TnpscTnpsc Current Affairs

21st March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

21st March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 21st March 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. Continental Europe Synchronous Area (CESA) உடன் இணைக்கப்பட்டுள்ள நாடு எது?

அ) சீனா

ஆ) உக்ரைன் 

இ) கஜகஸ்தான்

ஈ) ஆப்கானிஸ்தான்

  • உக்ரைன் அண்மையில், ‘கான்டினென்டல் ஐரோப்பா சிங்க்ரோனஸ் ஏரியா’ உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஐரோப்பா கண்டத்தின் பெரும்பகுதியில் பரவியிருக்கும் மின்சார விநியோகக் கட்டமைப்பாகும். இந்த நடவடிக்கை உக்ரைனை ரஷ்யாவிலிருந்து வெளியேற அனுமதிக்கும்.

2. இந்தியாவின் முதலாவது எரிபொருள் மின்கல மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?

அ) ஓலா

ஆ) டொயோட்டா 

இ) ஹோண்டா

ஈ) டாடா

  • உலகின் அதிநவீன தொழினுட்பத்துடன் உருவாக்கப்பட்ட பசுமை கைட்ரஜன் எரிபொருள் மின்கல மின்வாகனமான டொயோட்டா மிராய்-ஐ மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.
  • இந்த வாகனம் கைட்ரஜனால் இயங்கக்கூடியது மட்டுமல்லாமல் இந்திய சாலைகள் & பருவநிலைக்கு ஏற்றதாகும். இந்தியாவில் இவ்வகையில் இது முதலாவது முன்னோடி திட்டமாகும். பசுமை கைட்ரஜன் அடிப்படையி -லான சுற்றுச்சூழலை நாட்டில் உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

3. மகாத்மா காந்தியின் பெயரால் அழைக்கப்படும், ‘பசுமை முக்கோணம்’ திறக்கப்பட்டுள்ள நாடு எது?

அ) இலங்கை

ஆ) நேபாளம்

இ) மடகாஸ்கர் 

ஈ) மியான்மர்

  • இந்தியாவின் 75ஆவது ஆண்டு விடுதலையை நினைவு கூரும் வகையில், மடகாஸ்கரின் தலைநகரமான அண்டனானரிவோவில் ‘மகாத்மா’ காந்தியின் பெயரில் அமைந்த, ‘பசுமை முக்கோணம்’ திறக்கப்பட்டது.

4. ‘திஷாங்க்’ என்பது எந்த இந்திய மாநிலத்தின் நில டிஜிட்டல் மயமாக்கல் செயலியாகும்?

அ) கர்நாடகா 

ஆ) கேரளா

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) குஜராத்

  • அனைத்து நிலப் பதிவுகளையும் (பூமி திட்டத்தின்கீழ்) டிஜிட்டல் மயமாக்குவதற்காக ‘திஷாங்க்’ செயலி கர்நாடக அரசால் செயல்படுத்தப்படுகிறது. கர்நாடக மாநில தொலை உணர்வு பயன்பாட்டு மையத்தின் (KSRSAC) கர்நாடக புவியியல் தகவல் அமைப்பு திட்டத்தின்கீழ் இந்தச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இது வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதோடு நிலம் தொடர்பான சர்ச்சைகளைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5. பகலொளி சேமிப்பு நேரத்தை (DST) நிரந்தரமாக்கும், ‘சன்ஷைன் பாதுகாப்புச் சட்டத்தை’ சமீபத்தில் நிறைவேற்றிய நாடு எது?

அ) ரஷ்யா

ஆ) அமெரிக்கா 

இ) பிரேசில்

ஈ) கனடா

  • பகலொளி சேமிப்பு நேரத்தை நிரந்தரமாக்கும் சட்டத்தை அமெரிக்க செனட் ஒருமனதாக நிறைவேற்றியது. குளிர் காலத்தின் வருகை மற்றும் புறப்பாடுடன் ஒத்துப்போகும் வகையில், நேரத்தை 1 ம நே முன்னும் பின்னும் மாற்றி வைக்கும் நடைமுறையை இது இரத்து செய்துள்ளது.
  • இது ஒரு சட்டமாக கையொப்பமிடப்பட்ட பிறகு, ஒவ்வொரு நவம்பரிலும் நேரத்தை 1 மணி நேரம் முன்னே மாற்றும் நடைமுறை நிறுத்தப்படும்.

6. ‘பாகினி’ என்பது பின்வரும் எந்த இந்திய மாநிலத்தால் அறிவிக்கப்பட்ட ஒரு புதிய திட்டமாகும்?

அ) குஜராத்

ஆ) சிக்கிம் 

இ) மகாராஷ்டிரா

ஈ) கர்நாடகா

  • சிக்கிம் மாநில அரசு தனது ஆண்டு பட்ஜெட்டில், ‘பாகினி’ திட்டத்தை அறிவிக்கவுள்ளது. அதன் அனைத்து 210 மேல் நிலை மற்றும் உயர்நிலை அரசுப் பள்ளிகளிலும் இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்குவதற்காக, விற்பனை எந்திரங்களை நிறுவுவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது. பள்ளிகளிலிருந்து மாணவிகள் இடைவிலகுவதைத்தடுப்பதும், சிறார்களிடையே மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.

7. V-Dem ஜனநாயக அறிக்கை-2022’இன், ‘தாராளவாத ஜனநாயகக்குறியீட்டில்’ இந்தியாவின் தரநிலை என்ன?

அ) 75

ஆ) 83

இ) 93 

ஈ) 99

  • சுவீடனைச் சார்ந்த வி-டெம் நிறுவனம் (ஜனநாயகத்தின் வகைகள் ஆராய்ச்சித் திட்டம்) “ஜனநாயக அறிக்கை 2022: தன்னியக்கமயமாக்கல் இயல்பை மாற்றுகிறதா?” என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டது.
  • தாராளவாத ஜனநாயகக் குறியீட்டில் இந்தியா 93ஆவது இடத்தையும், தேர்தல் ஜனநாயகக் குறியீட்டில் 100ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. எல் சால்வடார், துருக்கி மற்றும் ஹங்கேரி ஆகியவற்றுடன் உலகின் முதல் 10 தன்னாட்சி நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது.

8. 2022 – ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?

அ) 01

ஆ) 25

இ) 56

ஈ) 83 

  • 2022 – ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் இந்தியாவின் கடவுச்சீட்டு 83ஆவது இடத்தில் உள்ளது. 2021இல் 90ஆவது இடத்திலிருந்த இது ஏழு இடங்கள் முன்னேறி உள்ளது. இந்தக் குறியீடு உலகின் அனைத்து கடவுச் சீட்டுகளையும் நுழைவு இசைவில்லாமல் அணுகக்கூடிய இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தரவரிசைப்படுத்துகிறது.
  • இது பன்னாட்டு வான்போக்குவரத்து சங்கத்தின் (IATA) பிரத்தியேக தரவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. 2022 தரவரிசையின்படி, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை உலகின் மிகவும் ஆற்றல்மிகு கடவுச்சீட்டுகளைக்கொண்டுள்ளன.

9. உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகமை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, ஊக்கமருந்து எதிர்ப்பு விதி மீறல்களில், இந்தியாவின் தரநிலை என்ன?

அ) முதலாவது

ஆ) இரண்டாவது

இ) மூன்றாவது 

ஈ) நான்காவது

  • உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகமை வெளியிட்டுள்ள ஓர் அண்மைய அறிக்கையின்படி, கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தியாவில் 152 ஊக்கமருந்து எதிர்ப்பு விதி மீறல்கள் நிகழ்ந்துள்ளன. மேலும் இப்பட்டியலின் மூன்றாமிடத்தில் (152 மீறல்கள்) இந்தியா உள்ளது. இது உலகில் நிகழ்ந்த விதிமீறல்களில் 17%-க்கொண்டுள்ளது.
  • ரஷ்யா-167, இத்தாலி-157, பிரேசில்-78, ஈரான்-70 ஆகிய இடங்களில் உள்ளன.

10. ‘உலக நீர் நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) மார்ச்.20

ஆ) மார்ச்.21

இ) மார்ச்.22 

ஈ) மார்ச்.23

  • ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.22 உலக தண்ணீர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. நன்னீர் வளங்களின் நிலையான மேலாண்மைக்கு ஆதரவாக இது கொண்டாடப்படுகிறது.
  • ஐநா அமைப்புகளால் ஒவ்வோராண்டும் இதுகுறித்து ஒரு கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்படுகிறது. “Groundwater: Making the Invisible Visible” என்பது நடப்பு 2022ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கொல்லிமலையில் இருபது வகை அரிய மருத்துவத் தாவரங்கள்: மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்மூலம் இருபது வகையான அரிய மருத்துவ தாவரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

மூலிகை வளம் நிறைந்த கொல்லிமலையில் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைப்பது தொடர்பாக மாநிலங்களவை திமுக உறுப்பினர் இராஜேஷ்குமார் எழுப்பிய கேள்விக்கு மாநிலங்களவையில் எழுத்து பூர்வமாக மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் அளித்த பதில் வருமாறு:

தமிழ்நாட்டின் கொல்லிமலையில் நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த மருத்துவ தாவரங்கள் காணப்படுகின்றன. சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய தாவரவியல் ஆய்வு (BSI) தகவலின்படி, கொல்லிமலை மலையில் 100-க்கும் மேற்பட்ட மருத்துவ தாவர இனங்கள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.

அரிய வகை மருத்துவத் தாவரங்கள்: மேலும், மேட்டூர் அணை, சித்த மருத்துவ தாவர தோட்டமும், மத்திய சித்த ஆராய்ச்சிக்கான கவுன்சிலின் தமிழகப் பிரிவும் இணைந்து கொல்லிமலைக் குன்றில் உள்ள மருத்துவத தாவரங்களை ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் கொல்லி மலைக் குன்றில் இருபது அரிய வகை மருத்துவத் தாவரங்கள் கண்டெடுக்கப்பட்டு சேகரிக்கப்பட்டுள்ளன. அதே சமயம், கொல்லிமலை குன்றுகளில் புதிதாக சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைப்பது குறித்து ஆயுஷ் அமைச்சகத்தின் பரிசீலனையில் இல்லை.

சித்த ஆராய்ச்சி நிறுவனங்கள்: தமிழகத்தில் ஏற்கெனவே சித்த ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலின் மூன்று புற நிறுவனங்கள் செயல்படுகின்றன. சென்னையிலுள்ள மத்திய சித்த ஆராய்ச்சி நிறுவனம், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் உள்ள சித்த மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு மற்றும் மேட்டூர் அணைப்பகுதியில் உள்ள சித்த மருத்துவ தாவரங்கள் தோட்டம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. மேலும், ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தேசிய சித்தா நிறுவனமும் சென்னையில் உள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2. ‘ஆசனி’ புயல்: அந்தமானில் பலத்த மழை

‘ஆசனி’ புயல் காரணமாக அந்தமான் நிகோபார் தீவுகளில் பலத்தமழை பெய்து வருகிறது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட பதிவு:

நிகோபார் தீவுகளில் உள்ள கார் நிகோபாரின் வடக்கு – வட மேற்கே சுமார் 110 கிமீ தொலைவில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருக்கிறது. இது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், புயலாகவும் மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலுக்கு ‘ஆசனி’ எனத் தீவு நாடான இலங்கை பெயர் சூட்டியுள்ளது.

3. 2020-ல் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி, இந்தியாவில் ஆண்டு தோறும் ஏற்படும் புற்றுநோய்களில் 27% புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும் புற்று வகையாகவே இருக்கிறது. இதனை ஏற்படுத்துவது ‘பியூசோபாக்டீரியம் நியூக்ளியேட்டம்’ (Fusobacterium nucleatum) என்ற பாக்டீரியா.

4. நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவிசார் குறியீடு

புகழ்பெற்ற நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவிசார் குறியீடுக்கான அங்கீகார சான்று கிடைத்துள்ளது.

தென்னிந்தியாவின் கலாச்சார தலைநகரமாக திகழும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 17ஆம் நூற்றாண்டு முதல், நாதஸ்வரம் என்ற இசைக்கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1955ஆம் ஆண்டுக்கு முன்பு “பிரதி மத்தியமம் ஸ்வரம்” கொண்டுதான் நாதஸ்வரத்தில் தாய் ராகங்கள் வாசிக்கப்பட்டன. பின்னர், 1955ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் நரசிங்கம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த இரங்க நாத ஆச்சாரி என்ற கைவினைக் கலைஞர் என்பவரால், நாதஸ்வரத்தில் ‘சுத்த மத்தியமம் ஸ்வர’த்தை கண்டுபிடி -த்து அதை நாதஸ்வர கருவியில் உருவாக்கினர். இந்த இசைக்கருவி எளிதாக இசைக்க முடிந்தது. இதனால் தான் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் எனப் பெயர் வந்தது.

நாதஸ்வர இசை வளர்ச்சிக்கு இந்த கருவி பெரிதும் உதவியது. தற்போது இந்த நாதஸ்வரம் கருவி 158 நாடுகளில் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

இந்த இசைக்கருவியை கொண்டு வாசித்த ராஜரத்தினம் பிள்ளை, காருக்குறிச்சி அருணாச்சலம் உள்பட புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான்களும் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்தை வாசித்து பெரும் புகழ் பெற்றனர். எனவே இந்த நாதஸ்வரத்தை திராவிடர்களின் இசைக்கருவி என அழைக்கப்படுகிறது.

நரசிங்கம்பேட்டையில் ஆச்சா மரங்களை கொண்டு நாதஸ்வரத்தை சுமார் 15 குடும்பத்தினர் தற்போது வடிவமைத்து வருகின்றனர். இந்த நாதஸ்வரம் 2 ½ அடி நீளத்தில் வெட்டி அதனை கடைந்து, உள்துவாரம் இட்டு, 12 துளைகளை மிகவும் கவனமாகயிட்டு உருவாக்கப்படு -கிறது.

இதையடுத்து தமிழ்நாட்டில் இதுவரை 46 பொருட்கள் புவிசார் குறியீடு பெறப்பட்டதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்தை சேர்த்து 10 பொருட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

5. ஆட்டிசம் விழிப்புணர்வு ஏற்படுத்த பாக் ஜலசந்தி கடலை 13.05 மணி நேரத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்த சிறுமி

ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 13.05 மணி நேரத்தில் ஆட்டிசம் பாதித்த மும்பை சிறுமி ஜியாராய் நீந்தி கடந்து சாதனை படைத்தார்.

மும்பையைச் சேர்ந்த கடற்படை வீரர் மதன்ராய் என்பவரின் மகள் ஜியாராய் (13). ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட இச்சிறுமி நீச்சல் பயிற்சியில் கைதேர்ந்தவர். ஏற்கெனவே பல சாதனைகளை படைத்துள்ளார்.

இந்நிலையில், ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை பாக் ஜலசந்தி கடலை நீந்தி சாதனை புரிவதற்காக ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மற்றும் பைபர் படகில் ஜியாராய், அவரது தந்தை மதன்ராய், பயிற்சியாளர் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட 10 பேர் தலைமன்னாருக்கு நேற்று முன்தினம் சென்றனர். நேற்று அதிகாலை 4.15 மணிக்கு நீந்தத் தொடங்கிய ஜியாராய் நேற்று மாலை 5.20 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியை வந்தடைந்தார்.

இவர் தலைமன்னார் – தனுஷ்கோடி இடையிலான 29 கி.மீ. தூரத்தை 13 மணி 5 நிமிடத்தில் நீந்தி கடந்துள்ளார். அரிச்சல் முனையில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, சிறுமி ஜியா ராய்க்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார்.

1. Which country has been connected to ‘Continental Europe Synchronous Area (CESA)’?

A) China

B) Ukraine 

C) Kazakhstan

D) Afghanistan

  • Ukraine has been recently connected to ‘Continental Europe Synchronous Area (CESA)’. It is an electricity grid spanning much of the continental Europe. This step will allow Ukraine to decouple its Power system from hostile Russia.

2. Which company launched India’s 1st fuel cell electric vehicle?

A) Ola

B) Toyota 

C) Honda

D) Tata

  • Union Minister Nitin Gadkari recently launched green hydrogen–based advanced fuel cell electric vehicle (FCEV). Named Toyota Mirai, it is the first–of–its–kind project in India that aims to create an ecosystem for Fuel Cell Electric Vehicles in the country. It is powered by hydrogen and is completely environment–friendly.

3. “Green Triangle” named after Mahatma Gandhi was inaugurated in which country?

A) Sri Lanka

B) Nepal

C) Madagascar 

D) Myanmar

  • A “Green Triangle” named after Mahatma Gandhi was jointly inaugurated in Madagascar’s capital Antananarivo, to commemorate India’s 75th year of independence.

4. ‘Dishaank’ is a land digitisation application of which Indian state?

A) Karnataka 

B) Kerala

C) Andhra Pradesh

D) Gujarat

  • The Dishaank application is implemented by Karnataka for digitisation of all land records (under the Bhoomi project).
  • The mobile application has been developed under the Karnataka Geographical Information System program of the Karnataka State Remote Sensing Applications Center (KSRSAC). This is expected to bring in transparency and reduce land–related disputes.

5. Which country recently passed ‘Sunshine Protection Act’ making daylight saving time (DST) permanent?

A) Russia

B) USA 

C) Brazil

D) Canada

  • The United States Senate unanimously passed a law–making daylight–saving time (DST) permanent. It has scrapped the biannual practice of putting clocks forward and back coinciding with the arrival and departure of winter.
  • After it is signed into a law, the practice of turning clocks back by an hour to standard time every November will stop.

6. ‘Bahini’ is a new scheme announced by which Indian state?

A) Gujarat

B) Sikkim 

C) Maharashtra

D) Karnataka

  • Sikkim government is set to announce “Bahini” scheme in its annual Budget. It aims to install vending machines to provide free sanitary pads in all its 210 secondary and senior secondary government schools. The main objective is to curb dropout of girls from schools and raise awareness about menstrual hygiene among children.

7. What is the rank of India in ‘Liberal Democracy Index’ of V–Dem Democracy Report 2022?

A) 75

B) 83

C) 93 

D) 99

  • Sweden–based V–Dem Institute (Varieties of Democracy research project) released a report, titled ‘Democracy Report 2022: Autocratization Changing Nature?’. India ranked 93 in the Liberal Democracy Index, and 100 in the Electoral Democracy Index.
  • India has figured in the top 10 autocratising countries of the world along with El Salvador, Turkey and Hungary.

8. What is India’s rank in the Henley Passport Index 2022?

A) 01

B) 25

C) 56

D) 83 

  • India’s passport now ranks at 83rd position in the Henley Passport Index 2022, up seven places from 90th rank in 2021. The Henley Passport Index ranks all the world’s passports according to the number of destinations their holders can access without a prior visa.
  • It is based on exclusive data from the International Air Transport Association (IATA). As per the 2022 rank, Japan and Singapore have the most powerful passports in the world.

9. As per the latest report published by the World Anti–Doping Agency, what is India’s rank in Anti–doping Rule Violations?

A) First

B) Second

C) Third 

D) Fourth

  • As per the latest report published by the World Anti–Doping Agency, 152 Anti–doping Rule Violations (ADRVs) were reported in India in 2019 and India is at third place in the list.
  • The 152 violations amount to 17% of the world total. India is only behind Russia (167) and Italy (157), while Brazil (78) is at fourth and Iran (70) at fifth.

10. In which of the following date “World Water Day” is observed?

A) March 20

B) March 21

C) March 22 

D) March 23

  • 22nd March is celebrated as the World Water Day. It is celebrated to advocate for the sustainable management of freshwater resources.
  • A theme related to the focus is selected every year by the UN organizations. The theme for 2022 is “Groundwater: Making the Invisible Visible”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!