TnpscTnpsc Current Affairs

1st November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1st November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 1st November 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘தேசிய பழங்குடியினர் நடனவிழா–2021’ஐ நடத்தவுள்ள இந்திய நகரம் எது?

அ) ராஞ்சி

ஆ) இராய்பூர் 

இ) விசாகப்பட்டினம்

ஈ) ஷில்லாங்

  • தேசிய பழங்குடியினர் நடன விழாவானது அக்.28 முதல் இராய்ப்பூரில் நடக்கவுள்ளதாக சத்தீஸ்கர் மாநில சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.
  • இராய்ப்பூரில் நடைபெறும் மூன்று நாள் தேசிய பழங்குடியினர் நடன விழாவில், இந்தியப்பழங்குடியின களைஞர்களோடு உஸ்பெகிஸ்தான், நைஜீரியா, இலங்கை, உகாண்டா, சிரியா, மாலி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பழங்குடியின கலைஞர்களும் கலந்துகொள்வார்கள். தேசிய பழங்குடியினர் நடன விழாவின் முதல் பதிப்பு, கடந்த 2019ஆம் ஆண்டில் நடைபெற்றது.

2. போலந்து, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வீசிய புயலின் பெயர் என்ன?

அ) அலிசா

ஆ) ஆரோர் 

இ) ஆப்ரோ

ஈ) பிஸாரே

  • ‘ஆரோர்’ புயலானது வட ஐரோப்பாவின் சில பகுதிகளில் வீசியது. இதன் காரணமாக போலந்தில் 4 பேர் இறந்தனர் மற்றும் ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் பிற இடங்களில் அப்புயல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. பலத்த சூறைக்காற்று மற்றும் முறிந்து விழுந்த மரங்கள் காரணமாக வடக்கு ஐரோப்பா முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது. பல வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிவுக்கு உள்ளாகின. புயல்தாக்கம் காரணமாக இரயில்வே & விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

3. 2021 – இந்திய சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படுகிற நகரம் எது?

அ) வாரணாசி

ஆ) கோவா 

இ) கொச்சின்

ஈ) புதுச்சேரி

  • இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) 52ஆவது பதிப்பு நவ.20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறவுள்ளது. ஹாலிவுட் மூத்த நடிகர் மார்ட்டின் ஸ்கோர்செஸி மற்றும் புகழ்பெற்ற ஹங்கேரிய திரைப்படத் தயாரிப்பாளரான ஸ்டீவன் சாபோ ஆகியோருக்கு இந்த ஆண்டு (2021) திரைப்பட விழாவில் சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்தார்.

4. 2021 – ‘உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கை’யை வெளியிட்ட நிறுவனம் எது?

அ) UNICEF

ஆ) WeProtect Global Alliance 

இ) CRY

ஈ) உலகப் பொருளாதார மன்றம்

  • ஓர் உலகளாவிய இயக்கமான WeProtect Global Alliance, ‘2021 – உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கை’யை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, சிறார் பாலியல் சுரண்டல் மற்றும் இணையவழி துஷ்பிரயோகத்தின் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு COVID-19 பொது முடக்க காலம் பங்களித்துள்ளது.
  • ‘WeProtect Global Alliance’ என்பது 200க்கும் மேற்பட்ட அரசாங்கங்கள், தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் ஓர் உலகளாவிய இயக்கமாகும்.

5. ஜெய்நகர்-குர்தா எல்லைதாண்டிய இரயில் இணைப்பைக் குறிக்கும் வகையில், குர்தா அமைந்துள்ள நாடு எது?

அ) நேபாளம் 

ஆ) பூட்டான்

இ) வங்காளதேசம்

ஈ) இலங்கை

  • ஜெய்நகரில் இருந்து குர்தா (நேபாளம்) வரை புதிதாக இயக்கப்பட்ட எல்லைதாண்டிய இரயில் பகுதியை இந்திய அரசு சார்பாக இர்கான் இன்டர்நேஷனல் நேபாள அரசிடம் ஒப்படைத்துள்ளது. இந்திய அரசின் மானிய உதவியின்கீழ், ஜெய்நகர் (இந்தியா) முதல் பர்திபாஸ் (நேபாளம்) வரையிலான இரயில் பாதைத் திட்டத்தை இர்கான் இன்டர்நேஷனல் மேற்கொண்டது. ஜெய்நகர்-குர்தா பிரிவின் முதல் கட்டம், ஜெய்நகர்-பிஜல்புரா-பார்திபாஸ் இரயில் இணைப்பின் ஒருபகுதியாகும். இது, 8.77 பில்லியன் நேபாள ரூபாய் மானிய உதவியின்கீழ் கட்டப்பட்டுள்ளது.

6. இந்தியாவில் நடந்த முதல் தேசிய மதங்களுக்கிடையேயான மாநாட்டை நடத்திய நகரம் எது?

அ) மும்பை

ஆ) புனே

இ) நாக்பூர் 

ஈ) வாரணாசி

  • லோக்மத் ஊடக குழுமத்தால் நாக்பூரில் முதன்முறையாக தேசிய அளவிலான மதங்களுக்கிடையேயான மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
  • அதன் நாக்பூர் பதிப்பின் பொன்விழா ஆண்டை நினைவுகூரும் வகையில் இது ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டின் கருப்பொருள் “வகுப்புவாத நல்லிணக்கத்திற்கான உலகளாவிய சவால்கள் மற்றும் இந்தியாவின் பங்கு” ஆகும். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு பல்வேறு மதங்களைச் சேர்ந்த பல ஆன்மீகத் தலைவர்கள் பேச்சாளர்களாக அழைக்கப்பட்டனர்.

7. ஸ்ரீநகரிலிருந்து ஷார்ஜாவிற்கு நேரடி விமானப் போக்குவரவை அறிமுகப்படுத்திய முதல் விமானப் போக்குவரத்து நிறுவனம் எது?

அ) இண்டிகோ

ஆ) கோ பர்ஸ்ட் 

இ) ஏர் இந்தியா

ஈ) விஸ்தாரா

  • இந்தியாவின் குறைந்த கட்டண விமான நிறுவனமான ‘கோ பர்ஸ்ட்’, ஸ்ரீநகரிலிருந்து சார்ஜாவிற்கு நேரடி வான்போக்குவரவைத் தொடங்கிய முதல் விமான நிறுவனம் ஆகும். ஸ்ரீநகரில் உள்ள ஷேக் உல்-ஆலம் பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து ஸ்ரீநகரிலிருந்து சார்ஜாவிற்கு செல்லும் முதல் பன்னாட்டு விமான சேவையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
  • இது, இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் (UAE) இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘கோ பர்ஸ்ட்’, ஸ்ரீநகர் மற்றும் ஷார்ஜா இடையே வாரந்தோறும் நான்கு விமானங்களை இயக்கும்.

8. இந்தியாவின் எந்த அண்டை நாடு, நில எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக ஒரு புதிய சட்டத்தை இயற்றியுள்ளது?

அ) நேபாளம்

ஆ) சீனா 

இ) இலங்கை

ஈ) வங்காளதேசம்

  • இந்தியாவுடனான சர்ச்சைக்குரிய எல்லையில் ராணுவ பதற்றம் நிலவி வரும் நிலையில், நில எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்த சீனா புதிய சட்டத்தை இயற்றியுள்ளது. இந்திய-சீன எல்லைப் பகுதிகளில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, சீனாவின் நில எல்லைகளின் ராணுவப் பாதுகாப்பையும் ஒருங்கிணைக்கும் சட்டத்தை இது முறைப்படுத்துகிறது. திபெத்திய கிராமவாசிகள் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் தங்கியுள்ள பொதுமக்களுடன் நெருக்கமாக பணியாற்றுவத -ற்கான மக்கள் விடுதலை இராணுவத்தின் கொள்கையையும் இது வலுப்படுத்துகிறது.

9. வடிவமைத்தல் / நிறுவுதல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கான மாதிரி திறன்வளர்த்தல் திட்டத்திற்கு ஒப்புதலளித்துள்ள அமைச்சகம் எது?

அ) பாதுகாப்பு அமைச்சகம்

ஆ) ஜவுளி அமைச்சகம் 

இ) MSME அமைச்சகம்

ஈ) எஃகு அமைச்சகம்

  • சாலைகள், இரயில்வே, நீர் ஆதாரங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு திட்டங்களில் புவிசார்-ஜவுளி பயன்பாட்டில் ஈடுபட்டுள்ள வடிவமைத்தல் / நிறுவுதல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கான மாதிரி திறன் வளர்த்தல் திட்டத்திற்கு ஜவுளி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • பெங்களூருவில் அமைந்துள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (IISc), சென்னை மற்றும் ரூர்கியில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களால் இப்பயிற்சி வழங்கப்படும். தொடர்புடைய பொறியியல் பிரிவுகளின் ஒருங்கிணைப்பு ஆசிரியர்கள் நிறுவனத்தின் இதர மையங்கள் / அலுவலகங்களுடனான ஆலோசனைக்கு பின்னர் இந்தச் சிறப்பு பயிற்சிகள் நடத்தப்படுவதை கவனித்து கொள்வார்கள்.

10. ‘கிரீன் டே எஹெட் மார்க்கெட்டைத்’ தொடங்கியுள்ள நடுவண் அமைச்சகம் எது?

அ) நிலக்கரி அமைச்சகம்

ஆ) சுற்றுச்சூழல், வனம் & காலநிலை மாற்ற அமைச்சகம்

இ) புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் 

ஈ) உழவு மற்றும் உழவர்கள் நல அமைச்சகம்

  • மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகமானது ‘Green Day Ahead Market’ என்ற புதிய சந்தைப்பிரிவை அறிமுகப்படுத்தியது.
  • இது மின்னுற்பத்தி மற்றும் விநியோக நிறுவனங்கள், திறந்த அணுகல் மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வாங்க அல்லது விற்க உதவும். இதன் மூலம், ஒப்பந்தம் அடிப்படையிலான நீண்டகால மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை படிப்படியாக சந்தை அடிப்படையிலான மாதிரிகளுக்கு மாற்றுவதை இந்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கார்பன் சமநிலையை அடைய இலக்கு: G20 உச்சிமாநாட்டில் முடிவு

கார்பன் சமநிலையை 2050ஆம் ஆண்டுக்குள் அடைவது என ஜி-20 நாடுகளின் உச்சிமாநாட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

உலகின் பொருளாதார சக்திகளாகத் திகழும் இருபது நாடுகள் அங்கம் வகிக்கும் G20 அமைப்பின் 16ஆவது உச்சிமாநாடு இத்தாலி தலைநகர் ரோமில் தொடங்கியது. மாநாட்டு முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

‘நிகர சுழிய’ பைங்குடில் இல்ல வாயு உமிழ்வு அல்லது கார்பன் சமநிலை இலக்கை 2050ஆம் ஆண்டுக்குள் அடைவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவது என மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.

வெளிநாடுகளில் நிலக்கரி மூலம் மின்னுற்பத்தி செய்யும் புதிய அனல் மின்-நிலையங்களுக்கான நிதியுதவியை 2021ஆம் ஆண்டுக்குள் நிறுத்துவது என ஜி-20 தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ஏழை நாடுகளுக்கு உதவும் வகையில் ஆண்டுதோறும் பணக்கார நாடுகள் 100 பில்லியன் டாலர் (சுமார் `7.5 லட்சம் கோடி) நிதியைத் திரட்டிக்கொடுக்கவேண்டும் என்ற கடந்த கால உறுதிப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

சர்வதேச சராசரி வெப்பநிலை உயர்வை 2°°செல்சியசுக்கும் குறைவாக வைத்திருக்க வேண்டும் என்ற பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தைப் பின்பற்றுவதற்கு ஜி20 நாடுகளின் தலைவா்கள் மீண்டும் உறுதி பூண்டனர். தொழிற்புரட்சிக்கு முந்தையகாலகட்டத்தின் வெப்பநிலையில் இருந்து 1.5° செல்சியஸுக்கும் மிகாமல் கட்டுக்குள் வைத்திருக்க முயற்சி செய்யவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கார்பன் சமநிலை என்றால் என்ன? கார்பன் சமநிலை அல்லது நிகர பூஜ்ஜிய பசுமைஇல்ல வாயு உமிழ்வு என்பது, வளிமண்டலத்தில் பசுமைஇல்ல வாயுக்களின் வெளியேற்றம் மற்றும் அகற்றத்துக்கு இடையிலான சமநிலை ஆகும்.

வெளிநாடுகளில் புதிதாக அனல்மின் நிலையம் அமைப்பதற்கான நிதியுதவியை நிறுத்துவது என இம்மாநாடு உறுதி மேற்கொண்டாலும், உள்நாட்டில் நிலக்கரி பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக இலக்கு எதுவும் நிர்ணயிக்கவில்லை.

மின்னுற்பத்திக்கு நிலக்கரியை பெரிதும் சார்ந்திருக்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இது பலனளிக்கும். புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முழுமையாக மாறுவதற்கான நடவடிக்கைகளை இந்த நாடுகள் படிப்படியாக மேற்கொள்ள கால அவகாசத்தை அளிக்கும்.

2. தொடங்கியது கிளாஸ்கோ பருவநிலை மாற்ற மாநாடு: உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

பிரிட்டனின் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்ற மாநாடு இன்று தொடங்கியது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட 120-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இத்தாலி தலைநகர் ரோமில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற 2 நாள் மாநாடு நேற்று நிறைவு பெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் 120 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், அதனை எதிர் கொள்ள பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தை தடுக்க மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

3. செர்பியா சர்வதேச சதுரங்கப் போட்டி கிராண்ட் மாஸ்டர் இனியன் சாம்பியன்:

செர்பியாவில் நடந்தசர்வதேச சதுரங்கப் போட்டியில் ஈரோட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பி.இனியன் வெற்றி பெற்றார்.

ஈரோட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பி.இனியன், சர்வதேச அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்து வருகிறார். செர்பியாவில் கடந்த 23ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடந்த 5ஆவது ருஜனா சோரா சதுரங்கப் போட்டியில் ஐந்து நாடுகளைச் சேர்ந்த 10 சர்வதேச வீரர்கள் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் இப்போட்டியில் இனியன் பங்கேற்றார்.

கிளாசிகல் பிரிவில் 9 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில், கிராண்ட் மாஸ்டர் இனியன் 5 போட்டிகளில் வெற்றி மற்றும் 4 போட்டிகளைச் சமன் செய்து ஏழு புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இப்போட்டியில் ரஷ்ய வீரர் மகரின் ரூடிக் இரண்டாமிடம் பெற்றார்.

1. Which Indian city is set to host the ‘National Tribal Dance Festival’ 2021?

A) Ranchi

B) Raipur 

C) Vishakhapatnam

D) Shillong

  • National Tribal Dance Festival is set to take place in Raipur from November 28, as per the Chhattisgarh Tourism Board. The three–day National Tribal Dance Festival in Raipur will host Indian tribal artists along with those belonging to tribal communities from countries including Uzbekistan, Nigeria, Sri Lanka, Uganda, Syria, Mali, among others. The first edition of the National Tribal Dance Festival was held in 2019.

2. What is the name of the storm that has swept across Poland, Germany, France and the Netherlands?

A) Alisa

B) Aurore 

C) Afro

D) Bizarre

  • Storm “Aurore” swept across parts of northern Europe, leaving four dead in Poland and causing severe damage in Germany, France, the Netherlands and other places. Power disruption were observed across Northern Europe due to the strong winds and fallen trees. Several houses and properties were destroyed. Railways and Airlines were also disturbed due to the effects of the storm.

3. Which city is the host of the International Film Festival of India (IFFI) 2021?

A) Varanasi

B) Goa 

C) Cochin

D) Puducherry

  • The 52nd edition of the International Film Festival of India (IFFI) is set to be held in Goa, from Nov.20–28. The union minister for Information and Broadcasting Anurag Thakur announced that Hollywood veteran Martin Scorsese and celebrated Hungarian film–maker Istevan Szabo will be honoured with the Satyajit Ray Lifetime Achievement award at this year’s film festival.

4. Which institution released the ‘Global Threat Assessment report 2021’?

A) UNICEF

B) WeProtect Global Alliance 

C) CRY

D) World Economic Forum

  • WeProtect Global Alliance, a global movement released the ‘Global Threat Assessment report 2021’. As per the report, COVID–19 contributed to a significant spike in child sexual exploitation and abuse online. WeProtect Global Alliance is a global movement of more than 200 governments, private sector companies and civil society organisations.

5. With reference to Jaynagar–Kurtha cross–border rail link, in which country is Kurtha located?

A) Nepal 

B) Bhutan

C) Bangladesh

D) Sri Lanka

  • Ircon International on behalf of Government of India (GoI), has handed over the newly commissioned cross–border rail section from Jaynagar to Kurtha (Nepal) to Government of Nepal.
  • Under the grant assistance from Government of India, the work of Jaynagar (India) to Bardibas (Nepal) rail line project was undertaken by Ircon International. The first phase of Jaynagar–Kurtha section is a part of Jaynagar–Bijalpura–Bardibas rail link being built under grant assistance of NPR 8.77 billion.

6. Which city played host to the first–ever National Inter–Religious Conference, held in India?

A) Mumbai

B) Pune

C) Nagpur 

D) Varanasi

  • The first–ever National Inter–Religious Conference was organised in Nagpur by Lokmat Media Group. This was organised to commemorate its Nagpur edition’s golden jubilee year. The theme of this conference was “Global Challenges to Communal Harmony and Role of India.” Shri. Nitin Gadkari, Union Minister for Road Transport & Highways was the chief guest of the event. Several spiritual leaders from diverse religions were invited as speakers for the event.

7. Which is the first airline to launch direct flights from Srinagar to Sharjah?

A) IndiGo

B) Go First 

C) Air India

D) Vistara

  • India’s low–cost airline Go First became the first airline to launch direct flights from Srinagar to Sharjah.
  • Union Home Minister Amit Shah flagged off the first international flight services from Srinagar to Sharjah, from the Sheikh ul–Alam International Airport in Srinagar. This is expected to enhance the economic bonds between India and UAE. Go First will operate four flights every week between Srinagar and Sharjah.

8. Which neighbouring country of India has passed a new law to strengthen land border protection?

A) Nepal

B) China 

C) Sri Lanka

D) Bangladesh

  • China passed a new law to strengthen land border protection amid the ongoing military tension along the disputed boundary with India.
  • The legislation formalises combining the military defence of China’s land borders, along with improving social and economic development in the Indo–China border areas. It also strengthens the People’s Liberation Army’s (PLA) policy to work closely with civilians staying in border areas including Tibetan villagers.

9. Which Ministry has approved the Pilot Project on skilling of Design and Commissioning technical personnel?

A) Ministry of Defence

B) Ministry of Textiles 

C) Ministry of MSME

D) Ministry of Steel

  • Ministry of Textiles has approved the Pilot Project on skilling of Design and Commissioning technical personnel associated with the application of geotextiles in infrastructure projects.
  • The project will be conducted by the Indian Institute of Sciences, Bangalore, Indian Institute of Technology, Madras and Indian Institute of Technology Roorkee. The faculty will look after the implementation of the special courses in consultation with the other concerned centres.

10. Which Union Ministry launched the ‘Green Day Ahead Market’?

A) Ministry of Coal

B) Ministry of Environment, Forest & Climate Change

C) Ministry of New & Renewable Energy 

D) Ministry of Agriculture & Farmers Welfare

  • The Union Ministry of New and Renewable Energy launched a new market segment named Green Day Ahead Market (GDAM).
  • It will enable electricity generation and distribution companies to buy or sell renewable energy through open access. With this, the Indian government is aiming to gradually shift from long term power purchase agreement-based contracts to market–based models.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!