TnpscTnpsc Current Affairs

23rd December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

23rd December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 23rd December 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

23rd December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. ‘AI Pe Charcha (AI பேச்சுவார்த்தை)’ என்ற நிகழ்வை ஏற்பாடு செய்கிற நடுவண் அமைச்சகம் எது?

அ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

ஆ. நிதி அமைச்சகம்

இ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் உள்ள தேசிய மின்னாளுகைப் பிரிவானது ‘AI Pe Charcha (AI பேச்சுவார்த்தை)’ என்றவொன்றை ஏற்பாடு செய்தது. செயற்கை நுண்ணறிவுக்கான (AI) தரமான தரவுத் தொகுப்புகளை அணுகுவதற்கான முக்கியத்துவம் மற்றும் அணுகுமுறைகள் குறித்து குழு உறுப்பினர்கள் விவாதம் செய்தனர். ‘AI Pe Charcha’ என்ற இத்தொடர், Responsible AI for Social Empowerment (RAISE)இன் ஒருபகுதியாக தொடங்கப்பட்டது; இது கடந்த 2020ஆம் ஆண்டில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தியாவின் முதல் உலகளாவிய AI உச்சிமாநாடாகும்.

2. பொது சேவை மையங்கள் (CSC) மற்றும் இந்திய தபால்துறைமூலம் அரசாங்க மின்னணு சந்தை சேவைகளை (GeM) அறிமுகப்படுத்திய நடுவண் அமைச்சகம் எது?

அ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

ஆ. உள்துறை அமைச்சகம்

இ. MSME அமைச்சகம்

ஈ. நிதி அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

  • வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல், பொது சேவை மையங்கள் மற்றும் இந்திய அஞ்சல் துறைமூலம் அரசு மின்னணு சந்தைக்கூட சேவைகளை (GeM) அறிமுகப்படுத்தினார். GeM இணையதளத்தில் விற்பனையாளர்களும் சேவை வழங்குநர்களும் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட அரசு மின்னணு சந்தைக்கூட விற்பனையாளர் சம்வாத் கையேட்டையும் அமைச்சர் வெளியிட்டார்.

3. UNESCOஇன் உலக பாரம்பரிய தளங்களின் தற்காலிக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள உனகோடியின் பாறை புடைப்புச் சிற்பங்கள் மற்றும் கற்சிற்பங்கள் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. குஜராத்

ஆ. திரிபுரா

இ. தெலுங்கானா

ஈ. ஒடிஸா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. திரிபுரா

  • குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள இரு பாரம்பரிய தளங்களான மோதேராவில் அமைந்துள்ள சூரியன் கோவிலும் பிரதமர் நரேந்திர மோதியின் சொந்த ஊரான வரலாற்று நகரமான வாட்நகரமும் UNESCO உலக பாரம்பரிய தளங்களின் தற்காலிக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. திரிபுரா மாநிலத்தின் உனகோடியின் பாறை புடைப்புச் சிற்பங்கள் மற்றும் கற்சிற்பங்களும் UNESCOஇன் தற்காலிக பட்டியலில் சேர்க்கப்பட்டன.

4. சமீபத்தில் அதன் சுற்றுலாத் துறைக்கு தொழிற்துறை அந்தஸ்தை வழங்கியுள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. குஜராத்

ஆ. அஸ்ஸாம்

இ. மேற்கு வங்கம்

ஈ. அருணாச்சல பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. அஸ்ஸாம்

  • அஸ்ஸாம் மாநிலத்தில் சுற்றுலாத்துறைக்கு தொழிற்துறை அந்தஸ்தை வழங்கவும், முதலீடுகளை அதிகரிக்கவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் அஸ்ஸாம் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள், சுகாதார சங்கங்கள், ஸ்பாக்கள் மற்றும் நலமையங்கள் போன்றவை தொழிற்துறை கொள்கையின்கீழ் ஊக்கத்தொகைக்கு தகுதியுடையவை ஆகின்றன.

5. புது தில்லி சர்வதேச நடுவர் மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. ஹேமந்த் குப்தா

ஆ. A K சிக்ரி

இ. V V இரமணா

ஈ. இரஞ்சன் கோகோய்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. ஹேமந்த் குப்தா

  • உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹேமந்த் குப்தா, புது தில்லி சர்வதேச நடுவர் மன்றத்தின் (NDIAC) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். NDIAC தலைவராக ஓய்வுற்ற நீதிபதி ஹேமந்த் குப்தாவையும் பகுதிநேர உறுப்பினர்களாக கணேஷ் சந்துரு மற்றும் அனந்த் விஜய் பாலி ஆகியோரையும் நியமிக்க அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

6. ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியால், ‘2022ஆம் ஆண்டின் சொல்’ எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘சொல்’ எது?

அ. I Stand With

ஆ. Goblin Mode

இ. Gaslighting

ஈ. Moonlighting

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. Goblin Mode

  • ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி அண்மையில் ‘2022ஆம் ஆண்டின் சொல்’ என ‘Goblin Mode’ஐ அறிவித்தது. இந்தச் சொல் பொது வாக்கெடுப்பின்மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக பிரஸ்ஸின்படி, ‘பொதுவான சமூக நெறிகளுக்குக் கட்டுப்படாத தன்னலம் மேலோங்கும் ஒரு வகை நடத்தை’ என்று பொருள்படும் விதத்தில் ‘Goblin Mode’ என்ற சொல் அமைந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சமூக வலைதளங்களில் பரவலாக இந்தச் சொல் கையாளப்பட்டது.

7. சர்வதேச உள்நாட்டு வானூர்தி போக்குவரத்து அமைப்பின் (ICAO) உலகளாவிய வானூர்தி போக்குவரத்து பாதுகாப்புத் தரவரிசையில் இந்தியா அடைந்துள்ள தரநிலை யாது?

அ. 48

ஆ. 52

இ. 75

ஈ. 105

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. 48

  • சர்வதேச உள்நாட்டு வானூர்தி போக்குவரத்து அமைப்பின் (ICAO) உலகளாவிய வானூர்தி போக்குவரத்து தர வரிசையில் இந்தியா 48ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய வானூர்தி போக்குவரத்துப் பாதுகாப்புத்துறை இதுவரை இல்லாத அளவுக்கு 85.49% மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. கடந்த 2018இல் இந்தியா 102ஆம் இடத்தில் இருந்தது. இந்தத் தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடத்திலும், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் தென் கொரியா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

8. ‘12ஆவது உலக ஹிந்தி மாநாட்டை’ நடத்தும் நாடு எது?

அ. இத்தாலி

ஆ. ஆஸ்திரேலியா

இ. இஸ்ரேல்

ஈ. பிஜி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. பிஜி

  • 12ஆவது உலக ஹிந்தி மாநாடானது எதிர்வரும் 2023 பிப்ரவரியில் பிஜியில் பிஜி அரசாங்கத்துடன் இணைந்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் நடத்தப்படவுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, “Hindi: From Traditional Knowledge to Artificial Intelligence” என்பது இந்த மாநாட்டின் முதன்மை கருப்பொருளாக இருக்கும். இதுவரை பதினொரு உலக ஹிந்தி மாநாடுகள் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டுள்ளன.

9. இந்தியாவில் முதன்முறையாக கீழ்க்காணும் எந்த ஆடவர் கிரிக்கெட் போட்டியில் பெண்கள் நடுவர்களாக விளங்கவுள்ளார்கள்?

அ. இரஞ்சிக் கோப்பை

ஆ. துலீப் கோப்பை

இ. விஜய் ஹசாரே கோப்பை

ஈ. தியோதர் கோப்பை

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. இரஞ்சிக் கோப்பை

  • இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக இந்தப் பருவத்தில் இரஞ்சிக் கோப்பையில் மூன்று பெண்கள் நடுவர்களாக செயல்படவுள்ளனர். பிருந்தா இரதி, ஜனனி நாராயண் மற்றும் காயத்ரி வேணுகோபாலன் ஆகியோர் இரஞ்சிக் கோப்பையில் நடுவர்களாக செயல்படுவார்கள். ஆடவர் கிரிக்கெட் போட்டிகளில் நடுவர்களாக பெண்கள் செயல்படுவது இந்திய கிரிக்கெட்டுக்கு இதுவே முதன்முறையாகும். நடுவர்களில் ஒருவரான காயத்ரி வேணு கோபாலன் கடந்த காலங்களில் இரஞ்சிக் கோப்பையில் நான்காவது நடுவராக பணியாற்றியுள்ளார்.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற மனிஷா இராமதாஸ் என்பவருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. மட்டைப்பந்து

ஆ. பூப்பந்து

இ. பளு தூக்குதல்

ஈ. வில்வித்தை

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. பூப்பந்து

  • உலக பூப்பந்து சம்மேளனத்தின், ‘ஆண்டின் சிறந்த பெண் பாரா பூப்பந்து வீராங்கனையாக’ இந்திய வீராங்கனை மனிஷா இராமதாஸ் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். SU5 பிரிவில் உலக சாம்பியனான மனிஷா இராமதாஸ், கடந்த 2022ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 11 தங்கம் மற்றும் ஐந்து வெண்கலப்பதக்கங்களை வென்றார். ‘ஆண்டின் சிறந்த ஆண் பாரா பூப்பந்து வீரராக’ WH2 உலக சாம்பியனும் நடப்பு பாராலிம்பிக் சாம்பியனுமான டெய்கி கஜிவாரா தேர்வுசெய்யப்பட்டுள்ளார். விக்டர் ஆக்செல்சென் மற்றும் ஜெங் சி வெய்/ஹுவாங் யா கியோங் ஆகியோர், ‘ஆண்டின் சிறந்த வீரர்’ விருதுகளை வென்றனர்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இராஷ்டிரிய கோகுல் மிஷன் உள்நாட்டு மாட்டினங்களின் மேம்பாடு மற்றும் பாதுகாப்புக்கு வழிவகுக்கிறது.

கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, உள்நாட்டு மாடுகளின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பிற்காக ராஷ்ட்ரிய கோகுல் இயக்கத்தை கடந்த 2014 டிசம்பர் முதல் செயல்படுத்தி வருகிறது. தேவைக்கேற்ப பால் உற்பத்தி மற்றும் மாடுகளின் பாலுற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கு இத்திட்டம் வகைசெய்கிறது.  நாட்டின் கிராமப்புற உழவர்களுக்கு வருமானம் கிடைக்கவும் இது வழிவகுக்கிறது.

`2400 கோடி ஒதுக்கீட்டில் கால்நடைப்பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் திருத்தப்பட்ட மற்றும் சீரமைக்கப்பட்ட திட்டத்தின்கீழ் இந்த இயக்கம் தொடரப்படுகிறது. இராஷ்ட்ரிய கோகுல் இயக்கத்தின்கீழ், நாடுதழுவிய செயற்கை கருவூட்டல் திட்டம்பற்றிய தகவல்கள் இணையதளத்தில் விலங்கு உற்பத்தி மற்றும் ஆரோக்கிய வலையமைப்பு தரவுத்தளத்தில் பதிவேற்றப்பட்டு கன்று பிறக்கும் வரை பின்பற்றப்படுகிறது.

2. தமிழ்நாட்டில் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சாதிகளை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு வகைசெய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சாதிகளை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு வகைசெய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மக்களவையில் 15.12.2022 அன்று நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த அரசியல் சாசன திருத்த சட்டம், 22.12.2022 அன்று மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேறியது. இதையடுத்து பழங்குடியினர் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமுதாயத்தினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதேபோல கர்நாடக மாநிலத்தில் பெட்டா – குருபா, உத்தர பிரதேசத்தின் துரியா, நாயக், ஓஜா, பத்தாரி, ராஜ்கோண்ட் ஆகிய சாதியினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான இரண்டு மசோதாக்களும் இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன.

3. ‘காலா பாணி’ நாவலுக்கு ‘சாகித்திய அகாதெமி’ விருது.

காளையார்கோவில் போரை முன்வைத்து எழுத்தாளர் மு. இராஜேந்திரன் எழுதிய ‘காலா பாணி’ நாவலுக்கு ‘சாகித்திய அகாதெமி’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1801ஆம் ஆண்டு 6 மாதங்கள் நடைபெற்ற காளையார்கோவில் போரை முன்வைத்து எழுதப்பட்ட நாவல் ‘காலா பாணி’.

சொந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு முகந்தெரியாத தீவில் இறக்கிவிடப்படுவதுதான் ‘காலா பாணி’. எழுத்தாளர் மு. இராஜேந்திரன் எழுதிய ‘காலா பாணி’, நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை.

எழுத்தாளர் மு. இராஜேந்திரன்.

எழுத்தாளர் டாக்டர் மு. இராஜேந்திரன் மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு அருகே வடகரை கிராமத்தில் பிறந்தவர். முதுகலை ஆங்கில இலக்கியமும் சட்டமும் படித்தவர். ஐஏஎஸ் தேர்வில் வரலாற்றை ஒரு பாடமாக எடுத்துப் படித்த போது, வரலாறுமீதே அவரது ஆர்வம் திரும்பியது.

1998ஆம் ஆண்டு நடைபெற்ற தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக முதல் பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் பெற்ற முதல் மாணவர்.  இவரெழுதிய பிற நூல்கள், சோழர் காலச்செப்பேடுகள், பாண்டியர் காலச்செப்பேடுகள், சேரர் காலச் செப்பேடுகள், பல்லவர் காலச்செப்பேடுகள், சட்ட வல்லுநர் திருவள்ளுவர், வடகரை – ஒரு வம்சத்தின் வரலாறு (தன் வரலாற்று நாவல்), பாதாளி, 1801 முதலியவை.

‘காலா பாணி’ நாவல்.

சொந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு முகந்தெரியாத தீவில் இறக்கிவிடப்படுவதுதான் ‘காலா பாணி’. நூலாசிரியர் இராஜேந்திரனின் இந்த, “காலா பாணி”, நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை.

1801இல் சுமார் ஆறு மாதங்கள் நடந்த காளையார்கோவில் போரை நாட்டின் முதல் சுதந்திரப்போர் என நிறுவ முடிந்தாலும்கூட இன்னமும் உரிய இடம் அல்லது பெருமை அதற்கு வழங்கப்படவில்லை.

காளையார்கோவில் போரை முன்வைத்து ஆசிரியர் எழுதிய, ‘1801’ என்ற நாவலின் தொடர்ச்சி அல்லது அதன் ஒரு பகுதிதான், ‘காலா பாணி’ நாவல் என்று கொள்ளலாம். இருநூறு ஆண்டுகளுக்கு முன் சிவகங்கை மன்னரும், நாட்டின் முதல் புரட்சித்திலகம் வேலு நாச்சியாரின் மருமகனுமான வேங்கை பெரிய உடையனத்தேவன் மற்றும் அவர் கூட்டாளிகள் 72 பேர் நாடு கடத்தப்பட்ட கதைதான் இந்த நாவல்.

பெரிய உடையனத்தேவன் கைது செய்யப்பட்டதில் தொடங்கி, திருமயம் கோட்டையிலிருந்து தூத்துக்குடிக்குக் கொண்டு செல்லப்பட்டு, துறைமுகத்தில் கப்பலேற்றி, பினாங்கிற்குக் கடத்தப்பட்டு, அங்கே அவர்கள் மாண்ட துயரக் கதையைச் சிறப்பாக எழுதிச்செல்கிறார் ஆசிரியர். வேங்கை உடையனத் தேவனும் குழுவும் நாடு கடத்தப்பட, அவருடைய உறவுகள் படும்பாடுகள் எழுதப்பட்டுள்ள விதம் சிறப்பு.

கடலுக்கு அப்பால் நடந்த கதையின் சில பகுதிகள் மட்டும் வரலாறும் புனைவுமாகக் கலந்திருக்கும். நாவலாசிரியர் நாவல் சம்பந்தப்பட்ட வரலாற்றிடங்களை எல்லாம் நேரில் சென்று பார்த்து நாவலைச் செறிவூட்டியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாவல் செல்லும் தடத்திலேயே அன்றைய தமிழ்நாட்டின், தமிழர்களின் வாழ்க்கைச்சூழல், பிரிட்டிஷாரின் நடத்தைகள் மற்றும் அணுகுமுறைகள் எனப் பிறவற்றையும் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர்.

4. கே. நல்லதம்பிக்கு ‘சிறந்த மொழிபெயர்ப்பாளர்’ விருது.

‘சாகித்திய அகாதெமி’யின் ‘சிறந்த மொழிபெயர்ப்பாளர்’ விருது எழுத்தாளர் கே. நல்லதம்பிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான, ‘சாகித்திய அகாதெமி’ விருதுகள் தில்லியில் அறிவிக்கப்பட்டன. இதில், ‘சிறந்த மொழி பெயர்ப்பாளர்’ விருது நேமிசந்த்ரா கன்னடத்தில் எழுதிய, ‘யாத் வஷேம்’ என்னும் நூலின் தமிழ்மொழியாக்கத்திற்கு கே. நல்லதம்பிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான கே. நல்லதம்பி பெங்களூருவில் வசித்து வருகிறார். கன்னடத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து கன்னடத்திற்கும் பல நூல்களை அவர் மொழிபெயர்த்துள்ளார்.

23rd December 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Which Union Ministry organizes the AI Pe Charcha (AI Dialogue) event?

A. Ministry of Electronics and IT

B. Ministry of Finance

C. Ministry of Science and Technology

D. Ministry of Corporate Affairs

Answer & Explanation

Answer: A. Ministry of Electronics and IT

  • The National e–Governance Division (NeGD) under the Ministry of Electronics and IT (MeitY) organized an AI Pe Charcha (AI Dialogue). The panelists discussed the importance and approaches for enabling access to quality datasets for AI. The AI Pe Charcha series has been initiated as a part of Responsible AI for Social Empowerment (RAISE), India’s first global AI summit organized by MeitY in 2020.

2. Which Union Ministry launched the Government e–Marketplace services (GeM) through Common Service Centres (CSC) and India Post?

A. Ministry of Commerce and Industry

B. Ministry of Home Affairs

C. Ministry of MSME

D. Ministry of Finance

Answer & Explanation

Answer: A. Ministry of Commerce and Industry

  • Commerce and Industry Minister Piyush Goyal rolled out Government e–Marketplace services (GeM) through Common Service Centres (CSC) and India Post, Department of Post. The Minister also launched the Government e–Marketplace Seller Samvaad Booklet, which is a compilation of testimonials from sellers and service providers based on their experience on GeM portal.

3. Rock–cut Sculptures and Reliefs of the Unakoti, which was added in the UNESCO’s tentative list of World Heritage Sites, are in which state?

A. Gujarat

B. Tripura

C. Telangana

D. Odisha

Answer & Explanation

Answer: B. Tripura

  • Two heritage sites from Gujarat — the Sun Temple at Modhera and Prime Minister Narendra Modi’s hometown Vadnagar, a historic town were added to the tentative list of UNESCO World Heritage Sites. Rock–cut Sculptures and Reliefs of the Unakoti, Tripura were also added to the tentative list.

4. Which state/UT has recently granted Industry status to its tourism sector?

A. Gujarat

B. Assam

C. West Bengal

D. Arunachal Pradesh

Answer & Explanation

Answer: B. Assam

  • The Assam cabinet has approved the proposal for grant of industry status to the tourism sector in the state, to boost investments and generate employment. With this grant, restaurants, cafeterias, health clubs, spas and wellness centers, among others, in the state are eligible for incentives under the industrial policy.

5. Who has been appointed as the head of New Delhi International Arbitration Centre?

A. Hemant Gupta

B. A K Sikri

C. V V Ramana

D. Ranjan Gogoi

Answer & Explanation

Answer: A. Hemant Gupta

  • Former Supreme Court judge Hemant Gupta has been appointed as the chairperson of New Delhi International Arbitration Centre (NDIAC). The Appointments Committee of the Cabinet approved the appointment of retired Justice Hemant Gupta as NDIAC chairperson and Ganesh Chandru and Anant Vijay Palli as its part–time members.

6. Which word has been chosen as the word of the year 2022 by the Oxford English Dictionary?

A. I Stand With

B. Goblin Mode

C. Gaslighting

D. Moonlighting

Answer & Explanation

Answer: B. Goblin Mode

  • The Oxford English Dictionary recently unveiled the word of the year 2022 as ‘Goblin mode’, which was selected by public votes. According to Oxford University Press (OUP), it means ‘a type of behaviour which is unapologetically self–indulgent, lazy, slovenly, or greedy, typically in a way that rejects social norms or expectations.’ The term was first used in 2009 but went viral on social media earlier this year.

7. What is the rank of India in the global aviation safety ranking by the International Civil Aviation Organization (ICAO)?

A. 48

B. 52

C. 75

D. 105

Answer & Explanation

Answer: A. 48

  • India has jumped to the 48th position in the global aviation safety ranking by the International Civil Aviation Organization (ICAO). The Indian aviation safety has scored the highest ever score of 85.49 per cent. In 2018, India was at the 102nd rank. In the ranking, Singapore is at the top, followed by the UAE and South Korea at the second and third positions.

8. Which country is the host of the ‘12th World Hindi Conference’?

A. Italy

B. Australia

C. Israel

D. Fiji

Answer & Explanation

Answer: D. Fiji

  • The ‘12th World Hindi Conference’ is being organized by the Ministry of External Affairs in collaboration with the Government of Fiji in February 2023 in Fiji. According to the Ministry of External Affairs, the main theme of the Conference is “Hindi: From Traditional Knowledge to Artificial Intelligence”. Eleven World Hindi Conferences have been organized in various countries, so far.

9. Female umpires will officiate in which men’s cricket tournament, for the first time in India?

A. Ranji Trophy

B. Duleep Trophy

C. Vijay Hazare Trophy

D. Deodhar Trophy

Answer & Explanation

Answer: A. Ranji Trophy

  • Three Female umpires will officiate in Ranji Trophy this season, for the first time in Indian cricket history. Vrinda Rathi, Janani Narayan and Gayathri Venugopalan will officiate in the Ranji Trophy. It will be the first for Indian cricket when female umpires are asked to officiate in the men’s cricket matches. One of the umpires Gayathri has served as a fourth umpire in Ranji Trophy in the past.

10. Manisha Ramadass, who was seen in the news, plays which sports?

A. Cricket

B. Badminton

C. Weight Lifting

D. Archery

Answer & Explanation

Answer: B. Badminton

  • Indian shuttler Manisha Ramadass has been named the Badminton World Federation (BWF) female Para–Badminton Player of the Year. The World Champion in the SU5 section, Manisha Ramadass won 11 gold and five bronze medals overall in 2022. BWF Male Para–Badminton Player of the Year went to WH2 world champion and reigning Paralympic champion Daiki Kajiwara. Viktor Axelsen and Zheng Si Wei / Huang Ya Qiong won the BWF Player of the Year Awards.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!