Tnpsc

21th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

21th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 21th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

21th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. “சாளரத்திற்கருகே அமர்ந்திருக்கும் பெண்” என்பது பின்வரும் எந்தக் கலைஞரின் பிரபலமான ஓவியமாகும்?

அ) பப்லோ பிகாசோ

ஆ) லியோனார்டோ டா வின்சி

இ) வின்சென்ட் வான் கோக்

ஈ) சால்வடார் தால

  • பப்லோ பிகாசோவின் புகழ்பெற்ற “Woman Sitting Near a Window (Marie-Therese)” ஓவியம் நியூயார்க்கில் உள்ள கிறிஸ்டிஸில் $103.4 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டது. 100 மில்லியன் டாலருக்கு மேல் விற்ற முதல் கலைப்படைப்பு இதுதான். 1932ஆம் ஆண்டில் வரையப்பட்ட இந்த ஓவியம் முதலில் $55 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்படும் என மதிப்பிடப்பட்டது. பிகாசோவின் 5 கலைப்படைப்புகள், $100 மில்லியன் டாலர்களைத் தாண்டி விற்றுள்ளன.

2. KP சர்மா ஒலி, பின்வரும் எந்த நாட்டின் பிரதமராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்?

அ) வங்காளதேசம்

ஆ) மியான்மர்

இ) நேபாளம்

ஈ) பூட்டான்

  • எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்கத் தவறியதை அடுத்து நேபாள பிரதமர் KP சர்மா ஒலி சிறுபான்மை அரசாங்கத்தை அமைத்துள்ளார். அவர் மூன்றாவது முறையாக பிரதமராகியுள்ளார்.
  • 43ஆவது பிரதமரான அவர், முன்னதாக நாடாளுமன்றத்தில் நடந்த நம் -பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்றார். நாடாளுமன்றத்தின் மிகப்பெரிய கட்சியின் தலைவராக இருப்பதால், ஒலியை பிரதமராக, ஆளுநர் வித் -யா தேவி பண்டாரி நியமித்தார். அவர் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியான ஒருங்கிணைந்த மார்க்சிச லெனினிஸ்ட் (CPN-UML) கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் ஆவார்.

3. அனைத்து செயற்கை கஞ்சாக்களையும் தடைசெய்த முதல் நாடு எது?

அ) ஜப்பான்

ஆ) அமெரிக்கா

இ) சீனா

ஈ) இந்தியா

  • அனைத்து செயற்கை கஞ்சாக்களும் தடைசெய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலில் சேர்க்கப்படும் என சீன அரசு அறிவித்துள்ளது. மரிஜுவானா -வில் உள்ள இயற்கையான கன்னாபினாய்டுகள்போன்று, மூளையில் உள்ள அதே ஏற்பிகளைக்குறிவைக்கும் செயற்கை கன்னாபினாய்டுகள் அனைத்தும் உற்பத்தி செய்யப்பட்ட வேதிவகையின்கீழ் வருகின்றன. அதிகாரிகள், 18 பிற உளத்தூண்டிகளுக்கும் தடைவிதிக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.

4. செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய ‘தியான்வென்-1’ஐ ஏவிய நாடு எது?

அ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ) ஐக்கிய அரபு அமீரகம்

இ) வட கொரியா

ஈ) சீனா

  • “தியான்வென்-1” என்ற சீன விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிக -ரமாக தரையிறங்கியுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சிவப்பு கிரகத்தில் தனது ஊர்தியை தரையிறக்கும் இரண்டாவது நாடாக சீனா திகழ்கிறது. இந்தத் தரையிறங்கலை சீனாவின் தேசிய விண்வெளி ஆய்வு நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
  • செவ்வாய் கிரகத்தின் வட அரைக்கோளத்தில் ஒரு பெரிய சமவெளியாக இருக்கும் உடோபியா பிளானிட்டியாவில் அந்த ஊர்தி தரையிறங்கியதாகக் கூறியுள்ளது.

5. ஆண்டுக்கு `6000 நிதியை, நேரடியாக உழவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வழங்குவதன்மூலம், அவர்களின் வருமானத்தை மேம்படுத்துகின்ற அரசாங்கத் திட்டம் எது?

அ) PM FBY

ஆ) PM KISAN

இ) PM JJBY

ஈ) PM JDY

  • பிரதமர் கிசான் சம்மான் நிதி (PM KISAN) என்ற திட்டம், இந்தியாவில், விவசாய குடும்பங்களின் வருவாயை அதிகரிப்பதற்காக தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் உழவர்களுக்கு தலா `2000 என 3 தவணைகளில் ஆண்டுக்கு `6000 வழங்கப்படுகிறது.
  • அண்மையில், மேற்கு வங்க விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் 8ஆவது தவணையான `2,000’ஐ இந்திய அரசு அனுப்பியுள்ளது.

6. கடந்த காலங்களில் அரபிக்கடலில் உருவான சூறாவளி எது?

அ) வர்தா

ஆ) பானி

இ) கஜா

ஈ) நிலோபர்

  • நிலோபார் என்பது அரபிக்கடலில் கடந்த 2014ஆம் ஆண்டில் உருவான ஒரு சூறாவளியாகும். இந்தச் சூறாவளியின்போது காற்று அதிகபட்சமாக 250 கிமீ வேகத்தல் வீசியது. சமீபத்தில், அரபிக்கடலில் டக்தே சூறாவளி உருவாகியது. அது மிகவும் கடுமையான புயலாக மாறும் என்றும் குஜராத்தில் கரையைக்கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

7. ஆல்டோ பல்கலைக்கழகத்தின் ஓர் ஆய்வின்படி, உலக உணவு உற்பத்தியின் தற்போதைய அளவுகளிலிருந்து மூன்றில் ஒரு பங்கு குறைவதற்கு பின்வரும் எந்த நிலை வழிவகுக்கும்?

அ) பைங்குடில் வாயு உமிழ்வு

ஆ) அமெரிக்க / ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்புவாதம்

இ) அமெரிக்கா-சீனா வர்த்தக போர்

ஈ) எல் நினொ

  • ஆல்டோ பல்கலைக்கழகத்தின் ஓர் அண்மைய ஆய்வின்படி, உலகில் எல்லைமீறிய பைங்குடில் வாயு உமிழ்வுகள் இருந்தால், உலக உணவு உற்பத்தியானது எதிர்காலத்தில், தற்போதைய உற்பத்தி நிலைகளில் இருந்து மூன்றில் ஒரு பங்காக குறைவதற்கு வழிவகுக்கும்.
  • இந்த ஆய்வறிக்கை, “ஒன் எர்த்” என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. உணவு உற்பத்தி மற்றும் பைங்குடில் வாயுக்களுக்கு இடையிலான உறவு குறித்த விரிவான பகுப்பாய்வை இது முன்வைக்கிறது.

8. தியோடர் மைமனால் 1960’இல் மேற்கொள்ளப்பட்ட முதல் லேசர் சிகிச்சையின் ஆண்டு நிறைவு, பின்வரும் எந்த சர்வதேச நாளாக அனுசரிக்கப்படுகிறது?

அ) பன்னாட்டு லேசர் நாள்

ஆ) பன்னாட்டு ஒளி நாள்

இ) பன்னாட்டு இயற்பியல் நாள்

ஈ) பன்னாட்டு பொறியியல் நாள்

  • பன்னாட்டு ஒளி நாளானது ஆண்டுதோறும் மே.16 அன்று கொண்டாடப் -படுகிறது. இயற்பியலாளரும் பொறியியலாளருமான தியோடர் மைமன் அவர்களால் 1960’இல் மேற்கொள்ளப்பட்ட முதல் லேசர் சிகிச்சையின் ஆண்டு நிறைவை இந்நாள் கொண்டாடுகிறது. “Trust Science” என்பது நடப்பாண்டில் (2021) வரும் பன்னாட்டு ஒளி நாளுக்கான கருப்பொருளாகும்.
  • ஒளியைச்சிறப்பிப்பதற்கும், பல்வேறு துறைகளில் அது வகிக்கும் பங்கினை போற்றுவதற்குமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

9. அண்மையில் காலஞ்சென்ற பேராசிரியர் M S நரசிம்மனுடன் தொடர்புடைய துறை எது?

அ) இயற்பியல்

ஆ) கணிதம்

இ) ஜவுளி வடிவமைப்பு

ஈ) கட்டிடக்கலை

  • பிரபல கணிதவியலாளர் பேராசிரியர் M S நரசிம்மன் (88) அண்மையில் காலமானார். நரசிம்மன்-சேஷாத்ரி தேற்றத்திற்காக அறியப்பட்ட அவர், மற்றொரு கணிதவியலாளரான C S சேஷாத்ரியுடன் இணைந்து அந்தத் தேற்றத்தை முன்வைத்தார். அவ்விருவரும் இலண்டனின் இராயல் சமூகத்தின் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அறிவியல் துறையி -ல் கிங் பைசல் சர்வதேச பரிசு பெற்ற ஒரே இந்தியர் இவர்தான்.

10. இத்தாலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியை வென்ற டென்னிஸ் வீரர் யார்?

அ) ரோஜர் பெடரர்

ஆ) ரபேல் நடால்

இ) நோவக் ஜோகோவிச்

ஈ) ஆண்டி முர்ரே

  • ஸ்பானிஷ் டென்னிஸ் வீரர் ரபேல் நடால், நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி இத்தாலிய ஓப்பன் பட்டத்தை வென்றார். இது, தொடர்ச்சியாக பத்தாவது முறையாக அவர் பெறும் இத்தாலிய ஓப்பன் பட்டமாகும்.
  • மகளிர் இறுதிப்போட்டியில், பிரெஞ்சு ஓப்பன் சாம்பியனான இகா ஸ்வெய் -டெக் 6-0, 6-0 என்ற கணக்கில் கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி பட்டத்தை வென்றார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. AICTE வழங்கும் தூய்மை விருது: இறுதிச்சுற்றில் 12 தமிழக கல்வி நிறுவனங்கள்

AICTE வழங்கும் தூய்மை வளாக விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 12 கல்வி நிறுவனங்கள் இறுதிச்சுற்றுக்கு தேர்வாகியுள்ளன. நாடு முழுவதும் சுகாதாரத்தை வலியுறுத்த தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தூய்மை இந்தியா திட்டத்தை கல்வி நிறுவனங்கள் செயல்படுத்துவதை ஊக்குவிக்க விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வளாகங்களை தூய்மையாக வைத்திருக்க புதிய தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தும் கல்வி நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படவுள்ளதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (AICTE) கடந்த ஆண்டு அறிவித்தது. இதனையடுத்து, AICTE’இன் அங்கீகாரம்பெற்ற பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் தூய்மை விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி, நாடு முழுவதும் 10,000’க்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் தூய்மை விருதுக்கு விண்ணப்பித்தன. இந்நிலையில், விண்ணப்பங்க
-ளை சரிபார்த்து இறுதிச்சுற்றுக்கு தகுதியான கல்வி நிறுவனங்களின் பட்டியலை AICTE வெளியிட்டுள்ளது. அதன்படி, 29 கல்வி நிறுவனங்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. அதில் நாட்டிலேயே அதிகப்படியாக பாலிடெக்னிக் பிரிவில் 2, பொறியியல் பிரிவில் 5, பல்கலைக்கழக பிரிவில் 5 என மொத்தம் தமிழ்நாட்டைச் சார்ந்த பன்னிரண்டு கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

2. கருப்பு பூஞ்சை… கவனம் தேவை…

இந்தியா முழுவதும் கருப்பு பூஞ்சை தொற்று தற்போது அதிகமாக கண்டறியப்பட்டு வருகிறது. தீவிர கரோனா பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு அத்தகைய பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக் -கின்றனர். உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் உயிரிழப்பைக்கூட ஏற்படுத்தக் கூடிய கொடிய பாதிப்பாக அது இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கருப்பு பூஞ்சை என்றால் என்ன?

‘மியூகோர்மைகோசிஸ்’ எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் இப்போது புதிதாக வந்தது அல்ல. பல காலமாக அத்தகைய பாதிப்பு இருந்து வருகிறது. பாக்டீரியா, வைரஸ்போல காற்றிலும், சுற்றுப்புறத்திலும் உள்ள பூஞ்சை கிருமிகள் நாசி வழியே உடலுக்குள் சென்று தொற்றை ஏற்படுத்துகின்றன. அவை மெல்ல, மெல்ல உடலின் அனைத்துப் பகுதிகளிலும் பரவுகின்றன. கவனிக்காவிடில் அது கண்களை முதலில் பாதிக்கும். பின்னர் மூளைப் பகுதியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

உடலில் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக இருக்கும் நபர்களுக்கு இத்தகைய தொற்று ஏற்படலாம். முறையான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், கண் பார்வை இழப்பு, உறுப்புகள் பாதிப்பு, உச்சபட்சமாக உயிரிழப்புகூட நேரிட -லாம்.

யாரை எளிதில் தாக்கும்?

சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இல்லாதவர்கள், கரோனா தீவிரமாக பாதித்து ஸ்டீராய்டு செலுத்திக் கொண்டவர்கள் நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்கும் சிகிச்சையில் இருப்பவர்கள் உறுப்புமாற்று சிகிச்சை மேற்கொ -ண்டவர்கள் புற்றுநோய், HIV நோயாளிகள்.

அறிகுறிகள் என்ன?

தீவிர தலைவலி, கண் எரிச்சல், கண் சிவப்பாகுதல், வாய், மூக்கு, கண் பகுதிகள் கருமையாக மாறுதல், கண்ணில் வலி மற்றும் வீக்கம், சைனஸ் பாதிப்பு, திடீரென பார்வை குறைவு.

பாதிப்பு அதிகரித்தது ஏன்?

பொதுவாக கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகச் சொற்பமாகவே இருந்துவந்தது. தற்போது கரோனா தொற்று அதிகரித்ததன் விளைவாக ஸ்டீராய்டு பயன்பாடு அதிகரித்துள்ளது. ஸ்டீராய்டு சிகிச்சையால் நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தவர்கள், அதன்பின் அதனை மேம்படுத்திக்கொள்ளத்தவறுவதால் பலருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுகிறது.

சிகிச்சைகள் என்ன?

கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தது 2 வாரம் முதல் 6 மாதங்கள் வரை சிகிச்சையளிக்க வேண்டும். சிலருக்கு பல்நோக்கு சிகிச்சைகள் அவசியம். குறிப்பாக, காது, மூக்கு, தொண்டை மருத்துவ சிகிச்சைகள், இரத்தநாள சிகிச்சை முறைகள், கண் சிகிச்சை முறைகள், நரம்பியல் மற்றும் மூளைசார் சிறப்பு சிகிச்சைகள் தேவைப்படுகின்றன.

எப்படித் தடுப்பது?

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல், நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்துதல், கரோனாவிலிருந்து மீண்டபிறகு காது, மூக்கு, தொண்டை பரிசோதனை மேற்கொள்ளுதல், அறிகுறிகளை அலட்சியப்படுத்தாது உடனடியாகப் பரிசோதனை செய்தல், ஊட்டச்சத்துமிக் -க உணவு சாப்பிடுவது, மது, புகைப்பழக்கத்தை கைவிடுதல், உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்வதுமூலம் இந்த நோயைத் தடுக்க முடியும்.

3. INS ராஜ்புத் போர்க்கப்பல் கடற்படையிலிருந்து விடுவிப்பு

இந்திய கடற்படையில் 41 ஆண்டுகள் பணியாற்றிய INS ராஜ்புத் என்ற போர்க்கப்பல் கடற்படையிலிருந்து விடுவிக்கப்படுகிறது. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கஷின் இரகத்தைச் சேர்ந்த இந்தப் போர்க்கப்பல், இந்திய கடற்படையில் கடந்த 1980ஆம் ஆண்டு மே.4 அன்று சேர்க்கப்பட்டது.

இதை அப்போதைய ரஷ்யாவுக்கான இந்திய தூதர் IK குஜ்ரால் கடற்படை -யில் இணைத்து வைத்தார். கடற்படையின் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் இந்தப் போர்க்கப்பல் திறம்பட பணியாற்றியுள்ளது. இந்திய அமைதிப்படை, இலங்கை கடற்பகுதியில் ரோந்துபணிகளில் இந்தக்கப்பல் ஈடுபட்டுள்ளது. கடந்த 41 ஆண்டுகளில், 31 தலைமை அதிகாரியின்கீழ் இந்தக் கப்பல் செயல்பட்டுள்ளது.

41 ஆண்டுகள் பணியாற்றிய இந்தப் போர்க்கப்பலில் உள்ள கடற்படை கொடி, சூரியன் மறையும்போது இறக்கப்படும். அத்துடன் இப்போர்க்கப்பல் கடற்படை பணியிலிருந்து விடுவிக்கப்படும்.

4. இந்தியாவுக்கு அக்டோபர்-டிசம்பரில் ரஷிய ‘எஸ்-400’ ஏவுகணை அமைப்பு

அதிநவீன எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் முதல் தொகுதி இந்தியாவுக்கு வருகிற அக்டோபர்-டிசம்பர் மாதங்களில் வழங்கப் -படும் என்று ரஷியாவின் ஆயுத ஏற்றுமதியாளரான ரோஸோபோரோன் எக்ஸ்போர்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷியாவிடமிருந்து `36,500 கோடி மதிப்பில் 5 தொகுப்பு எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியா மேற்கொண்டது. தரையிலிருந்தபடி நீண்டதூர வான் இலக்கை துல்லியமாக தாக்கியழிக்கும் திறன்கொண்டது இந்த ஏவுகணை. வானில் 400 கிமீ தொலைவிலிருக்கும் எதிரி விமானங்கள், ஏவுகணை, ஆளில்லா விமானங்களையும் தாக்கியழிக்கும் திறன்கொண்டது.

5.அண்டார்டிகாவிலிருந்து பிரிந்தது உலகின் மிகப்பெரிய பனிப்பாறை

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை அண்டார்டிகா பனிப்பிரதேசத்திலிருந்து பிரிந்து கடலில் மிதக்கத் தொடங்கியிருப்பதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அந்த மையம் வெளியிட்டுள்ள தகவல்படி, ‘ஏ-76’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பனிப்பாறை, புது தில்லியைவிட 3 மடங்கு பெரியது என்று தெரியவந்துள்ளது. தில்லியின் பரப்பளவு 1,484 சகி மீ’களாக உள்ள நிலையில், இந்தப் பனிப்பாறை சுமார் 4,320 சகிமீட்டர் பரப்பளவு கொண்டதாகும்.

170 கிமீ நீளமும், 25 கிமீ அகலமும் கொண்டுள்ள அந்தப் பனிப்பாறை தற்போது அண்டார்டிகா பனிப்பிரதேசத்திலிருந்து பிரிந்து அந்தப் பகுதியில் உ ள்ள வெடல் என்ற கடலில் மிதக்கத் தொடங்கியுள்ளது.

‘ஏ-76’ பனிப்பாறை அண்டார்டிகா பனிப்பிரதேசத்தின் ‘ரோனி’ என்ற பரப்பிலிருந்து பிரிந்து கடலில் மிதக்கத் தொடங்கியிருப்பதை பிரிட்டன் அண்டார்டிகா ஆய்வு மையம் கண்டறிந்ததாகவும், அதை அமெரிக்காவின் தேசிய பனிப்பிரதேச மையம் உறுதிசெய்துள்ளதாகவும் ஐரோப்பிய விண் வெளி ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. ரோனி உள்பட பல்வேறு பனிப் பரப்புகள் இணைந்ததே அண்டார்டிகா நிலப்பகுதியாகும்.

அண்டார்டிகாவிலிருந்து பனிப்பாறைகள் பிரிவது இது முதல் முறையல்ல. கடந்த பிப்ரவரியில் பாரீஸ் நகரைவிட 1.5 மடங்கு பெரிய பனிப்பாறை அண்டர்டிகாவின் பிரன்ட் பனிப்பரப்பிலிருந்து பிரிந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல 2017-ஆம் ஆண்டிலும் ஒரு பனிப்பாறை பிரிந்தது.

எனினும், பனிப்பாறைகள் இவ்வாறு பிரிந்து கடலில் மிதக்கத் தொடங்குவ -து சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. உலக வெப்பமயமாதலும், பருவநிலை மாறுபாடுமே இவற்றுக்குக் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

6. மே.24இல் உருவாகிறது யாஸ் புயல்; தமிழகத்துக்கு மழை இருக்காது; வெப்பநிலை உயரும்: வானிலை ஆய்வு மையம்

மத்திய வங்கக் கடல் பகுதியில் மே 24ஆம் தேதி உருவாகும் யாஸ் புயலால் தமிழகத்தில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை (மே 22) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது 24ஆம் தேதி புயலாக வலுவடைந்து, வடமேற்கு திசையில் நகரக் கூடும் என்றும், அது மேலும் வலுப்பெற்று ஒடிசா, மேற்கு வங்கக் கரையை 26ஆம் தேதி கடக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் இந்தப் புயல் தீவிரப் புயலாக வலுப்பெறும் வாய்ப்பு குறைவே. இந்தப் புயலுக்கு யாஸ் என ஓமன் பெயர் சூட்டியுள்ளது. புயலால் தமிழகத்திற்கு மழை வாய்ப்பு இல்லை. எனினும் தரைக் காற்று வீச வாய்ப்பிருப்பதால் வெப்பநிலை உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 23 முதல் 25ஆம் தேதி வரை மத்திய வங்கக் கடல் பகுதியில் யாஸ் புயல் உருவாவதன் காரணமாக, தமிழகப் பகுதிகளில் தரைக்காற்று மேற்கு வடமேற்கு திசையில் இருந்து வீச வாய்ப்பிருப்பதால் தமிழகத்தில் பெரும்பான்மையான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1. “Woman Sitting Near a Window” is a famous painting of which artist?

A) Pablo Picasso

B) Leonardo da Vinci

C) Vincent van gogh

D) Salvador Dal

  • Pablo Picasso’s famous “Woman Sitting Near a Window (Marie–Therese)” painting was sold for USD 103.4 million at Christie’s in New York. This is the first time in two years that a work has broken the USD 100 million mark. The painting, completed in 1932, was originally estimated to be sold USD 55 million. Five works by Picasso have now crossed the threshold of USD 100 million.

2. KP Sharma Oli, has been reappointed as the Prime Minister of which country?

A) Bangladesh

B) Myanmar

C) Nepal

D) Bhutan

  • Nepal’s Prime Minister, KP Sharma Oli has formed a minority government after opposition parties failed to form a coalition. He has become the Prime Minister for the third time. The 43rd PM had earlier lost a vote of confidence in Parliament. President Bidya Devi Bhandari appointed Mr Oli as Prime Minister, as he is the leader of the largest party in Parliament. He is the Parliamentary leader of Communist Party of Nepal– Unified Marxist Leninist (CPN–UML).

3. Which is the first country to ban all synthetic cannabinoids?

A) Japan

B) USA

C) China

D) India

  • The Chinese government has announced that all synthetic cannabinoids will be included in the list of banned drugs. Synthetic cannabinoids come under the category of manufactured chemicals that target the same receptors in the brain as the natural cannabinoids in marijuana. The authorities announced a ban on 18 other psychoactive substances.

4. “Tianwen–1”, which has successfully landed on Mars, was launched by which country?

A) USA

B) UAE

C) North Korea

D) China

  • The Chinese spacecraft named Tianwen–1 has successfully landed on the Mars planet. This makes China the second country after the USA to land its rover on the red planet. The landing has been confirmed by the China National Space Administration (CNSA) and has stated that the spacecraft has landed on Utopia Planitia which is a large plain in the northern hemisphere of Mars.

5. Which government scheme aims to improve the income of farming households by providing them with Rs.6000 per year directly to their bank accounts?

A) PM FBY

B) PM KISAN

C) PM JJBY

D) PM JDY

  • The Prime Minister Kisan Samman Nidhi (PM KISAN) was launched to augment income of farming households in India, by providing them with an amount of Rs.6000/– per year in three instalments of Rs.2000/– each. Recently, the Government of India has released the 8th instalment of ₹2,000 to each farmer since the launch of the scheme, which were directed to the farmers of West Bengal.

6. Which of the following cyclones have formed in the Arabian Sea, in the past?

A) Vardah

B) Fani

C) Gaja

D) Nilofar

  • Nilofar is a very severe and intensified cyclone, which was formed in the year 2014 in Arabian Sea. Winds reached a maximum speed of close to 250 kmph, during the formation of the cyclone. Recently, Cyclone Tauktae has formed in the Arabian sea, which is expected to become a very severe storm and is expected to cross the coast of Gujarat.

7. As per the research by Aalto University, which condition would lead to fall in global food production by 1/3rd of the present levels?

A) Greenhouse Gas emission

B) US/EU Protectionism

C) USA China Trade War

D) El Nino

  • As per a recent research by Aalto University, the global food production would fall by more than 1/3rd of the present production levels in future, if there exists out–of–control growth of greenhouse gas emissions in the world. The research report has been published in the prestigious journal “One Earth” and presents a detailed analysis on the relationship between food production and greenhouse gases.

8. The anniversary of the first successful operation of Laser in 1960 by Theodore Maiman is observed as which international day?

A) International Laser Day

B) International Light Day

C) International Physics Day

D) International Engineering Day

  • The International Day of Light is celebrated on 16 May each year, the anniversary of the first successful operation of the laser in 1960 by physicist and engineer, Theodore Maiman. The message of the International Day of Light 2021 is “Trust Science”. The Day is a global initiative to provide a platform for the appreciation of light and the role it plays in diverse fields.

9. Professor MS Narasimhan, who passed away recently, was associated with which field?

A) Physics

B) Mathematics

C) Textile Design

D) Architecture

  • Famous mathematician Professor MS Narasimhan has recently passed away at the age of 88. He was known for the Narasimhan–Seshadri theorem, propounded along with another mathematician C. S. Seshadri and both were elected as Fellows of the Royal Society, London. He was the only Indian to receive the King Faisal International Prize in the field of science.

10. Which tennis player has clinched the Italian Open tennis tournament?

A) Roger Federer

B) Rafael Nadal

C) Novak Djokovic

D) Andy Murray

  • Spanish Tennis veteran Rafael Nadal beat ace player Novak Djokovic to clinch the Italian Open title, for a record 10th time. In the women’s final, reigning French Open champion Iga Swiatek defeated Karolina Pliskova 6–0 6–0, to clinch the title.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!