சமீபத்திய முன்னெடுப்பாகும்?

அ) உத்தர பிரதேசம்

ஆ) சத்தீஸ்கர் 

இ) பஞ்சாப்

ஈ) அஸ்ஸாம்

  • சத்தீஸ்கர் அரசு முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் வேலைவாய்ப்பு திட்டத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. சத்தீஸ்கர் ரோஜ்கர் மிஷன் தலைமைச் செயலாளரும், முதன்மைச் செயலாளரும் முறையே துணைத் தலைவராகவும், CEO ஆகவும் இருப்பார்கள்.
  • IIT மற்றும் IIM போன்ற முதன்மையான நிறுவனங்களின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் சுமார் 15 இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

4. அண்மையில் காலமான பண்டித பிர்ஜு மகாராஜுடன் தொடர்புடைய நடனம் எது?

அ) கதக் 

ஆ) பரதநாட்டியம்

இ) குச்சிப்புடி

ஈ) மோகினியாட்டம்

  • பழம்பெரும் கதக் நடனக்கலைஞர் பண்டித பிர்ஜு மகராஜ் அண்மையில் தனது 83ஆம் வயதில் காலமானார். அவர் தனது சீடர்களால் பண்டிதஜி மற்றும் மகராஜ்-ஜி என்றும் அழைக்கப்படுகிறார். இந்தியாவின் சிறந்த கலைஞர்களில் ஒருவராகக்கருதப்படும் அவருக்கு கடந்த 1964இல் ‘சங்கீத நாடக அகாதமி விருது’ம் 1986இல் ‘பத்ம விபூஷன்’ விருது வழங்கப்பட்டது. சிறந்த நடன அமைப்பிற்கான தேசிய திரைப்பட விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

5. மின்சார வாகனங்களுக்கான மின்னேற்ற உட்கட்டமைப்பிற்கான தரநிலைகளின்படி, பொது மின்னேற்ற நிலையத்தை யார் அமைக்க முடியும்?

அ) டிஸ்காம்கள்

ஆ) தனிநபர்கள் 

இ) எரிசக்தி அமைச்சகம்

ஈ) மாநில அரசுகள்

  • மின்சார வாகனங்களுக்கான மின்னேற்ற உட்கட்டமைப் -பிற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் தர நிலைகளை மத்திய எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டது.
  • இந்த வழிகாட்டுதல்களின்படி, எந்தவொரு தனிநபரும் / நிறுவனமும் உரிமம் ஏதுமில்லாமல் பொது மின்னேற்ற நிலையங்களை அமைக்கலாம். அத்தகைய நிலையங்கள் தொழில்நுட்ப ரீதியாக பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் நெறிமுறைகளை பூர்த்தி செய்திருத்தல் அவசியமாகும்.

6. COVID-19 தடுப்பூசி பற்றிய இந்தியாவின் நினைவு அஞ்சல்தலையில் இடம்பெற்றுள்ள தடுப்பூசி எது?

அ) கோவிஷீல்டு

ஆ) கோவாக்சின் 

இ) COVOVAX

ஈ) ZyCoV-D

  • இந்தியாவின் தேசிய COVID-19 தடுப்பூசி திட்டத்தின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நினைவு அஞ்சல்தலையை மத்திய சுகாதாரம் & குடும்பநலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கோவாக்சின் ஊசியுடன், சுகாதாரப் பணியாளர் மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதைப்போன்று இந்த நினைவு அஞ்சல் தலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • ஓராண்டு காலத்திற்குள், இந்தியா 156 கோடிக்கும் அதிக -மான தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஹைதராபாத்தைச் சார்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தால் கோவாக்ஸின் தடுப்பூசி உருவாக்கப்பட்டது.

7. அமெரிக்க நாணயத்தில் இடம்பெற்ற முதல் கறுப்பினப் பெண்மணி யார்?

அ) மாயா ஏஞ்சலோ 

ஆ) பிலிஸ் வீட்லி

இ) வாண்டா கோல்மன்

ஈ) க்வென்டோலின் ப்ரூக்ஸ்

  • கவிஞரும் ஆர்வலருமான மாயா ஏஞ்சலோ அமெரிக்க நாணயத்தில் இடம்பெற்ற முதல் கறுப்பினப் பெண்மணி ஆனார். இந்நாணயம் ஆப்பிரிக்க பெண்கள் குவார்டர்ஸ் திட்டத்தின் ஒருபகுதியாகும்.
  • கடந்த 90 ஆண்டுகளாக, அமெரிக்காவின் நாணயத்தில் ஒருபுறத்தில் அதன் முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனும் மறுபுறத்தில் கழுகும் இடம்பெற்று வந்தது.

8. தொடர்ந்து 4ஆம் முறையாக எந்த நாட்டின் அதிபராக ‘டேனியல் ஒர்டேகா’ பதவியேற்றுள்ளார்?

அ) நிகரகுவா 

ஆ) எல் சல்வடோர்

இ) பெரு

ஈ) அர்ஜென்டினா

  • மத்திய அமெரிக்க நாடான ‘நிகரகுவா’வின் அதிபராக 4ஆவது முறையாக டேனியல் ஒர்டேகா பதவியேற்றார். தேர்தலுக்குப் பிறகு அவரது அரசாங்கத்தில் உள்ள பல நபர்கள்மீது அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பொருளாதாரத் தடைகளை விதித்தன.
  • ஒர்டேகாவின் அரசாங்கம் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் அதிகாரத்தில் இருந்து வருகிறது.

9. ஒராங் தேசியப்பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?

அ) உத்தர பிரதேசம்

ஆ) அஸ்ஸாம் 

இ) பீகார்

ஈ) ஹிமாச்சல பிரதேசம்

  • ஒராங் தேசியப்பூங்கா அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியின் வடகரையில் அமைந்துள்ளது. இது முன்பு ‘ராஜீவ் காந்தி ஒராங் தேசியப்பூங்கா’ என்று அழைக்கப்பட்டது. ஒராங் தேசியப்பூங்காவை தற்போதுள்ள அதன் அளவை விட மூன்று மடங்குக்கும் அதிகமாக மாற்றுவதற்கான அறிவிப்பை அரசாங்கம் அண்மையில் வெளியிட்டுள்ளது.

10. ‘ஸ்மார்ட் டவுன்ஷிப்’ திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?

அ) ஆந்திர பிரதேசம் 

ஆ) ஒடிஸா

இ) குஜராத்

ஈ) கேரளா

  • ஆந்திர பிரதேச முதல்வர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி, ஜகனண்ணா ஸ்மார்ட் டவுன்ஷிப் திட்டத்திற்கான இணையதளத்தை அண்மையில் தொடங்கி வைத்தார்.
  • வில்லங்கமற்ற அரசு நிலங்களை நியாயமான விலையில் வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அம்மாநில அரசு ஏற்கனவே நடுத்தர குடும்பங்களுக்கு 31 லட்சம் வீட்டு பட்டாக்களை வழங்கியுள்ளது. மேலும் முதல் கட்டமாக 15.6 இலட்சம் வீடுகளைக் கட்டும் பணியையும் அது தொடங்கியுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தொல்லியல் அறிஞர் இரா நாகசாமி மறைவு

‘பத்ம பூஷண்’ விருது பெற்ற தொல்லியல் அறிஞர் இரா நாகசாமி (91) காலமானார். இந்திய வரலாறு, தொல்லியல் மற்றும் கல்வெட்டு எழுத்துக் குறிப்பு அறிஞர் இரா நாகசாமி சம்ஸ்கிருத வித்துவானான ராமச்சந்திரனுக்கு மகனாக 1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி பிறந்தார். இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருத மொழியில் முதுநிலைப் பட்டபடிப்பு முடித்தார். பின்னர், டெக்கான் கல்லூரியில் தொல்லியல் தொடர்பான ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார்.

இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தில் தொல்லியல் துறையில் பயிற்சி எடுத்த நாகசாமி, 1959ஆம் ஆண்டு முதல் சென்னை அரசு அருங்காட்சியகத்தின் பாதுகாவலர், தமிழக அரசின் தொல்லியல் துறையின் உதவி சிறப்பு அதிகாரி, தொல்லியல் துறையின் முதலாவது இயக்குநர் போன்ற பதவிகளை வகித்துள்ளார்.

மத்திய அரசின் பத்ம பூஷண், தமிழக அரசின் கலைமாமணி விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

2. சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி: பி.வி. சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற சர்வதேச சையது மோடி 2022 பேட்மிண்டன் இறுதி போட்டியில் வெற்றி பெற்று பி வி சிந்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார்

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் சர்வதேச சையது மோடி 2022 பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்றது.

தகுதிச்சுற்று, காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகளி -ல் வெற்றி பெற்ற இருவருக்கு இன்று இறுதி போட்டி நடைபெற்றது.

இதில் மகளிர் பிரிவில் ஒலிம்பிக் போட்டியில் இரண்டு முறை பதக்கம் வென்ற பி வி சிந்து மற்றும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் 2ஆம் ஆண்டு பி டெக் படித்து வரும் நாக்பூரைச் சேர்ந்த 20 வயதான மாளவிகா பன்சோட் என்ற மாணவி நேருக்கு நேர் மோதினர்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியதால் 21-13, 21-16 என்ற நேர் செட் கணக்கில் மாளவிகா பன்சோட்டை வீழ்த்தி பி வி சிந்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

முன்னதாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பி வி சிந்து, ரஷ்யாவின் ஈவ்ஜீனியா கொசெட்ஸ்கயாவை முதல் செட்டில் 21-11 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்.

பி வி சிந்து வெற்றி பெற ஒரு செட் மீதம் இருந்த நிலையில், ரஷ்ய வீராங்கனை பாதியிலேயே விலகிக் கொள்வதாக அறிவித்ததால் பிவி சிந்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

3. தேசிய பூப்பந்தாட்ட போட்டியில் தமிழக மகளிர் அணி சாம்பியன்

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்து போட்டியில் தமிழக மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றது.

40ஆவது தேசிய சப்-ஜூனியர் பூப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திராவில் கடந்த 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெற்றது. 18 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் கலந்துகொண்ட இந்தத் தொடரில் தமிழ்நாடு மகளிர் அணி தங்கப்பதக்கம் வென்றது. தமிழக அணி அரை இறுதியில் 35-24 மற்றும் 35-26 என்ற கணக்கில் கர்நாடகாவை வீழ்த்தியது.

தொடர்ந்து நடைபெற்ற இறுதிச் சுற்றில் தமிழக மகளிர் அணி 35-28, 28-35, 35-28 என்ற கணக்கில் ஆந்திராவை விழ்த்தியது.

1. Which film won the ‘Best picture (drama)’ award at the Golden Globes 2022?

A) The Power of a Dog 

B) King Richard

C) Belfast

D) Coda

  • ‘The Power of a Dog’ was named the ‘Best picture (drama)’ at the Golden Globes 2022. The Benedict Cumberbatch–starring movie also won the best director for Jane Campion and best supporting actor for Kodi Smit–McPhee. Steven Spielberg’s ‘West Side Story’ won the best picture (musical or comedy), best actress in a motion picture (musical or comedy) and best supporting actress in a motion picture awards.
  • Will Smith, (King Richard) won the Best actor in a motion picture, drama award.

2. Which country is the first to successfully conduct a human heart transplant from a genetically modified pig?

A) China

B) Russia

C) USA 

D) India

  • Doctors at the University of Maryland Medical Center, USA has successfully conducted a human heart transplant from a genetically modified pig. David Bennett, 57 became the first person in the world to get such a heart transplant.

3. ‘Rojgar Mission’ is the recent initiative of which state?

A) Uttar Pradesh

B) Chhattisgarh 

C) Punjab

D) Assam

  • The Chhattisgarh government has decided to set up an employment mission headed by Chief Minister Bhupesh Baghel. The Chhattisgarh Rojgar Mission will have chief secretary and principal secretary as the Vice Chairman and CEO respectively. It aims to create around 15 lakh job opportunities in the state in the next five years, by leveraging expertise of premiere institutions such as IITs and IIMs.

4. Pandit Birju Maharaj, who passed away recently, was associated with which dance?

A) Kathak

B) Bharatanatyam

C) Kuchipudi

D) Mohiniyattam

  • Legendary Kathak dancer Pandit Birju Maharaj passed away recently at the age of 83. He is also known as Panditji and Maharaj–ji by his disciples. He is regarded as one of India’s best–known artistes.
  • He was awarded the ‘Sangeet Natak Akademi Award’ in 1964 and the Padma Vibhushan in 1986. He was also awarded the National Film Award for Best Choreography.

5. As per Standards for Charging Infrastructure for Electric Vehicles (EV), who can set up a Public Charging Station (PCS)?

A) DISCOMs

B) Individuals 

C) Ministry of Power

D) State Governments

  • The Union Ministry of Power promulgated the revised Guidelines & Standards for Charging Infrastructure for Electric Vehicles (EV). As per the guidelines, any individual/entity is free to set up public charging stations without the requirement of a licence provided that, such stations meet the technical, safety standards and protocols.

6. India’s Commemorative postal stamp on Covid–19 vaccination features which vaccine?

A) Covishield

B) Covaxin 

C) COVOVAX

D) ZyCoV–D

  • India released a commemorative postal stamp on Covid–19 vaccination to mark the first anniversary of the country’s national immunization programme. The stamp shows a health worker inoculating a senior citizen with Covaxin. Within a span of one year, India has administered more than 156 crore doses.
  • Covaxin was developed by Hyderabad–based Bharat Biotech in collaboration with the Indian Council of Medical Research (ICMR).

7. Who is the first Black woman to appear on US coin?

A) Maya Angelou 

B) Phillis Wheatley

C) Wanda Coleman

D) Gwendolyn Brooks

  • Poet and activist Maya Angelou has become the first Black woman to appear on the US coin. The coin is part of the African Women Quarters program. For the last 90 years, the first US President George Washington was seen on one side and an eagle on the other.

8. ‘Daniel Ortega’ sworn in as which country’s President, for his fourth consecutive term?

A) Nicaragua 

B) El Salvador

C) Peru

D) Argentina

  • Daniel Ortega was sworn in as the President of the Central American country ‘Nicaragua’ for his fourth consecutive term. The United States and European Union imposed sanctions on several persons in his government after the elections. Ortega’s government has been in power since 2007.

9. Orang National Park is located in which state?

A) Uttar Pradesh

B) Assam 

C) Bihar

D) Himachal Pradesh

  • Orang National Park is located in the state of Assam at the north bank of the river Brahmaputra. It was previously called as the ‘Rajiv Gandhi Orang National Park’. The Government has recently issued notification to make Orang National Park more than thrice its existing size.

10. Which state launched the ‘Smart Township’ scheme?

A) Andhra Pradesh 

B) Odisha

C) Gujarat

D) Kerala

  • Andhra Pradesh Chief Minister YS Jagan Mohan Reddy recently launched the website for Jagananna Smart Township scheme. Under the scheme, the Government aims to give land with litigation–free titles and at a reasonable price.
  • The state government has already distributed 31 lakh house pattas to the middle–class families and started the construction of 15.6 lakh houses in the first phase.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!