TnpscTnpsc Current Affairs

23rd February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

23rd February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 23rd February 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

February Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற கிரிம்சன் ரோஸ் சார்ந்த இனம் எது?

அ) பூ

ஆ) பட்டாம்பூச்சி 

இ) பாண்டா

ஈ) பாம்பு

Pachliopta hector - Wikipedia

  • கிரிம்சன் ரோஸ் என்பது ஒரு பெரிய பட்டாம்பூச்சியாகும்; அதன் இறக்கைகள் மற்றும் உடலில் கருப்பு, வெள்ளை மற்றும் கருஞ்சிவப்பு நிறங்கள் கலந்திருக்கும். இது ஸ்வாலோடெயில்ஸ் (Papilionidae) குடும்பத்தைச்சேர்ந்தது ஆகும். அவை உள்நாட்டில் அடிக்கடி இடம்பெயர்கின்றன.
  • சமீபத்தில், ஆயிரக்கணக்கான கிரிம்சன் ரோஸ் பட்டாம் பூச்சிகள் இராமேஸ்வரத்தின் தனுஷ்கோடியிலிருந்து தெற்கு முனையில் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலங்கையை நோக்கி பறந்து கொண்டுள்ளன.

2. ‘DefExpo-2022’ பாதுகாப்பு கண்காட்சி நடைபெறும் இடம் எது?

அ) கோவா

ஆ) சென்னை

இ) காந்தி நகர் 

ஈ) வாரணாசி

  • ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ‘DefExpo’ என்ற பாதுகாப்பு கண்காட்சியின் நடப்பு 2022ஆம் ஆண்டின் பதிப்பு குஜராத்தின் காந்திநகரில் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. 900’க்கும் மேற்பட்ட பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் 55 நாடுகள் இதுவரை இந்தக் கண்காட்சியில் தங்கள் பங்கேற்பை உறுதிப்படுத்தியுள்ளன.
  • இது ஆசியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு கண்காட்சி எனக் கூறப்படுகிறது. இந்தக் கண்காட்சியின் 2020ஆம் ஆண்டு பதிப்பு லக்னோவில் நடைபெற்றது

3. எச்.ஐ.வி நோயிலிருந்து குணமடைந்த உலகின் முதல் பெண், எச்செயல்முறையின்மூலம் குணமாக்கப்பட்டார்?

அ) ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை 

ஆ) ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை

இ) காசநோய் சிகிச்சை

ஈ) குருதிமாற்றம்

  • உலகில் HIV நோயால் குணமடைந்த மூன்றாவது நபர் என்ற பெருமையை அமெரிக்க பெண்மணி ஒருவர் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. HIVஇலிருந்து குணமான முதல் பெண்ணும் இவர்தான்.
  • தீவிர குருதிப்புற்று நோயாளியான அப்பெண் எய்ட்ஸை உண்டாக்கும் வைரஸுக்கு இயற்கையான எதிர்ப்பைக் கொண்ட ஒருவரிடமிருந்து ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சையைப் பெற்றார். அவரது புற்றுநோய் சிகிச்சையின் ஒருபகுதியாக, இந்தக் குருதிமாற்று அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது.

4. ‘PM KUSUM’ திட்டத்துடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ) புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் 

ஆ) எரிசக்தி அமைச்சகம்

இ) விவசாய அமைச்சகம்

ஈ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகமானது சோலார் பம்புகள் மற்றும் கிரிட் இணைக்கப்பட்ட சோலார் & பிற புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்காக விவசாயிகளுக்காக பிரதமர் கிஸான் உர்ஜா சுரக்ஷா ஈவ் உத்தன் மகாபியன் (PM KUSUM) திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
  • சமீபத்தில், மத்திய அரசு 2024ஆம் ஆண்டுக்குள் வேளாண் துறையில் டீசலுக்குப்பதிலாக புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது.

5. ‘கல்வி நிர்வாகத்தில் புதுமைகள் & நல்ல நடைமுறைக -ளுக்கான தேசிய விருது’ யாருக்கு வழங்கப்படுகிறது?

அ) ஆசிரியர்கள்

ஆ) கல்வி அதிகாரிகள் 

இ) மாணவ தன்னார்வலர்கள்

ஈ) பள்ளிக்கல்வியில் உள்ள NGO

  • தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாக நிறுவனம் (NIEPA) ‘கல்வி நிர்வாகத்தில் புதுமைகள் மற்றும் நல்ல நடைமுறைகளுக்கான தேசிய விருதை’ நிறுவியுள்ளது.
  • நாட்டின் 29 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட மற்றும் தொகுதி அளவிலான கல்வி அதிகாரிகளுக்கு ஐந்தாவது தேசிய விருதுகள் அண்மையில் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு, நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த விருது அல்லது பாராட்டுச்சான்றிதழைப் பெற்றனர்.

6. சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற ‘பிராக்ஸிமா டி’ என்றால் என்ன?

அ) புதிய தடுப்பூசி

ஆ) புதிய புறக்கோள் 

இ) புதிய விண்மீன்

ஈ) புதிய கனிமம்

Proxima D: New Alien World Discovered In Planetary System 4.2 Light Years  Away

  • சூரியனுக்கு மிகவருகிலுள்ள நட்சத்திரமான ‘பிராக்ஸிமா சென்டாரி’யைச் சுற்றி வரும் ஒரு புதிய புறக்கோளை வானியலாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது. ‘பிராக்ஸிமா டி’ என்று பெயரிடப்பட்ட இந்தப்புறக்கோள், இவ்வமைப்பில் கண்டறியப்பட்ட மூன்றாவது புறக்கோளாகும்.
  • இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புறக்கோள்களில் இது மிகவும் இலகுவானதாக உள்ளது. சிலியில் அமைந்துள்ள ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின் மிகப்பெரிய தொலை நோக்கியை பயன்படுத்தி வானியலாளர்கள் இந்தப் புறக் கோளை கண்டறிந்துள்ளனர்.

7. நிலையான வெளிகளுக்கான உலகளாவிய USGBC -2021 பட்டியலில், இந்தியாவின் தரநிலை என்ன?

அ) 1ஆவது

ஆ) 3ஆவது 

இ) 5ஆவது

ஈ) 7ஆவது

Mars/Venus and the Radical 3rd | Reality Sandwich

  • நிலையான வெளிகளுக்கான (Sustainable Spaces) அமெரிக்க பசுமைக் கட்டடக் குழுவின் (USGBC) 2021 பட்டியலில் இந்தியா உலக அளவில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இது, கடந்த 2021ஆம் ஆண்டில் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் வடிவமைப்பில் தலைமைத்துவத்திற்கான அமெரிக்காவிற்கு வெளியே உள்ள முதல் 10 நாடுகள் மற்றும் பகுதிகளின் தரவரிசையாகும். இந்தியாவில் 1,649 LEED சான்றளிக்கப்பட்ட கட்டிடங்கள் உள்ளன.

8. NSE அகாதமியுடன் இணைந்து நிதிக்கல்வியறிவை அவசியமான வாழ்க்கைத்திறனாக ஊக்குவிக்கிற இந்திய வங்கி எது?

அ) பஞ்சாப் தேசிய வங்கி

ஆ) பாரத ஸ்டேட் வங்கி 

இ) ஐசிஐசிஐ வங்கி

ஈ) ஆக்சிஸ் வங்கி

  • பாரத ஸ்டேட் வங்கியின் உத்திசார் பயிற்சிப் பிரிவு, NSE அகாதமியுடன் இணைந்து, நிதியியல் கல்வியறிவை அவசியமான வாழ்க்கைத் திறனாக ஊக்குவிக்கிறது.
  • SBI’இன் முதல் 5 பெரிய ஆன்லைன் ஓப்பன் கோர்ஸ்கள் NSE அறிவு மைய தளத்தில் உள்ளன. வங்கி மற்றும் நிதிச் சேவைகளின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய அறிவைச் சேகரிக்க இவை உதவுகின்றன.

9. ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான கூட்டமைப்பின் தலைமையகம் எங்குள்ளது?

அ) ஜெனீவா 

ஆ) வாஷிங்டன்

இ) பாரிஸ்

ஈ) பிரஸ்ஸல்ஸ்

  • ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான கூட்டமைப்பு என்பது ஓர் அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும். இது, கடந்த 1964’இல் சுவிச்சர்லாந்தின் ஜெனீவாவில் நிறுவப்பட்டது. வளரும் நாடுகளிடையே வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இது உள்ளது.
  • சமீபத்தில், உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 2022ஆம் ஆண்டில் 0.6%ஆகக் குறைந்துள்ளது. இது தொற்றுக்கு முந்தைய நிலைகளில் 0.7%ஆக இருந்தது.

10. சமீபத்தில் போலியோ நோய்த்தாக்குதலுக்கு ஆளான ஆப்பிரிக்க நாடு எது?

அ) மலாவி 

ஆ) தென்னாப்பிரிக்கா

இ) நைஜீரியா

ஈ) காங்கோ மக்களாட்சிக் குடியரசு

  • நிலத்தால் சூழப்பட்ட ஆப்பிரிக்க நாடான மலாவி சமீபத்தில் போலியோ தாக்குதலுக்கு உள்ளானதாக அறிவித்தது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்தப் பாதிப்பு ஆப்பிரிக்க கண்டத்தில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படும் முதல் பாதிப்பாகும். இது, WPV1 (வகை 1 வைல்ட் போலியோ வைரஸ்) வகையைச் சார்ந்ததாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. வேலைவாய்ப்பில்லா வளர்ச்சி! | இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் கணிப்பு பற்றிய தலையங்கம்

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சென்டர் ஃபார் மானிடரிங் இண்டியன் எகானமி) என்கிற ஆய்வு நிறுவன கணிப்பின்படி, கடந்த டிசம்பர் மாதம் 7.9%-ஆக இருந்த வேலையின்மை விகிதம், ஜனவரி மாதத்தில் 8%-ஆக அதிகரித்திருக்கிறது. நவம்பர் மாதம் 8.2%-ஆக இருந்த நகர்ப்புற வேலையின்மை, டிசம்பரில் 9.3%-ஆகவும், கிராமப்புற வேலையின்மை 6.4%-ஆக இருந்தது 7.3%-ஆகவும் அதிகரித்திருக்கிறது.

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, 2020-இல் வேலைவாய்ப்பின்மையால் உயிரை மாய்த்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை 3,548 என்று அரசு தெரிவித்திருக்கிறது. 2018-இல் 2,741 இளைஞர்களும், 2019-இல் 2,851 இளைஞர்களும் வேலைவாய்ப்பு இன்மையால் தற்கொலை செய்துகொண்டனர் என்கிற புள்ளிவிவரமும் அரசால் வழங்கப்பட்டிருக்கிறது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரப்படி, மிக அதிகமான வேலைவாய்ப்பின்மைத் தற்கொலைகள் கர்நாடகம் (720), மகாராஷ்டிரம் (625), தமிழ்நாடு (336) ஆகிய மூன்று மாநிலங்களில்தான் காணப்படுகின்றன. மத்திய – மாநில அரசுகள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க, போதுமான முனைப்பு காட்டுவதில்லை. அறிக்கைகள் வெளிவருகின்றனவே தவிர, புதிய வேலைவாய்ப்புகள் உருவானதாகத் தெரியவில்லை.

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ஆய்வின்படி, 2021 டிசம்பரில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை 5.3 கோடி. மேலும் 1.7 கோடி பேர் வேலைக்குச் செல்லத் தயாராக இருக்கிறார்கள். உலக வங்கியின் புள்ளிவிவரப்படி, இந்தியாவில், வேலை செய்ய உகந்த வயதினரில் 43% பேர் மட்டுமே அதற்கான வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். இதுவே பாகிஸ்தானில் 48%, வங்க தேசத்தில் 58%. வேலை செய்யும் வயதிலான மக்கள்தொகையினர் 2021-31-இல் ஆண்டொன்றுக்கு 97 லட்சம் என்கிற அளவிலும், 2031-41-இல் 42 லட்சம் என்கிற அளவிலும் மேலும் அதிகரிப்பார்கள் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியா மிகப்பெரிய வேலைவாய்ப்பு பிரச்னையை எதிர்கொள்கிறது. இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் படித்த 60% மாணவர்களுக்குத்தான் உடனடியாக வேலை கிடைக்கிறது. 2000 முதல் 2008 வரை தொடங்கப்பட்ட பொறியியல், நிர்வாக மேலாண்மை கல்லூரிகள் பரவலாக மூடப்படுகின்றன.

வேலைவாய்ப்புகள் இல்லை என்பது மட்டுமல்ல, கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் கிடைப்பதில்லை என்பதும் மிகப் பெரிய பிரச்னை. சமீபத்தில் உத்தர பிரதேசத்திலும், பிகாரிலும் ரயில்வே வேலைக்கான தேர்வுக்கு வந்த இளைஞர்கள் நடத்திய வன்முறைப் போராட்டம் அதன் வெளிப்பாடே.

2018-19-இல் 2,83,747 காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே வெளியிட்டது. அதற்கு நான்கு கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்தன. 1.32 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

தொழில்நுட்பம் சாராத சாதாரண 35,000 வேலைகளுக்கான பணியிடங்களுக்கு 1.25 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். இரண்டு ஆண்டுக்கு முன்பு அதற்கான தேர்வு நடத்தப்பட்டு கடந்த டிசம்பர் – ஜனவரி மாதங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்த முடிவுகள் முதல் சுற்று தேர்வுக்கானவை என்றும், விரைவிலேயே அடுத்தச் சுற்று தேர்வு நடைபெறும் என்றும் ரயில்வே அறிவித்ததுதான் வன்முறைப் போராட்டம் வெடிக்கக் காரணமானது.

விண்ணப்பித்தவர்களில் பலரும், குறைந்த ஊதியமுள்ள கடைநிலை ஊழியர் பணிக்காக விண்ணப்பித்திருப்பவர்கள். அவர்களில் பெரும்பாலானோர் மிகவும் ஏழ்மையான பின்னணியில் இருந்து வருபவர்கள். விண்ணப்பத்துக்கு ரூ.500 முதல் ரூ.2,500 வரை கட்டணம் நிர்ணயம் செய்து பல்லாயிரம் கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது ரயில்வே நிர்வாகம்.

இதன் பின்னணியில் பல கேள்விகளுக்கு விடை அளிக்க இந்திய ரயில்வேத் துறை கடமைப்பட்டிருக்கிறது. பணியிடங்களை நிரப்புவதற்கு மூன்று ஆண்டு இடைவெளி தேவைதானா? சாதாரண அடிமட்டப் பணிகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வுகள் எதற்கு? ரயில்வே நிர்வாகம் ஆண்டுதோறும் பணியிடங்களை நிரப்பாமல் மொத்தமாக தேர்வுகள் நடத்தி நிரப்புவது ஏன்? இதுபோன்ற பல கேள்விகளை எழுப்புகிறது அந்த வன்முறை நிகழ்வு.

காவல்துறையில் காவலர் பணியிடங்களுக்கும், ஏனைய அரசுத்துறைகளில் கடைநிலை ஊழியர் பணியிடங்களுக்கும் ஆயிரக்கணக்கான பொறியியல், நிர்வாகவியல், முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிப்பது, பரவலாக இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் காணப்படுகிறது. அரசுத்துறை தவிர்த்த தனியார் துறை வேலைவாய்ப்பு என்பதும்கூட, கொள்ளை நோய்த்தொற்றுக்குப் பிறகு குறைந்துவிட்டது.

‘கிக்’ எனப்படும் ஓலா, உபேர் ஓட்டுநர்கள், ஸ்விக்கி, ஜொமேட்டோ உணவு விநியோக ஊழியர்கள் போன்றோர் “கிக்’ தொழிலாளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அதாவது தின ஊதியமோ, வார ஊதியமோ, மாத ஊதியமோ இல்லாமல் ஒவ்வொரு பணிக்கும் ஊதியம் பெறுபவர்கள் இவர்கள். இதற்கான வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பதால் வேலையின்மை அகன்றுவிட்டதாகக் கருத முடியாது.

பொருளாதார வளர்ச்சி என்பது இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமுள்ள நாடுகளில் வேலைவாய்ப்பை உருவாக்குவதாக இல்லாமல் போனால், வளர்ச்சி என்பது கானல் நீராகத்தான் இருக்குமே தவிர, நிஜமான வளர்ச்சியாக இருக்காது. இந்தியா எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால் வேலைவாய்ப்பின்மை என்பதை உணர்ந்து மத்திய – மாநில ஆட்சியாளர்கள் செயல்படாமல் போனால், விளைவு விபரீதமாக இருக்கும்.

2. ‘எங்கும் அறிவியல்’: டிஆர்டிஓ கண்காட்சியில் “2047-க்கான திட்டம்”

சுதந்திரத்தின் நூற்றாண்டில் (2047) தொழில்நுட்பங்கள் குறித்த கண்காட்சியை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) சென்னை உள்ளிட்ட 16 நகரங்களில் அமைத்துள்ளது. வருகின்ற பிப்ரவரி 28 -ஆம் தேதி வரை இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில், கொண்டாடப்படும் சுதந்திரத்தின் அம்ருத் மகோத்சவ் விழாவையொட்டி நாடு முழுவதும் “எங்கும் அறிவியல்” நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. அறிவியல், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை பறைசாற்றும் அறிவியல் நிகழ்ச்சி, நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பிப்ரவரி 22 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் பங்கேற்கிறது.

இதில் டிஆர்டிஓ “2047-க்கான திட்டம்” என்னும் கருப்பொருளில் சென்னை, தில்லி, ஆக்ரா, பெங்களூரு, உள்ளிட்ட 16 நகரங்களில் தனது எதிர்கால திட்டங்களுக்கான கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. மேலும், டிஆர்டிஓ மேற்கொண்டுள்ள பணிகளை வெளிப்படுத்தும் வாய்ப்பாக இந்தக் கண்காட்சிகள் அமைந்துள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

1. Crimson Rose, which was seen in the news recently, belongs to which species?

A) Flower

B) Butterfly 

C) Panda

D) Snake

Pachliopta hector - Wikipedia

  • Crimson Rose is a large butterfly with a mix of black, white and crimson colours on its wings and body. It belongs to the Swallowtails (Papilionidae) family and they are known to migrate along the coast, inland and cross the sea often.
  • Recently, thousands of Crimson Rose butterflies were seen flying from Dhanushkodi, at the southern–most tip of Rameswaram Island towards Sri Lanka, which is around 25 km from the tip of Dhanushkodi.

2. Which is the venue of ‘DefExpo 2022’ Defence Exhibition?

A) Goa

B) Chennai

C) Gandhi Nagar 

D) Varanasi

  • DefExpo 2022, India’s biennial flagship defence exhibition is scheduled to be held in Gandhinagar, Gujarat in the month of March. More than 900 defence firms and 55 countries have so far confirmed their participation in the Expo. It is also claimed to be Asia’s largest defence exhibition. Out of the 900 exhibitors at the event, more than 100 are foreign players. The 2020 edition of the Expo was held at Lucknow.

3. The world’s first woman was cured of HIV through which process?

A) Stem cell transplant 

B) Antiretroviral therapy

C) Tuberculosis Treatment

D) Blood Transfusion

  • A US woman is said to have become the third person in the world to be cured of HIV. She is also the first woman to be cured. The woman is a leukaemia patient and received a stem cell transplant from someone with natural resistance to the Aids–causing virus. An umbilical cord blood transplant was done, as a part of her cancer treatment.

4. ‘PM KUSUM’ Scheme is associated with which Union Ministry?

A) Ministry of New and Renewable Energy 

B) Ministry of Power

C) Ministry of Agriculture

D) Ministry of Rural Development

  • Ministry of New and Renewable Energy launched the Pradhan Mantri Kisan Urja Suraksha evem Utthan Mahabhiyan (PM KUSUM) Scheme for farmers for installation of solar pumps and grid connected solar and other renewable power plants.
  • Recently, the Central government has set the target for replacing diesel with renewable energy in the agricultural sector by 2024.

5. ‘National Award for Innovations and Good Practices in Educational Administration’ are presented to?

A) Teachers

B) Education Officers 

C) Student Volunteers

D) NGOs in School Education

  • The National Institute of Educational Planning and Administration (NIEPA) has instituted National Award for Innovations and Good Practices in Educational Administration. The 5th National awards were recently presented to the selected District and Block level education officers from 29 states/ UTs of the country. This year, over hundred officers received Award or Certificate of Appreciation.

6. What is ‘Proxima d’, which was seen in the news recently?

A) New Vaccine

B) New Exoplanet 

C) New Star

D) New Mineral

Proxima D: New Alien World Discovered In Planetary System 4.2 Light Years  Away

  • A team of astronomers has discovered a new planet orbiting Proxima Centauri, the star closest to the Sun. The planet named ‘Proxima d’, is the third detected in the system. It is among the lightest of the exo–planets discovered so far.
  • The astronomers used the European Southern Observatory’s Very Large Telescope (ESO’s VLT) in Chile to spot this exo–planet.

7. What is the rank of India in the USGBC 2021 global list for sustainable spaces?

A) 1st

B) 3rd 

C) 5th

D) 7th

Mars/Venus and the Radical 3rd | Reality Sandwich

  • India is placed third in the globe on the US Green Building Council’s (USGBC) 2021 global list for sustainable spaces. It is a ranking of the top 10 nations and areas outside of the United States for Leadership in Energy and Environmental Design (LEED) in 2021. India has 1,649 LEED certified buildings.

8. Which Indian bank has partnered with NSE Academy to promote financial literacy as a necessary life skill?

A) Punjab National Bank

B) State Bank of India 

C) ICICI Bank

D) Axis Bank

  • ‘State Bank of India’s Strategic Training Unit has entered into a partnership with NSE Academy to promote financial literacy as a necessary life skill. Five inaugural Massive Online Open Courses (MOOCs) of SBI have been on the NSE Knowledge Hub platform.
  • The e–courses enable learners to gather knowledge on various aspects of banking and financial services.

9. Where is the headquarters of the ‘United Nations Conference on Trade and Development’ located?

A) Geneva 

B) Washington

C) Paris

D) Brussels

  • United Nations Conference on Trade and Development is an intergovernmental organisation, established in 1964 at Geneva, Switzerland, with an aim to promote trade among developing countries.
  • Recently, the organisation has stated that India’s trade deficit as a percentage of global trade has reduced to 0.6% in 2022 as against 0.7% in pre pandemic levels.

10. Which African country has recently declared a Polio outbreak?

A) Malawi 

B) South Africa

C) Nigeria

D) Democratic Republic of Congo

  • The landlocked African nation – Malawi has recently declared a polio outbreak, after a case was identified in a young child.
  • As per the World Health Organisation, this outbreak is the first in the African continent in more than 5 years. This strain is of the type WPV1 (Type 1 Wild Polio Virus).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!