Tnpsc

22nd & 23rd August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

22nd & 23rd August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 22nd & 23rd August 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

22nd & 23rd August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. தலித் பந்து திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) தெலுங்கானா 

இ) மத்திய பிரதேசம்

ஈ) சத்தீஸ்கர்

  • தெலுங்கானா மாநிலத்தின் உசூர்நகர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள சலபள்ளி கிராமத்தில் தலித் பந்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்குவதன்மூலம் அவர்களின் வருமானம் ஈட்டும் செயல்பாட்டைத் தேர்வுசெய்வதற்காக தலா `10 இலட்சம் நிதியுதவியை வழங்கி முதலமைச்சர் கே சந்திரசேகர் ராவ் இத்திட்டத்தை தொடங்கிவைத்தார். மேலும், ஒரு தனி பாதுகாப்பு நிதியம் உருவாக்கப்படும். தலித் பந்து சமிதிகள், கிராமம் முதல் மாநில அளவில் பல்வேறு நிலைகளில் நிறுவப்படும். மேலும் அவற்றிடம், தலித் பாதுகாப்பு நிதியத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் ஒப்படைக்கப்படும்.

2. பிரதான் மந்திரி கதிசக்தி முன்னெடுப்பில் முதலீடு செய்யப்படும் தொகை எவ்வளவு?

அ) `150 இலட்சம் கோடி

ஆ) `300 இலட்சம் கோடி

இ) `200 இலட்சம் கோடி

ஈ) `100 இலட்சம் கோடி 

  • பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 15, 2021 அன்று `100 லட்சம் கோடி திட்ட மதிப்பீட்டில் பிரதான் மந்திரி கதிசக்தி முன்னெடுப்பை அறிவித்தார். இந்த முன்னெடுப்பு, இந்தியாவில் வாழும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இது உட்கட்டமைப்பின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும். இது புதிய எதிர்கால பொருளாதார மண்டலங்களின் சாத்தியக்கூறுகளையும் அதிகரிக்கிறது.

3. உலக நீரழிவுக்கு முந்தையநிலை நாளாக கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ) ஆகஸ்ட் 14 

ஆ) ஆகஸ்ட் 18

இ) ஆகஸ்ட் 21

ஈ) ஆகஸ்ட் 23

  • நீரழிவு நோயைப் பற்றிய விழிப்புணர்வை பரப்பவும், நீரழிவு நோயின் தாக்கத்தை சமன் செய்யவுமாக, முதல் உலகளாவிய நிகழ்வு, ஆகஸ்ட்.14 அன்று உலக நீரழிவுக்கு முந்தையநிலை நாளாக நடத்தப்பட்டது. 2021 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி ஆண்டுதோறும் ஆக.14ஆம் தேதி அன்று உலக நீரழிவுக்கு முந்தையநிலை நாள் கடைப்பிடிக்கப்படும். நீரழிவு நாளுக்கு 90 நாட்களுக்கு முன்னதாக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • நீரழிவு நோயின் முன்னேற்றத்தைத்தடுப்பதற்கு 90 நாட்கள் ஆகும். இந்தியாவில் வாழும் 9 கோடி மக்கள், நீரழிவுக்கு முந்தையநிலையுடன் வாழ்கின்றனர். இவர்களுள் கிட்டத்தட்ட 75 சதவீதத்தினர், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நீரழிவு நோயால் பீடிக்கப்படுவார்கள்.

4. ஆயுர்வேதத்தில் உலகின் முதல் உயிரிவங்கிஅமைக்கப்படவுள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ) உத்தரகாண்ட்

ஆ) உத்தர பிரதேசம்

இ) கோவா

ஈ) புது தில்லி 

  • மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனோவால் சமீபத்தில் உலகின் முதல் ஆயுர்வேத உயிரி வங்கி புது தில்லியில் அமைக்கப்படும் என்று அறிவித்தார். AIIA என்பது புது தில்லியில் உள்ள ஒரு பொது ஆயுர்வேத மருத்துவ மற்றும் ஆராய்ச்சிநிறுவனமாகும். இது ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி நிறுவனமாகும். இந்நிறுவனம், பல்வேறு ஆயுர்வேத துறைகளில் முதுகலை மற்றும் முனைவர் பட்ட படிப்புகளை வழங்குகிறது.

5. இந்தியா முழுவதும் உள்ள 20 தனியார் மருத்துவமனைகளால் மேற்கொள்ளப்படும் சுகாதார கேள்வி ஆய்வை (Health QUEST) தொடக்கி வைத்துள்ளவர் யார்?

அ) டாக்டர் கே சிவன் 

ஆ) டாக்டர் ஹர்ஷ் வர்தன்

இ) மன்சுக் எல் மாண்டவியா

ஈ) டாக்டர் பல்ராம் பார்கவா

  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) செயலாளரும் தலைவருமான டாக்டர் கே சிவன், இந்தியா முழுவதும் 20 தனியார் மருத்துவமனைகளால் மேற்கொள்ளப்படும் சுகாதார கேள்வி ஆய்வை (Health QUESTQuality Upgradation Enabled by Space Technology) முறையாகத் தொடங்கிவைத்தார். இந்த ஆய்வின் குறிக்கோள், மனிதத் தவறுகளை குறைப்பதும், மருத்துவமனைகளின் அவசர மற்றும் தீவிரச் சிகிச்சைப் பிரிவுகளில் சுழிய குறைபாடு மற்றும் தரமான சேவையை அடைவதும் ஆகும். இந்த ஆய்வு, ISRO’இன் தரநிலைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கேற்ப, நாட்டில் நிலவும் சுகாதார அமைப்பின் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

6. கீழ்காணும் எந்த இந்திய நகரத்தில், உலகின் முதல் நடமாடும் அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது?

அ) பெங்களூரு

ஆ) மும்பை

இ) கொல்கத்தா 

ஈ) சென்னை

  • கொல்கத்தாவின் டிராம்களுக்குள் அமைக்கப்பட்டுள்ள இந்த நடமாடும் அருங்காட்சியகத்தை, இந்தியா விடுதலை அடைந்து 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மேற்கு வங்க போக்குவரத்து மற்றும் வீட்டுவசதி அமைச்சர் பிர்ஹத் ஹக்கீமால் திறந்துவைத்தார். சுதந்திரப் போராட்டம், பிரிவினை மற்றும் 1947 நிகழ்வுகளில் மக்களின் ஒற்றுமை குறித்து இந்த அருங்காட்சியகம் விளக்குகிறது. இது, டிசம்பர் மாத இறுதி வரை எஸ்ப்ளனேடில் (மத்திய கொல்கத்தா) காட்சிக்கு வைக்கப்படும். ஜன.1 முதல் நகரின் மற்ற பகுதிகளுக்குச் செல்லும்.

7. AFC மகளிர் ஆசிய கோப்பை 2022’க்கு முன்னதாக இந்திய மகளிர் கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக தாமஸ் டென்னர்பி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிகழ்வை நடத்தும் நாடு எது?

அ) சீனா

ஆ) ஜப்பான்

இ) இந்தியா 

ஈ) தென் கொரியா

  • AFC மகளிர் ஆசிய கோப்பை இந்தியா – 2022’க்கு முன்னதாக, இந்திய மகளிர் கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக தாமஸ் டென்னெர்பி பொறுப்பேற்கிறார். AFC மகளிர் ஆசிய கோப்பை – 2022, ஜன.20-பிப்.6 வரை இந்தியாவால் நடத்தப்படவுள்ளது.
  • இந்தியாவின் U-17 உலகக்கோப்பை அணிக்கான பொறுப்பில் இருந்த டென்னர்பி, ஆசிய கோப்பை முடிந்தவுடன் அந்தப் பணிக்குத் திரும்புவார். 2022 AFC மகளிர் ஆசிய கோப்பை, AFC மகளிர் ஆசிய கோப்பையின் 20ஆவது பதிப்பாகும்.

8. அண்மையில், எந்நாட்டின் கடற்படையுடன் இணைந்து, இந்திய கடற்படை, தென்சீனக்கடலில் கூட்டுப்பயிற்சிகளை நடத்தியது?

அ) தாய்லாந்து

ஆ) ஜப்பான்

இ) கம்போடியா

ஈ) வியட்நாம் 

  • தென்சீனக்கடலில் இந்திய கடற்படை கப்பல்கள் பணியமர்த்தப்பட்டு வருவதன் தொடர்ச்சியாக, வியட்நாம் கடற்படையுடன் இருதரப்பு கூட்டு பயிற்சியில் 2021 ஆகஸ்ட் 18 அன்று இந்திய கடற்படை ஈடுபட்டது. இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கும், இந்திய-வியட்நாம் இராணுவ உறவுகளை வலுப்படுத்துவதற்கும் இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது.
  • போர் பயிற்சிகள், ஆயுத பயிற்சிகள் மற்றும் ஹெலிகாப்டர் செயல்பாடுகள் உள்ளிட்டவை கடல் பிரிவில் நடைபெற்றன. கடந்த பல வருடங்களாக இருகடற்படைகளுக்கிடையே நடந்துவரும் தொடர் உரையாடல்கள் அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்தியுள்ளன.

9. பேரிடர் மேலாண்மைத் துறையில் எந்த நாட்டுடன் இந்தியா கூட்டாளியாக, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?

அ) தென் கொரியா

ஆ) சுவிச்சர்லாந்து

இ) வங்காளதேசம் 

ஈ) நேபாளம்

  • பேரிடர் மேலாண்மை, மீட்பு மற்றும் பாதிப்பு குறைப்பு துறைகளில் ஒத்துழைப்புடன் செயல்பட இந்தியா, வங்கதேசம் இடையே கடந்த மார்ச் மாதம் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த ஒப்பந்தத்தால், இருதரப்பு பேரிடர் மேலாண்மை முறைகளால், இரு நாடுகளும் பயனடையும். பேரிடர் மேலாண்மை துறையில் தயார்நிலை, நடவடிக்கை, திறன் மேம்பாடு ஆகியவற்றை வலுப்படுத்த உதவும்.

10.எந்த ஆண்டுக்குள், ஏழைகளுக்கு, பல்வேறு திட்டங்களின் கீழ், வலுவூட்டப்பட்ட அரிசியை வழங்க இந்திய அரசு முடிவுசெய்துள்ளது?

அ) 2023

ஆ) 2022

இ) 2025

ஈ) 2024 

  • 2024ஆம் ஆண்டிற்குள் பல்வேறு திட்டங்களின்கீழ் ஏழைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டை தீர்க்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஏழைக்கும் ஊட்டச்சத்து வழங்குவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும். ஏழைப்பெண்கள் மற்றும் ஏழை குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாதது அவர்களின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது என்ற கருத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்திய சீன எல்லையில் 11,000 அடி உயரத்தில் மூலிகைப் பூங்கா

உத்தரகண்டில் இந்தியா-சீனா எல்லைப் பகுதிக்கு அருகே 11,000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள மூலிகைப் பூங்கா திறந்துவைக்கப்பட்டது. சமோலி மாவட்டத்தின் மனா கிராமமானது இந்திய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கடைசி கிராமமாகும். புகழ்பெற்ற பத்ரிநாத் கோயிலுக்கு அருகே இந்த கிராமம் அமைந்துள்ளது.

கடல்மட்டத்திலிருந்து சுமார் 11,000 அடி உயரத்தில் உள்ள அந்த கிராமத்தில் மூலிகைப் பூங்கா அமைக்கப்பட்டது. மத்திய அரசின் காடு வளா்த்தல் நிதித் திட்டத்தின் கீழ் உத்தரகண்ட் வனத் துறையால் இந்தப் பூங்கா அமைக்கப்பட்டது. நாட்டில் மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள மூலிகைப் பூங்கா இதுவாகும். அந்தப் பூங்காவானது சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இது குறித்து உத்தரகண்ட் வனத்துறையின் தலைமை பாதுகாவலா் சஞ்சீவ் சதுா்வேதி கூறுகையில், ‘‘மூலிகைப் பூங்கா 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இமயமலையின் உயரமான பகுதிகளில் காணப்படும் சுமாா் 40 மூலிகை இனங்கள் பூங்காவில் வளா்க்கப்பட்டுள்ளன.

அதில் பல்வேறு மூலிகை இனங்கள் அழியும் நிலையில் உள்ளவையாக சா்வதேச இயற்கைப் பாதுகாப்பு கூட்டமைப்பால் (ஐயுசிஎன்) அறிவிக்கப்பட்டவை. மருத்துவ குணங்கள் நிறைந்த பல்வேறு மூலிகைச் செடிகளும் பூங்காவில் வளா்க்கப்பட்டுள்ளன. பத்ரி துளசி, பத்ரி மரம், போஜ்பத்ரா மரம், ரித்தி, விருத்தி, ஜீவக், ரிஷ்பக், ககோலி, பிரம்மகமல், நீல்கமல், கூட் உள்ளிட்ட மூலிகைகளும் வளா்க்கப்பட்டுள்ளன’’ என்றாா்.

2. பருவநிலை மாற்றத்தால் இந்திய சிறாா்களுக்கு அதிக அச்சுறுத்தல்

பருவநிலை மாற்றத்தின் விளைவுகளால் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய தெற்காசிய நாடுகளைச் சோ்ந்த சிறாா்களுக்கு அதிக அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக யுனிசெஃப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தின் விளைவுகளால் சிறாா்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. அதையடுத்து, சிறாா்களுக்கான பருவநிலை அச்சுறுத்தல் குறியீட்டை அந்த அமைப்பு முதல் முறையாக வெளியிட்டது.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் புயல்கள், வெப்பக் காற்றுகள் உள்ளிட்டவற்றால் சிறாா்களின் சுகாதாரம், கல்வி, பாதுகாப்புக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அந்தக் குறியீடு வெளியிடப்பட்டுள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது. சிறாா்களுக்கு அதிக அச்சுறுத்தல் காணப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 26-ஆவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 14-ஆவது இடத்திலும், வங்கதேசம் 15-ஆவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 25-ஆவது இடத்திலும் உள்ளன. இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் (51), இலங்கை (61), பூடான் (111) ஆகியவை சிறாா்களுக்குக் குறைந்த அச்சுறுத்தல் காணப்படும் நாடுகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

வெள்ளம், காற்று மாசுபாடு ஆகியவற்றால் ஏற்படும் சமூக-பொருளாதார விளைவுகளால் பெண்களும் சிறாா்களும் அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ள 33 நாடுகளில் இந்தியாவையும் யுனிசெஃப் சோ்த்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் சுமாா் 60 கோடி இந்தியா்கள் தண்ணீா்த் தட்டுப்பாட்டை எதிா்கொள்வா் என்றும், உலகின் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக உயா்ந்தால், இந்தியாவில் வெள்ளப்பெருக்கு நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடனடி நடவடிக்கை அவசியம்: அறிக்கை தொடா்பாக யுனிசெஃப் அதிகாரிகள் கூறுகையில், ‘பருவநிலை மாற்றத்தின் விளைவுகளால் சிறாா் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுவா் என்பதை அறிந்து கொள்வதற்கும், அந்தப் பாதிப்புகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இந்த அறிக்கை உதவும்.

வறட்சி, வெள்ளம், காற்று மாசுபாடு ஆகிய பேரிடா்கள் தெற்காசியாவில் உள்ள லட்சக்கணக்கான சிறாா்களை வீடற்றவா்களாக மாற்றுவதோடு அவா்களின் பட்டினிக்கும் காரணமாக இருக்கும். கரோனா தொற்று பரவல் அந்த அச்சுறுத்தலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. சிறாரின் எதிா்காலத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்’ என்றனா்.

3. நாட்டின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின்திட்டம் தொடக்கம்

நாட்டின் மிகப்பெரிய மிதவை சூரிய சக்தி ஒளிமின் திட்டத்தை ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம், சிம்ஹாத்ரி அனல்மின் நிலையத்தின் நீா்த்தேக்கத்தில் தேசிய அனல்மின் கழகம் உருவாக்கியுள்ளது.

25 மெகாவாட் திறன் கொண்ட இந்தத் திட்டத்தை கடந்த 2018-ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. தேசிய அனல்மின் கழகத்தின் மண்டல நிா்வாக இயக்குநா் திரு சஞ்சய் மதன் இந்தத் திட்டத்தை சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். நீா்த்தேக்கத்தில் சுமாா் 75 ஏக்கா் பரப்பளவில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான சூரியசக்தி ஒளிமின்னழுத்த தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

சுமாா் 7,000 வீடுகளுக்கு ஒளியூட்டுவது மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 46,000 டன் கரியமில வாயுவின் பயன்பாட்டையும் இந்தத் திட்டம் குறைக்கும். மேலும் இதன் மூலம் ஆண்டிற்கு 1,364 மில்லியன் லிட்டா் தண்ணீா் சேமிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதன்மூலம் 6700 வீடுகளின் தண்ணீா் தேவை பூா்த்தி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. யு-20 உலக தடகள சாம்பியன்ஷிப் : நடைப் பந்தயத்தில் அமித் காத்ரிக்கு வெள்ளி

இருபது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-20) உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான 10,000 மீட்டா் நடைப் பந்தயத்தில் இந்தியாவின் அமித் காத்ரி (17) வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினாா். பந்தய இலக்கை அவா் 42 நிமிஷம் 17.94 விநாடிகளில் எட்டி 2-ஆம் இடம் பிடித்தாா். கென்யாவின் ஹெரிஸ்டோன் வன்யோனி (42:10.84) முதலிடமும், ஸ்பெயினின் பால் மெக்ராத் (42:26.11) 3-ஆம் இடமும் பிடித்தனா். முன்னதாக, ஃபெடரேஷன் கோப்பை ஜூனியா் தேசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றிருக்கும் அமித் காத்ரிக்கு, இது முதல் சா்வதேச போட்டியாகும். அந்த தேசிய சாம்பியன்ஷிப்பில் பந்தய இலக்கை 40 நிமிஷம் 40.97 விநாடிகளில் எட்டியதே அவரது தனிப்பட்ட ‘பெஸ்ட்’ ஆகும்.

இப்போட்டியில் இந்தியாவுக்கு இது 2-ஆவது பதக்கமாகும். முன்னதாக கலப்பு ரிலே 4*400 மீட்டா் ஓட்டத்தில் இந்தியாவுக்கு கடந்த புதன்கிழமை வெண்கலப் பதக்கம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

5. ஆக. 26 முதல் ‘மலபாா்’ கூட்டு கடற்படைப் பயிற்சி

நாற்கரக் கூட்டமைப்பு (க்வாட்) நாடுகளான இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவை பங்கேற்கும் ‘மலபாா்’ கூட்டு கடற்படைப் பயிற்சி வரும் 26-ஆம் தேதிமுதல் நடைபெறவுள்ளது. இந்தியா-அமெரிக்கா கடற்படைகள் பங்கேற்ற மலபாா் கூட்டுப் பயிற்சியானது கடந்த 1992-ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் நடைபெற்று வந்தது. கடந்த 2015-இல் இந்தப் பயிற்சியில் ஜப்பான் இணைந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற பயிற்சியில் ஆஸ்திரேலியா இணைந்தது. நடப்பாண்டுக்கான மலபாா் கூட்டு கடற்படைப் பயிற்சி அமெரிக்காவின் குவாம் தீவில் வரும் 26-ஆம் தேதிமுதல் 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் பயிற்சியில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடற்படைக் கப்பல்கள் பங்கேற்கின்றன.

பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய கடற்படைக் கப்பல்களான ஷிவாலிக், காட்மாட் ஆகியவை சனிக்கிழமை குவாம் தீவை அடைந்தன. கூட்டுப் பயிற்சி குறித்து இந்தியக் கடற்படையின் செய்தித் தொடா்பாளா் விவேக் மத்வால் கூறுகையில், ‘‘நாடுகளுக்கு இடையேயான இயங்கு தன்மையை மேம்படுத்தவும், சிறந்த செயல்முறைகளைக் கற்றுக் கொள்ளவும், கடல்சாா் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான நடைமுறைகளில் பரஸ்பர புரிதலை வளா்த்துக் கொள்ளவும் இந்தப் பயிற்சி உதவும்.

இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் போா்க் கப்பல்கள், நீா்மூழ்கிக் கப்பல்கள், ஹெலிகாப்டா்கள், தொலைதூர கடல்சாா் கண்காணிப்பு விமானம் ஆகியவை பயிற்சியில் பங்கேற்கவுள்ளன. கரோனா தொற்று பரவல் கட்டுப்பாடுகளுக்கு இடையேயும் இந்தப் பயிற்சிகள் நடைபெறுவதன் மூலம், கடல்சாா் பாதுகாப்பின்மீது ‘க்வாட்’ நாடுகள் கொண்டுள்ள உறுதித்தன்மை வெளிப்படுகிறது. தரை, ஆகாயம், நீா்ப்பகுதிகள், நீருக்கு அடியில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிப்பது தொடா்பான செயல்முறைப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. நீா்மூழ்கிக் கப்பல்கள், ஏவுகணைகளைத் தாக்கி அழித்தல் உள்ளிட்ட பயிற்சிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

பயிற்சியில் பங்கேற்கும் ஐஎன்எஸ் ஷிவாலிக், காட்மாட் ஆகியவற்றில் பல்வேறு ஆயுதங்களும் சென்சாா்களும் பொருத்தப்பட்டுள்ளன. ஹெலிகாப்டா்களை சுமந்து செல்லும் வசதி கொண்ட இந்த இரண்டு கப்பல்களும் இந்தியாவின் போா் கட்டமைப்புத் திறனை எடுத்துரைக்கும்’’ என்றாா். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் சூழலில், ‘க்வாட்’ கூட்டமைப்பு நாடுகளின் கூட்டு கடற்படைப் பயிற்சி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

6. உலக சம்ஸ்கிருத தினம்: பிரதமா் வாழ்த்து

உலக சமஸ்கிருத தினத்தை முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா். சமஸ்கிருத மொழியில் சுட்டுரையில் தமது வாழ்த்துகளை அவா் மக்களிடம் பகிா்ந்துள்ளாா். கடந்த 1969-ஆம் ஆண்டு முதல் உலக சம்ஸ்கிருத தினம் ஆகஸ்ட் 22-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த நாளில் அந்த மொழியை மேம்படுத்துவதற்கான கருத்தரங்குகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

7. உலக தடகளப் போட்டி: வெள்ளி வென்றாா் ஷைலி சிங்

20 வயதுக்குட்பட்டோா் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி மகளிா் நீளம் தாண்டுகலில் வெள்ளிப் பதக்கம் வென்றாா் இந்தியாவின் ஷைலி சிங். கென்ய தலைநகா் நைரோபியில் நடைபெறும் இப்போட்டியின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை நீளம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது. இதில் ஸ்வீடன் வீராங்கனை மஜா அஸ்காக் 6.60 மீ தூரம் குதித்து தங்கப் பதக்கம் வென்றாா். இந்தியாவின் ஷைலி 6.59 மீ தூரம் குதித்து வெள்ளி வென்றாா். உக்ரைன் வீராங்கனை மரியா 6.50 மீ தூரத்துடன் வெண்கலம் வென்றாா். 1 செ.மீ தூரத்தில் தங்கப் பதக்கத்தை இழந்தாா் ஷைலி சிங். உலக சீனியா் தடகளப் போட்டி நீளம் தாண்டுதலில் வெண்கலம் வென்ற அஞ்சு பாபி ஜாா்ஜின் அகாதெமியில் பயிற்சி பெறுகிறாா் ஷைலி. இப்போட்டியில் இந்தியா 2 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

1. Which State has launched Dalit Bandhu scheme?

A) Tamil Nadu

B) Telangana 

C) Madhya Pradesh

D) Chhattisgarh

  • Telangana has launched the Dalit Bandhu scheme at Salapalli village in Huzurnagar Assembly Constituency. CM K Chandrashekhar Rao has launched this scheme on a pilot basis by handing over certificates to the select beneficiaries sanctioning financial assistance of Rs 10 lakh each to take up their choice of income generation activity.
  • Also, a separate Protection Fund will be created. Dalit Bandhu Samitis would be established at different levels – from village level to State level – and these would be entrusted with the responsibility of managing the dalit protection fund.

2. What amount will be invested in Pradhan Mantri Gatishakti initiative?

A) Rs 150 Lakh crore

B) Rs 300 Lakh crore

C) Rs 200 Lakh crore

D) Rs 100 Lakh crore 

  • Prime Minister Narendra Modi announced Rs 100 lakh crore Pradhan Mantri Gatishakti initiative on August 15, 2021. This initiative will create employment opportunities for youth in India. It will also lead to growth and development of infrastructure. It also increases the possibilities of new future economic zones.

3. Which date is observed as World Prediabetes Day?

A) August 14 

B) August 18

C) August 21

D) August 23

  • To spread awareness about Prediabetes and flatten the curve of diabetes, a first–time global event was held on August 14 as World Prediabetes Day. The World Prediabetes Day will be celebrated annually on 14 August starting from the year 2021.
  • This event has been strategically chosen 90 days ahead of diabetes day as scientifically it takes 90 days to mend the lifestyle to reverse Prediabetes and prevent progression to diabetes. In India, 9 crore people are living with Prediabetes. Almost 75% of these will go on to develop diabetes within the next 5 years.

4. In which state/UT, World’s first bio–bank in Ayurveda is going to be set up?

A) Uttarakhand

B) Uttar Pradesh

C) Goa

D) New Delhi 

  • Union Ayush Minister Sarbananda Sonowal recently announced that World’s first bio–bank in Ayurveda is going to be set up in the All–India Institute of Ayurveda, New Delhi. AIIA is a public Ayurveda medicine and research institute in New Delhi that was founded in 2015. It is an autonomous institute under the AYUSH Ministry. The institute offers postgraduate and doctoral studies in a variety of Ayurvedic disciplines.

5. Who has inaugurated the Health QUEST study which will be undertaken by 20 private hospitals across India?

A) Dr K Sivan 

B) Dr Harsh Vardhan

C) Mansukh L Mandaviya

D) Dr Balram Bhargava

  • Dr K Sivan, Secretary, Chairman, Indian Space Research Organisation (ISRO) formally inaugurated the Health QUEST study (Health Quality Upgradation Enabled by Space Technology of ISRO) which will be undertaken by 20 private hospitals across India.
  • Objective of the study is to strive towards reducing human errors and achieve zero defect and quality service in the emergency and intensive care units of hospitals. The study aims to upgrade the healthcare system standards in the country in line with the ISRO quality standards and best practices.

6. In which Indian city, the world’s first museum on wheels was inaugurated?

A) Bengaluru

B) Mumbai

C) Kolkata 

D) Chennai

  • An iconic museum on wheels inside the trams of Kolkata was inaugurated by West Bengal transport and housing minister Firhad Hakim, commemorating the 75th anniversary of India’s independence.
  • Kolkata is getting the world’s first museum on a tram that symbolizes how people’s solidarity survived the freedom struggle, partition and the events of 1947. It will be on display at Esplanade (Central Kolkata) till Dec–end and from 1st Jan, it will move to other parts of the city.

7. Thomas Dennerby has been appointed as head coach of Indian women’s football team ahead of the AFC Women’s Asian Cup 2022. Which country is the host of this event?

A) China

B) Japan

C) India 

D) South Korea

  • Thomas Dennerby will take charge of the Indian women’s national team as head coach with immediate effect ahead of the AFC Women’s Asian Cup India 2022. AFC Women’s Asian Cup 2022 will be hosted by India from January 20–February 6. Dennerby was earlier in charge of India’s U–17 World Cup squad and will go back to that duty once the Asian Cup is over. The 2022 AFC Women’s Asian Cup will be the 20th edition of the AFC Women’s Asian Cup.

8. Recently, with which country’s navy, the Indian Navy has carried out joint drills in the South China Sea?

A) Thailand

B) Japan

C) Cambodia

D) Vietnam 

  • The Indian Navy has carried out joint drills with the Vietnamese Navy in the South China Sea as part of maritime cooperation between the two countries. INS Ranvijay and INS Kora undertook bilateral maritime exercises with Vietnam People’s Navy (VPN) frigate VPNS Ly Thai To (HQ–012). The bilateral interaction aims to consolidate the strong bond shared by the two navies and would be another step towards strengthening India–Vietnam defence relations.
  • The sea phase included surface warfare exercises, weapon firing drills and helicopter operations. Regular interactions between the two navies over the years have enhanced their interoperability and adaptability.

9. With which country, the Union Cabinet has given approval for India to partner with in the field of Disaster Management?

A) South Korea

B) Switzerland

C) Bangladesh 

D) Nepal

  • The Union Cabinet was approved the Memorandum of Understanding signed on March, 2021 between the National Disaster Management Authority, Ministry of Home Affairs, the Republic of India and the Ministry of Disaster Management and Relief, People’s Republic of Bangladesh on Cooperation in the field of Disaster Management, Resilience and Mitigation.
  • The MoU seeks to put in place a system, whereby both India and Bangladesh will be benefited from the Disaster Management mechanisms of each other and it will help in strengthening the areas of preparedness, response and capacity building in the field of Disaster Management.

10. By which year, the government is going to provide fortified rice to the poor under various schemes?

A) 2023

B) 2022

C) 2025

D) 2024 

  • Prime Minister Modi announced to provide fortified rice to poor under various schemes by the year 2024. This decision was taken in order to address the problem of malnutrition in India. Providing nutrition to every poor person India is a priority of the government.
  • This decision was taken in the view that, malnutrition and lack of essential nutrients among poor women and poor children is a major hurdle in their development.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!