Tnpsc

20th & 21st August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

20th & 21st August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 20th & 21st August 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

20th & 21st August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினமாக (Partition Horrors Remembrance Day) அறிவிக்கப்பட்டுள்ள தேதி எது?

அ) ஆகஸ்ட் 10

ஆ) ஆகஸ்ட் 12

இ) ஆகஸ்ட் 14 

ஈ) ஆகஸ்ட் 18

  • நமது மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்களின் நினைவாக, ஆகஸ்ட்.14ஆம் தேதி, பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

2. அமெரிக்க கடற்படை தலைமையிலான தென்கிழக்கு ஆசிய கூட்டுறவு & பயிற்சி (SEACAT) என்ற ராணுவப் பயிற்சியில் இந்திய கடற்படை பங்கேற்றுள்ளது. இந்தப் பயிற்சி எங்கே நடைபெற்றது?

அ) ஆஸ்திரேலியா

ஆ) புருனே

இ) சிங்கப்பூர் 

ஈ) திமோர்-லெஸ்டே

  • சிங்கப்பூரில் அமெரிக்க கடற்படை தலைமையிலான தென்கிழக்கு ஆசிய கூட்டுறவு & பயிற்சி என்ற (SEACAT) இராணுவப் பயிற்சியில் இந்திய கடற்படை பங்கேற்றது. ஒன்றிணைந்து செயற்படுவதை மேம்படுத்துவது, கடல்சார் பாதுகாப்பு குறித்த சிக்கல்களைப் பகிர்ந்து கொள்வது மற்றும் விதிகள் அடிப்படையிலான பன்னாட்டு ஒழுங்கை பராமரிப்பது இந்த SEACAT-2021’இன் முக்கிய நோக்கமாகும்.
  • பயிற்சியில் பங்கேற்கும் மற்ற நாடுகளுள் ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், புருனே, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, மாலத்தீவு, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், தென் கொரியா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, திமோர்-லெஸ்டே, ஐக்கிய இராச்சியம் மற்றும் வியத்நாம் ஆகியவை அடங்கும். முதன்முதலில் கடந்த 2002ஆம் ஆண்டில் இந்த SEACAT பயிற்சி நடத்தப்பட்டது.

3. முதன்முறையாக டிரோன் தடயவியல் ஆய்வகம் & ஆராய்ச்சி மையத்தை தொடங்கியுள்ள மாநிலக் காவல்துறை எது?

அ) தமிழ்நாடு

ஆ) இராஜஸ்தான்

இ) கேரளா 

ஈ) பீகார்

  • அதிகரித்துவரும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் கேரள மாநிலக் காவல்துறை, முதன்முறையாக, டிரோன் தடயவியல் ஆய்வகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை தொடங்கியுள்ளது. டிரோன்களின் அச்சுறுத்தல் அம்சங்களுக்கு தீர்வுகாண்பதோடு, ஆளில்லா வான்வழி வாகனங்களின் பயன்பாட்டுப் பகுதியையும் கண்காணிக்கும் பணியை இந்த ஆய்வகம் & ஆராய்ச்சி மையம் மேற்கொள்ளும். கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், இந்தத் தடயவியல் ஆய்வகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை திறந்துவைத்தார்.

4. நடப்பாண்டு உலக உயிரி எரிபொருள் நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ) Promotion of Biofuels for a Better Environment 

ஆ) Promote Green Fuels & Save Earth

இ) End use of Fossil Fuels

ஈ) Save Green Planet

  • வழக்கமான புதைபடிவ எரிபொருட்களுக்கு மாற்றாக புதைபடிவம் சாராத எரிபொருட்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் ஆக.10 அன்று உலக உயிரி எரிபொருள் நாள் அனுசரிக்கப்படுகிறது. உயிரி எரிபொருள் துறையில் அரசு மேற்கொண்ட பல்வேறு முன்னெடுப்புகளையும் இந்நாள் சிறப்பிக்கிறது. நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருள், “Promotion of Biofuels for a Better Environment” ஆகும்.

5. உலக உடலுறுப்புதான நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ) ஆகஸ்ட் 10

ஆ) ஆகஸ்ட் 13 

இ) ஆகஸ்ட் 14

ஈ) ஆகஸ்ட் 16

  • மக்கள் தங்களின் விலைமதிப்பற்ற உடலுறுப்புகளை தானம் செய்வதை ஊக்குவிப்பதற்காக, ஆண்டுதோறும் ஆக.13 அன்று உலக உடலுறுப்பு தான நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • ஆண்டுதோறும், உடலுறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருப்போரில் சுமார் ஐந்து இலட்சம் பேர், உடலுறுப்பு கிடைக்காத காரணத்தினால் மரணிக்கிறார்கள். உடலுறுப்பு மாற்று சிகிச்சைக்கு காத்திருப்போரின் எண்ணிக்கைக்கும், உடலுறுப்பு கிடைக்கும் எண்ணிக்கைக்கும் இடையே பெருமளவு வித்தியாசம் உள்ளது. உடலுறுப்பு தானம் என்பது நோயுற்று, உடலுறுப்பு பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மற்றொருவர் அந்த உடலுறுப்பைத் தானமாக அளிப்பதாகும். இதை, ஒருவர், உயிருடன் இருக்கும்போதோ அல்லது இறந்தபிறகோ மேற்கொள்ளமுடியும். சிறு நீரகம், நுரையீரல், இருதயம், கண், சிறு குடல், கல்லீரல், கணையம், விழிப்படலம், தோல் திசுக்கள், எலும்புத்திசுக்கள், இதயக்குழாய்கள் மற்றும் நரம்புகள் ஆகியவற்றை ஒருவர் தானமாக வழங்கவியலும்.

6. சமீபத்தில் உலக நிழற்பட நாள் கடைப்பிடிக்கப்பட்ட தேதி எது?

அ) ஆகஸ்ட் 18

ஆ) ஆகஸ்ட் 19 

இ) ஆகஸ்ட் 20

ஈ) ஆகஸ்ட் 21

  • நிழற்படக்கலையையும், அதில் ஈடுபட்டிருக்கும் கலைஞர்களையும் பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட்.19 அன்று உலக நிழற்பட நாள் கொண்டாடப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டில் லூயிஸ் டாகுவேரே என்பவர் ‘டாகுரியோடைப்’ என்ற நிழற்பட செயல்முறையை வடிவமைத்தார். பிரான்ஸ் அகாடமி இம்முயற்சியை 1839 ஜன.9 அன்று அறிவித்தது. அதன்பின், 1839’இல் பிரான்ஸ் நாட்டு அரசு, ஆக.19 அன்று ‘டாகுரியோடைப்’ செயல்பாட்டை உலக மக்கள் அனைவரும் இலவசமாகப் பயன்படுத்தலாம் என அறிவித்தது.
  • அந்த ஆகஸ்ட்.19ஆம் தேதிதான் உலகம் முழுவதும் நிழற்பட நாளாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. 1826’இல், பிரான்ஸ் நாட்டவரான ஜோசப் நைஸ்போர் நீப்ஸ் என்பவர், முதல் நிலையான நவீன நிழற்படத்தை எடுத்தார்.

7. உலக மனிதநேய நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ) ஆகஸ்ட் 18

ஆ) ஆகஸ்ட் 19 

இ) ஆகஸ்ட் 20

ஈ) ஆகஸ்ட் 21

  • உலக மனிதநேய நாள் (World Humanitarian Day) என்பது மனிதநேயப் பணியாளர்களையும், மனிதநேய காரணங்களுக்காக தம் இன்னுயிரை இழந்தவர்களையும் நினைவுகூரும் ஒரு சிறப்பு நாளாகும். 2003 ஆக.19 அன்று பாக்தாத்தில் உள்ள ஐநா தலைமையகத்தில் நிகழ்ந்த வெடி குண்டுத்தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். அதனை நினைவு கூரும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட்.19 அன்று உலக மனிதநேய நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

8. இந்தியாவில் சமூக நல்லிணக்க நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) ஆகஸ்ட் 20 

ஆ) ஆகஸ்ட் 18

இ) ஆகஸ்ட் 15

ஈ) ஆகஸ்ட் 14

  • 1984 – 1989 வரை இந்தியாவின் 6ஆவது பிரதமராக பணியாற்றினார் இராஜீவ் காந்தி. 1984ஆம் ஆண்டு தனது தாயார் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் நாற்பதாவது வயதில் இளவயது இந்திய பிரதமராக பதவியேற்றார். 1991 மே.21ஆம் தேதி அன்று, இராஜீவ், தமிழ்நாட்டில் உள்ள திருப்பெரும்புதூரில் நடந்த தேர்தல் பேரணியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) மனித வெடிகுண்டுத்தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டார். அவரது நினைவுநாள், “தேசிய பயங்கரவாத எதிர்ப்பு நாளாகவும்” அனுசரிக்கப்படுகிறது.

9. உலக மூத்த குடிமக்கள் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) ஆகஸ்ட் 20

ஆ) ஆகஸ்ட் 21 

இ) ஆகஸ்ட் 22

ஈ) ஆகஸ்ட் 23

  • முதியோர்களை பாதிக்கும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட்.21 அன்று உலக மூத்த குடிமக்கள் நாள் கொண்டாடப்படுகிறது. முதியோர்கள் சமுதாயத்திற்கு அளித்த பங்களிப்புகளை இந்நாள் அங்கீகரிக்கிறது & ஏற்றுக்கொள்கிறது. முதியோர்களின் அர்பணிப்பு, சாதனைகள் மற்றும் வாழ்நாள் முழுவதும் அவர்கள் இந்தச்சமுதாயத்திற்கு வழங்கிய சேவைகளை பாராட்டுவதற்கு இந்நாள் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

10. புதிய இணையவெளி பாதுகாப்பு பல் வழங்குநர் அறக்கட்டளை நிதியத்தைத் (Cybersecurity Multi-Donor Trust Fund) தொடங்கியுள்ள நிறுவனம் எது?

அ) ஆசிய வளர்ச்சி வங்கி

ஆ) ஐரோப்பிய மத்திய வங்கி

இ) இந்திய ரிசர்வ் வங்கி

ஈ) உலக வங்கி 

  • உலக வங்கி அதன் திட்டங்கள் மற்றும் நிதியுதவி ஆகியவற்றில் சைபர் பாதுகாப்பு கருதுகோள்களின் கணிசமான பிரதிபலிப்பை உறுதி செய்ய உதவும் வகையில், சைபர் பாதுகாப்பு மேம்பாட்டு நிகழ்ச்சி நிரலை சிறப்பாக வரையறுக்கவும் மற்றும் முறையாக உருவாக்கவும் புதிய இணையவெளி பாதுகாப்பு பல் வழங்குநர் அறக்கட்டளை நிதியத்தைத் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • உலக வங்கியின் பரந்த டிஜிட்டல் மேம்பாட்டு கூட்டாண்மை குடையின் கீழ் ஓர் அறக்கட்டளை நிதியமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த நிதியம் எஸ்டோனியா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் நெதர்லாந்தினைச் சார்ந்த நன்கொடையாளர்களின் பங்களிப்புடன் தொடங்கப்பட்டது. நாடுகளும் அதன் குடிகளும் தற்போதைய டிஜிட்டல் மாற்றம் மற்றும் வளர்ச்சியை முழுமையாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்திக் கொள்வதை உறுதிப்படுத்துவதற்கு இது உதவுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. போர்விமானங்களைப் பாதுகாக்க அதிநவீன தொழில்நுட்பம்: டிஆர்டிஓ உருவாக்கம்

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான போா் விமானங்களை எதிரி நாட்டு ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில், அதிநவீன ‘சாஃப்’ தொழில்நுட்பத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கியுள்ளது.

இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், எதிரி நாட்டு ஏவுகணைகளைத் திசை திருப்பிவிட்டு போா் விமானங்கள் பாதுகாப்பாக தப்பித்துவிட முடியும். இதன் சோதனை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, இந்தத் தொழில்நுட்பத்தை போர் விமானங்களில் சேர்க்கும் பணிகளை இந்திய விமானப் படை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து டிஆர்டிஓ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஜோத்பூர் மற்றும் புணேயில் உள்ள டிஆர்டிஓ ஆய்வகங்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த நவீன தொழில்நுட்பம், போர் விமானத்தில் பொருத்தும் வகையிலான ‘சாஃப்’ கேட்ரிட்ஜ் – 118/ஐ’ என்ற கருவி உருவாக்கப்பட்டுள்ளது. அதில், சிறு அலுமினியம் அல்லது துத்தநாகம் பூசப்பட்ட நார்த் துகள்கள் லட்சக்கணக்கில் அடைக்கப்பட்டிருக்கும். போர் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது, இந்தத் துகள்களை வெளியேற்றி காற்றில் பறக்கவிடுவதன் மூலம், தாக்க வரும் எதிரி நாட்டு ஏவுகணையை ரேடார் உதவியுடன் திசை திருப்பிவிட முடியும். அதன் மூலம் போர்விமானத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.

வான்படையின் தொடர் தேவையைப் பூா்த்தி செய்யக் கூடிய வகையில், அதிக எண்ணிக்கையில் இந்தக் கருவியை உற்பத்தி செய்வதற்காக உற்பத்தி நிறுவனங்களுடன் இத்தொழில்நுட்பம் பகிர்ந்துகொள்ளப்பட உள்ளது என்று டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.

2. ஜூனியர் மல்யுத்தம்: பிபாஷாவுக்கு வெள்ளி

ரஷியாவில் நடைபெறும் உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை பிபாஷா வெள்ளி வென்றார். அத்துடன் இரு வெண்கலப் பதக்கங்களும் இந்தியாவுக்கு கிடைத்தது. இதில் பிபாஷா, 76 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் கைலி ரெனீ வெல்கரிடம் தோற்று வெள்ளி பெற்றார்.

62 கிலோ கிராம் பிரிவு வீராங்கனையான சஞ்சு தேவி, அரையிறுதியில் அஜர்பைஜானின் பிர்குல் சோல்டானோவாவை 8-5 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். அதில் அவர் ரஷியாவின் அலினா கசாபிவாவை எதிர்கொள்ள இருக்கிறார்.

அதேபோல், 65 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்திய வீராங்கனை பாதேரி – ருமேனியாவின் அமினா ரோக்ஸானா கபெஸானை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றார். அதில் மால்டோவாவின் இரினா ரிகான்சியை அவர் சந்திக்கிறார்.

வெண்லகப் பதக்கத்துக்கான சுற்றுகளில் 50 கிலோ பிரிவில் சிம்ரன் 7-3 என்ற கணக்கில் பெலாரஸின் நடாலியா வராகினாவையும், 55 கிலோ பிரிவில் சிதோ – தொழில்நுட்பப் புள்ளிகள் அடிப்படையில் துருக்கியின் மெல்டா டெரென்க்ஸியையும் வீழ்த்தினர். குசும் (59 கிலோ), ஸ்னேஹா (72 கிலோ) ஆகியோர் அந்தச் சுற்றில் தோல்வி கண்டனர். பிங்கி (53 கிலோ), மான்சி (57 கிலோ) ஆகியோர் காலிறுதியில் தோற்றனர்.

3. சைடஸ் கேடிலா கரோனா தடுப்பூசிக்கு DCGI ஒப்புதல்: சிறார்களுக்கும் செலுத்த அனுமதி

கரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்த இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (DCGI) ஒப்புதல் அளித்தது. பிளாஸ்மிட் டிஎன்ஏ அடிப்படையில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் தடுப்பூசி இது என்பதோடு, இந்தியாவில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் முதல் தடுப்பூசி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவேக்ஸின்’ மற்றும் சீரம் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ‘கோவிஷீல்ட்’ ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் அவசரகால பயன்பாட்டின் அடிப்படையில் முதலில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. பின்னர், ரஷியாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டு, இந்தியாவில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகள் அனைத்தும், இரண்டு தவணைகளாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தக் கூடிய தடுப்பூசிகளாகும்.

இப்போது, நான்காவதாக குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சைடஸ் கேடிலா மருந்து நிறுவனம், மத்திய உயிரி தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து முழுவதும் உள்நாட்டில் உருவாக்கியுள்ள ‘சைகோவ்-டி’ தடுப்பூசியை அவசரகால பயன்பாடு அடிப்படையில் பயன்படுத்த இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

வித்தியாசம் என்ன?

இது நாட்டில் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள மூன்று தடுப்பூசிகளைப் போல் அல்லாமல், 3 தவணைகளாக செலுத்தக்கூடிய தடுப்பூசியாகும். இது, முதல் முறையாக 12 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கும் செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்மிட் டிஎன்ஏ அடிப்படையில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் தடுப்பூசி இதுவாகும்.

இது 2 முதல் 8 டிகிரி செல்ஷியஸ் தட்பவெப்பநிலையில் சேமித்து வைக்கப்படுகிறது. இருந்தபோதிலும், 25 டிகிரி செல்ஷியஸ் தட்பவெப்ப நிலையில் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு நல்ல நிலைத்தன்மையை இந்த தடுப்பூசி கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. அதன் காரணமாக இந்த தடுப்பூசியை பல்வேறு பகுதிகளுக்கு அனுப்புவது எளிது என்பதோடு, குளிரூட்டிகளில் ஏற்படும் பிரச்னை காரணமாக தடுப்பூசி வீணாவதும் குறையும்.

இந்த தடுப்பூசி பயன்பாட்டில் உள்ள மற்ற தடுப்பூசிகளைப் போன்று ஊசி மூலமாக அல்லாமல், ‘ஃபார்மா ஜெட்’ முறையை பயன்படுத்தி வலி இல்லாத வகையில் உடலில் செலுத்தக் கூடிய தடுப்பூசி என்று சைடஸ் கேடிலா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு 10 முதல் 12 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சைடஸ் கேடிலாவின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்துவதற்கான ஒப்புதலை டிசிஜிஐ அளித்தது. இது கரோனா நோய் பாதிப்பிலிருந்து சிறந்த பாதுகாப்பைத் தரும் என்பதோடு, உடலில் நோய் எதிா்ப்புத் திறனை நன்கு ஊக்குவிக்கும்.

இத்தடுப்பூசி, உருமாற்றம்பெறும் கரோனா தீநுண்மிகளுக்கு எதிராகவும் சிறப்பாக செயல்படக் கூடியதாகும். இந்த தடுப்பூசி 28,000 தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்டு நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட பரிசோதனையில், 66.6 சதவீத செயல்திறன் இருப்பது தெயிவந்துள்ளது. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய கரோனா தடுப்பூசி பரிசோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்துள்ளது.

4. உலக டேபிள் டென்னிஸ்: மணிகா-சத்தியன் ஜோடி சாம்பியன்

உலக டேபிள் டென்னிஸ் கன்டென்டர் போட்டியில் இந்தியாவின் மணிகா பத்ரா / ஜி சத்தியன் இணை கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றது. மணிகா/சத்தியன் இணை தனது இறுதி ஆட்டத்தில், உலகின் 94ஆம் நிலையில் இருக்கும் ஹங்கேரிய ஜோடியான டோரா மதரசாஸ் / நான்டோர் எக்செகியை 11-9, 9-11, 12-10, 11-6 என்ற செட்களில் வீழ்த்தியது.

மணிகா / சத்தியன் இணை கலப்பு இரட்டையரில் அதிகம் இணைந்து பங்கெடுத்திருக்காத நிலையில், இந்த சாம்பியன் பட்டம் அவர்களுக்கு நினைவில் நிற்கக் கூடியதாக அமைந்துள்ளது. கலப்பு இரட்டையர் பிரிவில் மணிகா, மூத்த வீரரான சரத் கமலுடன் இணைந்து ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார். இந்த ஜோடி சமீபத்தில் டோக்கியோ ஒலிம்பிக்கிலும் களம் கண்டது.

இந்த உலக டேபிள் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையரில் சாம்பியனாகியுள்ள மணிகா, மகளிர் ஒற்றையரில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறிய சத்தியனுக்கு இந்தப் பட்டம் ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.

5. மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆவணி மூலத் திருவிழா: இறைவன் விறகு விற்ற திருவிளையாடல்

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில், இறைவன் விறகுவிற்ற லீலையுடன் திருவிளையாடல்கள் நிறைவடைந்தன.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது ஆவணி மூலத்திருவிழா. ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆவணி மூலத் திருவிழாவில், மதுரையில் இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல்கள் அனைத்தும் நிகழ்த்தப்படுகின்றன.

இதைத்தொடர்ந்து, கோயில் 2ஆம் பிரகாரத்தில் சந்திரசேகர் உற்சவம் ஆக.10ஆம் தேதி வரை நடைபெற்றது. ஆகஸ்ட்.11’இல் கருங்குருவிக்கு உபதேசத்துடன் திருவிளையாடல்கள் தொடங்கின. அதையடுத்து, நாரைக்கு முக்தியளித்தது, மாணிக்கம் விற்ற திருவிளையாடல், தருமிக்கு பொற்கிழி அருளியது, சிவனடியாருக்கு உலவாக்கோட்டை அருளியது, பாணனுக்கு அங்கம் வெட்டியது மற்றும் திருஞானசம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாறு, வளையல் விற்ற திருவிளையாடல் மற்றும் அன்று இரவு பட்டாபிஷேகம், நரியை பரியாக்கிய லீலை ஆகியன நடைபெற்றன.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பிட்டுக்கு மண் சுமந்த லீலை கோயில் வளாகத்தில் நடைபெற்றது. தொடர்ந்து, பத்தாம் நாளன்று இறைவன் விறகு விற்ற லீலை நடைபெற்றது. இதில், தலையில் விறகு சுமக்கும் கோலத்துடன் சுந்தரேசுவரர் பிரியாவிடை மீனாட்சியம்மனுடன் எழுந்தருளினார். இத்துடன், கோயிலில் ஆவணி மூலத்திருவிழா திருவிளையாடல்கள் நிறைவடைந்தன.

1. Which date of August has been declared as Partition Horrors Remembrance Day?

A) August 10

B) August 12

C) August 14 

D) August 18

  • Prime Minister Narendra Modi has declared that August 14 will be observed as ‘Partition Horrors Remembrance Day’ to acknowledge the pain undergone by Indians due to the partition of India in 1947.

2. Indian Navy has participated in the U.S. Navy–led Southeast Asia Cooperation and Training (SEACAT) military exercise. Where was this exercise held?

A) Australia

B) Brunei

C) Singapore 

D) Timor–Leste

  • The Indian Navy participated in the U.S. Navy–led Southeast Asia Cooperation and Training (SEACAT) military exercise in Singapore.
  • The main purpose of SEACAT2021 was to enhance interoperability, share maritime security concerns, and maintain a rule–based international order. Other countries participating in the exercise include Australia, Bangladesh, Brunei, Canada, France, Germany, Indonesia, Japan, Malaysia, Maldives, New Zealand, Philippines, South Korea, Singapore, Sri Lanka, Thailand, Timor–Leste, United Kingdom and Vietnam. SEACAT was held for the first time in the year 2002.

3. Which state’s police department has launched a first–of–its–kind Drone Forensic Lab and Research Centre?

A) Tamil Nadu

B) Rajasthan

C) Kerala 

D) Bihar

  • Kerala police has launched a first–of–its–kind Drone Forensic Lab and Research Centre with an aim to address the rising concerns in this regard. Along with addressing the threat aspects of drones, the lab–cum–research centre is also tasked to look at the utility part of the unmanned aerial vehicles. Kerala Chief Minister Pinarayi Vijayan inaugurated this Forensic Lab and Research Centre.

4. Which National Park has become the first national park in India to be equipped with satellite phones?

A) Promotion of Biofuels for a Better Environment 

B) Promote Green Fuels & Save Earth

C) End use of Fossil Fuels

D) Save Green Planet

  • The World Biofuel Day is observed every year on 10th of August to create awareness about the importance of non – fossil fuels as an alternative to conventional fossil fuels. The day also highlights the various efforts made by Government in the biofuel sector. The 2021 theme of Biofuel Day is “Promotion of Biofuels for a Better Environment”.

5. On which date, the World Organ Donation Day is observed recently?

A) August 10

B) August 13 

C) August 14

D) August 16

  • The World Organ Donation Day is observed every year on August 13 to encourage people to donate their precious organs. Every year, about 5 lakh people die awaiting organ transplants due to non – availability of organs. There is a wide gap between the number of transplants awaited and the organs available.
  • Organ donation is a process where an organ is transferred from the body of the one who is giving the organ (donor) to the one who needs the organ (recipient). The donor can be living or deceased. Organs that can be donated are kidney, lungs, heart, eye, liver, pancreas, cornea, small intestine, bone tissues, heart valves & veins.

6. On which date, the World Photography Day was observed recently?

A) August 18

B) August 19 

C) August 20

D) August 21

  • The World Photography Day is observed every year on August 19 to encourage photographers across the planet to share a single photo with the world with an aim – to share their world with the world. The date of August 19 was chosen to commemorate the invention of the Daguerreotype, a photographic process developed by Frenchmen Louis Daguerre and Joseph Nicephore Niepce in 1837.
  • On 9th of January 1839, the French Academy of Sciences announced the Daguerreotype process. On August 19 that same year, the French government purchased the patent and announced the invention as a free gift to the world. This event was an important step in the development of modern–day photography.

7. On which date, the World Humanitarian Day is observed?

A) August 18

B) August 19 

C) August 20

D) August 21

  • The World Humanitarian Day is held every year on August 19 to pay tribute to aid workers who risk their lives in humanitarian service, and to rally support for people affected by crises around the world.
  • The day recognizes humanitarian personnel and those who have lost their lives working for humanitarian causes. The day was designated by the UN General Assembly to commemorate the 19th of August 2003 bombing of the United Nations headquarters in Baghdad, Iraq

8. On which date, the Communal Harmony Day is celebrated in India?

A) August 20 

B) August 18

C) August 15

D) August 14

  • Rajiv Gandhi served as the 6th Prime Minister of India from 1984 to 1989. He took office after the 1984 assassination of his mother, Prime Minister Indira Gandhi, to become the youngest Indian Prime Minister at the age of 40. In 21st May 1991, Rajiv Gandhi was assassinated by a Liberation Tigers of Tamil Eelam (LTTE) suicide bomber during an election rally in Sriperumbudur in Tamil Nadu. His death anniversary is also observed as National Anti – Terrorism Day.

9. On which date, the World Senior Citizen’s Day is celebrated?

A) August 20

B) August 21 

C) August 22

D) August 23

  • The World Senior Citizen’s Day is celebrated every year on 21st of August to raise awareness about the issues that affect older adults. The day also recognizes & acknowledges the contributions of older people to the society. It provides an opportunity to show our appreciation for their dedication, accomplishments, and services they give throughout their lives.

10. Which organization has launched a new Cybersecurity Multi–Donor Trust Fund?

A) Asian Development Bank

B) European Central Bank

C) Reserve Bank of India

D) World Bank 

  • The World Bank has launched a new Cybersecurity Multi–Donor Trust Fund aimed at better defining and systematically rolling out the cybersecurity development agenda to help ensure a more substantial reflection of cybersecurity considerations across its programs and financing. Developed as an associated trust fund under the World Bank’s broader Digital Development Partnership Umbrella, the Cybersecurity Multi–Donor Trust Fund’s launch was made possible with donor contributions from Estonia, Germany, Japan, and the Netherlands.
  • The new Cybersecurity Multi–Donor Trust Fund will help ensure that countries and their citizens can safely and securely take full advantage of the ongoing digital transformation and development.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!