TnpscTnpsc Current Affairs

21st February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

21st February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 21st February 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

February Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ஓய்வூதியம் வழங்குவதற்கான முழு செயல்முறையை -யும் டிஜிட்டல் மயமாக்கியுள்ள மாநிலம்/UT எது?

அ) தமிழ்நாடு

ஆ) புது தில்லி 

இ) புதுச்சேரி

ஈ) கோவா

  • தில்லி அரசு ஓய்வூதியம் வழங்கும் முழு செயல்முறையை -யும் டிஜிட்டல் மயமாக்கியுள்ளது. விண்ணப்பப்படிவத்தை நிரப்புவது முதல் ஓய்வூதியம் வழங்குவது வரை முழு செயல்முறையும் இனி இணையவழியிலேயே இருக்கும். தில்லியின் சமூக நலத்துறை இந்தச் செயல்முறையை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. மேலும், ஓய்வூதியம் வழங்குவதில் எந்தவித இடையூறும், தாமதமும் ஏற்படாது என்றும் அது அறிவித்துள்ளது.

2. தங்கப்பத்திரத்திட்டத்தின் முதிர்வுக்காலம் என்ன?

அ) 8 ஆண்டுகள் 

ஆ) 10 ஆண்டுகள்

இ) 5 ஆண்டுகள்

ஈ) 4 ஆண்டுகள்

  • ‘சவரன் தங்கப்பத்திரங்கள்’ என்பது இந்திய அரசாங்கத்தி -ன் சார்பாக ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் கிராம் தங்கத்தில் குறிப்பிடப்படும் அரசுப்பத்திரங்களாகும். சவரன் தங்கப்பத்திரத்தின் முதிர்வுக்காலம் 8 ஆண்டுகள்.
  • அத்தகைய தங்கப்பத்திரங்கள் வழங்கப்பட்ட நாளிலிருந்து ஐந்தாவது ஆண்டுக்குப் பிறகு முன்கூட்டியே திரும்பப் பெறுதல் அனுமதிக்கப்படுகிறது.

3. சமீப நாடாளுமன்றக்குழு அறிக்கையின்படி, MGNREGA இல் உத்தேச ‘உத்தரவாத வேலைநாட்கள்’ எத்தனை?

அ) 90

ஆ) 120

இ) 150 

ஈ) 350

  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச்சட்டத்தில் (MGNREGA) ‘உத்தரவாதமுள்ள வேலைநாட்களை 100இல் இருந்து 150ஆக அதிகரிக்க நாடாளுமன்றக்குழு பரிந்து
    -ரைத்துள்ளது. மேலும் இந்தத் திட்டம் கிராமப் புறங்களில் உள்ள பலருக்கு கடைசி விருப்பமாக உள்ளது என்பதையும் அவர்கள் எடுத்துரைத்தனர்.
  • சிவசேனை உறுப்பினர் பிரதாப்ராவ் ஜாதவ் தலைமையி -லான ஊரக வளர்ச்சி & பஞ்சாயத்து இராஜ் தொடர்பான நிலைக்குழு தனது அறிக்கையை அண்மையில் மக்களவையில் தாக்கல்செய்தது.

4. USAID உடன் இணைந்து SAMRIDH முன்னெடுப்பின் கீழ் புதிய கூட்டாண்மையை அறிவித்த நிறுவனம் எது?

அ) NITI ஆயோக் 

ஆ) சுகாதாரம் & குடும்பநல அமைச்சகம்

இ) ஐநா பெண்கள் அமைப்பு

ஈ) பெண்களின் உலகளாவிய அதிகாரமளிக்கும் நிதியம்

  • அடல் புத்தாக்க இயக்கம் (AIM), NITI ஆயோக் மற்றும் US பன்னாட்டு வளர்ச்சிக்கான முகமை (USAID) ஆகியவை Sustainable Access to Markets and Resources for Innovative Delivery of Healthcare (SAMRIDH)இன்கீழ் ஒரு புதிய கூட்டாண்மையை அறிவித்தன.
  • AIM, NITI ஆயோக் உடனான கூட்டு, சுகாதாரத்துறையில் செலவினங்களின் தரத்தை மேம்படுத்துதற்கு நீடித்த சுகாதார மாதிரிகள் மற்றும் புதுமையான நிதியளிப்பு வழிமுறைகளை அடைவதற்கான SAMRIDH திட்டத்தின் முயற்சிகளை ஊக்குவிக்கும்.

5. ‘வேளாண்மை மற்றும் நீர்வளத்துறையில்’ மிகவும் மேம்பட்ட முன்னேற விழையும் மாவட்டங்களில் முதல் இடத்தில் உள்ள மல்கங்கிரி உள்ள மாநிலம் எது?

அ) மேற்கு வங்கம்

ஆ) ஒடிஸா 

இ) தெலுங்கானா

ஈ) பஞ்சாப்

  • 2021 டிசம்பரில் வேளாண் மற்றும் நீர்வளத்துறையில் மிகவும் மேம்பட்ட ஐந்து மாவட்டங்களை NITI ஆயோக் அறிவித்துள்ளது. அப்பட்டியலில் ஒடிஸாவின் மல்கங்கிரி மாவட்டம் முதலிடத்திலுள்ளது. அதைத்தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்தின் சத்தர்பூரும், ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லாவும் உள்ளன. இது, NITI ஆயோக் வெளியிட்டுள்ள டெல்டா தரவரிசையின்படி உள்ளது.

6. ‘உலக நீடித்த வளர்ச்சி உச்சிமாநாட்டை’ நடத்துகிற நிறுவனம் எது?

அ) UNFCCC

ஆ) NITI ஆயோக்

இ) எரிசக்தி மற்றும் வள நிறுவனம் 

ஈ) பாபா அணு ஆராய்ச்சி மையம்

  • எரிசக்தி மற்றும் வளநிறுவனமானது (TERI) உலக நீடித்த வளர்ச்சி உச்சிமாநாட்டின் சமீபத்திய பதிப்பை நடத்தியது. ‘Towards a Resilient Planet: Ensuring a Sustainable and Equitable Future’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் நடைபெற்ற இந்த உச்சிமாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
  • கயானா குடியரசுத்தலைவர் டாக்டர் இர்பான் அலி மற்றும் ஐநாஇன் துணைப்பொதுச்செயலாளர் ஆகியோர் முக்கிய உரைகளை ஆற்றினர்.

7. 2022-23 மத்திய பட்ஜெட்டில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனாவுக்கான (PMAY) செலவினம் எவ்வளவு?

அ) `96,000 கோடி

ஆ) `75,000 கோடி

இ) `48,000 கோடி 

ஈ) `36,000 கோடி

  • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022-23ஆம் ஆண்டில் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின்கீழ் 80 இலட்சம் வீடுகளை கட்டிமுடிக்க `48,000 கோடி ஒதுக்கீடுசெய்தார்.
  • சமீபத்தில், ஆந்திரபிரதேசம், சத்தீஸ்கர், இமாச்சலபிரதேசம், கர்நாடகா மற்றும் இராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் 60,000க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டுவதற்கான திட்ட முன்மொழிவுகளுக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

8. டார்க்-நெட் சந்தைகளை ஒழிப்பதற்கான தீர்வுகளைக் கண்டறிய ‘டார்கத்தான்-2022’ முன்னெடுப்பை ஏற்பாடு செய்துள்ள நிறுவனம் எது?

அ) மத்திய புலனாய்வுப் பணியகம்

ஆ) போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் 

இ) அமலாக்க இயக்குநரகம்

ஈ) தேசிய புலனாய்வு நிறுவனம்

  • போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகமானது டார்க்-நெட் சந்தைகளை ஒழிப்பதற்கான தீர்வுகளைக்கண்டறிய ‘டார்கத்தான்-2022’ முயற்சியை ஏற்பாடு செய்துள்ளது.
  • ‘டார்க்நெட்’ மூலம் போதைப்பொருள் கடத்தலைத்தடுக்க பயனுள்ள தீர்வுகளைக் கண்டறிவதற்கு மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை ஈடுபடுத்துவதை இந்த முயற்சி நோக்கங்கொண்டுள்ளது. NCB என்பது உள்துறை அமைச்சகத்தின்கீழ் உள்ள ஒரு சட்ட அமலாக்க மற்றும் புலனாய்வு நிறுவனமாகும்.

9. எந்த நாட்டுடனான புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பம் தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது?

அ) இஸ்ரேல்

ஆ) ஆஸ்திரேலியா 

இ) அமெரிக்கா

ஈ) நியூசிலாந்து

  • இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பம் தொடர்பான ஒப்புதல் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளன. இது மலிவு விலை சூரிய மற்றும் தூய ஐட்ரஜனின் உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கம் எனக்கொண்டுள்ளது. 4ஆவது இந்தியா-ஆஸ்திரேலியா எரிசக்தி பேச்சுவார்த்தையின்போது இது கையெழுத்தானது. இந்தக்கூட்டத்திற்கு இந்திய தரப்பிலிருந்து மத்திய மின்சாரம், புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் RK சிங் மற்றும் ஆஸ்திரேலிய தரப்பிலிருந்து அந்நாட்டின் எரிசக்தி மற்றும் உமிழ்வு குறைப்பு அமைச்சர் ஆங்கஸ் டைலர் ஆகியோர் தலைமை வகித்தனர்.

10. PM கதி சக்தி தேசிய மாஸ்டர் திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?

அ) திறன் மேம்பாடு

ஆ) உட்கட்டமைப்பு மேம்பாடு 

இ) சுகாதார மேம்பாடு

ஈ) ஏற்றுமதி வளர்ச்சி

  • 16 அமைச்சகங்களை ஒன்றிணைத்து, ஒருங்கிணைந்த திட்டமிடல் & உட்கட்டமைப்பு இணைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தும் ‘கதிசக்தி’ என்பது ஒரு டிஜிட்டல் தளமாகும்.
  • சாலைப்போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சகத்தின் படி, பிரதமர் கதிசக்தி தேசிய மாஸ்டர் திட்டத்தின்கீழ் 22 பசுமையான விரைவுச்சாலைகள், பிற நெடுஞ்சாலைகள் உட்பட 23 முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் 35 பன்மாதிரி போக்குவரவுப் பூங்காக்கள் ஆகியவற்றை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. வளர்ச்சிக்கான என்ஜினாக வடகிழக்கு இந்தியா: பிரதமர் மோடி

21ஆம் நூற்றாண்டில் நாட்டின் வளர்ச்சிக்கான என்ஜினாக வடகிழக்கு இந்தியா இருக்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த 1987ஆம் ஆண்டு பிப்.20ஆம் தேதி யூனியன் பிரதேசமாக இருந்த அருணாசல பிரதேசம் மாநில அந்தஸ்து பெற்றது. அத்துடன் அந்த மாநிலத்துக்கு அருணாசல பிரதேசம் என்று பெயர்சூட்டப்பட்டு 50 ஆண்டுகளாகியுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த முதல் ஆளுநருக்கு விருது:

அருணாசல பிரதேசத்தின் முதல் துணைநிலை ஆளுநராக பதவி வகித்தவர் காலஞ்சென்ற கே.ஏ.ஏ.ராஜா. தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர். அருணாசல பிரதேசம் யூனியன் பிரதேசமாக இருந்தபோது, அதன் சமூக-பொருளாதார மற்றும் நிர்வாக வளர்ச்சிக்காக கே.ஏ.ஏ.ராஜா அளப்பரிய பங்களிப்பை வழங்கினாார். அவருக்கு அருணாசல பிரதேசத்தின் உயரிய விருதான ‘அருணாசல் ரத்னா’ வழங்க முடிவு செய்யப்பட்டது. அந்த விருதை மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் பி.டி.மிஸ்ரா கே.ஏ.ஏ.ராஜாவின் மூத்தமகள் விஜயலட்சுமியிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

2. மெட்ரோ இரயில் திட்டங்களை அமல்படுத்த தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களிடமிருந்து 16 திட்ட அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன: மத்திய அமைச்சர் தகவல்

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்திய வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது:

நகர்ப்புற மேம்பாட்டில், நகர்ப்புற போக்குவரத்து ஒருங்கிணைந்த பகுதி. இது மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம். இதனால், மெட்ரோ இரயில் திட்டங்கள் உட்பட நகர்ப்புற போக்குவரத்து கட்மைப்பை உருவாக்குவது.

அதற்கான நிதியை திரட்டுவது மாநில அரசுகளின் பொறுப்பு. மெட்ரோ இரயில் கொள்கை 2017இன்படி, நகரங்களில் இது போன்ற திட்டங்களுக்கான நிதி உதவியை, திட்டங்களின் சாத்தியம், நிதி ஆதாரம், மாநிலங்களின் விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் மத்திய அரசு வழங்கிவருகிறது. மத்திய அரசின் நிதி உதவிக்காக குஜராத் அரசு எந்த புதிய மெட்ரோ இரயில் திட்டத்தையும் சமர்பிக்கவில்லை.

தமிழ்நாடு, தில்லி, மகாராஷ்டிரா, கேரளா, உத்தரப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தரகாண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து மெட்ரோ இரயில் திட்டங்களை அமல்படுத்த 16 திட்ட அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

3. குடிதண்ணீர் தரத்தை பரிசோதிப்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள ஆய்வகங்கள் குறித்த விவரங்கள்

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ஜல் சக்தி இணை அமைச்சர் திரு. ப்ரகலாத் சிங் படேல், கீழ்காணும் தகவல்களை வெளியிட்டார்.

மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் அளித்துள்ள தகவல்களின் படி, மாநிலம், மாவட்டம், துணைப்பிரிவு மற்றும்/அல்லது வட்ட அளவில் 2021 குடிநீர் தர சோதனை ஆய்வகங்கள் இதுவரை அமைக்கப்பட்டுள்ளன.

கிராமப்புற வீடுகள், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் உள்ள குழாய் நீர் இணைப்புக்கள் குறித்த தகவல்கள் மாநிலம்/யூனியன் பிரதேசங்கள், மாவட்டம் மற்றும் கிராமம் வாரியாக ஜல் ஜீவன் இயக்கத்தின் தகவல் பலகை இணைப்பான https://ejalshakti.gov.in/jjmreport/JJMIndia.aspx எனும் முகவரியில் கிடைக்கிறது:

தமிழ்நாட்டில் மாநில அளவில் 1 ஆய்வகமும், மாவட்ட அளவில் 31 ஆய்வகங்களும், துணைப்பிரிவு மற்றும்/அல்லது வட்ட அளவில் 81 ஆய்வகங்களும் என மாநிலம் முழுவதும் 113 ஆய்வகங்கள் உள்ளன.

2019 ஆகஸ்ட் 15 அன்று தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் 126.89 லட்சம் வீடுகளும், அவற்றில் 21.76 லட்சம் வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்புக்களும் இருந்த நிலையில், 29.21 லட்சம் வீடுகளில் தற்போது குடிநீர் குழாய் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

4. ஸ்வாமித்வா திட்டத்தின் நிலை: தமிழ்நாடு குறித்த விவரங்கள்

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் கபில் மோரேஷ்வர் படீல் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

கிராமப்புற பகுதிகளில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆய்வு செய்து வரைபடமிடுதலுக்கான மத்திய திட்டமான ஸ்வாமித்வா, 2020-21-ம் நிதியாண்டில் தொடங்கப்பட்டது. கிராமங்களில் உள்ள வீடுகளின் உரிமையாளர்களுக்கு சொத்து அட்டைகள்/ஆவணங்கள் வழங்குவதன் மூலம் சொத்துக்கான உரிமையை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

பஞ்சாயத்துராஜ் அமைச்சகம், இந்திய ஆய்வு அமைப்பு, மாநில வருவாய் துறை, மாநில பஞ்சாயத்துராஜ் துறை, மற்றும் தேசிய தகவல் மையம் ஆகியவை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன. இத்திட்டத்திற்காக இதுவரை 29 மாநிலங்கள் சர்வே ஆஃப் இந்தியா எனப்படும் இந்திய ஆய்வு அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

நாடு முழுவதும் 103,644 கிராமங்களில் ட்ரோன் விமானங்கள் இயக்கப்பட்டு, 28,072 கிராமங்களில் 36,56,173 எண்ணிக்கையிலான சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 2 கிராமங்களிலும், புதுச்சேரியில் 19 கிராமங்களிலும் இத்திட்டத்தின் கீழ் ட்ரோன் விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.

5. தமிழ்நாடு மற்றும் அதன் சாத்தியமான வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை ஆராய்தல்: இந்தியா-ஜப்பான் இடையே இணைய கருத்தரங்கு

சுதந்திர இந்தியாவின் 75ஆம் ஆண்டு தின கொண்டாட்டம் மற்றும் இந்தியா-ஜப்பான் தூதரக உறவின் 70ஆவது ஆண்டை முன்னிட்டு சென்னையில் உள்ள வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி வாரிய (APEDA) அலுவலகம், தமிழ்நாடு மற்றும் அதன் சாத்தியமான வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை ஆராய்தல் குறித்த இந்தியா – ஜப்பான் இணைய கருத்தரங்கை இன்று நடத்தியது.

இந்த இணைய கருத்தரங்கு, முருங்கை, செவ்வாழை, தினைகள், மூலிகைகள், மா மற்றும் அவற்றின் மதிப்பு கூட்டு தயாரிப்புகள், கொய்யா, மாதுளை, நெல்லி மற்றும் எலுமிச்சைபோன்ற தமிழ்நாட்டின் ஏற்றுமதிக்கு சாத்தியமான வேளாண் பொருட்கள்மீது கவனம் செலுத்தியது.

1. Which state/UT has digitised the whole process of disbursement of Pension?

A) Tamil Nadu

B) New Delhi 

C) Puducherry

D) Goa

  • The Delhi government has digitised the whole process of disbursement of Pension. The entire process, from filling the application form to disbursement of pension, will be online. The Social Welfare Department of the state has implemented the process successfully. It also announced that there will be no hindrance or delay in pension cases.

2. What is the maturity period of the Sovereign gold bond scheme?

A) 8 years 

B) 10 years

C) 5 years

D) 4 years

  • Sovereign gold bonds are government securities denominated in grams of gold, issued by the RBI on behalf of the Government of India. The maturity period of the sovereign gold bond is eight years. The premature redemption is permitted after the fifth year from the date of issue of such gold bonds on the interest payout date.

3. As per a recent Parliamentary committee report, what is the proposed ‘guaranteed number of days of work’ in MGNREGA?

A) 90

B) 120

C) 150 

D) 350

  • A Parliamentary committee has recommended increase in guaranteed days of work from 100 to 150, in the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) They also highlighted that the scheme is a last “fall–back” option for many in the rural areas. The Standing Committee on Rural Development and Panchayati Raj, headed by Shiv Sena member Prataprao Jadhav tabled the report in Lok Sabha.

4. Which institution announced a new partnership under SAMRIDH initiative, along with USAID?

A) NITI Aayog 

B) Ministry of Health and Family Welfare

C) UN Women

D) Women’s Global Empowerment Fund

  • Atal Innovation Mission (AIM), NITI Aayog, and the U.S. Agency for International Development (USAID) announced a new partnership under the Sustainable Access to Markets and Resources for Innovative Delivery of Healthcare (SAMRIDH) initiative.
  • The partnership with AIM, NITI Aayog will promote SAMRIDH’s efforts to reach sustainable healthcare models and innovative financing mechanisms to improve the quality of spending in the health sector.

5. Malkangiri, which topped the most improved aspirational districts in ‘Agriculture and Water Resources sector’, is in which state?

A) West Bengal

B) Odisha 

C) Telangana

D) Punjab

  • NITI Aayog has announced the five most improved aspirational districts in the Agriculture and Water Resources sector for December 2021. Malkangiri in Odisha tops the list. It is followed by Chhatarpur in Madhya Pradesh and Baramulla in Jammu and Kashmir. This is as per the Delta Rankings published by NITI Aayog.

6. Which institution hosts the ‘World Sustainable Development Summit’?

A) UNFCCC

B) NITI Aayog

C) The Energy and Resources Institute 

D) Bhabha Atomic Research Centre

  • The Energy and Resources Institute (TERI) hosted the latest edition of the World Sustainable Development Summit. Prime Minister Modi inaugurated the summit, which was based on the theme ‘Towards a Resilient Planet: Ensuring a Sustainable and Equitable Future’.
  • The keynote addresses will be delivered by President of Republic of Guyana Dr Irfaan Ali and Deputy Secretary–General of the UN.

7. What is the outlay of Prime Minister Awas Yojana (PMAY), in the Union Budget 2022–23?

A) Rs 96000 Cr

B) Rs 75000 Cr

C) Rs 48000 Cr 

D) Rs 36000 Cr

  • Finance Minister Nirmala Sitharaman allocated ₹48,000 crore towards completion of 80 lakh houses under Prime Minister Awas Yojana (PMAY) in rural and urban areas during 2022–23.
  • Recently, the Ministry of Housing and Urban Affairs approved project proposals for over 60,000 houses across five states — Andhra Pradesh, Chhattisgarh, Himachal Pradesh, Karnataka and Rajasthan.

8. Which institution has organised ‘Darkathon –2022’ initiative to find solutions to counter dark–net markets?

A) Central Bureau of Investigation

B) Narcotics Control Bureau 

C) Enforcement Directorate

D) National Investigation Agency

  • Narcotics Control Bureau (NCB) has organised ‘Darkathon –2022’ initiative to find solutions to counter dark–net markets.
  • The initiative aims at involving students, youth and technical experts to find effective solutions to counter drug trafficking through darknet. NCB is a Law enforcement and intelligence agency under the Ministry of Home Affairs.

9. India signed a LoI on New and Renewable energy technology with which country?

A) Israel

B) Australia 

C) USA

D) New Zealand

  • India and Australia have signed a letter of intent (LoI) on New and Renewable energy technology. It aims to scale up manufacturing and deployment of ultra low–cost solar and clean hydrogen. The LoI was signed during the 4th India – Australia Energy Dialogue. The dialogue was co–chaired by Union Minister for Power and New & Renewable Energy, R.K. Singh and his Australian counterpart.

10. What is the main objective of PM Gati Shakti National Master Plan?

A) Skill Development

B) Infrastructure Development 

C) Healthcare Development

D) Export Development

  • Gati Shakti is a digital platform, which will bring 16 ministries together, for integrated planning and coordinated implementation of infrastructure connectivity projects.
  • Under the PM Gati Shakti National Master Plan (NMP), the government plans to develop 22 greenfield expressways, 23 key infrastructure projects including other highways and 35 multi–modal logistics parks (MMLPs), as per the Ministry of Road, Transport and Highways.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!