TnpscTnpsc Current Affairs

21st April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

21st April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 21st April 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. உலக வங்கியின் ஏப்ரல் அறிக்கையின்படி, 2022-23 நிதியாண்டிற்கான இந்தியாவின் GDP கணிப்பு என்ன?

அ) 7.5%

ஆ) 8.0% 

இ) 8.5%

ஈ) 9.0%

  • 2022-23 நிதியாண்டிற்கான இந்தியாவின் ஜிடிபி (GDP) முன்கணிப்பை உலக வங்கி 8.7%இலிருந்து 8%ஆகக் குறைத்துள்ளது. இது உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் ஏற்படும் மோசமான விநியோகத் தடைகள் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்க இடர்களை மேற்கோளிட்டுள்ளது. உலக வங்கி, ஆப்கானிஸ்தானைத் தவிர்த்து தெற்காசியாவிற்கான அதன் வளர்ச்சி மதிப்பீட்டை 6.6%ஆகக் குறைத்தது.
  • ஆசிய வளர்ச்சி வங்கி கண்ணோட்டம் – 2022 ஆனது முன்னதாக, இந்தியா 2022-23 நிதியாண்டில் 7.5% வளர்ச்சியைக்கொண்டிருக்கும் என மதிப்பிட்டது.

2. 2023 – COP28 காலநிலை உச்சிமாநாடு நடைபெறும் நாடு எது?

அ) இந்தியா

ஆ) ஐக்கிய அரபு அமீரகம் 

இ) ஆஸ்திரேலியா

ஈ) UK

  • 2023 – COP28 காலநிலை உச்சிமாநாட்டை நடத்தும் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஐநா காலநிலை உச்சிமாநாடானது அபுதாபியில் நடைபெற உள்ளது. அபுதாபியில் வரும் ஜூன் மாதம் முதல் 1 முறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிப் பைகளுக்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 2050ஆம் ஆண்டுக்குள் கார்பன் நடுநிலையை அடைவதை UAE தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

3. ‘SMBHAV’ என்னும் தனது டிஜிட்டல் மாற்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய இந்திய பொதுத்துறை வங்கி எது?

அ) பாரத வங்கி

ஆ) கனரா வங்கி

இ) யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 

ஈ) பஞ்சாப் தேசிய வங்கி

  • யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆனது அண்மையில் ‘UnionNXT’ மற்றும் டிஜிட்டல் மாற்ற திட்டமான, ‘SMBHAV’ என்ற அதன் சூப்பர்-செயலியையும் அறிமுகப்படுத்தியது. 2022-23 நிதியாண்டில் சுமார் `1,000 கோடி முதலீட்டில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

4. ‘கஞ்சார்’ என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடக்கும் கூட்டு சிறப்புப்படைப்பயிற்சியாகும்?

அ) ஓமான்

ஆ) சிங்கப்பூர்

இ) கிர்கிஸ்தான் 

ஈ) நேபாளம்

  • இந்தியா மற்றும் கிர்கிஸ்தானுக்கு இடையே வளர்ந்து வரும் பாதுகாப்பு உறவுகளின் பிரதிபலிப்பாக 2 வார கால கூட்டு சிறப்புப் படைப் பயிற்சியை மேற்கொண்டன.
  • இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பக்லோவில் நடைபெற்ற இப்பயிற்சி சமீபத்தில் நிறைவடைந்தது. போர் துப்பாக்கிச் சூடு, துப்பாக்கிச் சூடு, மலைகளில் பிழைத்திருப்பது மற்றும் பணயக்கைதிகள் மீட்புப்பயிற்சிகள் ஆகியவை பயிற்சியின்போது பயிற்சி செய்யப்பட்டன.

5. உலக அளவில் அதிகளவு பனையெண்ணெயை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நாடு எது?

அ) இந்தியா

ஆ) சீனா

இ) இந்தோனேசியா 

ஈ) ஐக்கிய அரபு அமீரகம்

  • இந்தோனேசியா உலகில் அதிகளவு பனையெண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடாக உள்ளது. தற்போது, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால், பனையெண்ணெய் நெருக்கடியை இந்தோனேசியா எதிர்கொண்டு வருகிறது.
  • உக்ரைன் போரினால் ஏற்பட்ட உணவு & எரிசக்திக்கான விலையேற்றம் 40 மில்லியனுக்கும் அதிகமான மக்களை தீவிர வறுமையில் தள்ளும். உலகில் அதிகளவு சமையல் எண்ணெயை நுகரும் நாடான இந்தியா, அதன் பாமாயில் இறக்குமதிக்கு சரிபாதிக்கும் மேல் இந்தோனேசியாவை சார்ந்துள்ளது.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘மிஷன் ரப்தார்’ என்பதுடன் தொடர்புடைய நிறுவனம் எது?

அ) NITI ஆயோக்

ஆ) இந்திய இரயில்வே 

இ) இந்திய தேர்தல் ஆணையம்

ஈ) இந்திய கடலோர காவல்படை

  • 2016-17இல் இந்திய இரயில்வே அறிமுகப்படுத்திய ‘மிஷன் ரப்தார்’, 2021-22க்குள் அஞ்சல்/விரைவு இரயில்களுக்கு சராசரியாக 50 கிமீ வேகத்தையும், சரக்கு இரயில்களுக்கு மணிக்கு 75 கிமீ வேகத்தையும் இலக்காகக் கொண்டது.
  • கம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (சிஏஜி) சமீபத்தில் நடத்திய தணிக்கையில், கடந்த சில ஆண்டுகளாக இரயில்களின் பயண நேரம் அதிகரித்துள்ளதையும், ஒட்டு மொத்த இரயில்களின் வரும் நேரம் குறைந்துள்ளதும் கண்டறியப்பட்டது. அஞ்சல்/விரைவு இரயில்களின் நேரக் கட்டுப்பாடு 79 சதவீதத்திலிருந்து (2012-13) 69.23%ஆக (2018-19) நிறுத்த நிலையங்களில் குறைந்துள்ளது.

7. விளையாட்டில் ஊக்கமருந்தின் பயன்பாட்டை ஒழிப்பத -ற்காக, $72,124-ஐ இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் கீழ்காணும் எந்நிறுவனத்திடம் வழங்கியது?

அ) உலக வங்கி

ஆ) சர்வதேச ஒலிம்பிக் சங்கம்

இ) UNESCO 

ஈ) UNICEF

  • மத்திய இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், விளையாட்டில் ஊக்கமருந்துப்பயன்பாட்டை ஒழிப்பதற்காக UNESCO நிதியத்திற்கு $72,124 அமெரிக்க டாலர்களை வழங்கியது.
  • கடந்த 2021ஆம் ஆண்டில் முதன்முறையாக இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டமைச்சகம் UNESCO நிதியத்திற்கு $28172 டாலர்களை வழங்கியது.
  • விளையாட்டில் ஊக்கமருந்தின் பயன்பாட்டை எதிர்ப்பது தொடர்பான ‘கோபன்கேகன் பேரறிவிப்பை’ கடந்த 2003 இல் இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.

8. ‘1994ஆம் ஆண்டு துட்ஸி இனப்படுகொலை குறித்த பன்னாட்டு பிரதிபலிப்பு நாளானது’ எந்நாட்டில், ஐநா’ஆல் ஏப்.7 அன்று அனுசரிக்கப்படுகிறது?

அ) ருவாண்டா 

ஆ) தென்னாப்பிரிக்கா

இ) எத்தியோப்பியா

ஈ) எகிப்து

  • கடந்த 1994ஆம் ஆண்டு ருவாண்டாவில் நிகழ்ந்த துட்ஸி இனப்படுகொலையின் குறித்த பன்னாட்டு நாளை ஏப்.7 அன்று UNESCO நினைவுகூருகிறது. 2003’இல் ஐநா பொதுச்சபையால் இந்நாள் நிறுவப்பட்டது.
  • ஹுட்டு தீவிரவாத தலைமையிலான அரசாங்கத்தால் சிறுபான்மையினரான துட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை இந்நாள் குறிக்கிறது.

9. விநியோகச் சங்கிலி நிதியளிப்பை ஆதரிப்பதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியுடனான (ADB) பகுதி உத்தரவாத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வங்கி எது?

அ) YES வங்கி

ஆ) ஆக்சிஸ் வங்கி 

இ) HDFC வங்கி

ஈ) பாரத ஸ்டேட் வங்கி

  • ஆக்சிஸ் வங்கியானது ஆசிய வளர்ச்சி வங்கியுடன் (ADB) இணைந்து $150 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒரு பகுதி உத்தரவாத ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இவ்வொப்பந்தத்தின்கீழ் சுற்றுச்சூழல், சமூக & நிர்வாகம் மற்றும் பிற முன்னுரிமைத் துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

10. ஒரு புதிய நூலான, “The Maverick Effect”, எந்த இந்திய நிறுவனத்தின் உருவாக்கத்தை விவரிக்கிறது?

அ) NITI ஆயோக்

ஆ) NASSCOM 

இ) ISRO

ஈ) FICCI

  • The Maverick Effect” என்ற தலைப்பிலான ஒரு நூல் மென்பொருள் மற்றும் IT சேவை நிறுவனங்களின் உச்ச அமைப்பான மென்பொருள் & சேவை நிறுவனங்களின் தேசிய சங்கம் (NASSCOM) உருவானதை விவரிக்கிறது.
  • இது NASSCOM-இன் இணை நிறுவனரும் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருமான ஹரிஷ் மேத்தாவால் எழுதப்பட்டது. தற்போது, இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் மதிப்பு $200 பில்லியன் டாலர்களாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சுமார்ட் சிட்டி 2020: சென்னை மாநகராட்சிக்கு 2 விருது

நீர்நிலைகள் சீரமைப்பு, கரோனா தடுப்புக்கான உட் கட்டமைப்பு உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கியதற்காக மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி 2020 என்ற தலைப்பில் இரண்டு விருதுகளை பெருநகர சென்னை மாநகராட்சி பெற்றுள்ளது.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் நாடு முழுவதும் சிறந்து விளங்கும் நகரங்களுக்கு ஸ்மார்ட் சிட்டி விருது வழங்கப்படுகிறது.

2. அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸின் பாதுகாப்பு ஆலோசகராகிறார் இந்திய வம்சாவளி பெண்

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸின் பாதுகாப்பு ஆலோசகராக, அமெரிக்க போர் கப்பலின் கமாண்டராக பணியாற்றிய இந்திய வம்சாவளி பெண் சாந்தி சேதி நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் நெவடா மாகாணத்தில் உள்ள ரெனோ நகரில் பிறந்தவர் சாந்தி சேதி. இவரது தாய் கனடாவைச் சேர்ந்தவர். தந்தை இந்தியாவிலிருந்து கடந்த 1960களில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்.

சாந்தி சேதி கடந்த 1993-ம் ஆண்டில், அமெரிக்க கடற்படையில் சேர்ந்தார். கடந்த 2010 முதல் 2012-ம் ஆண்டு வரை யுஎஸ்எஸ் டெகாடர் என்ற அமெரிக்க போர் கப்பலின் கமாண்டராக பணியாற்றினார். இந்தியா வந்த, அமெரிக்க போர் கப்பலின் முதல் பெண் கமாண்டரும் இவர்தான். தற்போது அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸின் செயலாளராகவும், பாதுகாப்பு ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

3. புதுவைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அ. தினகர ராவ், தேசிய அளவிலான ‘புகழ்பெற்ற விஞ்ஞானி’ விருது பெற்றார்

வி எச் என் செந்திகுமார நாடார் தன்னாட்சி கல்லூரியில் “தாவரத்தின் சமீபத்திய போக்குகள் மற்றும் சவால்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற தேசிய மாநாட்டில், புதுவைப் பல்கலைக்கழகத்தின் உயிரி தகவலியல் துறை பேராசிரியர் அ தினகரராவுக்கு தாவர அறிவியலில் அவரது பங்களிப்பிற்காக தாவர ஆராய்ச்சிக்கான சங்கத்தின் மதிப்புமிக்க ‘புகழ்பெற்ற விஞ்ஞானி’ விருது வழங்கப்பட்டது.

1. As per the World Bank’s April update, what is India’s GDP forecast for fiscal year 2022–23?

A) 7.5%

B) 8.0% 

C) 8.5%

D) 9.0%

  • The World Bank has cut India’s GDP forecast for fiscal year 2022–23 to 8% from 8.7% predicted earlier, citing worsening supply bottlenecks and rising inflation risks caused by Russia’s invasion of Ukraine. The World Bank lowered its growth estimate by a full percentage point for South Asia, excluding Afghanistan, to 6.6%.
  • Asian Development Bank Outlook 2022 earlier said that India is estimated to have a growth rate of 7.5% for 2022–23.

2. Which is the host country of COP28 Climate Summit 2023?

A) India

B) UAE 

C) Australia

D) UK

  • The United Arab Emirates has been selected as the host country of COP28 Climate Summit 2023. The UN Climate Summit is to be held at Abu Dhabi.
  • Abu Dhabi announced that it would start banning single–use plastic bags from June. UAE has also declared it aims to achieve carbon neutrality by 2050.

3. Which Indian public sector bank launched its digital transformation project ‘SMBHAV’?

A) State Bank of India

B) Canara Bank

C) Union Bank of India 

D) Punjab National Bank

  • Union Bank of India recently launched its super–app named UnionNXT and digital transformation project SMBHAV. The project has been launched with an investment outlay of around Rs 1,000 crore for the financial year 2022–23 (FY23).

4. ‘Khanjar’ is a Joint Special Forces Exercise held between India and which country?

A) Oman

B) Singapore

C) Kyrgyzstan 

D) Nepal

  • India and Kyrgyzstan carried out a two–week–long Joint Special Forces Exercise, in reflection of growing defence ties between the two countries.
  • The exercise at Bakloh in Himachal Pradesh concluded recently. Combat shooting, sniping, survival in mountains and hostage rescue drills were practised during the exercise.

5. Which country is the world’s largest producer and exporter of Palm Oil?

A) India

B) China

C) Indonesia 

D) UAE

  • Indonesia is the world’s largest producer and exporter of Palm Oil. At present, the country is facing a palm oil crisis, due to Russia’s invasion of Ukraine.
  • Massive price spikes for food and energy caused by Ukraine War will push over 40 million people into extreme poverty. India, the world’s biggest buyer of edible oil, relies on Indonesia for over half of its palm oil imports.

6. Mission Raftaar, which was seen in the news recently, was associated with which institution?

A) NITI Aayog

B) Indian Railways 

C) Election Commission of India

D) Indian Coast Guard

  • Mission Raftaar introduced by the Indian Railways in 2016–17 targeted an average speed of 50 kmph for mail/express and 75 kmph for freight trains by 2021–22.
  • A recent audit by the Comptroller and Auditor General (CAG) found that travel time of trains has increased over the past few years, and overall punctuality of trains has declined. The punctuality of mail/express trains over IR declined from 79% (2012–13) to 69.23 per cent (2018–19) at the terminating stations.

7. Ministry of Youth Affairs and Sports released USD 72,124 to which institution, for Elimination of Doping in Sport?

A) World Bank

B) International Olympic Association

C) UNESCO 

D) UNICEF

  • Ministry of Youth Affairs and Sports released USD 72,124 to UNESCO Fund for Elimination of Doping in Sport. For the first time in 2021, Ministry of Youth Affairs and Sports made contribution of USD 28172 towards the UNESCO Fund. Copenhagen Declaration on Anti–Doping in Sport was agreed to by the Government of India in 2003.

8. ‘International Day of Reflection on 1994 Genocide against the Tutsi’ in which country, is observed on 7 April by the UN?

A) Rwanda 

B) South Africa

C) Ethiopia

D) Egypt

  • On 7 April, UNESCO commemorates the International Day of Reflection on the 1994 Genocide against the Tutsi in Rwanda. The day was established by the United Nations General Assembly in 2003.
  • The date marks the beginning of the genocide perpetrated against members of the Tutsi minority by the Hutu extremist–led government.

9. Which bank signed partial guarantee pact with Asian Development Bank (ADB) to support supply chain financing?

A) YES Bank

B) Axis Bank 

C) HDFC Bank

D) State Bank of India

  • Axis Bank has collaborated with Asian Development Bank (ADB) for a partial guarantee programme with initial outlay of USD 150 million.
  • The programme aims at supporting supply chain financing for impact sectors. Under the agreement, special focus will be towards ESG (environmental, social & governance) and other priority sectors.

10. The new book, “The Maverick Effect” narrates the formation of which Indian institution?

A) NITI Aayog

B) NASSCOM 

C) ISRO

D) FICCI

  • The book titled “The Maverick Effect” narrates the formation of National Association of Software and Service Companies (NASSCOM), the apex body of software and IT service companies. It is authored by Harish Mehta, the co–founder and first elected Chairperson of NASSCOM. At present, the Indian IT industry is valued at USD 200 billion.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!