TnpscTnpsc Current Affairs

1st July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

1st July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 1st July 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘CAPSTONE’ என்பது கீழ்க்காணும் எந்த விண்வெளி நிறுவனத்தால் ஏவப்பட்ட செயற்கைக்கோளாகும்?

அ. NASA 

ஆ. ESA

இ. ஸ்பேஸ்X

ஈ. ரோஸ்கோஸ்மோஸ்

  • NASA அண்மையில் 25 கிலோகிராம் எடையுள்ள, ‘CAPSTONE’ என்ற செயற்கைக்கோளை ஏவியுள்ளது. Cislunar Autonomous Positioning System Technology Operations and Navigation Experiment என்பதன் சுருக்கந்தான் CAPSTONE. இந்தச்செயற்கைக்கோள் ஒரு தனித்துவமான மற்றும் நீள்வட்ட நிலா சூழ் – வான்கல வட்டணையைச் சோதிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. CAPSTONE ஆனது நேயர் ரெக்டிலினியர் ஹாலோ ஆர்பிட் (NRHO) எனப்படும் ஒரு நீளமான சுற்றுப்பாதையில் நுழையும். இது NRHO-இல் செயல்படுவது பற்றிய தரவை வழங்கும்.

2. PSLV-C53 ஏவுதல்மூலம், ISRO, எந்த நாட்டின் 3 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது?

அ. நேபாளம்

ஆ. வங்காளதேசம்

இ. சிங்கப்பூர் 

ஈ. நியூசிலாந்து

  • இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) அதன் முனைய துணைக்கோள் ஏவுகலத்தின்மூலம் (PSLV-C53) சிங்கப்பூரின் மூன்று செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ளது. இது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது. PSLV-C53 என்பது விண்வெளித் துறையின் நிறுவனப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட்டின் (NSIL) இரண்டாவது அர்ப்பணிப்புப் பணியாகும். புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-04-ஐ கடந்த 2022 பிப்ரவரியில் PSLV-C52 ஏவுகலம்மூலம் ISRO வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

3. ‘தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களை’ கணினிமயமாக்கலுக்கான செலவு மதிப்பீடு எவ்வளவு?

அ. ரூ.216 கோடி

ஆ. ரூ.2516 கோடி 

இ. ரூ.750 கோடி

ஈ. ரூ.7216 கோடி

  • பொருளாதார விவகாரங்களுக்கான நடுவணமைச்சரவை குழு கூட்டத்தில் தொடக்க வேளாண் கடன் சங்கங்களை கணினிமயமாக்க ஒப்புதலளிக்கப்பட்டது. தொடக்க வேளாண் கடன் சங்கங்களின் திறனை அதிகரிப்பதற்கும், அதன் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை கொண்டுவருவதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் வர்த்தக நடவடிக்கைகளையும் பல்வேறு சேவைகளையும் மேற்கொள்வதற்கு இது வகைசெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள 63,000 தொடக்க வேளாண் கடன் சங்கங்களை 5 ஆண்டுகளுக்குள் கணினிமயமாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்காக `2516 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இதில் மத்திய அரசின் பங்கு `1528 கோடியாகும். இந்தக் கடன் சங்கங்கள்மூலம் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் உள்பட 13 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. 11ஆவது உலக நகர்ப்புற மன்றம் – 2022 நடைபெற்ற இடம் எது?

அ. ஸ்பெயின்

ஆ. போலந்து 

இ. ஆஸ்திரேலியா

ஈ. பிரான்ஸ்

  • 11ஆவது உலக நகர்ப்புற மன்றம் போலந்தில் நடைபெற்றது. நகர்ப்புற விவகாரங்களுக்கான தேசிய நிறுவனம் (NIUA) நகரங்களுக்கான காலநிலை மையம் (NIUA C-Cube), உலக வள நிறுவனம் – இந்தியா (WRI இந்தியா) மற்றும் அவற்றின் பங்காளர்கள் இந்தியாவின் முதல் தேசிய கூட்டமைப்புத் தளமான நகர்ப்புற இயற்கை அடிப்படையிலான தீர்வுகளை (Nature-based Solutions – NbS) தொடங்கினர்.
  • இயற்கை அடிப்படையிலான தீர்வுகளுக்கான இந்திய மன்றமானது NbS தொழில்முனைவோர், அரசு நிறுவனங்கள் மற்றும் கருத்தொத்த எண்ணங்கொண்ட நிறுவனங்களை கூட்டிணைக்க நோக்கங்கொண்டுள்ளது. அது நகர்ப்புற இயற்கை அடிப்படையிலான தீர்வுகளை வளர்க்க உதவுகிறது.

5. ‘2022 – Resilient Democracies’ அறிக்கையுடன் தொடர்புடைய உலகளாவிய அமைப்பு எது?

அ. G20

ஆ. BRICS

இ. G7 

ஈ. ASEAN

  • ஆற்றல்மிகு G7 குழுவின் தலைவர்கள் மற்றும் இந்தியா உட்பட அதன் ஐந்து பங்காளர் நாடுகளின் தலைவர்கள் ‘2022 Resilient Democracies Statement’ என்ற தலைப்பில் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டனர். குடிமைச் சுதந்திரம் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றைப் பாதுகாக்கும் அதே வேளையில், திறந்த பொது விவாதம் மற்றும் இணயமற்ற மற்றும் இணயமல்லா முறையில் தகவல்களின் இடையீடற்ற ஓட்டம் ஆகியவற்றில் தாங்கள் உறுதி பூண்டுள்ளோம் என்று தலைவர்கள் உறுதிப்படுத்தினர்.

6. கீழ்க்காணும் எந்த மாநிலத்தில், இந்தியப் புரட்சியாளர்களின் காட்சியகமான, ‘கிராந்தி கதா’வை இந்தியப்பிரதமர் திறந்து வைத்தார்?

அ. குஜராத்

ஆ. மகாராஷ்டிரா 

இ. பீகார்

ஈ. உத்தரப்பிரதேசம்

  • மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நிலத்தடி பதுங்குக்குழிக்குள் அமைக்கப்பட்ட இந்தியப் புரட்சியாளர்களின் காட்சியகமான, ‘கிராந்தி கதா’வை இந்தியப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். மகாராஷ்டிர ஆளுநரின் புதிய இல்லம் மற்றும் அலுவலகமான ‘ஜல் பூஷனை’யும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

7. 2022 – உலக குருதிக்கொடையாளர்கள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Blood donation: An act of solidarity.

 ஆ. Be brave; Donate Blood.

இ. Helping Hands.

ஈ. Blood Donation: Pay Back to the Earth.

  • உலக குருதிக்கொடையாளர்கள் நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.14 அன்று அனுசரிக்கப்படுகிறது. “Blood donation: An act of solidarity” என்பது இந்த ஆண்டில் (2022) வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.
  • இரத்தமாற்றத்திற்கு பாதுகாப்பான இரத்தத்தின் தேவையைப் பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தன்னார்வ இரத்ததானம் செய்பவர்களின் முதன்மை பங்களிப்பை முன்னிலைப்படுத்தவும், தேசிய இரத்தமாற்ற சேவைகளை ஆதரிப்பதற்காகவும், இரத்ததானம் செய்யும் நிறுவனங்கள் மற்றும் பிற தொடர்புடைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களைப் போற்றவும் இந்த நாள் உருவாக்கப்பட்டது.

8. சிறப்பு ASEAN-இந்திய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை (SAIFMM) நடத்திய நாடு எது?

அ. இந்தோனேசியா

ஆ. நியூசிலாந்து

இ. இந்தியா

ஈ. துருக்கி

  • ASEAN-இந்தியா ஒத்துழைப்பு அமைப்பின் 30 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் சிறப்பு ASEAN-இந்திய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை (SAIFMM) இந்தியா நடத்தியது. ASEAN வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்திற்கு வெளியுறவு அமைச்சர் Dr S ஜெய்சங்கர் மற்றும் சிங்கப்பூர் குடியரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் Dr விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

9. ஆண்டுதோறும், ‘உலக கடலாமை நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. ஜூன்.16 

ஆ. ஜூன்.26

இ. ஜூன்.30

ஈ. ஜூலை.01

  • கடல்சார் அமைப்பில் கடலாமைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும், இந்நீர்வாழ் உயிரினங்களை அழிவில் இருந்து காப்பாற்றவும் ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.16ஆம் தேதி ‘உலக கடலாமை நாள்’ கொண்டாடப்படுகிறது. கடல் ஆமைகள் கடற்புல்மீது மேய்கின்றன; அது கடற்புல் படுக்கைகள் அதிகமாக வளராமல் தடுக்கிறது மற்றும் புதிய வளர்ச்சியைத் தூண்டுகிறது. இந்தியாவில் உள்ள கடலாமைகள் வனவுயிர்கள் (பாதுகாப்பு) சட்டம், 1972-இன்கீழ் பாதுகாக்கப்படுகின்றன; இது பழங்குடி சமூகங்களைத் தவிர மற்ற அனைவரும் ஆமை இறைச்சி மற்றும் அதன் முட்டைகளை உட்கொள்வதை தடைசெய்கிறது.

10. FIFA U-17 பெண்கள் உலகக்கோப்பை – 2022-ஐ நடத்தும் நாடு எது?

அ. இந்தியா 

ஆ. வங்காளதேசம்

இ. சீனா

ஈ. பிரேசில்

  • இந்தியா, FIFA 17 வயதுக்குட்பட்ட பெண்கள் உலகக்கோப்பை 2022-ஐ நடத்துகிறது; அதன் அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. புவனேஸ்வரில் உள்ள கலிங்கா அரங்கத்தில் உலகக்கோப்பையின் அனைத்து குழு நிலை ஆட்டங்களையும் இந்தியா விளையாடுகிறது. அக்டோபர்.21 மற்றும் 22 தேதிகளில் நவி மும்பை மற்றும் கோவாவில் காலிறுதிப்போட்டிகள் நடைபெறும். கோவாவில் உள்ள நேரு அரங்கம் மற்றும் நவி மும்பையில் உள்ள D Y பாட்டீல் அரங்கம் அதிகபட்ச போட்டிகளை நடத்தவுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரியசக்தி மின்உற்பத்தி பிரிவு செயல்பாட்டுக்கு வந்தது.

தெலங்கானாவின் ராமகுண்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 100 MW மிதக்கும் சூரியசக்தி மின்னுற்பத்தி நிலையத்தின் கடைசி பகுதியான 20 MW பிரிவின் வணிகரீதியான உற்பத்தி தொடங்கிவிட்டதாக NTPC (தேசிய அனல்மின் கழகம்) அறிவித்துள்ளது. இராமகுண்டம் மிதக்கும் சூரியசக்தி திட்டம், என்டிபிசியால் தொடங்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரியசக்தி திட்டமாகும்.

இந்த நிறுவனத்தின் மொத்த மின்உற்பத்தி திறன் 69,134.20 MW ஆகும். இதில் 23 நிலக்கரியையும், 7 எரிவாயுவையும் அடிப்படையாக கொண்டவை. ஒன்று நீர்மின் திட்டமாகும். 19 புதுபிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் ஆகும். கூட்டுமுயற்சியின்கீழ் என்டிபிசி, நிலக்கரி அடிப்படையிலான 9 மின்னுற்பத்தி நிலையங்களையும், 4 எரிவாயு, 8 நீர்மின் திட்டங்கள் மற்றும் 5 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை கொண்டுள்ளது.

2. மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்றார் ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிர மாநிலத்தில், முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே தனது பதவியை இராஜினாமா செய்தநிலையில், மீண்டும் சிவசேனை ஆட்சி அமையவிருக்கிறது. இந்த அரசுக்கு பாஜக ஆதரவளிக்கும் என்று அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிசும், சிவசேனை தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும் மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க உரிமைகோரினர். இந்நிலையில் மகாராஷ்டிர மாநில முதல்வராக ஏக்நாத் ஷிண்டே வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் கோஷியாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து பாஜக தலைவரான தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

3. சிறு, குறு, நடுத்தர தொழிலில் முதலிடம்: விருதுநகர் மாவட்டத்துக்கு தேசிய விருது

இந்திய அளவில் முன்னேற விழையும் மாவட்டங்களில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலில் சிறப்பாக செயல்பட்டதற்காக விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.

நடுவணரசின் NITI ஆயோக் அமைப்பினர் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலுள்ள மாவட்டங்களை ஆய்வுசெய்தனர். அதில், 112 பின்தங்கிய மாவட்டங்கள் முன்னேற விழையும் மாவட்டங்களாக தேர்வுசெய்யப்பட்டன. இதில் தமிழ்நாட்டில் இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களும் அடங்கும். சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, வேளாண்மை, நீர்வள ஆதாரம் போன்ற உள்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்தி தொழில் வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை தேவைகளை உருவாக்குவது மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டுசெல்வது இதன் முக்கிய நோக்கமாகும். இந்நிலையில், சிறு, குறு, நடுத்தர நிறுவன உற்பத்தியில் சிறப்பாக செயல்பட்டதற்காக நிகழாண்டு தேசிய விருதுக்கு விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்து தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

4. 2035-இல் இந்திய நகர்ப்புற மக்கள் தொகை 67 கோடி: ஐநா அறிக்கையில் தகவல்

வரும் 2035-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் நகர்ப்புற மக்கள் தொகை 67.5 கோடியை எட்டும் என ஐநா.வின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

வரும் 2035-க்குள் நகர்ப்புற மக்கள்தொகையில் 100 கோடி பங்களிப்புடன் சீனா முதலிடத்தில் இருக்கும். இதற்கு, அடுத்தபடியாக, இந்தியா 67.5 கோடி மக்கள் தொகையுடன் பட்டியலில் இரண்டாமிடம் வகிக்கும். விரைவான நகரமயமாக்கல் என்பது கரோனா பேரிடரால் தற்காலிகமாக தாமதப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 2050-ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய நகா்ப்புற மக்கள்தொகை மேலும் 220 கோடி அதிகரிக்கும்.

2020ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி 483,099,000-ஆக இருந்த இந்தியாவின் நகர்ப்புற மக்கள்தொகை 2025இல் 542,743,000-ஆகவும், 2030-இல் 607,342,000-ஆகவும், 2035-இல் 675,456,000 ஆகவும் அதிகரிக்கும். அதேபோன்று, 2035-இல் நகர்ப்புற மக்கள்தொகை சீனாவில் 105 கோடியாகவும், ஆசியாவில் 299 கோடியாகவும், தெற்காசியாவில் 98.75 கோடியாகவும் இருக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. 5 ஆண்டுகளை நிறைவு செய்தது GST!

நாட்டின் மறைமுக வரி விதிப்பில் மிகப்பெரிய மாற்றமாக அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு-சேவை வரி (GST) 5 ஆண்டுகளை நிறைவுசெய்து 6-ஆவது ஆண்டில் அடியெடுத்துவைத்துள்ளது.

மத்திய, மாநில அரசுகளால் விதிக்கப்பட்டு வந்த கலால் வரி, சேவை வரி, மதிப்பு கூட்டு வரி (வாட்) உள்ளிட்ட 17 மறைமுக வரிகளை ஒருங்கிணைத்து சரக்கு-சேவை வரி திட்டத்தை மத்திய அரசு 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. புதிய விதிகளின்படி, பொருள்களுக்கும் சேவைகளுக்கும் 5%, 12%, 18%, 28% என 4 விகிதங்களில் GST விதிக்கப்படுகிறது. அத்தியாவசியப் பொருள்கள் உள்ளிட்ட பலவற்றுக்கு வரி விதிப்பில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. தங்கம், வைரம் உள்ளிட்ட ஆபரணங்களுக்கு 3%, 1.5% என சிறப்பு வரிகள் விதிக்கப்படுகின்றன. இவை மட்டுமின்றி 28 சதவீத வரி விதிக்கப்படும் ஆடம்பரப் பொருள்கள் மீது கூடுதலாக செஸ் வரி விதிக்கப்படுகிறது.

GST காரணமாகப் பல்வேறு பொருள்களின் விலை குறைந்தது. GST அறிமுகத்துக்கு முன் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் மறைமுக வரி சராசரியாக 31% வரை இருந்தது. GST அமலாக்கத்தால் வரி பெருமளவில் குறைந்தது. ஆனால், அதன் பலன்கள் மக்களுக்குக் கிடைக்காத வகையில் பல நிறுவனங்கள் பொருள்களைப் பழைய விலைக்கே விற்கும் நோக்கில், அவற்றின் மீதான அடிப்படை விலையை உயர்த்தின. அதன் காரணமாக GST அமலாக்கம் விட நிறுவனங்களுக்கு அதிக பலனைத் தந்ததாகப் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

கரோனாவின் தாக்கமும் மீட்சியும்

GST வாயிலான மாதாந்திர வருவாய் அதிகரிக்கத் தொடங்கியபோது, நாட்டில் கரோனா தொற்று பரவியது. அதையடுத்து அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம், நாட்டின் பொருளாதாரத்தைப் பெரிய அளவில் பாதித்தது. அது GST வருவாயிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுமார் ஓராண்டுக்கு வருவாய் குறைவாகவே இருந்தநிலையில், 2021 மத்தியில் இருந்து நாட்டின் பொருளாதாரம் மீண்டும் மீளத்தொடங்கியது. இது GST வருவாயிலும் எதிரொலித்தது. மாதாந்திர GST வருவாய் தொடர்ந்து `1 லட்சம் கோடியைக் கடந்த நிலையில், அதிகபட்சமாகக் கடந்த ஏப்ரலில் `1.68 லட்சம் கோடியை எட்டியது. தற்போதைய நிலையில், மாதாந்திர GST வருவாய் சராசரியாக `1.4 லட்சம் கோடியாக இருந்து வருகிறது.

தொழில்நுட்ப சேவைகள்

தொழில் நிறுவனங்களும் தனி நபர்களும் GST செலுத்துவதை எளிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோரைத் தடுக்கவும் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலக்கு

பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றை GST வரம்புக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்குத் தொடர்ந்து முட்டுக்கட்டை நிலவி வருகிறது. அவற்றை GST வரம்புக்குள் கொண்டுவந்தால், தங்களுக்கான வருவாய் மேலும் குறையும் எனப் பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. GST இழப்பீடு வழங்கும் நடைமுறை நிறைவடைந்துள்ள நிலையில், அதை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டுமெனப் பல மாநிலங்கள் கோரி வருகின்றன. அதே வேளையில், எரிபொருள்களையும் GST வரம்புக்குள் கொண்டுவந்து, வரி வசூல் நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்தினால் வருவாய் கூடுதலாக அதிகரித்து நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவும் எனப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

1. ‘CAPSTONE’, which was seen in the news recently, is a satellite launched by which space agency?

A. NASA 

B. ESA

C. SpaceX

D. Roscosmos

  • NASA has recently launched a 25–kg satellite ‘CAPSTONE’, which is short for Cislunar Autonomous Positioning System Technology Operations and Navigation Experiment. The satellite is designed to test a unique and elliptical lunar orbit. CAPSTONE will enter an elongated orbit called a near rectilinear halo orbit (NRHO). It will provide data about operating in an NRHO.

2. In the PSLV–C53 mission, ISRO launched three satellites of which country?

A. Nepal

B. Bangladesh

C. Singapore 

D. New Zealand

  • The Indian Space Research Organisation (ISRO) has launched three satellites from Singapore in its Polar Satellite Launch Vehicle (PSLV–C53) mission. It is being launched from the Satish Dhawan Space Centre, Sriharikota. PSLV–C53 is also the second dedicated mission of NewSpace India Limited (NSIL), a corporate arm of the Department of Space. ISRO has successfully launched the PSLV–C52 mission in February 2022 by injecting Earth Observation Satellite (EOS–04).

3. What is the budgetary outlay of ‘Computerisation of Primary Agricultural Credit Societies (PACS)?

A. Rs.216 Crore

B. Rs.2516 Crore 

C. Rs.750 Crore

D. Rs.7216 Crore

  • The Cabinet Committee on Economic Affairs chaired by Prime Minister Narendra Modi approved computerisation of Primary Agricultural Credit Societies (PACS) with a budgetary outlay of ₹2,516 crore. The objective is to increase efficiency of PACS, bring transparency and accountability in their operations This project proposes computerization of about 63,000 functional PACS over a period of 5 years with Government of India share of ₹1,528 crore.

4. Which is the venue of the 11th World Urban Forum held in 2022?

A. Spain

B. Poland 

C. Australia

D. France

  • The 11th World Urban Forum was held in Poland. The National Institute of Urban Affairs’ (NIUA) Climate Centre for Cities (NIUA C–Cube), World Resources Institute India (WRI India) and their partners launched India’s first national coalition platform for urban nature–based solutions (NbS). ‘India Forum for Nature–Based Solutions’ aims to create a collective of NbS entrepreneurs, government entities and like–minded organisations, to aid in scaling urban nature–based solutions.

5. ‘2022 Resilient Democracies Statement’ is associated with which global association?

A. G20

B. BRICS

C. G7 

D. ASEAN

  • Leaders of the powerful G7 grouping and its five partner countries, including India issued a joint statement titled ‘2022 Resilient Democracies Statement’. The leaders affirmed that they are committed to open public debate and the free flow of information online and offline while guarding the freedom, independence and diversity of civil society actors.

6. The Indian Prime Minister inaugurated ‘Kranti Gatha’, a Gallery of Indian Revolutionaries in which state?

A. Gujarat

B. Maharashtra 

C. Bihar

D. Uttar Pradesh

  • The Indian Prime Minister Narendra Modi inaugurated ‘Kranti Gatha’, a Gallery of Indian Revolutionaries inside an underground bunker at Raj Bhavan in Mumbai. The Prime Minister also inaugurated ‘Jal Bhushan’, the new residence and office of the Governor of Maharashtra.

7. What is the theme of ‘World Blood Donor Day’ 2022?

A. Blood donation: An act of solidarity. 

B. Be brave; Donate Blood.

C. Helping Hands.

D. Blood Donation: Pay Back to the Earth.

  • World Blood Donor Day is observed every year on 14 June. The theme of this year is ‘Blood donation: An act of solidarity’. The Day was created to raise global awareness of the need for safe blood for transfusion, highlight the critical contribution of voluntary, blood donors, support national blood transfusion services, blood donor organizations and other related NGOs.

8. Which country hosted the Special ASEAN–India Foreign Ministers’ Meeting (SAIFMM)?

A. Indonesia

B. New Zealand

C. India 

D. Turkey

  • India hosted the Special ASEAN–India Foreign Ministers’ Meeting (SAIFMM) to commemorate 30 years of ASEAN–India Dialogue Relations. ASEAN Foreign Ministers and Secretary General participated in the meeting. The Meeting was co–chaired by External Affairs Minister Dr. S. Jaishankar and Minister of Foreign Affairs of the Republic of Singapore Dr. Vivian Balakrishnan.

9. When is the ‘World Sea Turtle Day’ observed every year?

A. June.16 

B. June.26

C. June.30

D. July.01

  • ‘World Sea Turtle Day’ is celebrated on June 16 every year to highlight the importance of sea turtles in the marine system and save this aquatic species from extinction. Sea turtles graze on sea–grass, preventing the sea–grass beds from becoming overgrown and stimulating new growth. Sea turtles in India are protected by the Wild Life (Protection) Act, 1972, which bans consumption of turtle meat and eggs by all except for indigenous tribal communities.

10. Which country is the host of FIFA under–17 Women’s World Cup 2022?

A. India 

B. Bangladesh

C. China

D. Brazil

  • India is the host of FIFA under–17 Women’s World Cup 2022, whose schedule was released recently. India will play all its group stage matches of the World Cup at the Kalinga Stadium in Bhubaneswar. The quarterfinals will be held in Navi Mumbai and Goa on October 21 and 22. The Nehru Stadium in Goa and D.Y. Patil Stadium in Navi Mumbai will host maximum matches.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!