TnpscTnpsc Current Affairs

22nd November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

22nd November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 22nd November 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. அண்மையில் காலமான மன்னு பண்டாரியுடன் தொடர்புடைய துறை எது?

அ) விளையாட்டு

ஆ) இலக்கியம் 

இ) அரசியல்

ஈ) வணிகம்

  • ஹிந்தி இலக்கியத்தில் புகழ்பெற்ற எழுத்தாளரான மன்னு பண்டாரி, அண்மையில் தனது 90ஆவது வயதில் காலமானார். அவர் ‘மகாபோஜ்’ மற்றும் ‘ஆப்கா பூந்தி’ போன்ற உன்னதமான படைப்புகளை எழுதியவர். அவர் தனது சுயசரிதையை – ‘ஏக் கஹானி யே’ என்ற தலைப்பில் வெளியிட்டார். வியாஸ் சம்மன் உட்பட பல்வேறு இலக்கிய விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

2. இ-ஷ்ரம் இணையதளத்தில் உள்ள தரவுகளின்படி, முறைசாரா தொழிலாளர்களிடமிருந்து எந்தத் தொழில்துறைக்கு அதிக பதிவுகள் பெறப்பட்டுள்ளன?

அ) கட்டுமானம்

ஆ) வேளாண்மை 

இ) வீட்டுப்பணியாட்கள்

ஈ) மேற்கூறிய எதுவும் இல்லை

  • இ-ஷ்ரம் இணையதளம் என்பது ஆதாருடன் இணைக்கப்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களின் நாட்டின் முதல் மையப்படுத்தப்பட்ட தரவுத்தளம் ஆகும். தொழில்வாரியான பதிவுத்தரவுகளில், உழவுத்துறையில் (53.6%) அதிகப்பட்சப் பதிவுகள் காணப்பட்டுள்ளன.
  • அதைத்தொடர்ந்து கட்டுமானப்பிரிவும் (12.2%) வீட்டுப் பணியாளர்கள் (8.71%) பிரிவும் உள்ளன. இந்தத் தரவுத்தளத்தில் உள்ள 7.86 கோடி பதிவுகளில், 40.5 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், 27.4 சதவீதம் பொதுப்பிரிவினரும், 23.7 சதவீதம் பட்டியல் சாதியினரும், 8.3 சதவீதம் பழங்குடியினரும் உள்ளனர்.

3. இந்தியப்பெருங்கடல் விளிம்பில் உள்ள நாடுகளின் சங்கத்தின் (IORA) வருடாந்திர அமைச்சர்கள் கூட்டம் சமீபத்தில் எந்த நகரத்தில் நடைபெற்றது?

அ) புது தில்லி

ஆ) டாக்கா 

இ) கொழும்பு

ஈ) மாலே

  • இந்தியப்பெருங்கடல் விளிம்பில் உள்ள நாடுகளின் சங்கத்தின் (IORA) 21ஆவது வருடாந்திர அமைச்சர்கள் கூட்டம் டாக்காவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியா மெய்நிகராக பங்கேற்றது. இக்கூட்டத்தின் முடிவில் டாக்கா அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • IORA’இன் தலைமைப் பொறுப்பை ஏற்றதற்காக வங்காளதேசத்துக்கு இந்தியா வாழ்த்து தெரிவித்ததோடு, IORA’இன் புதிய பேச்சுவார்த்தை கூட்டாளராக ரஷ்ய கூட்டமைப்பையும் வரவேற்றது. IORA’இன் அடுத்த பொதுச்செயலராக தூதர் சல்மான் அல்-பாரிசி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

4. பிரதமர் கிராம் சதக் யோஜனா திட்டத்தைச் செயல்படுத்துகிற மத்திய அமைச்சகம் எது?

அ) வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

ஆ) ஊரக வளர்ச்சி அமைச்சகம் 

இ) வேளாண்மை & விவசாயிகள் நல அமைச்சகம்

ஈ) பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

  • `33,822 கோடி செலவில் பிரதமர் கிராம் சதக் யோஜனா-I மற்றும் II’ஐ 2022 செப்டம்பர் வரை தொடர பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஊரக வளர்ச்சி அமைச்சகம் PMGSY திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் உட்பட பழங்குடியினர் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் 32,152 கிமீ சாலைகள் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான சாலை இணைப்புத் திட்டத்தை 2023 மார்ச் வரை தொடரவும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

5. சமீப செய்திகளில் இடம்பெற்ற Universal Service Obligation Fund உடன் தொடர்புடைய துறை எது?

அ) நிலக்கரிச்சுரங்கம்

ஆ) தொலைத்தொடர்பு 

இ) ஆட்டோமொபைல்

ஈ) ஜவுளி

  • இந்திய தந்தி (திருத்தம்) சட்டம், 2003 யுனிவர்சல் சர்வீஸ் ஒப்லிகேஷன் ஃபண்டுக்கு சட்டபூர்வமான தகுதியை வழங்கியுள்ளது. இது அனைத்து தொலைத்தொடர்பு நிதி ஆபரேட்டர்களிடமிருந்து அவர்களின் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயில் வசூலிக்கப்படும் வரியால் உருவாக்கப்பட்ட நிதிகளின் தொகுப்பாகும்.
  • யுனிவர்சல் சர்வீஸ் ஒப்லிகேஷன் ஃபண்ட் மூலம் 5 மாநிலங்களின் 44 முன்னேற விரும்பும் மாவட்டங்களில் உள்ள 7,287 உள்ளடக்கப்படாத கிராமங்களில் மொபைல் சேவை வழங்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆந்திரம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகியவை அவ்வைந்து மாநிலங்களாம்.

6. எந்த மத்திய அமைச்சகத்தின்கீழ் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளத்துறை செயல்படுகிறது?

அ) உழவு மற்றும் உழவர்கள் நல அமைச்சகம்

ஆ) மீன்பிடி, கால்நடை பராமரிப்பு & பால்வள அமைச்சகம் 

இ) உணவு பதப்படுத்தும் தொழிலகங்கள் அமைச்சகம்

ஈ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

  • கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை (DAHD) மற்றும் உணவு பதப்படுத்தும் தொழிலகங்கள் அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. DAHD மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படுகிறது.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் பல்வேறு திட்டங்களை ஒன்றிணைப்பதன்மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு நன்மைகளை நீட்டிக்க உதவும்.

7. உலக அளவில் காலணி மற்றும் தோல் ஆடைகள் உற்பத்தியில் இந்தியாவின் தரநிலை என்ன?

அ) முதலாவது

ஆ) இரண்டாவது 

இ) நான்காவது

ஈ) பத்தாவது

  • உலக அளவில் காலணி மற்றும் தோல் ஆடை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 2020-21’இல் (ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை) தோல், காலணி மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி $3.67 பில்லியன் டாலர்களை எட்டியது. தோல் ஏற்றுமதி கவுன்சிலின் தேசிய ஏற்றுமதி சிறப்பு விருதுகள் வழங்கும் விழாவில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உரையாற்றினார்.

8. ஐநா பொதுச்சபையானது 2021ஆம் ஆண்டை எந்த ஆண்டாக அறிவித்துள்ளது?

அ) பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச ஆண்டு

ஆ) சர்வதேச சுகாதார ஆண்டு

இ) கோவிட்-ஐ எதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச ஆண்டு

ஈ) பழங்கள் மற்றும் காய்கறிகளின் சர்வதேச ஆண்டு 

  • ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை 2021ஆம் ஆண்டை பழங்கள் மற்றும் காய்கறிகளின் சர்வதேச ஆண்டாக அறிவித்துள்ளது. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) இந்த ஆண்டைக் கொண்டாடுவதற்கான முன்னணி நிறுவனமாக உள்ளது.
  • இந்த ஆண்டு மனித ஊட்டச்சத்திலும், உணவுப் பாதுகாப்பிலும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் பங்கு பற்றிய விழிப்புணர்வை பரப்ப முயல்கிறது.

9. “Mission 2070: A Green New Deal for a Net Zero India” என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ) FAO

ஆ) WEF 

இ) IMF

ஈ) NITI ஆயோக்

  • உலகப்பொருளாதார மன்றம் “Mission 2070: A Green New Deal for a Net Zero India” என்ற தலைப்பில் ஓர் ஆய்வு அறிக்கையை Kearney மற்றும் Observer Research Foundation உடன் இணைந்து வெளியிட்டது.
  • ஓர் அண்மைய ஆராய்ச்சி அறிக்கையில், உலகப் பொருளாதார மன்றம், இந்தியாவுக்கான பசுமை புதிய ஒப்பந்தம் 2070’க்குள் $15 டிரில்லியன் பொருளாதார வாய்ப்பைக் கொண்டு வரக்கூடும் எனக் காட்டியுள்ளது.

10. இந்தியாவில் ‘தேசிய சட்ட சேவைகள் நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) 9 நவம்பர் 

ஆ) 11 நவம்பர்

இ) 13 நவம்பர்

ஈ) 15 நவம்பர்

  • ‘தேசிய சட்ட சேவைகள் நாள்’ ஆண்டுதோறும் நவம்பர் 9 அன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இது சட்ட சேவைகள் ஆணைய சட்டம் இயற்றப்பட்டதை நினைவுகூருவதோடு சட்டம் தொடர்பான விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியாவில் ஒரே மாதிரியான முறையில், “சட்ட உதவி திட்டங்களுக்கு சட்டப்பூர்வ அடிப்படையை” வழங்குவதற்காக 1987ஆம் ஆண்டு சட்ட சேவைகள் ஆணைய சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் 1995 நவ.9 அன்று நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டத்தின் நோக்கம், நாட்டில் விளிம்புநிலை சமூக-பொருளாதார சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கு தகுதியான மற்றும் இலவச சட்ட உதவிகளை வழங்குவதாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மாற்றுத்திறனாளி வீரர்களின் மறுவாழ்வுக்காக நிதி திரட்ட 4,500 கிலோ மீட்டர் ஓடும் 61 வயதான மாரத்தான் வீரர்

மகாராஷ்டிராவில் உள்ள பழங்குடியினர் பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கும் மாற்றுத் திறனாளி ராணுவ வீரர்களின் மறுவாழ்வுக்கு ஆதரவளிப்பதற்கும் நிதி திரட்டுவதற்காக 61 வயதான அஜ்வானி குமார் மாரத்தான் ஓட்டத்தை தொடங்கியுள்ளார்.

கடந்த 19-ம் தேதி காஷ்மீரின் பாட்னிடாப்பில் இருந்து ஓட்டத்தை தொடங்கிய அஜ்வானி குமார், அடுத்த ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி கன்னியாகுமரியில் நிறைவு செய்கிறார். 4,444 கி.மீ. தூரத்தை 77 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளார். அஜ்வானி குமார், ஓட்டப்பந்தய வீரர்களின் குழுவால் தொடங்கப்பட்ட எஃப்ஏபி அறக்கட்டளையின் நிறுவனர்-இயக்குநர் ஆவார். இந்தக் குழுவினர் ஓடுவதில் உள்ள ஆர்வத்தையும் சமூகத்திற்கு உதவ வேண்டும் என்ற விருப்பத்தையும் ஒருங்கிணைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அஜ்வானி குமார் சமூக காரணங்களுக்காக பல நகரங்களுக்கு இடையேயான மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான மராத்தான்களை நடத்தியுள்ளார். இதன்மூலம் திரட்டப்பட்ட நிதியை ஏழைகளுக்கு வழங்கி வருகிறார்.

இதுகுறித்து அஜ்வானி குமார் கூறும்போது, “நாங்கள் சில காரணங்களுக்காக ஓடுகிறோம். 100 சதவீத பணத்தை பெறவேண்டும் என்பதே எங்கள் முக்கிய நோக்கம். இப்போது நாங்கள் பழங்குடியினர் பள்ளிகளை மேம்படுத்த முயற்சிக்கிறோம். ஒரு குடிமகனாக, எங்கள் குழு ராணுவத்திற்கு ஏதாவது செய்ய விரும்புகிறது” என்றார்.

மாரத்தான் ஓட்டத்தை தொடங்கிய அஜ்வானி குமாரை, கார்கில் போர் நினைவுச்சின்னமான உதம்பூரில் முன்னாள் ராணுவ வீரர்கள் வரவேற்றனர்.

2. பாரா பாட்மிண்டனில் தங்கம் வென்றார் சுகந்த்

உகாண்டாவின் கம்பலா நகரில் பாரா பாட்மிண்டன் சர்வதேச போட்டி நடைபெற்று வந்தது. இந்தத் தொடரின் கடைசி நாளான நேற்று, ஆடவருக்கான எஸ்எல் 4 பிரிவு இறுதிச் சுற்றில் உலகத் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சுகந்த் கதம் சகநாட்டைச் சேர்ந்த நிலேஷ் பாலுவை எதிர்த்து விளையாடினார். இதில் சுகந்த் 21-16, 17-21, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

எஸ்எல் 3 பிரிவு இறுதிச் சுற்றில் டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் பிரமோத் பகத், சகநாட்டின் மனோஜ் சர்காரை எதிர்கொண்டார். இதில் பிரமோத் 19-21, 16-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத், மனோஜ் சர்கார் ஜோடி 21-10, 20-22, 15-21 என்ற செட் கணக்கில் சகாட்டின் மொகமது அர்வாஸ் அன்சாரி, தீப் ரன்ஜன் பிஸோயி ஜோடியிடம் தோல்வி கண்டு வெள்ளிப் பதக்கம் பெற்றது. எஸ்எல் 3, எஸ்யு 5 கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத், பாலக் ஜோஷி ஜோடி இறுதிச் சுற்றில் 19-21, 16-21 என்ற செட் கணக்கில் மற்றொரு இந்திய ஜோடியான ருத்திக் ரகுபதி, மானஷி கிரிசந்திரா ஜோஷியிடம் வீழ்ந்தது.

இந்தத் தொடரில் இந்தியா 16 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 47 பதக்கங்களை குவித்தது.

3. விவசாயிகள் ஸ்மார்ட்போன் வாங்க ரூ.1,500 நிதியுதவி: குஜராத் அரசு அறிவிப்பு

குஜராத்தில் உள்ள விவசாயிகள் ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக அம்மாநில அரசு ரூ.1,500 வரை நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.

இதன்படி, ஸ்மார்ட்போன் விலையில் 10 சதவீதம் அல்லது ரூ.1,500 இவற்றில் எது குறைவோ அந்த தொகை நிதியுதவியாக வழங்கப்படும். இதற்கான பிரத்யேக இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளும் இதில் பலனடையலாம். ஆனால், கூட்டாக விவசாயம் செய்பவர்களில், தலா ஒருவருக்கு மட்டுமே நிதியுதவி அளிக்கப்படும். ஸ்மார்ட்போனை தவிர, இயர்போன், பவர் பேங்க், சார்ஜர் போன்ற சாதனங்கள் வாங்க இத்திட்டம் பொருந்தாது.

விவசாயிகளின் விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், ஸ்மார்ட்போன் வாங்கிய ரசீதின் நகல், போனின் ஐ.எம்.இ.ஐ. எண், ரத்து செய்யப்பட்ட காசோலை ஆகியவற்றை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு நிதியுதவி அளிக்கப்படும்.

விவசாயிகளுக்கான நலத்திட்டங்களுக்கு விண்ணப்பித்தல், வானிலை தகவல்கள், பூச்சி மருந்து விவரங்கள், நவீன பண்ணை தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ள விவசாயிகள் ஸ்மார்ட்போன் வாங்குவது நல்லது என்று மாநில வேளாண்துறை தெரிவித்துள்ளது.

4. மீன்வளத்துறை ஏற்றுமதி இலக்கு `1 லட்சம் கோடி: மத்திய அமைச்சர் தகவல்

வளா்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் மீன் வளத் துறையில் ஏராளமாக உள்ளதாகவும் 2024-25-ம் ஆண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கை இத்துறை எட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் அமைச்சா் பா்ஷோத்தம் ரூபாலா கூறினாா்.

ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலக மீன்வள தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசிய அமைச்சா் ரூபாலா, ‘மாநிலங்கள் ஒன்றுக்கொன்று ஊக்கம் பெற்று கடல்சாா் துறையின் வளா்ச்சிக்கான வாய்ப்புகளை ஆராய வேண்டும். விவசாயிகள் கடன் அட்டை குறித்த விழிப்புணா்வு பெரிய அளவில் உருவாக வேண்டும். கடல்சாா் துறைக்கான அனைத்து ஆதரவையும் பிரதமா் நரேந்திர மோடி வழங்கி வருகிறாா். விவசாய கடன் அட்டை மீனவா்களுக்காக ஏற்கனவே நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விழிப்புணா்வை பெரிய அளவில் உருவாக்குவதற்கான மாபெரும் பிரசாரம் ஒன்றை அரசு விரைவில் தொடங்கும்’ என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் இணை அமைச்சா் எல்.முருகன் பேசியதாவது: மீன்வளத் துறைக்காக ஒரு தனி அமைச்சகத்தை பிரதமா் நரேந்திர மோடி உருவாக்கியதிலிருந்து குறுகிய காலத்திற்குள் இத்துறை மேம்படுத்தப்பட்டு, ஒரு லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்ஸ்ய சம்பதா யோஜனா எனும் திட்டத்தின் வாயிலாக மீன்வளத் துறைக்கு ரூ.20,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. கடற்பாசி விவசாயத்தின் மீதும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. மீனவ சமுதாயத்தை சோ்ந்த பெண்களுக்கு அதிகாரமளித்து இத்துறையில் தொழில்முனைதலை ஊக்குவிப்பதிலும் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது என்றாா்.

5. சா்வதேச பாரா பாட்மின்டன்: இந்தியாவுக்கு 47 பதக்கங்கள்

உகாண்டாவில் நடைபெற்ற சா்வதேச பாரா பாட்மின்டன் போட்டியில் இந்தியா 16 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என 47 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளது.

கடந்த 16-ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த இந்தப் போட்டியில் இந்திய போட்டியாளா்களே பிரதானமாக இருந்தனா்.

இதில், டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்றவரும், உலகின் முதல்நிலை வீரருமான பிரமோத் பகத் 3 வெள்ளிப் பதக்கங்கள் வென்றாா். அவா் தனிநபா் பிரிவிலும், ஆடவா் இரட்டையா் மற்றும் கலப்பு இரட்டையா் ஆகிய பிரிவுகளிலும் பதக்கம் வென்றுள்ளாா்.

ஆடவா் ஒற்றையா் எஸ்எல்3 பிரிவு இறுதிச் சுற்றில் பிரமோத் 19-21, 16-21 என்ற செட்களில் சக இந்தியரான மனோஜ் சா்காரிடம் தோல்வி கண்டாா். ஆடவா் இரட்டையா் பிரிவில் மனோஜுடன் இணைந்தே பிரமோத் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தாா்.

அந்தப் பிரிவில் பிரமோத்/மனோஜ் இணை 21-10, 20-22, 15-21 என்ற செட்களில் சக இந்திய ஜோடியான முகமது அா்வாஸ் அன்சாரி/தீப் ரஞ்சன் பிசோயீ இணையிடம் தங்கத்தை இழந்தது. பின்னா் கலப்பு இரட்டையா் எஸ்எல்3-எஸ்யு5 பிரிவில் பிரமோத்/பாலக் கோலி இணை 19-21, 16-21 என்ற செட்களில் மற்றொரு இந்திய ஜோடியான ருதிக் ரகுபதி/மானசி கிரிஷ் சந்திர ஜோஷி ஜோடியிடம் தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்றது.

வீராங்கனைகளில் பிரதானமானவரான பாலக் கோலி தனி நபா் மற்றும் மகளிா் இரட்டையா் பிரிவில் தங்கமும், கலப்பு இரட்டையரில் வெள்ளியும் வென்றாா். உலகின் 5-ஆம் நிலை வீரராக இருக்கும் சுகந்த் கடம் எஸ்எல்4 பிரிவில் 21-16, 17-21, 21-10 என்ற செட்களில் 38 நிமிஷங்களில் சக இந்தியரான நிலேஷ் பாலு கெய்க்வாட்டை வீழ்த்தி தங்கம் வென்றாா். சுகந்த் 2 ஆண்டுகளுக்குப் பிறகு சா்வதேச போட்டியில் தங்கம் வென்றிருக்கிறாா்.

1. Mannu Bhandari, who passed away recently, was associated with which field?

A) Sports

B) Literature 

C) Politics

D) Business

  • Mannu Bhandari a famous author in Hindi literature, passed away recently at the age of 90. She is the author of classic works such as ‘Mahabhoj’ and ‘Aapka Bunty’. She published her autobiography in the title – ‘Ek Kahani Yeh’. She received several prominent literary awards in the country including Vyas Samman.

2. As per the data on e–Shram portal, which occupation sector has seen the maximum registrations from informal workers?

A) Construction

B) Agriculture 

C) Domestic and household workers

D) None of the above

  • e–Shram portal is the country’s first centralised database of unorganised workers seeded with Aadhaar. The occupation–wise registration data shows the maximum registrations have been seen in the agriculture sector (53.6 percent), followed by construction (12.2 percent) and domestic and household workers (8.71 percent).
  • Of the over 7.86 crore registrations on the database, 40.5 percent belong to Other Backward Classes, 27.4 percent to the general category, 23.7 percent to the Scheduled Castes and 8.3 percent to the Scheduled Tribes.

3. The Annual Council of Ministers meeting of the Indian Ocean Rim Association (IORA) was recently held in which city?

A) New Delhi

B) Dhaka 

C) Colombo

D) Male

  • The 21st Annual Council of Ministers (COM) meeting of the Indian Ocean Rim Association (IORA) was held in a hybrid format in Dhaka. India virtually participated in the meeting. The Dhaka Communique was adopted at the end of the meeting.
  • India also congratulated Bangladesh for assuming the Chairship of IORA and welcomed the Russian Federation as the new Dialogue Partner of IORA. Ambassador Salman Al–Farisi has been selected as the next Secretary–General (SG) of IORA.

4. Which Union Ministry is implementing the Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY) scheme?

A) Ministry of Housing and Urban Affairs

B) Ministry of Rural Development 

C) Ministry of Agriculture and Farmers Welfare

D) Ministry of Panchayati Raj

  • The Cabinet Committee on Economic Affairs (CCEA) gave its approval for continuation of Pradhan Mantri Gram Sadak Yojana–I and II upto September 2022, at a cost of Rs 33,822 crore. Ministry of Rural Development is implementing the PMGSY scheme. The Cabinet approved the construction of 32,152 km of roads which are to be completed in tribal and backward areas, including those affected by left wing extremism. CCEA also approved continuation of Road Connectivity Project for Left Wing Extremism Affected Areas up to March, 2023.

5. Universal Service Obligation Fund (USOF), which is seen in the news sometimes, is associated with which sector?

A) Coal Mining

B) Telecommunication 

C) Automobile

D) Textiles

  • The Indian Telegraph (Amendment) Act, 2003 gave statutory status to the Universal Service Obligation Fund (USOF). It is the pool of funds generated by the Levy that is charged upon all the telecom fund operators on their Adjusted Gross Revenue (AGR).
  • Cabinet clears proposal for mobile services in 7,287 uncovered villages in 44 Aspirational Districts of 5 states by utilisation of Universal Service Obligation Fund (USOF). The five states are Andhra Pradesh, Chhattisgarh, Jharkhand, Maharashtra and Odisha.

6. Department of Animal husbandry and Dairying (DAHD) functions under which Union Ministry?

A) Ministry of Agriculture and Farmers Welfare

B) Ministry of Fisheries, Animal Husbandry & Dairying 

C) Ministry of Food Processing Industries

D) Ministry of Rural Development

  • An MoU was signed between the Department of Animal husbandry and Dairying (DAHD) and the Ministry of Food Processing Industry (MoFPI). DAHD functions under the aegis of Ministry of Fisheries, Animal Husbandry & Dairying.
  • This MoU will facilitate extension of benefits to dairy entrepreneurs and dairy industries through convergence of various schemes of Department of Animal Husbandry and Dairying.

7. What is the position of India in producing footwear and leather garments in the world?

A) First

B) Second 

C) Fourth

D) Tenth

  • India is the second largest producer of footwear and leather garments in the world. Exports of leather, footwear and leather products reached $3.67 billion during 2020–21 (April to Feb). Minister of Commerce and Industry Piyush Goyal addressed the National Export Excellence Awards presentation ceremony of the Council for Leather Exports (CLE).

8. The United Nations General Assembly has designated the year 2021 as?

A) International Year Against Terrorism

B) International Year of Health Care

C) International Year to fight COVID

D) International Year of Fruits and Vegetables 

  • The United Nations General Assembly has declared the year 2021 as the International Year of Fruits and Vegetables, with Food and Agriculture Organization (FAO) as the lead agency to celebrate this year, along with other relevant organizations.
  • This year seeks to spread awareness on the role played by fruits and vegetables in human nutrition, and in food security.

9. Which institution released the report titled “Mission 2070: A Green New Deal for a Net Zero India”?

A) FAO

B) WEF 

C) IMF

D) NITI Aayog

  • World Economic Forum released a research report titled “Mission 2070: A Green New Deal for a Net Zero India”, in collaboration with Kearney and Observer Research Foundation. In the latest research report, the World Economic Forum has highlighted that a Green New Deal for India could bring a $15 trillion economic opportunity by 2070.

10. When is the ‘National Legal Services Day’ observed in India?

A) 9 November 

B) 11 November

C) 13 November

D) 15 November

  • ‘National Legal Services Day’ is observed across the country annually on 9 November. It aims to commemorate the enactment of the Legal Services Authorities Act and to create awareness about the provisions related to the act. The Legal Services Authorities Act was enacted in 1987 to provide a “statutory base to legal aid programmes” in India on a uniform pattern.
  • The Act came into existence on 9 November 1995. The purpose of the Act is to provide competent and free legal aid to people who belonged to marginalised socio–economic communities in the country.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!